புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_m10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_m10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_m10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_m10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_m10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_m10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_m10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_m10அம்மனின் 51 சக்தி பீடங்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மனின் 51 சக்தி பீடங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 3:23 am


1. மூகாம்பிகை-கொல்லூர் - (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
2. காமாட்சி-காஞ்சிபுரம் - (காமகோடி பீடம்), தமிழ்நாடு
3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்
17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர்- (விரஜாபீடம்) உ.பி.
51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்





அம்மனின் 51 சக்தி பீடங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 3:24 am

1. மூகாம்பிகை-கொல்லூர் - (அர்த்தநாரி பீடம்), கர்நாடகா

அம்மனின் 51 சக்தி பீடங்கள் FTCJwllTRSe9hQOf14bi+kollur

கர்நாடக மாநிலம், கொல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மூகாம்பிகை தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 3வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் வலது அக்குள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

கொல்லூரில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் மூகாம்பிகை என்றும், இறைவன் க்ரோதீஸ்வர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

பரசுராமரால் அன்னை பார்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவிலாகக் கருதப்படுகிறது. இங்கே அன்னை பார்வதி தாய் மூகாம்பிகையாக வழிபடப்படுகிறாள். செüபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள அன்னையின் இந்த ஆலயம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

அடர்ந்த விருட்சங்கள் கொண்ட காடுகளும் உயர்ந்த மலைச்சிகரங்களும், பாயும் நதிகளும் உள்ள குடட்சாத்ரி மலை அடிவாரம் முன்னர் மஹா ஆரண்யம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஆரண்யத்தில் கோலரிஷி என்ற தவசிரேஷ்டர், ஆசிரமம் அமைத்து சிவபெருமானை நினைத்துக் கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த மகாதேவர் அவருக்குக் காட்சி அளித்து, மந்திரோபதேசம் செய்தார்.

அத்துடன் தேவியைக் குறித்து தவம் செய்யும்படி கூறினார். அவரது ஆசிரமத்துக்கு அருகே ஒரு லிங்கம் புதையுண்டு கிடப்பதாகவும், அதை தோண்டி பிரதிஷ்டை செய்து ஆராதித்து வந்தாலே, அன்னையின் அருளைப் பெறலாம் என்றும் கூறி மறைந்தார். அதன்படி கோலரிஷி லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தேவியைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தார்.

அந்தக் காலகட்டத்தில் கம்ஹாசுரன் என்பவன் காலபைரவியை நோக்கி ஆகம முறைப்படி கடுந்தவம் மேற்கொண்டு பல ஆற்றல்களை அடைந்தான். தன் அசுர குணத்தால் விண்ணோரையும் மண்ணோரையும் பலவாறு துன்புறுத்தினான். இவனது துன்பங்களை பொறுக்க முடியாத தேவர்கள் ஆதிபராசக்தியின் உதவியை நாடினர். அதை அறிந்த அசுரன் தப்பியோடி ரிஷ்யமுக பர்வதத்தின் குகை ஒன்றினுள் ஒளிந்தான். சாகாவரம் எப்படியாவது அடைய வேண்டும் என்று அங்கிருந்தவாறு பரமனை நினைத்து கடுந்தவம் புரிந்தான்.

கடுந்தவத்தால் அச்சம் கொண்ட தேவர்கள் கோலரிஷியின் உதவியை நாடினர். கோலரிஷி அன்னையிடம் வேண்ட, அன்னை உதவுவதாக வாக்களித்தாள்.

அதன்படி அசுரனின் தவத்தை மெச்சி ஈசன் அவன் முன் தோன்றிவிட்டால், அசுரன் வாய் திறந்து வரத்தைக் கேட்டுவிடுவான் என்று எண்ணிய பராசக்தி, அந்த அசுரனின் நாவும், குரல்வளையும் இயங்காமலிருக்க அவனை ஊமையாக்கினாள். இதனால் அசுரன் கடும் கோபமடைந்தான்.

வாய் திறந்து பேச முடியாத ஊனமுற்ற கம்ஹாசுரன் மூகன் என்று அழைக்கப்பட்டான். வேறு வழியின்றி, இறுதியில் அன்னையிடம் சரணடைந்தான். அன்னையின் திருக்கரத்தால் மரணம் பெறும் தனது நற்பாக்யத்துக்கு கோலரிஷியே காரணம் என்பதால், அவர் பெயர் கொண்டு இத்திருத்தலம் விளங்க வேண்டும் என்றும், தன் பெயரோடு அம்பிகை இத்தலத்தில் இனி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் கூறி கம்ஹாசுரன் தன் உயிரை நீத்தான்.

அதன்படி கோலரிஷி பெயர் கொண்டு அத்திருத்தலம் முதலில் கோலாபுரம் என்றழைக்கப்பட்டு பின்பு கொல்லூர் என்று மருவியது. மூகாசுரன் பெயரால் ஸ்ரீ மூகாம்பிகை எனும் நாமம் பெற்றாள் தேவி.

அன்னையின் வலது அக்குள் விழுந்த இடமாக கருதப்படும் கொல்லூர். சென்னை - மங்களூர் ரயில் மார்க்கமாக மங்களூர் அடைந்து, அங்கியிருந்து 139 கி.மீ. தொலைவு பேருந்தில் சென்றடையலாம்.



அம்மனின் 51 சக்தி பீடங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 3:35 am

2. காமாட்சி-காஞ்சிபுரம் - (காமகோடி பீடம்), தமிழ்நாடு
அம்மனின் 51 சக்தி பீடங்கள் Wmhzwm10

அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண்.

எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது. அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று. அவை:

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோயில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது.

புண்ணிய பூமியான பாரத தேசத்தில் (இந்தியாவில்) உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான்.

அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சிமாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.

முன்னொரு காலத்தில், பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் மிகக் கடுமையான தவங்களை மேற்கொண்டு, பிரம்ம தேவரிடமிருந்து அரிய பல வரங்களைப் பெற்றிருந்தான். அந்த வரங்கள் அளித்த சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான்.

பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால், அதிக துன்பமுற்ற தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்கள் துன்பத்தைக் கூறி முறையிட்டார்கள். பிரம்மாவின் வரங்களைப் பெற்றதால் பந்தகாசுரன் மிகுந்த வலிமை பெற்றிருப்பதை உணர்ந்த சிவபெருமான், " அந்தப் பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குத்தான் உள்ளது " என்று கூறி, அவர்களைப் பராசக்தியிடம் அனுப்பி வைத்தார்.

அத்தருணம், அன்னை பராசக்தி தேவி, காம கோட்டம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில், கிளி வடிவம் கொண்டு, ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்தாள். தேவர் களும், முனிவர்களும் அன்னை இருக்கும் இடத்துக்கு வந்து, அவளை வழிபட்டுத் தங்கள் துயரங்களைக் கூறினார்கள்.

அவர்களின் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கிய அன்னை, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக உறுதியளித்தாள். அத்தருணம், பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை, பதினெட்டுக் கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள்.

பந்தகாசுரனின் கழுத்தில் ஒரு பாதத்தையும், மார்பில் ஒரு பாதத்தையும் வைத்து, அவனது தலையை அறுத்து, ஒரு கையில் தூக்கிப் பிடித்தபடி காஞ்சிபுரம் வந்தடைந்தாள். உக்கிர கோப ரூபத்தில் வந்த அன்னையைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பயத்தில் நடுங்கி மயங்கி வீழ்ந்தனர்.

அவர்களின் பயத்தைப் போக்க விரும்பிய அன்னை, உடனே, அழகிய பட்டாடை அணிந்த சிறு பெண்ணின் உருவத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அவர்களுக்குக் காட்சியளித்தாள். அத்தரிசனம் கண்டு, மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்த தேவர்களும், முனிவர்களும் அவளைப் பலவாறும் போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்தார்கள்.

அப்போது, அன்னை அவர்களைப் பார்த்து, அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டுமாறும், பந்தகாசுரனை அந்தப் பள்ளத்தில் இட்டுப் புதைத்து, புதைத்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை நிறுவுமாறும் கூறினாள். அன்னையின் கட்டளைப்படி தேவர்கள் அந்த இடத்தில் ஒரு பள்ளம் தோண்டியபோது, மல்லகன் என்ற கொடிய அரக்கன் அங்கே மறைந்திருப்பதைக் கண்டார்கள்.

அந்த அரக்கனை அழித்துத் தங்களைக் காக்கும்படி, மகாவிஷ்ணுவிடம் வேண்டினார்கள். தேவர்களின் கோரிக்கையை ஏற்று, மகாவிஷ்ணு மல்லகனுடன் போரிட்டார். ஆனால், மல்லகனின் உடலிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அரக்கனாக உருமாறிப் போர் புரிந்தது.

இவ்வாறு அங்கே மாபெரும் அரக்கர் படையொன்று உருவாக்கி மகாவிஷ்ணுவுடன் கடுமையான போர் புரிந்தது. அரக்கனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனாக உருவெடுப்பதைக் கண்ட மகாவிஷ்ணு, தம் உதவிக்குச் சிவபெருமானை அழைத்தார்.

சிவபெருமான் போர்க்கோலத்தில், ருத்ர மூர்த்தியாக அங்கே வந்தார். அவர் இரண்டு பூதங்களை உருவாக்கி, மல்லகனின் உடலிலிருந்து வெளிவரும் இரத்தத் துளிகள் எல்லாவற்றையும் பூமியில் விழாதபடி குடிக்கும்படி கட்டளையிட்டார். பூதங்கள் அப்படியே செய்தன. இவ்வாறு, மேலும் அரக்கர்கள் தோன்றாமல் தடுத்ததும், மகாவிஷ்ணு தம் சக்கராயுதத்தால் அந்த அரக்கனை அழித்தார்.

அதன்பின், அன்னை கட்டளையிட்டபடி, பந்தகாசுறனைப் புதைத்த இடத்திற்கருகில், இருபத்து நான்கு தூண்களை நிறுவி, காயத்ரி மண்டபம் அமைத்து, அந்த மண்டபத்தினுள்ளே, அழகிய பீடம் அமைத்து, அன்னையின் உருவம் ஒன்றைச் செய்து வைத்து வணங்கினார்கள். பின்னர், கதவை மூடிவிட்டு வெளியில் இருந்து அன்னையைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.

மறுநாள் அதிகாலை, சூரியன் உதய வேளையில், மிகுந்த பயபக்தியுடன் அவர்கள் அந்தக் கதவைத் திறந்தார்கள். என்ன ஆச்சரியம்? அங்கே அவர்கள் கண்ட அற்புதமான காட்சியைக் கண்டு மெய்சிலிர்த்து, மகிழ்ந்து நின்றார்கள். ஆம், அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில், அவர்கள் நிறுவிய சிலை உருவத்துக்குப் பதிலாக, அன்னை காமாட்சி தேவி அழகிய திருக்கோலத்தில் காட்சியளித்தாள்.

அந்த நன்னாள், ஸ்வயம்பு மனுவந்திரத்தில், கிருத யுகத்தில், ஸ்ரீமுக வருஷம் பங்குனி மாதம் கிருஷ்ண பட்சத்தில், பிரதமை திதியும், பூர நட்சத்திரமும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமை நாள் ஆகும். எல்லையில்லாக் கருணை வடிவம் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக காமாட்சி அன்னை காட்சியளித்தாள்.

அந்தக் காயத்ரி மண்டபத்தின் நடுவில் அன்னை தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசன கோலத்தில் காட்சியளித்தாள். அவளது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், மலர் அம்பு, கரும்பு வில் முதலியன காணப்பட்டன.

அன்னையின் அழகையும், கருணையையும் கண்டு பக்திப் பரவசமாகி மகிழ்ந்த தேவர்களும், முனிவர்களும், அன்னையை நோக்கி, அங்கேயே அமர்ந்து உலகம் வாழ அருள் புரியுமாறு வேண்டிக்கொண்டார்கள். அவர்களின் பிரார்த்தனைக்கிணங்கி, காமாட்சி அன்னை, இருபத்து நான்கு தூண்களாலான அந்தக் காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அழகிய பீடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கின்றாள்.

தற்போது, அன்னை காமாட்சி திருக்கோயில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய ராஜகோபுரத்துடன், கண்களையும், உள்ளத்தையும் பக்திப் பரவசமாக்கும் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக எழுந்து நிற்கின்றது. அன்னை காமாட்சி இத்திருக்கோயிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள்.

(பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை காட்சியளிப்பாள்.) அந்த மூவகை வடிவங்களாவன:

காமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்) (மூல விக்கிரக உருவில்)
அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்)
காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)
காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.

காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை.

அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.

ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.



அம்மனின் 51 சக்தி பீடங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 3:47 am

3. மீனாட்சி - மதுரை - (மந்திரிணி பீடம்), தமிழ்நாடு

அம்மனின் 51 சக்தி பீடங்கள் Z6dg10

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா




அம்மனின் 51 சக்தி பீடங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 3:58 am

4. விசாலாட்சி - காசி -  (மணிகர்ணிகா பீடம்), உ.பி.

அம்மனின் 51 சக்தி பீடங்கள் Maxres10

 காசி விசாலாட்சி
    --------------------------------------------------------------------------------------
     சேர்த்தாளும் அன்னையே சேய்செய்த பாவத்தைச்
                   சிறிதும் மதிக்க வேண்டாம்
        சிற்றறிவை ஆசானின் பேரறிவு காப்பதும்
                  தேவி நீ மறந்த ஒன்றா?
         புத்தாரை எனப் பொங்குகிற நாகத்தைப்
                  புரிந்தவள் கலந்த மயிலே
          புகழ்பெருகு காசிநகர் தகவுடைய தேவியே
                    பூவை விசாலாட்சி உமையே!
                                    -கவிஞர் கண்ணதாசன்
    ---------------------------------------------------------------------------------------


              ''கங்கைக்கு நிகரான நீருமில்லை, காசிக்கு நிகரான ஊருமில்லை'' என்பது இந்துக்களின் திருமந்திரம்.

காசிக்கு புண்ணியத் தலம் அதன் எல்லையில் காலடிபட்டதுமே பண்ணிய பாவங்கள் விட்டொழிகின்றன. கங்கையில் மூழ்கி எழுந்தால் பூர்வ கர்மாக்கள் கரைந்து போகின்றன. இந்துக்களுக்கு மட்டுமல்ல, புத்த மதத்தினருக்கும் காசி சிறப்புத் தலம்.ஞானம் பெற்ற கெளதம் புத்தர், தன் முதல் போதனையை இங்கே தான் துவக்கினார்.

மகாவீரருக்கு முன்னோடியாக இருந்த தீர்த்தங்கர பரஸ்வநாதர் அவதரிந்த இடம் என்பதால் ஜைனர்களுக்கும் காசி புனிதத் தலம். காசியில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில்கள் தான். சிவனுக்கு பிரதானமான வழிபாடு.இருநூறுக்கும் மேற்பட்ட கோயில்கள் காசியை அலங்கரிக்கின்றன.குறுகலான தெருக்கள்,காசியின் இதயமான விஸ்வநாதர் கோயில் சேர்க்கின்றன.மகாதேவனின் ஜோதிலிங்கம் இங்கு மண் தோன்றிய காலத்திலிருந்தே எழுந்தருளி இருப்பதாகக் கருதப்படுகிறது.

இங்கு ஈசனின் லிங்கத்தைத் தொடலாம்.கங்கை நீர் கொண்டு பக்தரே அபிஷேகம் செய்யலாம். காசிநாதனைக் கண்கள் தரிசித்ததுமே களைத்த உடல்களில் கூட புத்துணர்ச்சி. விஸ்வநாதனை விரல்கள் தொட்டதும் வேதபுரியான கயிலைக்கே சென்று மீண்டது போன்ற பரவசம். ஈசனுக்கு இணையான் புகழ் பெற்ற அன்னை விசாலாட்சி தன் நாதனின் கோயிலில் தனக்கொரு சந்நிதி அமைத்துக் கொள்ளாமல் தனக்கென்று தனிக் கோயில் அமைத்துக் கொண்டு தனித்து நின்று அருள் புரிகிறாள்.

தன் பிராணநாதனின் திருமேனியின் ஒரு பகுதியாகவே கருதப்படும் காசியைத் தன் சக்தி பீடமாக அன்னை சக்தி தேர்ந்தெடுத்தது ஆச்சரியமே இல்லை.விஸ்வநாதரை தரிசித்தபின் காசியின் அதே குறுகலான தெருக்களில் நடந்தால்,அன்னை விசாலாட்சியின் திருக்கோயில் முக்திக்கு வித்திடும் காசியில் அமைந்திருப்பதால், அன்னையின் சக்தி பீடங்களில் பெரும் பெருமை கொண்ட பீடம் காசி விசாலாட்சி.

கடவுள்களின் நதியாகப் போற்றப்படும் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது கோயில்.காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகாமையில் உள்ளது.தென்னாட்டு வழக்கப்படி கோபுரம்.நுழைந்ததும் அன்னை விசாலாட்சி இரண்டு திருக்கோலங்களில் காட்சி அளிக்கிறாள்.சுயம்புவாகத் தோன்றிய வடிவம் ஒன்று. நின்ற கோலத்தில் நித்தம் அருள்புரியும் சிற்ப வடிவம் மற்றொன்று. சுயம்பு திருமுகத்தை வெள்ளிக் கவசம் அலங்கரிக்கிறது. சுந்தர வடித்தைப் பட்டாடைகளும் பலநிற மலர்களும் அலங்கரிக்கின்றன. அன்னையின் திருமுகத்தில் மஞ்சள் குங்குமம். திருமேனியில் பளபளக்கும் பட்டு.பரவசப்படுத்தும் மலர்கள், பூமாலைகள்! வினைகளை அறுத்து,விசனங்களை களைந்து, வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள்.

தட்சனின் மகளாக அவதரித்தாள் உமையவள். அருமை நாதனுக்கு அப்பன் அவமதிப்பு செய்தபோது, தட்சனின் யாகத் தீயில் பாய்ந்தாள். தன் காதல் நாயகியைப் பிரிய இயலாத,கயிலைநாதன் அவள் உடலை தோளில் சுமந்து பிரபஞ்சத்தில் அலைந்தாள். அகிலநாயகனே அடங்கிப் போனால் அனைத்து உயிரும் என்ன ஆவது? அண்டமே தலைகீழானது. சமுத்திரம் நதிகளுக்குள் பாய்ந்தது. சூரியன் மேற்கில் உதித்தான்.மிருகங்கள் பறக்கத் துடித்தன.மீன்கள் தரையில் நடக்க முனைந்தன. மழை வானை நோக்கிப் பொழிந்தது.

சர்வேஸ்வரனை சமாதானப்படுத்த முடியாமல் சகல தேவரும் ஓங்கி உலகளந்த உத்தமன் தாள்களில் வீழ்ந்தனர். பச்சை வண்ணன்,பாங்குடன் தன் சக்ராயுதத்தை ஏவினான். சுழன்று சென்றது திருச்சக்கரம். பிறைசூடிய பித்தனின் தோளில் பிணமாகக் கிடந்த தாட்சாயணியின் உடலைத் துண்டம் துண்டமாக வெட்டிப் போட்டது.

தெளிந்தார், ஈசர். ''யாகத்தில் வீழந்த கணமே சக்தி என்னைச் சேர்ந்துவிட்டாள்.ஆனால், உள்நின்று ஒளிரும் சக்தியை விடுத்து,வெளிப்பூச்சு அழகில் உள்ளத்தைப் பறிகொடுப்பது பரிதாபம் என்பதைக் காமக்கனலில் சிக்குற்று அவதியுறும் மாந்தருக்கெல்லாம் படிப்பினையாகப் புகட்டவே விளையாடினேன்...'' என்றுரைத்தார்.

சக்தி சமேதராக அனைவருக்கும் தரிசனம் தந்து பரவசப்படுத்தினார். ''உமையவள் உடலிருந்து விடுப்பட்ட அம்சங்கள் எல்லாஅம் எங்கெங்கு வீழ்ந்தவனோ,அந்தந்த தலங்கள் எல்லாம் சக்தி பீடங்களாக விளங்கட்டும்'' என்று இறைவன் அருளினார். புண்ணிய பாரதத்தில் அன்னையின் அம்சங்கள் ஐம்பத்திரண்டு இடங்களில் வீழ்ந்தாக தந்திர சூடாமணி சொல்கிறது.அன்னை சக்திக்கு அப்படித்தான் ஐம்பத்திரண்டு பீடங்கள் அமைந்ததாகப் புராணம் எடுத்துரைக்கிறது.



அம்மனின் 51 சக்தி பீடங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat May 02, 2015 7:01 am

தகவல்களும் படங்களும் பிரமாதம்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
msb
msb
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 01/05/2015

Postmsb Sat May 09, 2015 1:31 pm

குட்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 10, 2015 8:00 am

அம்மனின் 51 சக்தி பீடங்கள் 103459460 அம்மனின் 51 சக்தி பீடங்கள் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக