ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்!

2 posters

Go down

பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்! Empty பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்!

Post by Powenraj Thu May 07, 2015 9:38 pm

பிரதமர் நரேந்திர மோடி மே 9 ஆம் தேதி கொல்கத்தாவில் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் பாலிசியையும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு பாலிசியையும் தொடங்கி வைக்கப் போகிறார். இந்த இரண்டு திட்டங்களிலும் யார் யார் சேரலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும், பிரீமியம் எப்படி வசூலிக்கப்படும், க்ளெய்ம் எப்படி கிடைக்கும், எதற்கெல்லாம் க்ளெய்ம் கிடைக்கும் என்று விவரிக்கிறார் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் இந்திரா பத்மினி.

யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?

‘‘இந்தத் திட்டத்தில் இந்தியாவில் வங்கிக் கணக்குள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அவர் ஏழை, பணக்காரர், வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்று எந்தப் பாகுபாடுமின்றி இந்தத் திட்டத்த்தில் இணையலாம். இதில் இணைபவர்கள் 18 - 70 வயதுடையவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 70 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும்.

அதேபோல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இணைபவர் 18 - 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் மட்டும் 50 வயது பூர்த்தி அடையாதவர் தன் 50-வது வயதில் விண்ணப்பித்தால், அடுத்த 5 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் இருக்கலாம். இந்தச் சலுகை திட்டம் தொடங்கப்படுகிற 2015-ம் ஆண்டு மட்டுமே கிடைக்கும். ஒருவர் மேற்கூறிய இரண்டு திட்டத்திலும் இணையலாம். தனியாக வேறு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளவர்களும்கூட இந்தத் திட்டத்தில் இணையலாம்.

எப்போது சேரலாம்?

2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால் யார் வேண்டுமானாலும், எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றித் திட்டத்தில் இணையலாம். மே 2015-க்குப்பின் அதாவது, ஜூன் 1 (2015) முதல் ஆகஸ்ட் 31 (2015) வரை திட்டத்தில் இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டி இருக்கும்.

என்ன வேண்டும்?

இந்தத் திட்டத்தில் இணையக் கட்டாயம் ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கு வேண்டும். மற்ற எந்த வங்கிக் கணக்கை வைத்தும் இந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இணைய முடியாது. ஒருவர் ஒரு வங்கிக் கணக்கின் மூலம் ஒருமுறைதான் இந்தத் திட்டத்தில் இணைய முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்கு உள்ளவர்கள் ஏதாவது ஒரு வங்கிக் கணக்கு மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் இந்தத் திட்டத்துக்கான சேவைகளை வழங்குகின்றன. ஆனாலும் சில வங்கிகள் இந்தத் திட்டத்தில் இணையாமல் இருக்கின்றன.

விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?

இந்த திட்டத்தை பெரும்பான்மையான அரசு மற்றும் தனியார் துறை நிதி நிறுவனங்களான வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இதற்கான விண்ணப்பங்களை வழங்கத் தொடங்கி இருக்கின்றன. இந்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.

பிரீமியம் எப்படிச் செலுத்த வேண்டும்?
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் ஆண்டுக்கு 12 ரூபாய்ப் பிரீமியமாக வசூலிக்கப்படும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்துக்கு ஆண்டுக்கு 330 ரூபாய்ப் பிரீமியமாக வசூலிக்கப்படும்.

இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஆட்டொ டெபிட் என்கிற முறையில் வங்கி சேமிப்பு கணிக்கிலிருந்து பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத்திலேயே ஆட்டோ டெபிட் செய்யச் சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். எனவே, விண்ணப்பத்தைப் பூத்தி செய்து தந்தாலே வங்கிச் சேமிப்பு கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் செய்ய வங்கிக்கு அனுமதி அளித்தது போலதான். 31 மே 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து வங்கிகளில் சமர்பிக்கும்போது ஒரு ரசீது வழங்கப்படும். இது நீங்கள் திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். ஆனால் 01 ஜீன் 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்குகளின் மூலம் பிரீமியம் ஆட்டோ டெபிட் செய்யப்படும். வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்டபின் வங்கி, ரசீதை வழங்கும். இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம்.

ரெனீவல் செய்வது எப்படி?

நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களைக் கேட்கப்பட்டிருக்கும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்குமுன் வங்கிகள், சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோ டெபிட் செய்து அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும்.

யார் க்ளெய்ம் வழங்குவார்கள்?

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் தரப்பு வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஐஓபி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம்தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.

எதற்கு, எவ்வளவு க்ளெம்?

2015 மே மாதம் விண்ணப்பித்து விட்டு மே மாதமே விபத்து ஏற்பட்டால் க்ளெய்ம் கிடைக்காது. இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் துவங்குகிறது. எனவே, 2015 ஜூனிலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்தக் காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
ஜீவன் ஜோதி திட்டத்தில் இணைந்த ஒருவர் எந்த வகையில் இறந்தாலும் அவருக்கு இன்ஷூரன்ஸின் மூலம் முழுத் தொகையும் க்ளெய்மாகக் கிடைக்கும்.
இதற்கு இறந்தவர் பிரீமியம் செலுத்தியதற்கான ரசீது, அவரின் இறப்புச் சான்றிதழ் போன்றவைகளை நீங்கள் எந்த வங்கியின் கணக்கை வைத்து இந்தத் திட்டத்தில் இணைந்தீர்களோ, அந்த வங்கியில் சமர்பிக்க வேண்டும். நாம் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்திலேயே நாமினியின் பெயரையும், அவர்கள் நமக்கு என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டி இருக்கும். இறந்தவர் குறிப்பிட்ட நாமினிக்கு டிடி மூலம் க்ளெய்ம் தொகை அனுப்பப்படும். உங்கள் வங்கிக் கணக்கு மூலம் உங்கள் இருப்பிட முகவரி வங்கிக்கு தெரியும் என்பதால் தனியாக எந்தக் கூடுதல் விவரங்களும் தரத் தேவை இல்லை.

சுரக்‌ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disailment), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disailment) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட் மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஒட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.

திட்டத்தின் தொடர்ச்சி!

ஒரு திட்டத்திலிருந்து ஒருமுறை க்ளெய்ம் கிடைத்துவிட்டால், அடுத்த வருடம் தொடர்ந்து பிரீமியம் செலுத்துவதன் மூலம் திட்டம் தொடரும். எனவே, மீண்டும் புதிதாக விண்ணப்பம் கொடுத்துத் திட்டத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
ஒருவேளை இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்த வங்கிக் கணக்கை கையாள முடியாமல் போனால், எந்த வருடத்துக்குப் பிரீமியம் செலுத்தப்பட்டிருக்கிறதோ, அந்த வருடம் முழுவதுமாக (அதாவது, ஜூன் 1 முதல் மே வரை 31) அந்த வங்கிக் கணக்கு மூலம் க்ளெய்ம் கிடைக்கும். மீண்டும் வேறு ஒரு வங்கிக் கணக்கு மூலம் புதிதாக விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து இந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இணையலாம்.

எப்போது திட்டம் காலாவதியாகும்?

நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும். பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்துச் செய்யப்படும்.
பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தில் உள்ளவர்கள் 70 வயதை கடக்கும்போதும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டத்தில் இருப்பவர்கள் 50 வயதை கடக்கும்போதும் பாலிசிகள் காலாவதியாகிவிடும்” என்றார் இந்திரா பத்மினி.

குறைந்த பிரீமியத்தில் கூடுதல் பலன் தரும் இந்தத் திட்டத்தில் அனைவரும் சேரலாமே!

நன்றி-விகடன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்! Empty Re: பிரதமர் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் 12 ரூபாய்க்கு ரூ.2 லட்சம் கவரேஜ்!

Post by gmvkriskumar Fri May 08, 2015 10:53 am

தகவலுக்கு நன்றி.....

ATAL பென்ஷன் திட்டம் பற்றி தகவல் வேண்டும்....


என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈமு கோழி பித்தலாட்டம் - ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம்
» தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்
»  பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் கூடுதல் வீடுகள்
» மைக்கேல் ஜாக்சன் கை உறை 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம்
» பிரதமர் நிதி திட்டத்தில் 500 ரூபாயை வங்கியில் எடுக்க 30 கி.மீட்டர் நடந்து சென்ற பெண் - ஏமாற்றத்துடன் திரும்பிய பரிதாபம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum