புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! Poll_c10நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! Poll_m10நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! Poll_c10நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! Poll_m10நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 2:09 am

நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! P12a

அதிகாலையில் பூங்கா ஒன்றில் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டிருந்த ஒருவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து, அவரது தலையைத் துண்டித்து, விழுப்புரம் காந்தி சிலை முன்பாக அந்தத் தலையை வைத்து ஃபுட்பால் ஆடியிருக்கிறது ஒரு கும்பல். பட்டப்பகலில் காந்தி சிலைக்கு முன்னால் ஓடிய ரத்தவெறியை ஊர்கூடிப் பார்த்து பதைபதைத்துப் போனது. இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் சண்டைகளும் பழிக்குப்பழி வாங்க நடக்கும் கொலைகளும் தொடருவதால் அமைதி இழந்து கிடக்கிறது விழுப்புரம்.

விழுப்புரத்தில் இரு சமூகங்களைச் சேர்ந்த ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே கடந்த 15 வருடங்களாக அதிகாரப்போட்டி நடந்து வருகிறது. ஊரை அரிவாளால் ஆள்வது யார் என்பதற்கான போட்டி அது. அதனால் ஏற்பட்ட மோதலில் மின்னல் ராஜா, ஆர்.கே.சிவா என்ற தலைகள் உருண்டுவிட்டன. இதற்குப் பழிவாங்கும் வகையில் மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த கேசவன், இருசப்பன் ஆகியோர் கொல்லப்பட்டனர். சில அரசியல் புள்ளிகள், தங்கள் சமூகங்களைச் சேர்ந்த ரவுடிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவிகளைச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதில் உண்மை இருப்பதாகவும் அதனால்தான் ரவுடிகளைத் தொட முடியவில்லை என்றும் போலீஸில் சிலர் சொல்கிறார்கள்.

இந்த ரவுடி கோஷ்டிகளின் மோதலில்தான், காந்தி சிலை முன்னால் உருண்டது பத்தர் செல்வத்தின் தலை. இவரை, ‘அசால்டு’ அறிவழகன் என்பவர் கொலை செய்துள்ளார். ‘‘ பத்தர் செல்வம், கடந்த 21-ம் தேதி அதிகாலை விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டிருந்தார். பூங்காவின் சுற்றுச்சுவருக்குப் பின்னால் மறைந்திருந்த அறிவழகன் தலைமையிலான கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் பத்தர் செல்வத்தை வெட்டியது. ரத்தவெள்ளத்தில் சரிந்த பத்தர் செல்வத்தின் மீது ஏறி அமர்ந்த அறிவழகன், அவரது தலையை அரிவாளால் அறுத்து எடுத்துள்ளார்.

சில நொடிகளில் பத்தர் செல்வத்தின் உயிர் துடித்து அடங்கியது. உடலை அங்கேயே போட்டுவிட்டு ரத்தம் சொட்ட சொட்ட தலையை மட்டும் எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்கள். விழுப்புரம் - புதுவை நெடுஞ்சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு பத்தர் செல்வத்தின் தலையை கீழே போட்டுள்ளார். பிறகு அந்தத் தலையை காலால் உருட்டி சிறிது நேரம் ஃபுட்பால் விளையாடி உள்ளார். பிறகு நேராகக் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்துள்ளார் அறிவழகன்” என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

‘‘கொலை செய்யப்பட்ட பத்தர் செல்வத்துக்கும் அறிவழகனுக்கும் முன்விரோதம் அதிகமாக இருந்தது. அறிவழகனின் சகோதரரான சிவாவை பத்தர் செல்வம்தான் கொலை செய்தார். அவரைப் பழிவாங்குவதற்காக பத்தர் செல்வத்தை கொலை செய்துவிட்டார்” என்றும் சிலர் சொல்கிறார்கள். இது இரண்டு ரவுடி குரூப்புக்குள் நடந்த கொலையாக மட்டுமில்லாமல், அரசியல் மோதலும் இதற்குள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘‘பழிக்குப் பழியாக பத்தர் செல்வத்தைக் கொலை செய்ததாக அறிவழகன் கூறினாலும், விழுப்புரம் நகர தி.மு.க செயலாளர் செல்வராஜ்தான் இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டார்” என்று பத்தர் செல்வத்தின் மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

பத்தர் செல்வத்தின் மனைவி புவனேஸ்வரியிடம் பேசினோம். ‘‘என் கணவருக்கும் தி.மு.க நகரச் செயலாளர் செல்வராஜுக்கும் ஏற்கெனவே கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துச்சு. என் கணவரால தன் உயிருக்கு ஆபத்துனு செல்வராஜ் போலீஸ்ல புகார் செஞ்சாரு. போன வாரம் அறிவழகன் நேர்ல அழைச்சு, ‘பத்தர் செல்வம் வேகமா வளர்ந்துட்டு வர்றான். இப்படியே போனா நம்ம உயிருக்கே அவனால ஆபத்து வந்துடும். நாம முந்திக்கணும்’னு சொல்லி பணம்் கொடுத்திருக்காரு. இந்தத் தகவல் எப்படியோ என் கணவருக்கு வந்திடுச்சு. என் கணவர் இந்தத் தகவலை என்கிட்ட சொன்னது போன்ல ரெக்கார்டா இருக்கு. செல்வராஜ் சொன்னதைக் கேட்டுத்தான் அறிவழகன் கொலை செஞ்சிருக்கான். என் கணவருக்கும் அறிவழகனுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. ரெண்டு சமூகங்களைச் சேர்ந்த கோஷ்டிப் பிரச்னையை தனக்குச் சாதகமா செல்வராஜ் பயன்படுத்திகிட்டார். அதனால செல்வராஜ் பெயரை இந்த வழக்குல சேர்க்காத வரை ஓயமாட்டேன்’’ என்று விம்மினார்.

நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 2:10 am

நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! P12b

ரவுடி பத்தர் செல்வத்துக்கும் தி.மு.க நகரச் செயலாளர் செல்வராஜுக்கும் இடையே என்ன பிரச்னை?

தி.மு.க-வினரிடமே கேட்டோம்.

“முந்தைய தி.மு.க ஆட்சியில் அன்றைய அமைச்சர் பொன்முடிக்கு அடுத்தபடியாக அதிகாரத்துடன் வலம் வந்தவர் செல்வராஜ். பொன்முடியின் பி.ஏ-வாகச் செயல்பட்டார்.

பொன்​முடியின் குடும்பத்தினருடன் இருந்த நெருக்கம் காரணமாக, செல்வராஜ் கைகாட்டும் நபருக்குத்தான் கட்சிப் பதவியும் கான்ட்ராக்ட்டும் கிடைத்தன. செல்வராஜிடம் இருந்த அதிகாரமும் வளமும் பலரது கண்களை உறுத்திய நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பத்தர் செல்வம், ஒரு பெரும் தொகையைக் கேட்டு செல்வராஜை மிரட்டினார்.

தினமும் கட்சி அலுவலகத்துக்கு வந்து ஆஜராகும் செல்வராஜ், பத்தர் செல்வத்துக்குப் பயந்துகொண்டு ஒரு மாதம் தலைமறைவாகவே இருந்தார். தனக்கு நெருக்கமான சில போலீஸ் அதிகாரிகள் மூலம் பத்தர் செல்வத்துடன் இரண்டு முறை சமாதானம் பேசியுள்ளார். அதற்கு அவர் படியவில்லை. எனவே, இந்த விவகாரம் பொன்முடியின் கவனத்துக்குச் சென்றது. அதன் பிறகு ஒரு செட்டில்மென்ட் ஆன பிறகுதான் செல்வராஜ் வெளியே தலைகாட்டினார்’’ என்றனர் உள்ளூர் தி.மு.க-வினர்.

‘‘பத்தர் செல்வம் தி.மு.க ஆதரவாளராக இருந்துள்ளார். அவர் தனது மாமாவுக்கு கட்சிப் பதவி கேட்டு பொன்முடியை சந்தித்தார். பதவி தருவதாக பொன்முடி சொன்னார். ‘இப்படி சொல்லிச் சொல்லி மூன்று தடவை ஏமாற்றிவிட்டீர்கள். இந்தத் தடவை தர வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். இந்த நிலையில் பத்தர் செல்வத்தின் மாமாவான மும்மூர்த்தி, கோழியனூர் மேற்கு தி.மு.க ஒன்றியச் செயலாளராக ஆக்கப்பட்டு விட்டார். இதன்மூலமாக பத்தர் செல்வம் வளர்ந்து விடுவார் என்ற பயம் செல்வராஜ் போன்றவர்களுக்கு இருந்திருக்கலாம்” என்றும் சொல்கிறார்கள்.

பத்தர் செல்வம் கொலையில் செல்வராஜ் பெயர் அடிபட்டாலும், இந்தக் கொலைக்கு வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன.

தி.மு.க நகரச் செயலாளர் செல்வராஜிடம் பேசிய போது, ‘‘பத்தர் செல்வம் என்னை மிரட்டியபோதே எல்லாவற்றையும் பேசி சமாதானமாக முடித்து​விட்டோம். நான் என்ன ரவுடியா? கொலைகாரனா? எனக்கும் பத்தர் செல்வத்தும் என்ன பகை இருக்க போகிறது? என் வளர்ச்சியைப் பிடிக்காத சிலர், தேவை இல்லாமல் அவர்களைத் தூண்டிவிட்டு இந்தக் கொலையில் என் பெயரை இழுக்கிறார்கள்’’ என்று சொன்னார்.
பழிக்குப் பழியாக நடந்த கொலை இது என்று சொல்பவர்களிடம் விசாரித்தபோது, ‘‘அறிவழகனின் அண்ணன் ஆர்.கே.சிவாவை 10 ஆண்டுகளுக்கு முன்பு பத்தர் செல்வம் கொலை செய்தார். இந்த மாதம் 26-ம் தேதி
ஆர்.கே.சிவாவின் 10-ம் ஆண்டு நினைவு நாள். எனவே, அதற்குள் பத்தர் செல்வம் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரகாஷ், ரவி ஆகியோரின் தலைகளை காந்தி சிலை முன்பு வைக்கப் போவதாக அறிவழகன் சவால் விட்டிருக்கிறார். பிரகாஷ், ரவி ஆகியோர் வெட்டுக் காயங்களுடன் தப்பித்த நிலையில், பத்தர் செல்வம் மட்டும் மாட்டிக்கொண்டார்’’ என்கிறார்கள்.

நெல்லையில் நரேந்திரன் நாயர் எஸ்.பி-யாக இருந்த சமயத்தில்தான் அடுத்தடுத்து கொலைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து விழுப்புரத்துக்கு மாற்றப்பட்டார். நரேந்திரன் நாயர் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் விழுப்புரத்தில் இப்படி ஒரு பயங்கரம் அரங்கேறியுள்ளது. நரேந்திரன் நாயரிடம் பேசினோம். ‘‘இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டு தலைமறைவானவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் பட்டியலும் தயாராகி வருகிறது. அவர்கள் மீது விரைவில் குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்” என்று சொன்னார்.

அடுத்த அசம்பாவிதம் நிகழ்வதற்குள்ளாவது அந்தப் பட்டியல் தயாராகுமா?

விகடன்

நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 27, 2015 11:37 am

ரவுடிகளின் முடிவு இப்படி தான் இருக்கும்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Apr 27, 2015 12:53 pm

பயம் பயம் பயம்

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நடுரோட்டில் ஃபுட்பால் ஆடப்பட்ட தலை! குற்ற விழுப்புண்ணில் துடிக்கும் விழுப்புரம்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2015 3:41 pm

அநியாயம் அநியாயம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Apr 27, 2015 3:57 pm

கொடுமை என்ன கொடுமை சார் இது

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Apr 28, 2015 1:11 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Apr 28, 2015 7:34 am

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாகிறான்..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 28, 2015 10:56 am

M.M.SENTHIL wrote:கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாகிறான்..
உண்மை செந்தில் புன்னகை

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue Apr 28, 2015 11:22 am

ரவுடிகள் தானே வெட்டி மடிகிறார்கள்... எல்லா ரவுடிகளும் இப்படி தங்களுக்குள்ளாகவே வெட்டிக்கொண்டு மடிந்தால் பொதுமக்கள் பயமின்றியும் நிம்மதியாகவும் இருக்கலாம். காவல் துறையினருக்கும் வேலைபளு குறையும்.

http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக