புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Poll_c10சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Poll_m10சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Poll_c10சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Poll_m10சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 4:00 am

சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Acharya-%20jaya%20long

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.ஆச்சார்யாவை கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞரான பவானி சிங் ஆஜராகி வந்தார். இதனிடையே, பவானி சிங்கை நீக்க கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பளித்தது.

மேலும், கர்நாடக அரசு 28ஆம் தேதிக்குள் (இன்று) 50 பக்கங்களில் எழுத்துமூலம் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். அன்பழகன் தரப்பும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு, அவரது வாதத்தை 90 பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை பரிசீலித்த பின் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பி.ஆர்.ஆச்சார்யாவை நியமித்து கர்நாடக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது. அவருக்கு உதவியாக சந்தேஷ் சவுட்டாநியமிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அரசு தரப்பின் எழுத்துபூர்வ வாதங்களை மாலை 4 மணிக்கு ஆச்சார்யா தாக்கல் செய்ய உள்ளார்.

ஏற்கனவே ஆஜரானவர் ஆச்சார்யா

ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரானவர் ஆச்சார்யா.

அப்போது ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் வழக்கை இழுத்தடிப்பதாக பலமுறை குற்றம் சாட்டிய ஆச்சார்யா, இவ்வழக்கு விசாரணை துரிதமாக நடக்க ஆர்வம் காட்டினார். ஆனால் இழுத்தடிப்புகள் தொடர்ந்ததால் மனம் வெறுத்துபோன ஆச்சார்யா ஒருகட்டத்தில் அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார்.

அதன் பின்னரே அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டார்.

ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி

இந்நிலையில் ஆச்சார்யாவை மீண்டும் அரசு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது ஜெயலலிதா உள்ளிட்டவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 4:03 am

சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக முன்னர் ஆஜரான ஆச்சார்யா, அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகும் அளவுக்கு தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்ததாக 22.8.12 ல் ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

அந்த பேட்டி இங்கே...

சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! P4

ஆச்சார்யா... தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிம்ம சொப்பனம். ஒரு வழக்கறிஞர் எப்படி தயவுதாட்சண்யம் பார்க்காமல் செயல்பட வேண்டும் என்பதன் உதாரண மனிதர்.

14 ஆண்டுகளாக கோர்ட் படி மிதிக்காமல் இருந்த ஜெயலலிதாவை, 'சாமூண்டீஸ்வரி கோயிலுக்கு வர முடியும். கோர்ட்டுக்கு வர முடியாதா?’ என்று யதார்த்தமான கேள்வி கேட்டு மடக்கியவர். நொண்டி அடித்துக்கொண்டே இருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் குடுமியைப் பிடித்து, இறுதிக்கட்டம் வரை இழுத்து வந்தவர். அப்படிப்பட்ட ஆச்சார்யா, திடீரெனக் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணிக்கு, தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்தார். பெங்களூரு நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதி யார் என்ற குழப்பம் நிலவும் நேரத்தில் ஆச்சார்யா ராஜினாமா செய்திருப்பது யாருமே எதிர்பார்க்காத திடீர் திருப்பம். ராஜினாமா செய்த ஒரு மணி நேரத்தில், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் அவரைச் சந்தித்தோம். கோர்ட்டில் இருப்பது போலவே, அனல் தெறித்தார்!

''நீங்கள் ராஜினாமா செய்துள்ளீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. நீங்கள் முழுமனதோடு எடுத்த முடிவுதானா?''

''தீர்க்கமாக யோசித்த பிறகு நான் முழுமனதோடு எடுத்த முடிவுதான். தாராளமாக நீங்கள் நம்பலாம்!'' (சத்தமாகச் சிரிக்கிறார்).

''கடந்த பிப்ரவரியில், அதிகாரம் பொருந்திய கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பிடிவாதமாக ஜெயலலிதா வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாகத் தொடர்ந்தீர்கள். இப்போது, அந்தப் பதவியையும் ராஜினாமா செய்யும் அளவுக்கு அப்படி என்ன திடீர் நெருக்கடி?''

''ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு 2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி என்னை, அரசு சிறப்பு வக்கீலாக நியமித்தார்கள். ஆறே மாதங்களில் வழக்கு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் ஆஜரானேன். ஆனால், இந்த ஏழு வருடங்களில் அவர்கள் தரப்பில் இருந்து ஸ்பெஷல் கோர்ட்டிலும், ஹை கோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் எத்தனை மனுக்கள் போட்டிருக்கிறார்கள் தெரியுமா? எத்தனை முறை அப்பீலுக்குப் போய் இருக்கிறார்கள் தெரியுமா? இப்போதுகூட சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா போட்ட இரண்டு மனுக்கள் விசாரணையில் இருக்கின்றன. எல்லா மனுக்களையும் போட்டுவிட்டு கடைசியாக‌ நீதிபதியின் நியமனமே செல்லாது என்றும் மனுப் போட்டு இருக்கிறார்கள். அந்த மனு கர்நாடகா ஹைகோர்ட்டில் இருக்கிறது. இப்படி, சொத்துக்குவிப்பு வழக்கு கொஞ்சம்கூட நகராமல் அதே இடத்தில் இருந்தால், என்னால் என்ன செய்ய முடியும்? கடந்த ஓர் ஆண்டாகவே என்னை இந்த வழக்கில் இருந்து வெளியேற்ற பலவித சதி முயற்சிகளை மேற்கொண்டனர்!''

''என்ன மாதிரியான சதி முயற்சிகள்?'

''என்னைப் பற்றி அவதூறாக, கவர்னருக்கும் ஹை கோர்ட் நீதிபதிக்கும் பெட்டிஷன் போடுவது, ஸ்பெஷல் கோர்ட்டிலும் ஹை கோர்ட்டிலும் துண்டு அறிக்கை கொடுப்பது, போஸ்டர் ஒட்டுவது, மீடியாக்களில் புகார் பரப்புவது என்றெல்லாம் செய்தனர். ஒரு கட் டத்தில் நான் அட்வகேட் ஜெனரல் பதவி, அரசு சிறப்பு வக்கீல் என இரண்டு பொறுப்புகளையும் வகிக்கக் கூடாது என்றனர். அப்போது அவர்கள், நான் சிறப்பு வக்கீல் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று நினைத்தனர். ஆனால், நான் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இறுதியாக‌ச் சிலரைத் தூண்டிவிட்டு கர்நாடக லோக் ஆயுக்தா நீதிமன்றத்திலும், ஹை கோர்ட்டிலும் என் மீது அவதூறு வழக்குப் போட வைத்தனர். லோக் ஆயுக்தாவில் போட்ட வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று, ஆரம்பத்திலேயே வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது கோர்ட். இரண்டாவதாக, 'கல்வி நிறுவன மோசடியில்’ ஈடுபட்டதாகப் போடப்பட்ட வழக்கை விசாரித்த ஹை கோர்ட், 'நேர்மையானவர் மீது அவதூறு பரப்பாதீர்கள்’ என்று கண்டித்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து இருக்கிறது. ஹை கோர்ட்டின் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்திருந்தாலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பிரச்னைகளால் தேவை இல்லாத நெருக்கடிகளுக்கும் தீவிர மன உளைச்சலுக்கும் உள்ளானேன். மென்டல் டார்ச்சர் இந்த வயதில் எனக்குத் தேவையா? என் உடம்பைக் கவனிக்க வேண்டாமா?''

''உங்கள் உடம்புக்கு என்ன? உடல் ரீதியாக நீங்கள் பாதிப்பு அடைந்துள்ளீர்​களா?''

(கேள்வியை முடிக்கும் முன்பே) ''நோ நோ... எனக்கு எந்தக் குறிப்பிட்ட நோயும் இல்லை. ஐ ம் ஆல்ரைட். நான் நன்றாகவே இருக்கிறேன். மனு மேல் மனு போட்டு என்னை வெறுப்படைய​வைத்து விட்டனர். மென்டல் டார்ச்சரால் வயதான காலத்தில் எனக்கு அதிகத் தலைவலி ஏற்பட்டதைச் சொல்கிறேன்!''

''அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தபோது, 'ஜெயல​லிதாவின் வழக்கில் இருந்து என்னை விலகச் சொல்லி பி.ஜே.பி. மேலிடம் அழுத்தம் கொடுத்தது. அதனால்தான் ராஜி​னாமா செய்தேன்’ என்றீர்கள். இப்போது,அரசுத் தரப்பு வக்கீல் பதவி​யை ராஜினாமா செய்ததன் பின்னணி​யிலும் அரசியல் இருக்கிறது என்று சொல்கிறார்களே?''

''எனது இந்த ராஜினாமா முடிவுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. எந்த அரசியவாதியாலும் என்னைப் பணியவைக்க முடியாது. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்பது என்னோடு மோதியவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனக்கு இப்போது 78 வயது ஆகிறது. தொடர்ந்து இந்த வழக்கில் ஆஜராகி நெருக்கடிகளைச் சந்திக்க விருப்பம் இல்லை. நான் கையறு நிலையில் இருக்கிறேன். அதுதான் உண்மை!''

''உங்கள் மன உளைச்சலுக்கு, வழக்கில் சம்பந்தப்​பட்டவர்கள்தான் காரணம் என்று நினைக்​கிறீர்​களா?''

''ஜெயலலிதா செய்திருக்கலாம். சசிகலா செய்திருக்​கலாம். சுதாகரன் செய்திருக்கலாம். ஏன் இளவரசிகூட செய்திருக்கலாம். குற்றம்சாட்டப்​பட்டவர்​களுக்கு நெருக்கமானவர்கள் யாராவது அந்தக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ செய்திருக்கலாம். அ.தி.மு.க. தொண்​டர்களில் யாராவது செய்திருக்கலாம். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், என் மீது சுமத்தப்படும் அத்தனை அவதூறுகளுக்கும் வழக்குகளுக்கும், நான் இந்த வழக்கில் இருந்து விலக வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் மட்டும்தான் இருந்திருக்க முடியும்!''

''தொடர் அச்சுறுத்தல்களுக்குப் பயந்தே, குடும்பத்​தினர் உங்களை ராஜினாமா செய்யச் சொன்ன​தாகவும் பேச்சு அடிபடுகிறதே?''

''அதெல்லாம் இல்லை. 56 ஆண்டு கால வக்கீல் தொழிலில் எத்தனையோ எதிர்ப்புகளைச் சந்தித்து விட்டேன். இதெல்லாம் சும்மா. இது நானே எடுத்த முடிவு. எனக்கு மட்டும் இன்னும் 10 வயது குறைவாக இருந்திருந்தால், நானா... அவர்களா என்று ஒரு கை பார்த்திருப்பேன். என்ன செய்வது, எனக்கு வயதாகி விட்டது. மனைவியும் பிள்ளைகளும் என்னுடைய வழக்கைப் பற்றியும், தொழிலைப் பற்றியும்கூட பேச மாட்டார்கள். ஏனென்றால் மகளும் மகனும் என்னைப் போலவே வழக்கறிஞர்கள்!''

''உங்களுடைய ராஜினாமா எதிர்த் தரப்பை குஷிப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?''

''ஓ! நன்றாகத்‌ தெரியும். 'என்னுடைய ராஜினாமா ஜெயலலிதா தரப்புக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்!’ என்று கர்நாடக உள்துறைச் செயலருக்கு அனுப்பி உள்ள கடிதத்திலும் குறிப்பிட்டு இருக்கிறேன். என்ன செய்வது..? என்னதான் போரில் ஒரு வீரன் ஜெயித்துக்கொண்டே போனாலும், ஒரு கட்டத்தில் விரக்தியும், வெறுப்பும் ஏற்படும் இல்லையா? அத்தகைய கட்டத்தில் நான் இருக்கிறேன்.''

''15 ஆண்டுகளாக இந்த வழக்கு இழுத்துக்கொண்டே போகிறது. இதற்​கெல்​​லாம் என்ன காரணம்?''

''வழக்கை இழுத்தடிக்கத் தேவையான எல்லாமும் அவர்களிடத்தில் இருக்கிறது. நீதிபதி மல்லிகார்ஜுனைய்யா இன்னும் கூடுதல் கண்டிப்புடன் இருந்திருந்தால், வழக்கை எப்போதோ முடித்து இருக்கலாம். மனு மேல் மனு, அப்பீலுக்கு மேல் அப்பீல், வாய்தாவுக்கு மேல் வாய்தா என ஹை கோர்ட்டுக்கும் சுப்ரீம் கோர்ட்டுக்கும் போய் இழுத்தடித்திருக்க மாட்டார்கள்!''

''நீதிபதி மல்லிகார்ஜுனைய்யாவின் செயல்பாடு எப்படி இருந்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?''

''ஜெயலலிதாவும் சசிகலாவும் பதில் சொல்ல இழுத்தடிக்​கிறார்கள் என்பது தெரிந்த பிறகு அதிக கண்டிப்புடன் வழக்கை அணுகி இருக்க வேண்டும். அரசு சிறப்பு வக்கீலாக இதைச்சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது நீதிபதியும் வரும் 31-ம் தேதியோடு ஓய்வு பெறு கிறார்!''

''நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கொடுக்க வாய்ப்பு இருக்கிறதா?''

''பொதுவாக,‌ நீதிபதிகளுக்கு பதவி நீட்டிப்பு கொடுப்பது இல்லை. செப்டம்பர் 1-ம் தேதி புதிய நீதிபதியை அறிவிப்​பார்கள். எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்த வழக்கின் தன்மையைக் கருதி பதவி நீட்டிப்பை மல்லிகார்ஜுனைய்யாவுக்குக் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது!''

''இனி, சொத்துக் குவிப்பு வழக்கு எந்தத் திசையில் பயணிக்கும்?''

''எனக்குத் தெரியாது. இன்னும் எத்தனை ஆண்டு காலம் இழுக்கப்போகிறார்களோ?''

''ஏழு ஆண்டுகள் இந்த வழக்கில் வாதாடி இருக்கிறீர்கள். வழக்கின் அத்தனை சாதக பாதகங்களும் உங்களுக்குத் தெரியும். அதனால் உங்​களுடைய பார்வையில் எப்படிப்பட்ட தீர்ப்பு வரும்?''

''தெரியாது. தெரிந்தாலும் அதை நான் சொல்ல மாட்டேன்!'' என்றவர் ஏதோ சொல்ல முயன்றார். பின் அவரே அமைதியாகி... அடுத்த சில நிமிடங்களில் சிரித்தபடி விடை கொடுக்கிறார்.

'பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும் கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’ என்பதை ஆச்சார்யாவின் மௌனமும் மர்மமும் கலந்த சிரிப்பு சொல்கிறது!

விகடன்

சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 4:10 am

ஜெ.வின் மேல்முறையீட்டு மனுவே சட்டப்படி தவறானது: ஆச்சார்யா வாதம்!

பெங்களூரு: ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவே சட்டப்படி தவறானது என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்துள்ள எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளார்.
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, தனது எழுத்துப்பூர்வ வாதத்தை இன்று தாக்கல் செய்தது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்த ஆச்சார்யா, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மேலும் சாட்சிகள் மற்றும் ஆதாரப்பூர்வமாக குற்றம் நிரூபிக்ககப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டதால் வழக்கில் அந்த மாநிலத்துக்கே முதல் உரிமை என்றும் ஆச்சார்யா வாதிட்டுள்ளார்.

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவிலோ கர்நாடகம் ஒரு தரப்பாகவே சேர்க்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள ஆச்சார்யா, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவே சட்டப்படி தவறானது என்று தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் மீண்டும் ஆச்சார்யா நியமனம்: ஜெ. தரப்பு அதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 29, 2015 8:46 am

இந்த வழக்கில் அரசியலும் அமானுஷ்யமும்
கூட்டுச் சேர்ந்து இருப்பதால் மர்மங்கள் மட்டுமே நீடிக்கிறது!’
-
சூப்பருங்க சூப்பருங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 29, 2015 11:24 am

இவங்க ஜவ்வு மாதிரி போட்டு இழுத்ததால் தான் அனைவரும் வெறுப்பாகி விட்டனர். அப்பொழுதே இந்த
வழக்கை முடித்திருந்தால் இவ்வளவு சேதாரம் ஆயிருக்காது....இவ்வளவு டென்ஷனும் வேண்டாம்...
சட்டம்னா இவங்களுக்கு கிள்ளு கீரையா போச்சு....!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Apr 30, 2015 1:00 pm

என்னத்த சொல்ல...

கிராமங்களில்... ஒரு கிராமத்துக்கு ஏறக்குறைய 10 தாய் திட்டம் தகவல் பலகை இருக்கு. சுடுகாடு பக்கத்திலேயும் வைச்சியிருக்காங்க... அதுக்கு முன்னாடி ஒரு போர்டும் கிடையாது... அதுக்கு முன்னாடி அந்த தகவல் பலகையில் ஜெயலலிதா படம் கெடையாது. (முதல்வர் பன்னீர்செல்வம் படம்தானே இருக்கனும்!) இப்போ இருக்கு... அந்த பலகையில் இருக்கிற மாதிரி எந்த ஒரு திட்டமும் நிறைவேத்தனமாதிரி தெரியல.... ஏன்னா தண்ணிக்கு அலையிற அலைச்சலைப் பாக்கும்போது கோவம்தான் வருது.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக