புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
37 Posts - 40%
heezulia
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 13%
Rathinavelu
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
Guna.D
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
mruthun
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
105 Posts - 45%
ayyasamy ram
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_lcap மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_voting_bar மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயை பற்றிய தத்துவக் கதைகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:10 am

First topic message reminder :

 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 AojoAMsRIiKrU5hSGnfV+agTOvgEK

மாயையும் பிரம்மமும் முறையே, ஓடும் பாம்பையும், சலனமற்றுக்கிடக்கும் பாம்பையும் ஒக்கும். இயங்கும் சக்தி மாயையாகும்; நிலையான சக்தி பிரம்மம். இவ்வாறு மாயையைப் பற்றி இராமகிருஷ்ணபரமகம்சர் கூறியுள்ளார். “மாயை போலியானது, உண்மையற்றது, ஏமாற்றுவது” என்று இருக்கு வேதம் கூறுகின்றது. “பல்வேறு வகைப்பட்ட தோற்றங்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல் கொண்டது மாயை” என்று அதர்வண வேதம் கூறுகிறது. உபநிடதங்களும் மாயையைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன; “பிரபஞ்சத்தின் தோற்றத்திற்குக் காரணம் மாயை” என்று சுவேதாஸ்வர உபநிடதம் கூறுகின்றது. உலகப் படைப்புக்கு மாயை முதற்காரணமாகவும், சக்தி துணைக்காரணமாகவும், சிவன் நிமிர்த்த காரணமாகவும் இருக்கின்றான்” எனப் புராணங்கள் கூறுகின்றன. “மா” என்றால் தோன்றல். “யா” என்றால் ஒடுங்கல் என்று மாயைக்குப் பொருள் சொல்லப்படுகின்றது. ஆன்மாவும் மாயையும் சேர்ந்தால் எப்பொழுதும் துன்பமே உண்டாகும். இதனால் தான் பிறப்புக்கள் உண்டாகின்றன. ஆன்மாவும் பிரம்மமும் சேர்ந்தால் பேரின்பம் உண்டாகும். இதனால் பிறப்பற்ற நிலை உண்டாகும்.

எப்பொருள் மீதாவது ஆசையுள்ளவன் மாயையால் பீடிக்கப்பட்டவனாவான். உதாரணமாகப் பணத்தின் மீது ஆசை; உணவின் மீது ஆசை; பெண்ணின் மீது ஆசை. இவ்வாசை உள்ளவர்கள் எல்லோரும் மாயையின் வசப்பட்டவர்கள் என்று வியாசமுனிவர் கூறியுள்ளார். மாயை இரு வகைப்படும். உலகை உயிர்ப்பிப்பதும் மாயை தான்; உலகை துன்பப்படுத்துவதும் மாயை தான். உலக உய்விக்கும் மாயையை “வித்தை” என்றும், உலகைத் துன்பப்படுத்தும் மாயையை அவித்தை என்றும் கூறப்படுகிறது. ஈஸ்வரனிடம் வித்தை, அவித்தை என்ற இரு மாயைகளும் உள்ளன. வித்தியா மாயை உயிர்களை இறைவனோடு சேர்த்துவைக்கும். அவித்தியா மாயை உயிர்களுக்குப் போகங்களைக் கொடுத்து அவைகளை இறைவனை விட்டு நீங்கச் செய்யும். மாயை தான் பிரம்மத்தைக் காணச்செய்கின்றது. மாயை இல்லாவிட்டால் உலகம் இயங்காது;. உயிர்களால் இறைவனின் மகிமைகளை அறிந்து கொள்ள முடியாது. பிரம்மஞானம், பரமானந்தம், பேரின்பம், முத்தி முதலியவைகளெல்லாம் மாயையின் மூலமே உயிர்களுக்குக் கிடைக்கின்றன. இவ்வாறு இந்து சாஸ்த்திரநூல்கள் கூறுகின்றன. அப்படியான வல்லமை பொருந்திய மாயையின் குணங்களைப் பற்றிய தத்துவங்களை இந்நூலில் கதைகளாக எழுதியுள்ளேன்.


கே.வி. குணசேகரம்



 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:14 am


“தாமோதரனைப் பார். பெரிய வணிகன் அவனது கப்பல்கள் மூன்று சூறாவளியினால் கடலுட்; தாண்டுவிட்டன. இரண்டு கப்பல்களைக் கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுவிட்டனர். அதனால் தாமோதரனின் வாழ்வு கெட்டுப்போனதா? இல்லையே… அவன் அரசிடம் கடன் பெற்று வாணிபம் செய்கிறான்”. “உனது தந்தை பெரும் கோடீஸ்வரர். அவரால் வயிறு நிறைய உண்ண முடிகிறதா..? ஐம்பது வயதிலேயே அவருக்குப் பல நோய்கள். இனிப்புக்கூடாது; மாப்பொருட்கள் கூடாது; எண்ணெய் வகைகள் கூடாது. இப்படியிருந்தும் அவர் மகிழ்வுடன் தானே வாழ்கிறார். உங்களிடம் கூலி வேலை செய்யும் வேலாயுதத்தைப் பார். எழுபது வயதானாலும் அவன் எல்லாம் சாப்பிடுகிறான். ஆனால் சாப்பிடப் போதிய வருமானம் இல்லாததால் சில சமயங்களில் பட்டினியுடன் இருக்கிறான். இவை யாவும் விதியின் விளையாட்டு”'

“பணக்காரனாக இருந்தாலும் உலக இன்பங்களை அனுபவிக்க முடியாது. பொருளுள்ளவர்கள் பலருக்கு அப்பொருட்கள் பல இடங்களில் உதவி செய்வதில்லை. அறிவுள்ளவர்கள் பலர் பணம் பொருளைத் தேட முடியாதவர்களாய் இருக்கிறார்கள். பண்டிதர் வீரகத்தி பல துறை விற்பனர். கல்வியறிவில் அவரை விட மேலானவர்கள் இவ்வூரில் இல்லை. பெரும் பெரும் பதவிகளில் இருப்போரும் அவர்களது பிள்ளைகளும் அவரிடம் வந்து தெரியாதவற்றிற்கு விளக்கம் கேட்டுச்செல்கின்றனர். கணேசன் மிகப் பெரிய பதவியில் இருக்கிறான். அவனுக்குக் கீழ் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கின்றனர். அவனது சொல்லைக் கேளாமல் நாட்டில் எதுவும் இயங்காது. ஆனால் அவன் பண்டிதர் வீரகத்தியைப் பெரும் ஞானியாகக் கருதுகிறான். அவரிடம் வந்து ஆசிபெறாமல் அவன் எந்தக் காரியமும் செய்வதில்லை. நாட்டுக்கு நன்மை செய்வதாக இருந்தால் கூட அவன் அவரிடம் கேட்காமல் செய்யமாட்டான். ஆனால் பண்டிதர் ஏழை. அவரின் மகள் முப்பத்தேழு வயதாகியும் திருமணமாகாமல் இருக்கிறாள்” “கல்வி கற்பிப்பதற்கும், ஆசி வழங்குவதற்கும் பணம் பெறக்கூடாது என்பது பண்டிதர் வீரகத்தியின் கொள்கை. அவர் படித்த நூல்கள் அப்படித்தான் சொல்லியுள்ளன. அதனால் அவர் மிகுந்த ஏழையாக வாழ்கிறார். ஒருவன் மிகுந்த அறிவாளியாக இருந்தாலும் விதி அவனைப் பணக்காரனாக்காது.

அறிவைத் தேடுகின்ற முயற்சியில் விதிப்பயனால் நல்லவை தீயவையாகலாம். தீயவை நல்லவையாகலாம். பண்டிதரிடம் சீதனம் பெறாமல் அவரது மகளைத் திருமணஞ் செய்ய பலர் விரும்பினர். ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு குறை இருந்தது. சிலகுக்கு சாதகம் பொருந்தவில்லை. சிலர் சாதியில் குறைந்தவர்களாக இருந்தனர். சிலர் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்கவில்லை. சிலரிடம் பண்டிதர் எதிர்பார்த்தவை இல்லை. இதனால் அவரது மகளுக்குத் திருமணம் நடைபெறவில்லை. சௌமியாவுக்கு இருபது வயதுகூட நிரம்பவில்லை. காதலித்துத் தான் விரும்பியவனுடன் சென்றுவிட்டாள். கெங்காதரனின் மகளுக்குப் பதினைந்து வயது. எத்தனை திருமணங்கள் இதுவரை பேசி வந்துள்ளன. எல்லாம் ஆண்டவன் சித்தம். ஆண்டவனின் சித்தம் செயல்களாக வரும். அது தான் விதி” என்றார் நாகலிங்கம்; சுவாமிகள்”.

“சுவாமி எனக்கு வாழ்ககை வெறுத்துவிட்டது. நான் உங்களுடன் வந்து ஆச்சிரமத்தில் தங்கியிருக்க விரும்புகிறேன்” என்றான் மனோகரன்”.

“நல்லது அப்படியே செய்” என்றார் நாகலிங்கம்; சுவாமியார்”;. “மனோகரன் சுவாமியாரின் ஆச்சிரமத்தில் தங்கியிருந்தான். நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அவனது பெற்றோரும் உறவினர்களும் அடிக்கடி வந்து அவனைப் பார்த்துச் சென்றனர்”. “தர்மபாலனும் சிவபாலனும் அடிக்கடி ஆச்சிரமத்திற்கு வருவார்கள்”. “அவர்கள் வந்தால் மனோரகன் சௌமியாவைப் பற்றி மிகுந்த அக்கறையுடன் விசாரிப்பான்”

“தர்மபாலன் தர்மசிந்தனை உள்ளவன். அதனால்; “மனோகரா, உன்னைச் சௌமியா விரும்பவில்லை. அவள் உன்னை விரும்பியிருந்தால் நீ துயரப்படுவது நியாயமானது. அவள் இன்னொருவனை விரும்பி அவனுடன் சென்று குடும்பம் நடத்துகிறாள். இன்னொருவனின் மனைவியைத் தாயாக நினைக்கவேண்டும் என்று இந்து சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. அது தெரிந்தும் நீ அவள் மீது காமம் கொள்கிறாய். நினைவுகள் தான் செயல்களாக மாறுகின்றன. அதனால் தான் இந்து சாஸ்திரங்கள் தீயவற்றை எண்ணக்கூடாது; அவற்றைப் பார்க்கக்கூடாது என்று கூறுகின்றன. தீயவற்றை எண்ணுவதால் மனம் தர்மத்தை எண்ணாது அதை தீர்க்க முயலும். தீயவற்றை ஆசையோடுப் பார்த்தால் தீயது நல்லதாகத் தெரியும். தொடர்ந்து பார்த்தால் அது தர்மத்தை மறைக்கும். அதனால் தீமை தான் வரும். தீயவற்றைக் கேட்டால் ஆசை உண்டாகி அவா ஏற்படும். அவா சிந்திக்காது பல தீமைகளைச் செய்யத் தூண்டும். இதனால் தர்மசிந்தனைகள் அழிக்கப்படும். அதனால் நண்பா, நீ அவளைப்பற்றி நினைக்காதே. நீ நினைப்பதால் தான் என்னிடம் அவளைப் பற்றிக் கேட்கிறாய். நான் அவளைப் பற்றிச் சொன்னால் உனது மனம் துன்பப்படும். அதனால் அதைப்பற்றிக் கேளாதே. தர்ம சிந்தனைகளைத் தீய செயல்கள் மறைக்கும் என்பதால் நான் அவளை அன்றே மறந்துவிட்டேன். அவள் எங்கே இருக்கிறாள்; எப்படி வாழ்கிறாள் என்று எனக்குத் தெரியாது. நண்பா, உன்னை மிகவும் மன்றாட்டமாகக் கேட்கின்றேன் தயவு செய்து இன்னொருவனின் மனைவியைப் பற்றிச் சிந்திக்காதே. செயலை விடச் சிந்திப்பது பாவம்” என்பான். “அதனால் தர்மபாலனுடன் மனோகரன் பெரிதாகக் கதைப்பதில்லை. அத்துடன் தர்மபாலன் வரும் வேளைகளில் நல்லவற்றை உபதேசிப்பான். சுவாமியாரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தர்ம உபதேசங்கள் செய்வார். இதனால் ஆச்சிரம வாழ்க்கையும் மனோகரனுக்கு வெறுத்தது. அவன் எந்த நேரமும் சௌமியாவின் சிந்தனையுடனேயே இருந்தான்”. “சிவபாலன் வந்தால் அவன் சௌமியாவைப் பற்றியே கதைப்பான்”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:14 am


“அன்று சிவபாலன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து மனோகரனைச் சந்தித்தான்; “நண்பா, நான் இன்று வேலூரில் உள்ள வெள்ளெருவைப் பிள்ளையார் கோயில் சதுர்த்தி விழாவில் சௌமியாவைச் சந்தித்தேன். பச்சை நிறக்காஞ்சிபுரப் பட்டுச்சேலை உடுத்திருந்தாள். அந்த உடையில் சரஸ்வதிதேவி வந்திருப்பது போலத் தெரிந்தது. கழுத்து நிறையத் தங்க நகைகள் போட்டிருந்தாள். அத்தனையும் நீ வாங்கிக் கொடுத்தவை. தங்கரதம் ஒன்று வீதியில் உலா வந்ததைப் போல அவள் நடந்து சென்றாள். அவளது அலங்காரத்தைப் பார்க்க ஆயிரங்கண்கள் தேவை. இயல்பாகவே கூரிய வேலைப்போன்ற அவளது விழிகளுக்கு கருநிற மை தீட்டியிருந்தாள். அது கருவேலாகப் பளபளத்தது. சிவத்த கன்னங்கள்;, அப்பப்பா அவளை வர்ணிக்க நானென்ன புலவனா? அவள் உனக்குரியவள். உன்னுடன் வாழ்ந்தால் நீ சொர்க்கத்தில் இருந்திருப்பாய்” என்றான்” “அதன் பின் மனோகரனின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. ஆச்சிரமத்துக்குள் எந்த நேரமும் படுத்திருந்தான். முன்பென்றால் பூசைகளில் கலந்துகொள்வான். நாகலிங்கம் சுவாமியாருடன் எப்பொழுதும் இருந்து கதைத்துக்கொண்டிருப்பான். அவன் சுவாமியாருடனும் தர்மபாலனுடனும் கதைப்பதைத் தவிர்த்து வந்தான். ஒருமுறை தர்மபாலன் வந்தபோது. இனிமேல் நீ வந்து என்னைச் சந்திக்காதே” என்று கூறிவிட்டான்” இருப்பினும் தர்மபாலன் வழமை போல வந்து சுவாமியாருடன் கதைத்துவிட்டுப் போவான். சிவபாலன் பின் அடிக்கடி வந்து மனோகரனுடன் கதைத்துவிட்டுச் செல்வான். அவர்களது உறவில் நாகலிங்கம் சுவாமியாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவர்களை அவதானிப்பதற்குச் சீடர்களில் ஒருவனை நியமித்தார்”.

“சிவபாலன் அடிக்கடி மனோகரனைச் சந்தித்து ஏமாற்றுக் கதைகள் கூறிப் பணம் பெற்றுச் சென்றான்;

“சௌமியா இப்போ உன்னை விரும்புகிறாள். தான் செய்த தவறை மன்னிக்கும்படி மன்றாட்டமாகக் கேட்கிறாள். வீட்டில் இருந்து கொண்டுவந்த பொருட்கள் யாவும் எனது கணவருக்குத் தொழில் கிடைக்காமையால் செலவாகிவிட்டது. அவர் தொழில் பெற்றதும் மனோகரன் தந்த பொருட்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கிறாள்” என்று சிவபாலன் சொன்னதும் மனோகரனின் மனதில் இரக்கம் பிறந்தது. அவளுக்கு உதவி செய்ய விரும்பி சிவபாலனிடம் பணம் கொடுத்து அனுப்பினான். அவள் மனோகரன் மீது விருப்பம் கொண்டுள்ளாள் எனத் தெரிவித்துப் பல தடவைகள் சிவபாலன் பெருந்தொகையாகப் பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளான். ஆனால் அப்பணத்தை அவன் சௌமியாவுக்கு கொடுக்கவில்லை. அவள் எங்கேயிருக்கிறாள் என்று யாருக்கும் தெரியாது. தந்தை தற்கொலை செய்ததும் அவளுக்குத் தெரியாது” “மூன்று வருடங்கள் கழிந்தன. மனோகரன் முன்பு போலவே இருந்தான். சிவபாலன் வந்து மனோகரனிடம் பணம் பெற்றுச் சென்றான். அவன் ஒருமுறை வந்த போது மனோகரன் சொன்னான்; “சிவபாலா, நான் சௌமியாவை ஒரு தரம் பார்க்க வேண்டும். தேவதையைப் போல அவள் இருக்கிறாள் என்று சொல்கிறாய். அவளின் அழகை ஒருமுறை தரிசிக்க வேண்டும். ஒருமுறை அவளோடு பேசவேண்டும்”

“அதற்குச் சிவபாலன் சொன்னான்; “நான் இது பற்றி அவளிடம் கதைத்துவிட்டு வந்து சொல்கிறேன். அவளுக்குச் சொல்லாது சென்று சந்தித்தால் அவளது கணவன் அவளைச் சந்தேகிப்பான். அதனால் அவளது வாழ்க்கை பாழாகிவிடும்” “நீ சொல்வது சரிதான். அவளைக்கேட்டுக்கொண்டு விரைவாக வா” என்று மனோகரன் சொன்னான். அதன் பின் சிவபாலன் வருவது படிப்படியாகக் குறைந்து இறுதியில் முற்றாக வராமல் விட்டுவிட்டான்”. “மேலும் சில காலங்கள் கழிய நாகலிங்கம் சுவாமியாரும் மனோகரனும் அயலூருக்குத் தலம் ஒன்றைத் தரிசிக்கச் சென்றனர். சிவபாலன் வராமையால் கவலைகொண்டிருந்த மனோகரனைச் சுவாமியார் மன ஆறுதலுக்காக அழைத்துச் சென்றார். ஆனால் மனோகரன் சௌமியாவையும் சிவபாலனையும் தேடிக் கண்டுபிடிக்கும் நோக்கத்தில் சென்றான்” “மனோகரனிடம் ஆடம்பரமான பல மோட்டார் வண்டிகள் நின்றன. அப்படிப்பட்ட சொகுசான வாகனமொன்றில் தான் சுவாமியாருடன் அவன் சென்றான்” “சுவாமியார் தலயாத்திரை செய்வதானால் கால்நடையாகவே செல்வார். பல சிரமங்களுக்கு மத்தியில் சென்ற அவருக்கு ஆடம்பரமான வண்டியில் சென்றது மகிழ்வைக் கொடுத்தது. வசதிகள் மீது பற்று உண்டானது. அதனால் மனோகரனைத் தனது நிரந்தரமான சீடனாக ஆச்சிரமத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:14 am


“சுவாமியாரும் மனோகரனும் அந்தத் திருத்தலத்திற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மனோகரன் சுவாமி தரிசனம் செய்த போதும் மனம் சௌமியாவையும் சிவபாலனையும் தேடியது” “சுவாமி தரிசனம் செய்துவிட்டு அவர்கள் இருவரும் வெளிவீதிக்கு வந்தனர். வெளிவீதியில் நாலைந்து பிச்சைக்காரர்கள் இருந்தனர். மனோகரன் ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தான். அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டதும் மனோகரன் அதிர்ந்து போனான். அவளின் உடலில் தசையே இருக்கவில்லை. எலும்புக்கூடு ஒன்று குத்தியிருப்பது போல இருந்தது. மனோகரன் அதிர்ச்சியுடன்; “சிவனே” என்று கூறியவாறு முகத்தை மறுபக்கம் திருப்பினான்”. “அப்பொழுது ; “சுவாமி, நீங்கள் நாகலிங்கம் சுவாமி தானே” என்று அந்தப்பெண் முனகியபடி கேட்டாள்” “ஆம். நீர் யார்?” என்று கேட்டார் நாகலிங்கம்; சுவாமியார்”. “பதில் சொல்லாது அவள் விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு மேல் மூச்சு வாங்கியது. அதைக் கவனிக்காது மனோகரன் நடந்து சென்று தனது வாகனத்திற்கு அருகில் நின்றான்”

“நான் பாவி சுவாமி. ஏமாற்றுக்காரனை நம்பி மோசம் போய்விட்டேன். நான் நம்பிவந்தவன் நான் கொண்டு வந்த பொருட்களை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டான். நான் ஊர் முழுவதும் அலைந்து திரிந்து இப்போது இந்தக் கோயிலில் வந்திருக்கிறேன்”. பேசமுடியாது கஷ்ரப்பட்டாள் அந்தப்பெண்”

“நீ சௌமியாவா…? நாகலிங்கம்; சுவாமியார் அதிர்ச்சியுடன் கேட்டார்” “சௌமியா என்ற வார்த்தையைக் கேட்டதும் மனோகரன் பரபரப்புடன் அங்கு வந்தான்”. “சுவாமி நான் ஏமாந்திட்டன். பொய்யான ஒருவனை மெய்யானவன் என்றெண்ணி ஏமாந்திட்டன்” விம்மி விம்மி அழுதாள்” “இவளா சௌமியா…? இவளின் உடலில் படர்ந்திருந்த அந்த அபூர்வ அழகெங்கே போனது. போதையூட்டிய அந்த அழகான சிவந்த உதடுகள் இன்று வெடித்து வீங்கியிருக்கின்றனவே. அழகிய பளபளப்பான முகம் விகாரமடைந்து பார்க்கப் பயத்தைக் கொடுக்கிறது. இவளைக் காண எனக்கு அருவருப்பாக இருக்கு. சிறுபிள்ளைகள் பார்த்தால் பயப்படுவார்கள். சிலருக்குப் பயத்தால் நோயும் பிடித்துவிடும்” என்னிடம் பணம் பெற்ற சிவபாலன் இவளைச் சந்திக்கவில்லையா?” என்று யோசித்துக்கொண்டிருந்தான் மனோகரன்”. “சுவாமி அவர் என்னை விட்டுவிட்டுச் சென்ற பின்பு ஊருக்கு வரவிரும்பினேன். ஆனால் ஊரவரும், எனது பெற்றோரும், இனத்தவர்களும் என்னை இகழ்வார்கள் என்று நினைத்து ஊருக்கு வரும் நினைவைக் கைவிட்டேன். எனது பெற்றோர் சுகமாக இருக்கிறார்களா…?” என்று கேட்டாள் சௌமியா”.

“அப்போ சிவபாலன் என்னிடம் பொய் சொல்லியா பணம் பெற்றான். அவன் தனக்குத்தேவை என்று கேட்டிருந்தால் அள்ளிக்கொடுத்திருப்பேனே. இப்படி ஏமாற்றிப் பணம் பெறவேண்டுமா? என்று நினைத்தான் மனோகரன்”. “மனோகரன் நீண்ட தாடியுடனும் மீசையுடனும் நின்றதால் அவளால் அவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அவனும் தன்னை யாரென்று சொல்ல விரும்பவில்லை. ஒரு கட்டுப் பணத்தை எடுத்து அவளின் அருகே போட்டுவிட்டுப் புறப்பட்டான்” “மன்னா, மெய்யான தர்மபாலனின் கூற்றை பொய்யானதென்றும், பொய்யான சிவபானனின் வார்த்தைகளை உண்மையானதென்றும் நம்பியதால் தான் மனோகரனுக்கு இந்த நிலை உண்டானது. மனித உடல் பொய்யானது. அழகு நிரந்தரமற்றது. பணம் அழிந்து போகத்தக்கது என்றார் சுவாமி”.. “சுவாமி, அப்படியானால் மாயையால் பீடிக்கப்படாதவர்கள் எவரும் இல்லையா…?”

சுவாமியார் சிரித்தார்; “மன்னா, எதுவெல்லாம் மனிதனின் சிந்தனைகளை மறைக்கின்றனவோ அவை யாவும் மாயை என்று சொல்லப்படுகின்றது. நாகலிங்கம் சுவாமிகள் கால்நடையாகத் திருத்தலங்களுக்குச் சென்று வந்தார். மனோகரன் ஆச்சிரமத்திற்கு வந்த பின்பு அவனது ஆடம்பர வாகனத்தில் திருத்தலங்களுக்குச் சென்று வந்தார். சௌமியாவைப் பார்த்த பின்பு மனோகரன் உலகைப் புரிந்து கொண்டான். அதனால் அவன் உண்மையான அன்பைப் பற்றித் தெரிந்து கொண்டான். அதனால் அவன் தர்மபாலனின் நட்பை விரும்பினான்.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:14 am


பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க அவர்கள் பார்த்து முடிவெடுத்த பெண்ணைத் திருமணம் செய்து அறவாழ்வு வாழத்தொடங்கினான். அதன் பின் அவன் ஆச்சிரமத்திற்குச் செல்வதில்லை. அதனால் நாகலிங்கம்; சுவாமியார் கவலைப்பட்டார். கவலை ஆத்திரமாக மாறியது. அதனால் அவனைப் பற்றிக் கேவலமாகக் கதைத்தார். பற்றுத்தான் மாயை. பற்று ஒரு விடயத்தில் வந்தாலும் அதற்குப் பல விடயங்கள் தேவைப்படும். அதனால் பாவங்கள் அதிகரிக்கும். எதிலும் பற்றில்லாமல் வாழ்பவன் மாயையால் பீடிக்கப்படமாட்டான். அப்படியான ஞானிகள் உலகில் இலட்சத்தில் ஒருவர் கூட இல்லை”. “மன்னா, வேலூர் மன்னன் முனிவர்கள், ஞானிகளைக் கண்டால் தனது கடமைகள் யாவற்றையும் மறந்து விடுவான். மன்னனின் இந்தப் பலவீனத்தை அறிந்த பலர் மன்னனை ஏமாற்றிச் சுகபோக வாழ்வு வாழ்ந்து வந்தனர். இது முதலமைச்சருக்கு வெறுப்பைக் கொடுத்தது. முனிவர்களுக்குப் பாடங்கற்பித்து மன்னனைத் திருத்த விரும்பினார்” “ஒரு நாள் முதலமைச்சர் மன்னனை அந்தப்புரத்தில் சந்தித்துச் சொன்னார்; “மன்னா, பற்றில்லாதவர்கள் தான் முனிவர்கள். எமது அரண்மனையில் தங்கியுள்ள பலர் போலிச்சுவாமிகள்” “அப்படியா, அதை நிரூபி;” என்றான் மன்னன்”

“அன்று மன்னன் முனிவர்களையும், ஞானிகளையும் தனிமையில் சந்தித்து ஆசிபெற விரும்புவதாக முதலமைச்சர் அறிவித்தார். அதன்படி ஒவ்வொரு முனிவரும் மன்னனுக்கு ஆசி வழங்கவென வந்தனர்”. “முதலாவதாக வந்த முனிவரின் பாதங்களைத் தொட்டு வணங்கினான் மன்னன்.” “மன்னா, சகல சௌபாக்கியங்களும் உனக்கு உண்டாகட்டும். அயலில் உள்ள நாடுகளையெல்லாம் கைப்பற்றிப் பேரரசனாக வாழக்கடைவாய்” என்று வாழ்த்தினார் முனிவர்”. “மன்னன் மகிழ்வுடன் சிரித்தான். பின்; “முனிவரே, உலகை வென்றவரே, மகதநாட்டிலிருந்து அபூர்வமான கனியொன்றை எமது வீரர்கள் கொண்டு வந்துள்ளனர். அதை உண்பவர்கள் நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ்வார்கள். அது இது தான்” எனக்கூறி ஒருகனியைப் பொன்னாலான தட்டில் வைத்துக் கொடுத்தான் மன்னன்” “முனிவர் மகிழ்வுடன் அதைப் பெற்று உண்டார். பின், “இப்படியான சுவை மிக்க கனியை நான் இதுவரை உண்டதில்லை. அமிழ்தைவிடச் சுவையானது” என்று கூறினார்”.

“முனிவர் சென்றதும் முதலமைச்சர் சொன்னார்; மன்னா, முனிவர்களுக்குப் பற்றிருத்தல் கூடாது. உமது தந்தையாருக்கு யோகர் சுவாமிகள் அடிக்கடி அரிய உணவுப்பண்டங்களைக் கொண்டுவந்து கொடுப்பார். உனது தந்தை அவரை உண்ணுமாறு வற்புறுத்துவார். ஆனால் யோகர் சுவாமிகள் உண்ண மாட்டார்; “மன்னா, பற்றுக்களை அறுத்த எனக்குப் பற்றுக்களை உண்டாக்காதே. அவை தான் எல்லாப் பாவங்களுக்கும் மூலகர்த்தா. சுவையான உணவை உண்டு களித்த நா எந்நாளும் சுவையைத் தேடியபடியே இருக்கும். அந்த நினைவுகள்; இறைவனை நினைக்க விடாது. இறைவனை அடைய நினைக்கும் ஞானி சுவையான உணவு வகைகளை உண்ணக்கூடாது. தனது ஆன்மாவைப் பாதுகாக்கும் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். உப்பு, புளி, காரம், இனிப்பு என்பவற்றை ஞானி உண்ணக்கூடாது. எனது பக்தர்கள் அன்போடு தரும் விசேட உணவுகளை நான் உனக்குத் தருகிறேன். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உனது நாட்டு மக்களின் செல்வம் செல்வாக்கை அது உணர்த்துகிறது. மகிழ்ச்சியாக வாழ்பவன் தான் சுவையான உணவுகளைத் தயாரிப்பான்; அதை விருப்புடன் மற்றவர்களுக்குக் கொடுப்பான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் என்பார்”.

“ஆனால், இப்போது வந்த முனிவர் நாம் சாதாரனமான மாங்கனியை எடுத்துத் தேனிலும் நெய்யிலும் ஊறவைத்து கருப்பஞ்சாற்றில் கற்கண்டிட்டுக் கொடுத்ததை அபூர்வமானது அமிழ்தம் போன்றது என்று கூறிவிட்டுச் செல்கிறார். அமிழ்தை இவர் புசித்தவரா…? அமிழ்து என்ற வார்த்தையைச் சாதாரண குடிமகன் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலாம். முற்றும் துறந்த ஞானி என்று சொல்வோர் சொன்னால் ஏற்கலாமா…?. அத்துடன் ஒரு முனிவன் தனக்குக் கிடைத்தவற்றை மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்க உண்ணமாட்டான். ஒப்புக்காவது; நீங்களும் உண்ணுங்கள் என்று கேட்பான். ஆனால் வந்தவன் கேட்கவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது மன்னா..? வந்தவன் இங்கு வயிற்றை நிரப்புவதற்காகவே வந்திருக்கின்றான்”. “மன்னர் அதை ஒப்புக்கொண்டார். அடுத்த முனிவர் வந்தார். அவர் வரும்போது மிகவும் அழகான பெண்கள் இருவர் மன்னனுக்குச் சாமரை வீசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் அழகான சேலையும், கவர்ச்சியான மார்புக் கச்சையும் அணிந்திருந்தனர். அவர்களது பார்வையில் மோகம் கொப்பளித்தது.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:15 am


அளவெடுத்துச் செதுக்கப்பட்ட பல்லவர் காலத்துக் கற்சிற்பங்கள் இரண்டு உயிர்பெற்று வந்து மன்னனுக்குச் சாமரை வீசிக்கொண்டிருப்பதைப் போலிருந்தது”. “மன்னன் முனிவரின் பாதங்களைப் பணிந்தான்; “மங்களம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தியவாறு முனிவர் ஆசனத்தில் அமர்ந்தார். அவரது கண்கள் அந்தச் சிற்பங்களை நோக்கி அடிக்கடி திரும்பின. மனம் இலேசாகி வானில் பறந்தது”. “சுவாமி, நான் வேலூரின் மீது படையெடுக்கத் தீர்மானித்துள்ளேன். இதில் எனக்கு வெற்றி கிடைக்குமா?” மன்னன் கேட்டான்”. “முனிவரை அந்த இரு பெண்களின் அழகு கவர்ந்தமையால் மன்னன் கேட்டது அவருக்கு விளங்கவி;ல்லை; “என்ன மன்னா கேட்டீர்கள்?” தடுமாறினார் முனிவர்”.

“நானும் பட்டத்தரசியும் வேலூருக்குச் செல்ல விரும்புகிறோம். வேலூர் இளவரசனை இராசகுமாரிக்கு வரன் கேட்கப் போகிறேன். அதற்குப் புறப்பட நல்ல நாளாகப் பார்த்துச் சொல்லுங்கள்” என்றான் மன்னன்”.

“முனிவர் சிறிது நேரம் கண்களை மூடித் தியானத்தில் இருந்தார். பின் சொன்னார்; “மன்னா, இராசகுமாரியின் கிரகநிலை நன்றாக இல்லை. அவளுக்கு அட்டமத்தில் சனிபகவான் இருக்கிறார். அவர் அடுத்த மாதம் பதினைந்தாம் திகதி ஒன்பதாவது வீட்டிற்குச் செல்கிறார். அதன் பின் வரும் பௌர்ணமி தினத்தன்று சென்று கேளுங்கள்” என்றார் முனிவர். பின் சிறிது நேரம் முனிவர் மன்னனுடன் பேசிவிட்டுச் சென்றார்”. “மன்னா, வந்த நேரம் முதல் முனிவனின் மனமும் கண்களும் தங்களுக்குச் சாமரை வீசிய பெண்களின் மீதே லயித்திருந்ததைத் தாங்கள் அவதானித்திருப்பீர்கள். காமமுடையவர்கள் ஒருபோதும் ஞானிகளாகமாட்டார்கள். மன்னா, யாரும் ஒரு கணப்பொழுதேனும் செயலாற்றாமல் இருந்ததில்லை. பிரகிருதியான மாயையில் இருந்து உதித்த குணங்களால் ஒவ்வொரு உயிரும் தன் வயமின்றிக்கருமமாற்றிக் கொண்டிருக்கும். ஆனால் பக்குவப்பட்ட ஆன்மா கர்மேந்திரியங்களை அடக்குவது போல இந்திரியங்களையும் அடக்கியிருத்தல் வேண்டும்”.

“முனிவனென்று வந்தவன் கர்மேந்திரியங்களை அடக்கிவிட்டவனைப் போல நடித்து, இந்திரிய விஷயங்களை மனத்தால் எண்ணிக்கொண்டும் அனுபவித்துக் கொண்டும் இருந்தான். இந்திரியங்களை மனதால் அடக்கிப் பற்றற்று, கர்மேந்திரியங்களைக் கொண்டு கர்மயோகம் செய்பவனே முனிவன் என்று நாம் அறியாதவர்கள் என்பது அவனது நோக்காக இருந்தது. அத்துடன் வேலூரின் மீது போர் தொடுக்க நாள் குறித்துத்தரும்படி கேட்டீர்கள். அதை அந்த முனிவர் விளங்கிக் கொள்ளவில்லை. ஆதனால் தான் பின்னர் நீங்கள் வேலூர் இளவரசனுக்கு எமது இளவரசியைத் திருமணம் பேசுவதற்குச் செல்ல உகந்த நாளைக் குறித்துத் தரும்படி கேட்டதற்கு அவர் ஏதேதோ பேசினார். வேலூர் அரசனுக்கும் எமக்கும் உள்ள தீராத பகையை அறிந்து கொள்ளாத அவர் ஒரு முனிவரா…?” என்று கேட்டார் முதலமைச்சர்”.

“அடுத்து மிகவும் வயது சென்ற ஒரு முனிவர் தள்ளாடியபடி வந்தார். மன்னன் அவரைஆதரவாக அணைத்து ஆசனத்திலிருத்தி அவரது பாதங்களைப் பணிந்தான். அவரது முகத்தில் துயரம் படிந்திருந்தது. அதை உணர்ந்து கொண்ட மன்னன் கேட்டான்; “சுவாமி, தங்களுக்கேதாவது குறையிருக்கா? அடியேன் அதைத் தீர்க்காது விட்டுவிட்டேனா?” “மன்னா, உனது வீரர்கள் வயதிற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. அத்துடன் பழுத்த ஞானப்பழமான என்னை முதலில் உன்னைச் சந்திக்க விடாதது பெருங்குற்றம்”. “உண்மை தான் சுவாமி, அதை மன்னித்தருளுங்கள். நான் அந்த வீரர்களுக்கு உரிய தண்டனை வழங்குகிறேன்” என்றான் மன்னன்” “முனிவர் திருப்தியடையவில்லை. “முனிவர்களின் தன்மையை உணர்ந்துகொள்ள முடியாத மூடர்களின் கட்டளையாகத் தான் இது இருத்தல் வேண்டும். எனவே இதற்கான கட்டளையிட்டவர்களைத் தான் தண்டித்தல் வேண்டும்” என்றார் முனிவர்”.

“முதலமைச்சருக்கு அந்த வயதுமுதிர்ந்த முனிவரைப் பிடிப்பதேயில்லை. அவர் வீரர்களை மதிக்காது அவர்களை தனது அடிமைகளாகக் கருதி அவர்களிடம் வேலை வாங்கிக்கொண்டிருந்தார். முனிவர்களென்றால் காட்டில் பன்னசாலை அமைத்து தவம்வேண்டியவர்கள். எப்போதாவது ஒரு தடவை அரண்மனைக்கு வந்து மன்னனுக்கு ஆசி வழங்கிச் செல்லவேண்டியவர்கள். ஆனால் இந்த முனிவர்கள் அரண்மனையில் தங்கியிருந்து சுகபோக வாழ்வை அனுபவிப்பதோடு தொல்லைகளும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்;. அதனால் அவரையும் அவரது கூட்டத்தையும் அரண்மனையை விட்டு வெளியேற்றவே முதலமைச்சர் இந்த நாடகமாடினார் ஏற்கனவே பிரச்சினைப்பட்ட அந்த முனிவர் அரசனுக்கு அதை மறைமுகமாகத் தெரிவித்தார்” “வயது முதிர்ந்த முனிவர் சென்றதும் முதலமைச்சர் அடுத்த முனிவரை அழைக்க ஆயத்தம் செய்தார். அதை உணர்ந்த மன்னன் சொன்னான்; “முதலமைச்சரே, இனி எந்த முனிவரையும் அழைக்க வேண்டாம். நான் உண்மையை உணர்ந்து கொண்டேன். அவர்களை மடங்களுக்கு அனுப்புங்கள். கோயில்களில் தங்கியிருந்து மக்களுக்கு ஆசி வழங்கட்டும். எக்காரணம் கொண்டும் எந்த முனிவரையும் அரண்மனையில் தங்க நான் அனுமதிக்கமாட்டேன்” என்றான் மன்னன்”. “சுவாமி, அப்படியானால் மாயையைவிட்டு நீங்கியவர்கள் யாருமில்லையா..?” மன்னன் கேட்டான்.

“மன்னா, எவனது கர்மங்கள் எல்லாம் ஆசையும் சங்கற்பமும் அற்றனவோ, எவனது கர்மங்கள் ஞானத்தீயால் எரிக்கப்பட்டனவோ அவன் மாயையால் பீடிக்கப்பட மாட்டான்”. “வினைப் பயனில் பற்றற்றவனாய், நித்திய திருப்தி உடையவனாய், எதையும் சாராதவனாய் இருப்பவன் எந்தக் கருமத்தில் ஈடுபட்டாலும் அவன் கர்மம் செய்தவனாகமாட்டான். கர்மத்தைத் தான் செய்வதாக நினைத்தால் மாயை அவனைப் பற்றிப் பிடித்துவிடும்”. “ஆசைகள் இல்லாதவன், மனதையும் உடலையும் கல்லாக்கியவன், உடைமைகளைத் துறந்தவன், உடலால் மட்டும் செயலாற்றுபவன் பாவத்தைச் செய்வதில்லை. அதனால் அவனை மாயை பிணிக்காது”. “மன்னா, எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து போய் மறம் மேலோங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் கடவுள் தன்னைப் பிறப்பித்துக் கொள்வார். அப்படிப் பிறப்பித்து நல்லவர்களைக் காப்பார்; கெட்டவர்களை அழிப்பார்; தர்மத்தை நிலைநிறுத்துவார்”. “கர்மம் எது, அகர்மம் எது என்பதில் ஞானிகள் கூடத் தடுமாற்றம் அடைகின்றனர். எதைக் கர்மம் என்று அறிந்து அதைப் பற்றின்றி உடலால் செய்கின்றவனை மாயை பிடிக்காது”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:15 am


“கர்மத்தின் தன்மையைத் தெரிந்துகொள்ளல் வேண்டும். செய்யத் தகாத கர்மங்கள் எவையெவையெனத் தெரிந்து கொள்ளல் வேண்டும். கர்மத்தைக் கடந்த நிலையையும் தெரிந்து கொள்ளல் வேண்டும். அப்படித் தெரிந்து கொள்வது அரிதானது” என்றார் நமசிவாயம் சுவாமிகள். “அப்படியானவர்கள் யாராவது வாழ்கிறார்களா..? வாழ்ந்திருந்தால் அடியேனுக்கு அதைக் கூறுங்கள் சுவாமி” மன்னன் கேட்டான். “மன்னா, இரவில் ஆகாயத்தில் எத்தனையாயிரம் தாரகைகள் தென்படுகின்றன. ஆனால் விடிந்ததும் அவை எங்கே சென்றன? ஆகாயத்தில் தான் இருக்கின்றன. அவற்றைப் பார்க்க முடியாதுள்ளது. அது போலத்தான் பூமியில் கர்மபலன்களை ஞானத்தீயால் எரித்துவிட்டு எதிலும் பற்றில்லாமல் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாம் தேடிக்கண்டு பிடித்தல் வேண்டும். அப்படியானவர்கள் தமது மனத்தையும் ஆத்மாவையும் ஈஸ்வரனுக்குப் பூரணமாக அர்ப்பணஞ் செய்துவிட்டுச் சர்வகாலமும் ஈஸ்வரனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்;. தான் வணங்கும் ஈஸ்வரன் எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறார் என்பதை உணர்ந்து அவ்வுயிர்களுக்குத் தொண்டு செய்வார்கள். அவர்களுக்கு எதிலும் நாட்டமிராது. ஆன்மாவுக்காக உண்பார்கள்;; ஆன்மாவுக்காக உடுப்பார்கள். ஆன்மாவுக்காக செயல்களைப் புரிவார்கள்;. அவர்கள்; ஆன்மாவுக்காக வாழ்விலும் அவர்கள்; பற்றுக் கொள்வதில்லை.

“யாருக்கும் தெரியாமல் ஒரு விடயத்தைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்து கொள்வான் என்று நினைப்பவன் பாவம் செய்ய அஞ்சுவான். யாருமில்லாத இடத்தில் அழகான கன்னிப் பெண்களைக் கண்டும் அவளை இச்சிக்காதும், காம உணர்வுகளோடு அவளைப் பார்க்காமலும் யார் இருக்கிறானோ அவன் பற்றுக்களற்ற சாது என்று கொள்ளல் வேண்டும். பொன் பொருள் யாவும் குவிக்கப்பட்டிருந்தும் அவற்றில் நாட்டமில்லாது இருப்பவன் தர்மவான். சலசலப்புகளுக்காட்படாது, புகழை விரும்பாது, தான் தான் கருத்தா என்பதை உணராது வாழ்பவன் புண்ணியவான். வீண்பெருமைகளுடனும், படாடோபத்துடனும் செய்யும் செயல்களெல்லாம் போலியானவை என்று உணர்ந்து கொள்பவன் தான் ஞானி. இப்படியான பலர் முன்பு வாழ்ந்தனர். இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.” “அரிச்சந்திரன் என்ற மன்னனின் வரலாற்றை நீ அறிந்திருப்பாய். உண்மையைத் தவிர எதையும் பேசமாட்டேன் என்று வாழ்ந்தவன் அரிச்சந்திரன். அவன் வாய்மை தவறாதவன் என்பதை நிரூபிப்பதற்காக வசிட்ட முனிவர் அவனுக்கு எத்தனை கொடுமைகளைச் செய்தார். அவன் அவற்றையெல்லாம் தாங்கிக்கொண்டானே தவிர வாய்மை தவறவேண்டும் என்று மனதாற்கூட நினைக்கவில்லை. இறுதியாகத் தனது மனைவியைச் சிரச்சேதம் செய்த போதும் கூட அவன் வருந்தவில்லை. தெய்வங்களை உதவி செய்யுமாறு அவன் கோரவில்லை. மனிதர்கள் சிறுசிறு துன்பங்கள் வந்தாலே அவற்றைத் தாங்க முடியாது தெய்வங்களிடம் முறையிடுகின்றனர்;. நாட்டை இழந்து, மகனை இழந்து, இறுதியாகத் தனது மனைவியைச் சிரச்சேதம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்ட போதும் அவன் கலங்கவில்லை”.

“இது தான் பற்றற்ற நிலை. அடுத்து என்ன நிகழும் என்ற சிந்தனை சிறிதும் இல்லாமல் எவனொருவன் எல்லாம் இறைவனால் தரப்பட்டவை என்று நினைத்துச் செயலாற்றுகிறானோ, அவன் உலகப் பற்றை முற்றிலும் விட்டொழித்தவனாவான். சர்வகாலமும் ஈஸ்வரனையே சிந்தித்துக்கொண்டு அவனது திவ்விய பிரேமையைத் தனக்குள் உண்டாக்கிக் கொண்டு கருமமாற்றுபவன் உலகத்தில் உள்ள எப்பொருட்களையும் தன்னுடைய பொருளாகக்க கருதமாட்டான். தன்னைச் சேர்ந்தவர்கள் என்று கருதும் பெற்றோர், மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் யாபேரும் எப்பொழுதோ ஒரு நாள் தன்னைவிட்டுப் பிரிந்துவிடுவார்கள் என்று நினைப்பவன் அவர்களின் பிரிவுக்காகத் துன்பப்படமாட்டான். இறைவன் மட்டும் தான் தனக்குச் சொந்தமானவன் என்று நினைப்பவன் பற்றுக்கள் அற்றவன். இந்த வகையில் தான் நாம் அரிச்சந்திரனை எடுத்துக்கொள்ளல் வேண்டும்” “எல்லாம் இறைவன் தருவான்; இறைவனது ஆணைக்கு மேலே எதுவும் இல்லை என்று புரிந்தமையால் தான் சர்வ வல்லமை பொருந்திய முனிவர்களாற் கூட அரிச்சந்திரனின் மனதை மாற்ற முடியவில்லை” “இப்படி இதிகாச புராணங்களில் பலர் வாழ்ந்துள்ளனர். சேதி நாட்டிலே உள்ள திருக்கோவலூரின் அரசர் மெய்ப்பொருள் நாயனார். இவர் சிவனடியார்களின் திருவேடத்தை மெய்ப்பொருளென நினைத்து வணங்கிப் போற்றுவார்”.

“முத்தன் என்பவன் ஒரு சிற்றரசன். பலமுறை மெய்ப்பொருள் நாயனாரோடு போர் தொடுத்துப் படுதோல்வி அடைந்தவன். போர் செய்து மெய்ப்பொருள் நாயனாரை வெற்றி கொள்ள முடியாதென்பதை உணர்ந்த முத்தன் சிவவேடம் தாங்கித் தனது உடைவாளை இடையிலே மறைத்து வைத்துக்கொண்டு மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனைக்கு வந்தான்” “வந்தவன் போலிவேடதாரி என்பதை உணராத வாயிற் காப்போர் அவனை வணங்கி மெய்ப்பொருள் நாயனாரிடம் அவனை அழைத்து வந்தனர்” “மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் போல வந்த முத்தனைச் சிவனென நினைத்து வணங்கினார். முத்தன் தருணம் பார்த்து மெய்ப்பொருள் நாயனாரைக் கொன்றான். இருப்பினும் மெய்ப்பொருள் நாயனாரின் வேண்டுதலின் பேரில் அவன் விடுவிக்கப்பட்டான்”. “இதைவிடச் சிறுதொண்டர் நாயனாரின் மகனை அரிந்து கறி செய்து தரும்படி சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமான் கேட்டார். சிறுதொண்டர் பாடசாலைக்குச் சென்ற தனது மகனை அழைத்து வந்து மனைவியோடு சேர்ந்து தனது மகனை வெட்டிக் கறிசமைத்துக் கொடுத்தார்” “வரலாற்றை எடுத்து நோக்கினால் இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சொல்லாம்.” “இன்றும் இப்படியானவர்கள் வாழ்கிறார்கள். நல்லவர் ஒருவர் இருந்தால் அவருக்காக வானம் இரங்கி மழை பெய்வது போல இப்படியான ஒரு சிலர் வாழ்வதால் தான் உலகம் இயங்குகின்றது”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:15 am


“மன்னா, குளத்துமேடு என்ற ஊரில் வாசுதேவன் என்றொரு குடியானவன் இருந்தான். அவன் தனது வேலைகளைச் சரிவரச் செய்வான். தன்னுடன் பழகுபவர்களுக்கு ஆலோசனைகள் கூறுவான். அதன்படி காரியங்கள் யாவும் நடைபெறும். அதனால் அவனைக் கேளாது அவனது நண்பர்கள் எவரும் எச்செயலையும் செய்வதில்லை. பின் அவ்வூரவர்கள் அவனது பெருமையை அறிந்து அவனிடம் ஆலோசனைகளைப் பெற்று வந்தனர். அவனது பெருமை அயல் ஊர்களிலும் பரவியது. அதனால் அவனது வீட்டில் மக்கள் குவியத்தொடங்கினர். அந்த ஊரில் ஒரு ஞானி இருந்தார். அந்த ஞானியிடம் தான் மக்கள் ஆலோசனைகளைப் பெற்று வந்தனர். அதற்காக அவர் பொருட்களையும் பணத்தையும் தட்சனையாகப் பெற்று வந்தார். வாசுதேவன் எவரிடமும் எதையும் பெறுவதில்லை. ஆரம்பத்தில் ஞானிக்கு வந்த வருமானம் படிப்படியாகக் குறைந்து முற்றாக அற்றுப்போய்விட்டது. அதனால் அவர் வாசுதேவனைப் பழிவாங்க நினைத்தார்” “மன்னா, பயன் கருதாது கர்மம் செய்பவன், மனம் தெளிவடைந்தவன், இந்திரியங்களை அடக்கியவன், தனது ஆத்மாவே உயிரனைத்திற்கும் ஆன்மா எனக் கருதியவன், கர்மத்தால் கட்டுண்டதில்லை. இப்படியானவன் பார்க்கினும், கேட்கினும், உறங்கினும், சுவாசிப்பினும், பேசினும், கழிக்கினும், பிடிக்கினும், கண்திறக்கினும், கண்மூடினும் பொறிகள் புலன்களில் போகின்றனவென்று உறுதிகொண்டு; “நான் எதையும் செய்வதில்லை” என்றே நினைப்பான்”.

“மேற்கூறிய போக்குடைய வாசுதேவன் மக்களின் நலன் கருதி கர்மம் செய்து வந்தான். ஆனால் அவ்வூரில் வாழ்ந்த ஞானியோ தான்தான் அனைத்திற்கும் கர்த்தா என்று நினைத்து ஊரில் கூலிக்காகப் பாவச்செயல்களில் ஈடுபடும் பலரின் உதவியுடன் வாசுதேவனுக்கு கெடுதல்கள் பலவும் செய்து வந்தான்” “அவ்வூரில் நாகநாதன் என்றொரு புலையன் வாழ்ந்து வந்தான். அவன் கர்ப்பமுற்ற பசுக்களையும் களவெடுத்துக் கொன்று அதன் மாமிசத்தை விற்று வருபவன். அவனை அழைத்துப் பொருட்களைக் கொடுத்து அந்த ஞானி, அவனிடம் உணவைக் கொடுத்து அவ் உணவை வாசுதேவனுக்குக் கொடுத்து அவனை உண்ணுமாறு கேட்கச் சொன்னான்” “நாகநாதன் உணவைப் பெற்றுக்கொண்டு வாசுதேவனின் வீட்டுக்கு வந்தான். வாசுதேவனது வீட்டில் ஊரவர்களும் அயலவர்களும் கூடியிருந்தனர். நாகநாதன் வாசுதேவனுக்கு அருகில் வந்து; “சுவாமி, தாங்கள் பற்றற்றவர், சிவனுடன் பேசுபவர் என்றெல்லாம் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். நீர் பேசும் சிவனை எனக்குக் காட்டும்” என்றான்”. “வாசுதேவன் எதுவும் பேசவில்லை. அதனால் நாகநாதன் சொன்னான்; “நீங்கள் கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்துகிறீர்கள். கடவுள் மனிதர்கள் எல்லோரையும் சமமாகவே படைத்துள்ளார் என்று நீங்கள் பிரசாரம் செய்கிறீர்கள். அப்படிப் பார்த்தால் நாமிருவரும் ஒருவர் தான். எம்மிடம் எந்த வேறுபாடும் இல்லை. அதனால் புலையனான நான் சமைத்து வந்த இந்த உணவைத் தாங்கள் உண்ணவேண்டும்” என்றான்.

“மன்னா, மனதைச் சமநிலைப் படுத்தியவர்களால் இம்மையிலேயே இயற்கை வெல்லப்படுகிறது. திருவருளை அறிந்தவன் திருவருளில் நிலைபெற்றவன், உறுதியான அறிவை உடையவன். மனக்குழப்பமடையாதவன், பிரியமானவற்றைப் பெற்ற பொழுதும் இன்பமடைவதில்லை. அதுபோலப் பிரியமில்லாதவற்றைப் பெறும் போதும் துன்பம் அடைவதில்லை”. ஆரியாதகை என்ற ஊரில் வசித்து வந்த கிருஷ்ணகிசோர் என்ற பெரியார் ஒருமுறை பிருந்தாவனத்திற்குத் தீர்த்த யாத்திரை சென்றார். நடந்து செல்லும் போது ஒரு நாள் தாகமேலீட்டால் ஒரு கிணற்றின் அருகே நின்ற ஒருவனிடம் தண்ணீர் தரும்படி கேட்டார். அவன் கிருஷ்ணகிசோரைப் பார்த்தான். அவர் பெரியதொரு ஞானிபோல அவனுக்குத் தென்பட்டார். அதனால் அவன்; “பிராமணரே, இது தாழ்ந்த சாதிக்காரர்கள் நீர் எடுக்கும் கிணறு. அத்துடன் நான் தாழ்ந்த சாதிக்காரன். அதனால் உங்களுக்கு இக்கிணற்றிலிருந்து நீர் முகந்து கொடுக்க அருகதையற்றவன்” என்றான்” அப்பொழுது கிருஷ்ணகிசோர் சொன்னார்; “மகனே, பகவான் கிருஷ்ணனது நாமத்தைச் சொல்பவர்கள் பரிசுத்தனாகி விடுவார்கள். நீ பகவான் கிருஷ்ணனது நாமத்தைச் செபித்தபடி கிணற்றில் நீர் முகந்துதா” என்றார். அதன் படி அந்த மனிதன் பகவானின் நாமத்தை உச்சரித்தபடி நீர் முகந்து கொடுத்தான். கிருஷ்ணகிசோர் நீரை அருந்திவிட்டுக் கமண்டலத்திலும் நீரை நிரப்பிக்கொண்டு சென்றார். அந்தக் கதை வாசுதேவனுக்கு நினைவில் வந்தது”.

“இறைவனின் நாமத்தை உச்சரிப்பவர்கள் பரிசுத்தராகி விடுவார்கள். அவர்களிடம் களங்கமில்லாத விசுவாசமும், ஈஸ்வர பக்தியும் இருக்கும் என்று நினைத்தவாறு நாகநாதனைப் பார்த்துச் சொன்னார்; “நாகநாதா, நான் சிவனடியார்கள் தரும் பிச்சையை ஏற்று உண்பது வழக்கம். நீ வீட்டுக்குச் சென்று குளித்து விபூதி அணிந்து சிவனின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு உணவைத்தா. நானும் எனது சீடர்களும் உண்கிறோம்” என்றான்”. “நாகநாதன் இப்பதிலை எதிர்பார்க்கவில்லை. திகைத்துப் போய் நின்றான். அதனால் வாசுதேவன் சொன்னான்; “ஆன்ம ஞானம் உண்டானால் சகல பற்றுக்களும் அற்றுப்போய்விடும். அதன் பின் உயர்ந்தவன் தாழ்ந்தவன், சாதிமான், கீழ்ச்சாதிக்காரன், பணக்காரர், ஏழை, மன்னன், குடிமகன் என்ற வித்தியாசம் தோன்றாது. அதனால் சிவனடியனாக வா” என்றான்”. “நாகநாதன் வீட்டுக்குச் சென்று குளித்து விபூதி தரித்து உணவுடன் வந்தான். அவன் கொண்டு வந்த உணவை வாசுதேவன் வாங்கி உண்டான். வாசுதேவன் உண்ணும் போது அவனது சீடர்கள் அருகில் இருந்தனர். ஆனால் அவன் அவர்களுக்கு அந்த உணவைக் கொடுக்கவில்லை. ஏனென்றால் அவனிடம் உண்ண முடியாத உணவையே அந்த ஞானி கொடுத்திருந்தார். அந்த உணவு பழுதடைந்திருந்தது. அத்துடன் மண்ணும், கல்லும் இருந்தன. சீடர்கள் உண்ணமுடியாதென்று வீசினால் நாகநாதன் கொடுத்த உணவை வீசிவிட்டார்கள் என்று நினைப்பான். அதனால் தான் வாசுதேவன் கொடுக்கவில்லை”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:16 am


“நாகநாதனுக்கு அது பழுதடைந்த உண்ணக்கூடாத உணவு என்று தெரியும். வாசுதேவன் உண்ணாவிட்டால் பெரியதொரு குழப்பம் செய்தல் வேண்டும் என்று ஞானி சொல்லியிருந்தார்” “மகனே, சிவனடியார்களுக்கு உணவு கொடுப்பது சிவனுக்குக் கொடுப்பதைப் போன்றது. ஒரு நாள் வியாசமுனிவர் யமுனை ஆற்றைக் கடந்து செல்ல ஆற்றங்கரைக்கு வந்தார். அப்பொழுது அங்கே பலர் ஆற்றைக் கடப்பதற்காக வந்திருந்தனர். அவர்களுடன் கோபிகா ஸ்திரிகள் பலரும் இருந்தனர். ஆறு கரைபுரண்டோடியது. அதனால் ஓடக்காரர்கள் எவரும் ஓடம் செலுத்தத் தயாராக இருக்கவில்லை” “கோபிஸ்திரிகள் வியாசரை அணுகி; “சுவாமி, நாம் விரைவாக அக்கரைக்குச் செல்லவேண்டும். ஆறு உள்ள நிலையில் இப்போதைக்கு யாராலும் அக்கரைக்குச் செல்ல முடியாது. நாம் செல்வதற்கு ஏதாவது வழி இருக்குமா சுவாமி” என்று இரந்தனர். “பயப்படாதீர்கள். நான் உங்களை இப்போதே அக்கரைக்குக் கொண்டு செல்கின்றேன். ஆனால் எனக்குப் பசிக்கிறது. உங்களிடம் தீண்பண்டங்கள் இருந்தால் தாருங்கள் உண்டுவிட்டு அழைத்துச் செல்கின்றேன்” என்றார்”.

“அந்தப் பெண்கள் தாம் கொண்டு வந்த பால், வெண்ணைய், பலகாரங்களை அவருக்குக் கொடுத்தனர். வியாசர் மகிழ்வுடன் வாங்கி உண்டார். பின்பு; “யமுனாதேவி நான் இன்று உபவாசமிருப்பது உண்மையானால் நீ எனக்கும் மறுகரையை அடைய எண்ணும் இவர்களுக்கும் வழிவிடல் வேண்டும்” என்றார். உடனே யமுனா நதியின் நடுவே பிளவு உண்டாகித் தரை தெரிந்தது. அனைவரும் நடந்து சென்று அக்கரையை அடைந்தனர். அவர்கள் கரையை அடைந்ததும் நதியில் உண்டான வழியை நீர் நிரப்பியது. அக்கரையை அடைந்த அனைவரும் வியாசர் வயிறு நிறைய உண்டுவிட்டு உபவாசம் இருப்பதாகக் கூறியதை நினைத்து ஆச்சரியப்பட்டனர். மன்னா, அந்த உணவை உண்டது வியாசரது உடலில் அந்தர்யாமியாக வீற்றிருக்கின்ற இறைவனே தவிர வியாசர் அல்ல. உண்மையான நம்பிக்கையும் தீவிரமான அவாவும் நினைத்ததைச் செய்விக்கும் என்பதை உணர்ந்துகொள்” என்றான் சுவாமியார்” “நாகநாதனுக்குப் பயம் உண்டானது. அதன் பின் அவன் பக்தனானான். கீழான செயல்களைச் செய்வதை விட்டுவிட்டு வாசுதேவனின் சீடனானான்”.

“கடவுளே கதியென்றிருப்பவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள். அவர்கள் சிவனை நினைத்துக்கொண்டு தாம் விரும்பியவற்றையெல்லாம் செய்வார்கள். காரியங்கள் யாவும் அவர்கள் நினைத்தபடி நடைபெறும். கடவுளின் நாமத்தை வாயால் சொல்லிக்கொண்டு மனதில் பல்வேறு நினைவுகளுடன் காரியத்தைச் செய்தால் அது நிறைவேறாது. காரியங்கள் செய்து முடிக்கும் வரை எந்த விதமான எண்ணங்களுமின்றி நம்பிக்கையுடன் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் தான் பயனைத் தரும். மனதில் நினைவுகள் வந்தால் பற்றுக்கள் தோன்றிவிடும். பற்றுக்கள் தோன்றினால் அது இறைவனை நினைப்பவனுடன் தொடர்பு கொள்ள விடமாட்டாது. மன்னா, நீ ஏதாவதொரு செயலைச் செய்ய விரும்பினால் அச்செயலைச் செய்து முடிக்க வல்லவன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு அச்செயலை மறந்துவிடல் வேண்டும். அவன் அச்செயலைச் செய்வானா செய்யமாட்டானா அவனுக்கு அச்செயலைச் செய்ய வேறு துணைகள் தேவையா என்று நினைத்தால் உனக்கு நிம்மதி இராது அவன் செய்து முடிப்பான் என்று நினைத்தால் நிம்மதியும் மகிழ்வும் உண்டாகும்.”

“பற்றுக்கள் இல்லாதவன் உயிரோடு வாழ்ந்தாலும் அவன் இறந்தவனாகவே கருதப்படுவான். மாயை என்பது நினைவுகளில் இருந்து செயலாவது. பெரும்பாலானவர்கள் காவி தரித்து தனிமையான இடத்தில் பன்னசாலை அமைத்துச் சீடர்களுடன் தங்கியிருப்பவர்கள் ஞானிகள் என்று நினைக்கிறார்கள். இதனால் தான் போலியான வேடமணிந்த பலர் மக்களால் பெரும் ஞானிகளாகக் கருதப்படுகின்றனர். அந்த வகையானவன் தான் வாசுதேவனை எதிர்த்த ஞானி. புலயனிடம் உணவைக் கொடுத்தனுப்பிய போது அதை வாசுதேவன் வாங்கி உண்ண மாட்டான் என்றே அந்த ஞானி கருதினார். ஆனால் வாசுதேவன் அவ்வுணவைச் சிவனின் நாமத்தைச் சொல்லியவாறு தந்தால் உண்பேன் என்று கூற அப்புலையன் குளித்து நீறணிந்து சிவநாமத்தைக் கூறியபடி கொடுத்தான். வாசுதேவன் அதைப் பெற்று உண்டதும் அவன் சிவபக்தனாகிவிட்டான். அத்துடன் நாளுக்கு நாள் வாசுதேவனின் புகழ் மேலோங்கிக்கொண்டிருந்தது. இது அந்த ஞானிக்குப் பொறுக்கவில்லை”.

“அவரது சீடர்களாகப் பெண்களும் இருந்தனர். அவரது ஆச்சிரமத்திற்கு வெகு தொலைவில் மக்கள் வாழ்ந்து வந்தனர். அம்மக்களில் பலர் அந்த ஞானியின் ஆச்சிரமத்திற்கு வந்து தங்கியிருந்து வழிபாடுகள் செய்வது வழக்கம். அந்த ஞானி மீது அளவில்லாத நம்பிக்கை உடையவன் கந்தசாமி. அவன் தனது மனைவியுடனும் மகள் சித்திராவுடனும் அந்த ஞானியின் ஆச்சிரமத்திற்கு வந்து தங்கிச் செல்வது வழக்கம். அப்படியான வேளைகளில் சித்திரா ஞானியுடன் ஆச்சிரமத்தில் பல நாட்கள் தங்கியிருந்து அவருக்குச் சேவைகள் செய்வாள்” “அப்படியான நாட்களில் ஞானிக்குச் செய்யும் சேவைகளினால் ஞானிக்கு அவளைப் பிடித்திருந்தது. அவள் மூலமாக வாசுதேவனுக்குக் கெட்ட பெயரை உண்டாக்க ஞானி விரும்பினார்”. “ஒரு நாள் சித்திரா தனது பெற்றோருடன் வாசுதேவனின் ஆச்சிரமத்திற்கு வந்தாள். அவளது தந்தையான கந்தசாமி தனது மகள் தீராத வியாதியால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும், அதைத் தீர்த்து வைக்கும்படியும் வாசுதேவனை வேண்டினான்”. “அன்பரே, நான் வியாதிகளைத் தீர்க்கும் வைத்தியன் அல்லன். நான் ஞானியும் அல்லன். எனது பாவங்களைத் தீர்ப்பதற்காக இந்த மரத்தின் கீழ் இருந்து சிவனின்; நாமங்களை உச்சரித்துக் கொண்டிருக்கிறேன். நீர் யாராவது ஒரு வைத்தியரை நாடும்” என்றான். “சுவாமி, வைத்தியர்கள் எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். அதனால் ஊரூராகச் சென்று ஆலய தரிசனம் செய்து வருகிறோம். இந்த ஆச்சிரமத்தில் தங்க அனுமதித்தல் வேண்டும்” என்றான் கந்தசாமி”.




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:16 am


“இங்கு அடியார்கள் தங்குவதில்லை. எனவே மரத்தின் கீழ் வீற்றிருக்கும் சிவலிங்கத்தைத் தரிசித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றான் வாசுதேவன்”. “அப்போது சித்திரா வாசுதேவனின் முன் வந்தாள். அவளை வாசுதேவன் ஒருமுறை பார்த்தான். பார்த்தவுடனேயே மனதை உலுப்பும் ஒர் அழகு அவளின் உடலில் குடிகொண்டிருந்தது. அவளது தோற்றத்தையும், அலங்காரத்தையும் பார்த்தால் அவளுக்கு எந்த நோயும் உள்ளதாகத் தெரியவில்லை. அவர்கள் ஏதோ தீயநோக்கத்துடன் வந்திருக்கிறார்கள் என்று வாசுதேவன் உணர்ந்து கொண்டான்”. “சுவாமி, நீங்கள் பெரிய ஞானியென்று ஊரில் பேசிக்கொள்கிறார்கள். நீங்கள் மனதுவைத்தால் எனது மகளின் நோய் நீங்கிவிடும்” என்றவாறு வாசுதேவனின் பாதங்களைத் தனது இரு கைகளாலும் பற்றிப் பிடித்து அழுதான் கந்தசாமி”. “எல்லாம் இறைவன் செயல். தன்னை வென்று மனந்தெளிந்தவனுக்குக் குளிர் வெப்பங்களிலும், இன்ப துன்பங்களிலும், அங்ஙனமே புகழ்ச்சி இகழ்ச்சியிலும் இறைவனின் தரிசனம் நிலைத்திருக்கும் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் வாசுதேவன் அவர்களை அங்கு தங்க அனுமதித்தான். அப்பொழுது கந்தசாமி சொன்னான்; “சுவாமி, நானும் மனைவியும், இவ்வூரில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று வருகிறோம். சித்திரா நோய் தீரும் வரை உங்களது ஆச்சிரமத்தில் இருக்கட்டும்” என்றான்.

“வாசுதேவனுக்கு யாவும் புரிந்தது. உலகில் படைக்கப்பட்டவை யாவும் சிறிது காலத்திற்குத்தான் மனிதர்களுக்குச் சொந்தமானவை. பின்; அவை அவர்களை விட்டு நீங்கிவிடும். அவை யாவும் நிரந்தரமில்லாதவை. இறைவன் ஒருவன் தான் நிரந்தரமானவன். என்றும் ஆன்மாக்களோடு கூட இருப்பவன். பெண்ணையும் பொன்னையும் துறப்பவன் தான் சந்யாசி. துறவிகள் பெண்களது உருவப் படத்தைக் கூடப்பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். துறவிகள் என்று சொன்ன பின் பெண்ணைப் பார்த்து ரசிப்பவன் மனிதனாகிவிடுவான். காமம் என்ற மாயை அவனால் பற்றிப்பிடித்துவிடும்” என்று வாசுதேவனுக்குத் தெரியும்”. “அநித்தியத்திலிருந்து நித்தியத்தைப் பிரித்தறியக்கூடிய விவேகமும், உலக ஆசைகளில் இருந்து விடுபட்ட வைராக்கியமும், இறைவனிடத்தில் முதிர்ந்த பக்தியும் உடையவனாக எவன் இருக்கிறானோ அவன் பெண்களுடன் பயமில்லாமல் பழகலாம்” என்று வாசுதேவன் அறிந்திருந்தான்.” “அன்று இரவு நடுச்சாமம் கடந்துவிட்டது. தனது ஆச்சிரமத்தைச் சித்திராவுக்குக் கொடுத்துவிட்டு வாசுதேவன் ஆச்சிரமத்திற்கு வெகு தூரத்தில் நின்ற மரநிழலில் வீற்றிருந்த சிவலிங்கத்தின் அருகில் படுத்திருந்தான். “அப்பொழுது பலமாக யாரோ அலறும் சப்தம் கேட்டது. அந்தச்சப்தம் ஆச்சிரமத்துள் இருந்து வந்தது. வாசுதேவன் ஆச்சிரமத்திற்கு வெளியே நின்று “சித்திரா” என அழைத்தான். “உள்ளே வாருங்கள் எனது உடைக்குள் பாம்பு சென்றுவிட்டது” என்றாள் சித்திரா”.

“வாசுதேவன் உள்ளே சென்றான். சித்திரா தனது உடைகள் முழுவதையும் களைந்துவிட்டு நிர்வாணமாக நின்றாள். அவனைக் கண்டதும் அலறியபடி ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்தாள்;”. “வாசுதேவன் சமாதிநிலையடைந்தான். அவனுக்கு எதுவும் புரியவில்லை; எதுவும் விளங்கவில்லை. நின்றபடியே கல்லானான். சித்திராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் தனது கைகளை எடுத்தாள். வாசுதேவன் வேரற்ற மரத்தைப் போல நிலத்தில் சாய்ந்தான்” “மன்னா, ஞான விக்ஞானத்தில் திருப்தியடைந்த, மனம் சலியாத, புலன்களை வென்ற கல்மண் பொன்களைச் சமமாகக் கருதுகின்ற யோகியானவன், தனக்கு ஆபத்து வரும் வேளைகளில் சமாதிநிலை அடைந்து விடுவான். இவன் நல்லெண்ண முடையவர், நண்பர், பகைவர், உதாசீனர், ஒதுங்கியிருப்போர், வெறுப்பானவர், சுற்றத்தவர், எதிரிகள், பாபிகள் ஆகியவர்களிடத்து ஒரே மனதுடையவனாகவே பழகுவான்”. “சாஸ்திர ஆராய்ச்சியால் வரும் அறிவு “ஞானம்” எனப்படும். அந்தறிவு வளர்ந்து முதிர்ந்தால் அதற்கு விஞ்ஞானம் என்று பெயர். மற்றெல்லாம் மாற்றமடையும் போது எது மாறாதிருக்கின்றதோ அதை ஞானவிக்ஞானம் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இந்த நிலையைத் தான் வாசுதேவன் அடைந்தான்”.

“சந்திக்கக்கூடாத மிகவும் மோசமான சம்பவங்கள் நடைபெறும் இடங்களுக்கு நீ தற்செயலாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், அப்போது இறைவனையும் அழைத்துச் செல். உனக்கு நடக்கப்போகும் தீமைகள் அனைத்தையும் இறைவன் நீக்குவார். அவரது அருள் எந்தத் தீய செயல்களையும் அழித்து, அதிலிருந்து வரும் பாவம் பழிகளையும் போக்கி உன்னைக் காப்பாற்றும். அத்துடன் கெட்டகாரியங்களை நீ நினைக்காமலும், செய்யாமலும், பார்க்காமலும், செய்யும்” என்று வாசுதேவனின் குரு அவனுக்குக் கூறியிருந்தார். அதன்படிதான் அவன் சித்திராவைக் கண்டதும் சிவனை நினைத்தான்”. “சித்திராவின் வசப்பட்ட உடல் கல்லானது. ஞானியார் அணைக்கும் போது உண்டான இன்ப சுகம் அன்று தீயாக எரிந்தது. ஞானியும் சீடர்கள் சிலரும் அங்கு வந்தனர். அதற்குள் சித்திரா தனது உடைகளை அணிந்துவிட்டாள்”. “ஞானி பலமாகச் சிரித்தார்; “சந்யாசிபோல வேடமிட்டுப் பெண்ணோடு சல்லாபிக்கும் வாசுதேவனை இன்று தான்கையும் மெய்யுமாகப் பிடித்தோம்” என்றார்”;. “சித்திரா பலமாகக் குழறினாள்; “இல்லை, இல்லை. நான் தான் இந்த ஞானியின் பேச்சைக் கேட்டு தீய செயலில் ஈடுபட்டேன். வாசுதேவன் உண்மையான சுவாமி” என்றாள்”




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 02, 2015 2:16 am


“மன்னா, இதிகாச புராணங்களை எடுத்து நோக்கினால் பல முனிவர்கள் பெண்களின் மீது கொண்ட ஆசையால் தமது தவபலம் முழுவதையும் இழந்துள்ளனர். அதுபோல பல மன்னர்கள் பெண்கள் மீது கொண்ட மோகத்தால் தமது நாடுகளை இழந்துள்ளனர். பெண் தான் மாயை. அவள் தான் மனிதர்களுக்குப் பிறப்பையும் துன்பங்களையும் கொடுப்பவள்” “யோகியானவன் தனது உள்ளத்தையும் உடலையும் அடக்கி, ஆசைகளை அகற்றித் தனக்கென எந்தப் பொருளையும் வைத்திராது எவ்வேளையிலும் மனதை ஒடுக்கியவனாக இருத்தல் வேண்டும்” “உள்ளம் அமைதி பெற்று, அச்சத்தை அகற்றி, பிரமச்சாரிய விரதம் காத்து, மனதை அடக்கி சித்தத்தை இறைவன் பால் வைத்து, இறைவனைக் குறியாகக் கொண்டு யோகத்தில் அமர்ந்திருத்தல் வேண்டும். இப்படியானவன் இறைவனின் அருள் பெற்று முத்தியிலே முற்றுப்பெறும் சாந்தியைப் பெறுகிறான். இப்படியானவனின் மனது ஆன்மாவில் நிலைத்திருக்கும். இதனால் அவன் யோகத்தில் உறுதி பெறுவான். இவனது மனம் காற்றில்லாத இடத்தில் வைத்த தீபம் போல ஆட்டம் அசைவுகள் எதுவுமின்றி இருக்கும். இங்ஙனம் மனதை ஆன்மாவில் முழுமையாக நிலைக்கச் செய்து பாபம் நீங்கப்பெற்றவன் சிவ ஞானத்தில் பிறக்கும் பேரானந்தத்தைத் தினமும் அனுபவிப்பான். இது மாயை அற்ற நிலையாகும்”. “மேற்சொன்னவாறு வாழ்வதாக நடித்த ஒருவரின் ஞானியின் கதையைக் கூறுகிறேன் கேள்”.

“ஓர் இடைச்சி, ஆற்றுக்கு அக்கரையில் ஆச்சிரமம் அமைத்துத் தனது சீடர்களோடு தவம் செய்துகொண்டிருந்த சந்யாசிக்கு பால் கொண்டு சென்று கொடுத்து வந்தாள். அது வளமான ஊர். மாதம்; மும்மாரி பொழியும். அதனால் அடிக்கடி ஆற்றில் நீர் கரைபுரண்டோடும். அப்படி ஓடும் வேளைகளில் ஓடம் செலுத்துபவர்கள் ஓடம் செலுத்த மாட்டார்கள். ஆற்றின் வேகம் குறைந்த பின்பு தான் ஓடம் செலுத்துவார்கள். இதனால் அந்த இடைச்சி சந்யாசிக்குப் பால் கொடுப்பதில் தடங்கலேற்படும். இதை உணராத அச்சந்யாசி அந்த இடைச்சியைக் கண்டிப்பார். அதற்கு அவள் சொல்வாள்; “சுவாமி, நான் அதிகாலையில் ஆற்றங்கரைக்கு வந்துவிடுவேன். ஆறு அமைதியாக இருந்தால் தான் ஓடக்காரன் ஓடம் செலுத்துவான். சிலசமயங்களில் மாலை நேரம் வரை ஆறு கரைபுரண்டோடும். இதனால் தான் நான் உங்களுக்கு நேரத்திற்குப் பால் கொண்டு வந்து தரமுடியவில்லை” என்றாள்”;. “முனிவர் சிரித்தார். பின்பு சொன்னார்; “பெண்ணே பகவான் நாமத்தைச் சொல்லி வாழ்க்கை என்ற துன்பமான சமுத்திரத்தையே மக்கள் கடந்து விடுகிறார்கள். உன்னால் பகவானின் நாமத்தைச் சொல்லிக்கொண்டு இந்தச் சிறு ஆற்றைக் கடக்க முடியாதா..? என்று கேட்டார்”. “அந்தப் பெண் திகைத்துப் போனாள்; “பகவானின் நாமத்தைக் கூறிக்கொண்டு நீரின் மேல்நடந்து செல்லலாமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்”. “அதன் பின் அந்தச் சந்யாசிக்குத் தினமும் அதிகாலை வேளையிலேயே பால் கிடைத்து வந்தது”

“ஒரு நாள் மழை பலமாகப் பெய்தது. அந்த மழை அடைத்து மூன்று தினங்கள் பெய்தது. ஆனால் இடைச்சி அந்தப் பெருமழை பெய்த நாட்களிலும் குறித்த நேரத்திற்குப் பால் கொண்டுவந்து கொடுத்தாள். இதை அறிந்த அந்தச் சந்யாசி, அந்த இடைச்சியை அழைத்து; “நீ மழைகாலங்களிற்கூடத் தாமதமாகி வருவதில்லை. இப்பொழுது ஓடக்காரன் மழை காலத்திலும் உரிய நேரத்திற்கு ஓடம் செலுத்துகின்றானா?” என்று கேட்டார்”. “சுவாமி, தாங்கள் முன்பு எனக்குக் கூறியதைச் செய்கிறேன். ஆற்றங்கரைக்கு வந்து பகவானின் நாமத்தைக் கூறிக்கொண்டு ஆற்றைத் தாண்டி வருகிறேன். இப்பொழுது நான் ஓடத்திற்காகக் காத்திருப்பதில்லை” என்றாள்”. இடைச்சியைச் சந்யாசி ஆச்சரியத்துடன் பார்த்தார். அவரால் அவள் சொல்வதை நம்பமுடியவில்லை. “சரி நீ எப்படி ஆற்றைத் தாண்டி வருகிறாய் என்பதை எனக்குக் காட்டு” என்றார்”.

“இருவரும் ஆற்றங்கரைக்கு வந்தனர். இடைச்சி கண்களை மூடியவாறு பகவானின் நாமத்தை உச்சரித்துக்கொண்டு ஆற்றில் இறங்கி நடந்தாள். சந்யாசியும் பகவானின் நாமத்தை உச்சரித்தவாறு ஆற்றில் இறங்கி நடந்தார். அவள் அக்கரையை அடைந்த பின் ஆற்றைத் திரும்பிப் பார்த்தாள். சந்யாசி நடக்கமுடியாமல் கஷ்ரப்படுவதைக்கண்டு, “சுவாமி பகவான் நாமத்தைச் சொல்லும் நீங்கள் ஏன் வேட்டியைத் தூக்கிப்பிடித்திருக்கிறீர்கள். தங்களுக்குப் பகவான் மீது பூரணமான நம்பிக்கை இல்லை. அதனால் தான் தடுமாறுகிறீர்கள்” என்றாள். இது இராமகிருஸ்ணபரமகம்சர் என்ற மகான் கூறிய கதை. இக்கதை உலகில் வாழும் எல்லா மக்களுக்கும் பொருந்தும்” “கோயில்களில் இலட்சக்கணக்கான ரூபாயைச் செலவு செய்து பூசைகள் செய்கிறார்கள். தினமும் பலமணி நேரம் பிரார்த்திக்கிறார்கள்; பகவானின் நாமத்தை உச்சரிக்கிறார்கள். இவற்றைப் பூரணமான பக்தியுடன் செய்தால் அவர்கள் துன்பமடைய வேண்டிய நிலை உண்டாகாது. இறைவன் தான் கதி என்று முழுமனதுடன் எண்ணுபவர்களுக்குத் தான் மாயை அகலும்”. “மன்னா, பாரதக் கதையை எடுத்துப்பார். சபையின் நடுவே திரௌபதைக்கு துயிலுரியப்படுகிறது. திரௌபதை கடைசி வரையும் தனது சேலையை பிடித்துக்கொண்டு சபையோரை நோக்கிக் கதறுகிறாள். யாரும் உதவவில்லை. இனிக் கடவுளே தஞ்சமென நினைத்துக் கைகளை சிரசின் மீது வைத்து; “கிருஷ்ணா, இந்த அபலையைக் காப்பாற்று” என்று தொழுகிறாள். பாரம் முழுவதையும் இறைவனிடம் கொடுத்துவிட்டு சும்மாய் இருந்தால் அப்பாரங்களை இறைவன் சுமப்பான் என்பதைத் திரௌபதையின் செயல் உணர்த்துகிறது”. “யார் இறைவனை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் இறைவனிடத்திலும் காண்கின்றானோ அவனை எச்சந்தர்ப்பத்திலும் இறைவன் காப்பாற்றுவான்”




 மாயை பற்றிய தத்துவக் கதைகள்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக