புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
90 Posts - 73%
heezulia
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
17 Posts - 14%
Dr.S.Soundarapandian
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
255 Posts - 75%
heezulia
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
44 Posts - 13%
mohamed nizamudeen
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_m10திருப்பதி பெருமாளின் தரிசனம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி பெருமாளின் தரிசனம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 8:05 am


திருப்பதி பெருமாளின் தரிசனம், தீர்த்தங்கள், பூஜை வழிபாட்டு நியதிகள், நம்மை சுவாரஸ்யப் படுத்தும் சில நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
-
திருப்பதி பெருமாளின் தரிசனம் EibS1dEzSTeb3xXs2uck+p13

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 8:06 am


கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் இருப்பதால், எப்போதும் குளிர் நிறைந்திருக்கும் திருப்பதியில், அதற்கு நேர்மாறாக கருவறையில் ஓர் இயற்கை அற்புதம் உண்டு. அதிகாலை குளிர்ந்த நீரால் அபிஷேகிக்கும்போதும் பெருமாளுக்கு வியர்க்குமாம். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏழுமலையானின் திருமேனி எப்போதும் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்துடன் இருக்கும் என்கிறார்கள். இது பேரதிசயம்தானே!

அதுபோன்று ஒவ்வொரு வியாழக்கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவார்கள். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் கதகதப்புடன் இருப்பதை உணரமுடியுமாம்!

ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண் சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும், கர்ப்பக்கிரகத் துக்கு முன்னுள்ள குலசேகரப்படியைத் தாண்டுவது இல்லை. இந்த மண் சட்டியும், தயிர் சாதமும் பிரசாதமாகக் கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுகின்றனர் பக்தர்கள்.

திருப்பதி ஆலயத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ‘சிலா தோரணம்’ என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இங்கு மட்டுமே காணப்படும் இந்தப் பாறைகளின் வயது 250 கோடி வருடம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஏழுமலையானின் திருமேனியும், இந்தப் பாறை களும் ஒரே விதமானவை.

ஏழுமலையானின் திருமேனிக்குப் பச்சைக் கற்பூரம் சாத்துகிறார்கள். பச்சைக் கற்பூரம் ஒரு வகை ரசாயனம் கலந்தது என்பதை அறிவோம். சாதாரண கற்களில் இதைத் தடவி வந்தால், காலப்போக்கில் அந்தக் கல்லில் வெடிப்பு விழும். ஆனால், ஏழுமலையானுக்கு வருடத்தில் 365 நாட்களும் பச்சைக் கற்பூரம் தடவுகிறார்கள்; எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 8:07 am

திருப்பதி பெருமாளின் தரிசனம் PLcD4nVYSTmQv55vUoZe+sa08e
-
ஸ்வாமியின் அபிஷேகத்துக்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரிஸ் நகரில் இருந்து வாசனைத் திரவியங்கள் வரவழைக் கப்படுகின்றனவாம். தங்கத் தாம்பாளம் ஒன்றில் சந்தனத்தோடு வாசனைத் திரவியங்கள் சேர்த்துக் கரைத்து அபிஷேகத்தில் சேர்க்கப்படும். அத்துடன் 51 வட்டில் (சல்லடை போன்ற அபிஷேகத் தட்டு) பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும். காலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்துக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை செலவு ஆகும். அபிஷேகத் தின்போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணைத் திறப்பதாக ஐதீகம்!

பெருமாளுக்காக ஆம்ஸடர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள், பக்தர் களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்! அதேபோன்று, சீனாவிலிருந்து சீனச் சூடம், அகில், சந்தனம், அம்பர், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்களும் ஏழுமலையான் திருக் கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

என்ன மலைப்பாக இருக்கிறதா? மலையப்ப சாமிக்கு இதெல்லாம் சம பாவம்தான். அவருக்கு பக்தியே பிரதானம். தூய அன்புடன் ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் ஏற்றுக்கொள்வார். ஆனால் அவன் குழந்தைகளாகிய நாம்தான், நம் தந்தைக்கு செய்வது போன்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறோம். இருப்பதில் உயர்ந்தது எதுவோ அதைச் சமர்ப்பித்து, நாம் சந்தோஷப்படுகிறோம்!

ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு சுமார் ரூ.1000 கோடி. இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை; சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டுக்கு ஒரு முறை உபரியான நகைகளை செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள். ஏழுமலையானின் சாளக் கிராம தங்கமாலை சுமார் 12 கிலோ எடை கொண்டது. இதைச் சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை; பாத கவசம் 375 கிலோ; கோயிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம், உலகில் வேறெங்கும், எவரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100 கோடி.

-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 8:08 am

திருப்பதி பெருமாளின் தரிசனம் W1YMOrRcQ4K1wWHoHXYR+sa08f
-
மூலவர் ஏழுமலையானைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் (கி.பி.966 ஜூன் 8ம் தேதி) வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்கிரகத்துக்குப் பல்லவ குறுநில மன்னன் சக்திவிடங்கனின் பட்டத்தரசி காடவன் பெருந்தேவி நகைகளைத் தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் செய்து வைத்ததாகத் தகவல் உண்டு. முதலாம் குலோத்துங்க சோழன் திருமலைக்கு வந்து காணிக்கை செலுத்தியுள்ளார்.

பெருமாளுக்கு உகந்தது துளசி அல்லவா? ஆனால், இந்தப் பெருமாளுக்கு வில்வத்தாலும் அர்ச்சனை உண்டு. வெள்ளிக் கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் வில்வார்ச்சனை செய்யப் படுகிறது. சிவராத்திரி அன்று திருப்பதியில் ‘க்ஷேத்ர பாலிகா’ என்ற உற்ஸவம் நடைபெறுகிறது. அன்று உற்ஸவப் பெருமாளுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு, திருவீதி உலா நடைபெறும்.

திருப்பதி அலர்மேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில், பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்து தருகிறார்கள்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டு ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 8:09 am

விழாக்களுக்கு இங்கு குறைவில்லை. வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, ஜென்மாஷ்டமி போன்ற வைணவப் பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதம் ரதசப்தமி (மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா  மிகவும் விசேஷமானது! வெங்கடேஸ்வரர் சர்வ அலங்கார பூஷிதராக நான்மாடவீதிகளில் தேர் பவனி வருகிறார்.

இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டும் விதமாக, செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள புரட்டாசி பிரம்மோற்ஸவம் மிகவும் முக்கியமான விழாவாகக் கருதப்படுகின்றது. பிரம்மனே இங்கு வந்து முன்னின்று இந்த உற்சவத்தை நடத்துவதாக ஐதீகம்! இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலையில் வந்து குவிகின்றனர்.

இதோ… இந்த வருடம் 25.9.14 அன்று துவங்கு கிறது புரட்டாசி பிரம்மோற்்ஸவம். குடும்பத்தோடு திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வாருங்கள். நல்ல நல்ல திருப்பங்களுடன் ஏற்ற மிகு வாழ்வைத் தந்தருள்வான் ஏழுமலையான்!

தீர்த்த க்ஷேத்திரம்!

திருமலை ஒரு பக்தி க்ஷேத்திரம் மட்டுமல்ல; ஒரு முக்தி க்ஷேத்திரம், இதையெல்லாம்விட இது ஒரு மிகப்பெரிய தீர்த்த க்ஷேத்திரம். இங்கு 108 தீர்த்தங்கள் உண்டு என புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன. அரூபமாக – பிரத்யட்சமாகாமல் இருக்கக் கூடிய தீர்த்தங்களும் ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து கூடுகின்றன என்கின்றன ஞானநூல்கள்.

திருப்பதியில் திகழும் முக்கிய தீர்த்தங்கள்: குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி.

-
திருப்பதி பெருமாளின் தரிசனம் 3OILNPGiRSwqXC3r3hAg+sa08c

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 8:10 am

திருமலைக்கு நடந்து செல்லும் பாதைகள்…

திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரண்டு விதமான பாதைகள் உள்ளன. அலிபிரி- அதாவது கீழ்த் திருப்பதிக்கு அருகில் உள்ள இந்த பாதையே நீண்ட நெடுநாட்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அகோபில மடத்தின் முதலாவது ஜீயர் சுவாமிகளான ஸ்ரீஆதிவண் சடகோப யதீந்த்ர மகா தேசிகன் என்னும் ஜீயர் ஸ்வாமிகளே திருமலைக்கு படிக்கட்டுகளை முதன் முதலில் அமைத்தவர்.

ஸ்ரீவாரிமெட்டு வழி: திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாசமங்காபுரத்துக்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து, சமீப வருடங்களில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது. இந்த வழியை ஆந்திராவைச் சேர்ந்தவர்கள், கீழ் திருப்பதிக்கு அருகில் உள்ள ஊர்களில் உள்ளவர்கள்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள்…

பிரதான கோயிலான திருப்பதி மலைக்கோயில் மட்டுமல்லாமல் இங்கு ஸ்ரீவராக ஸ்வாமி கோயில், ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஸ்ரீபத்மாவதி கோயில், ஸ்ரீகோவிந்தராஜா கோயில், சீனிவாசமங்காபுரம் ஆகிய ஆலயங்களும் இந்நகரில் அமைந்துள்ளன.

மலைக்கு மேல் ஸ்ரீஆதிவராக மூர்த்தியைத் தரிசித்துவிட்டே ஏழுமலையானையும் மற்ற சந்நிதிகளையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆகாச கங்கை, பாபவிநாச நீர்வீழ்ச்சி ஆகிய தீர்த்த தலங்களையும் பக்தர்கள் தரிசித்து வர வேண்டும்.

ஆன்மிக அம்சங்களைத் தரிசித்தபின் பயணிகள் இங்குள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவுக்கும் விஜயம் செய்யலாம். இங்கு பலவகை விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன. சிலாத்தோரணம் என்றழைக்கப்படும் பாறைத்தோட்டமும் அவசியம் பார்க்க வேண்டிய அம்சமாகும்.
-
நன்றி--சக்தி விகடன்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 25, 2015 9:19 am

திருப்பதி பெருமாளின் தரிசனம் 3838410834 :வணக்கம்:



திருப்பதி பெருமாளின் தரிசனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதிருப்பதி பெருமாளின் தரிசனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312திருப்பதி பெருமாளின் தரிசனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Sat Apr 25, 2015 11:42 am

நல்ல பதிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக