புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_m10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_m10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_m10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_m10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_m10உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகை அதிர வைத்த "மைக்கேல்" ஒரு சகாப்தம்


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 11, 2009 12:38 pm


[You must be registered and logged in to see this link.]


இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் தன் இசையால் கட்டிப்போட்டவர்,
இவரை எதிலுமே குறிப்பிட்டு சொல்ல முடியாமல் அனைத்திலும் கலந்து கட்டி
அடித்தவர். தனது நடனம், இசை, புதுமை என்று அனைத்திலுமே சிறந்து
விளங்கினார்.

பலரும் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பீர்கள் மைக்கேலின் பேய் தனமான
ஆட்டத்தை ஒரு காட்சியாவது பார்க்காமல் இருப்பவர்கள் மிக சொற்பம், கராத்தே
என்றால் எப்படி அனைவரும் இன்றுவரை கிராமம் முதல் கொண்டு ப்ரூஸ் லீ யை
கூறுகிறார்களோ, நடனம் என்றால் அது மைக்கேல் ஜாக்சன் தான், இவர் எவ்வளோ
தூரம் மக்களின் மனதில் குடி கொண்டு இருக்கிறார் என்பதற்கு நம்ம கவுண்டரின்
வசனமான ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக, அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன்
கூப்பிட்டாக என்று சாதாரண வசனம் ஒன்றே போதும் கிராமம் உட்பட அவர் எந்தளவு
அனைவரையும் கவர்ந்து இருக்கிறார் என்று.


நமது பிரபு தேவா முதல் கொண்டு உலகம் முழுவதும் உள்ள நடன கலைஞர்களின் ரோல்
மாடல் இவர் என்றால் மிகையல்ல, பலரும் இவரை மனதில் வைத்தே தங்கள் நடன ஆசையை
வளர்த்துக்கொள்கிறார்கள். இத்தனை பேரை தனது ரசிகர்களாக, ரோல் மாடலாக மாற்ற
வைப்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இன்று இவர் நடனத்தின் பாதிப்பு
இல்லாமல் நடனம் ஆடுவது என்பதே ரொம்ப சிரமம்.

[You must be registered and logged in to see this link.]

தனது 9 வயதிலேயே ஆட்டத்தை துவங்கியவர், சிறு வயதிலேயே பலரை புருவம்
உயர்த்த வைத்தவர். வெள்ளையர்களுக்கு கறுப்பர்கள் என்றாலே மட்டமான நினைப்பு
தான், தற்போது குறைந்து விட்டது என்றாலும் இன்னும் இருக்கிறது. அப்போது
இது உச்சத்தில் இருந்த போது தன் திறமையால் அவர்களையே தனக்கு வெறிப்பிடித்த
ரசிகர்களாக மாற்றி காட்டியவர். நான் வெறிப்பிடித்த என்று கூறியது
மிகைப்படுத்த பட்ட வார்த்தை அல்ல, சொல்ல போனால் அதை விட மிக குறைவான
வீச்சை தரும் வார்த்தையே.
[You must be registered and logged in to see this link.]
அவருடைய த்ரில்லர்(1982) ஆல்பம் வெளிவந்த போது அடைந்த சாதனைகள் (41
மில்லியன்) கொஞ்சநஞ்சம் அல்ல, இது உலக சாதனை அடைந்தது என்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை. பாப் இசையில் புதிய பரிமாணத்தையே கொண்டு வந்தவர்,
இவருடைய பல நடனங்கள் குறிப்பாக காற்றில் கை வைத்து ஆடுவது, கயிறு இல்லாமலே
கயிற்றை இழுப்பது, ஓடிய படியே நடப்பது (மிதப்பது), தொப்பி அணிந்து கண்களை
மறைத்து ஆடுவது போன்றவை எவராலும் மறக்க முடியாது. நம் ஊர் மேடையில்
ஆடுபவர்கள் கூட இதை போல செய்வதை பலரும் கவனித்து இருப்பீர்கள், இவை
மட்டுமல்லாது தனது உடைகளில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தார், ராணுவ உடை,
வெள்ளை கருப்பு உடை (உடன் க்ளவுஸ்), கற்கள் பதித்த உடை, ஜிகினா உடை என்று
புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்தினார். இவர் ஆல்பங்கள் எடுத்த விதம்
மிகவும் வித்யாசமாக இருக்கும், இதுவரை எவரும் பயன்படுத்தி இருந்திராத
முறையில் கலக்கலான கிராபிக்ஸ் ல் இருக்கும்.


இவர் இரு முறை திருமணம் செய்து கொண்டார், இரண்டாவது மனைவிக்கு இரண்டு
குழந்தைகளும் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். இவரது
மகன்களின் பெயர் வித்யாசமாக இருக்கும் மைக்கேல் பிரின்ஸ், மைக்கேல்
பிரின்ஸ் 1 மற்றும் மைக்கேல் பிரின்ஸ் 2.


[You must be registered and logged in to see this link.]
பிரபலம் என்றாலே பிரச்சனை தான் என்பது போல இவருக்கு பிரச்சனை வேறு
ரூபத்தில் வந்தது. பெப்சி விளம்பர நிகழ்ச்சிக்காக ஆடிய போது தீ விபத்து
ஏற்பட்டு காயங்கள் ஆனது, இதற்க்கு பெரும் நஷ்ட ஈடு பெற்றார் ஆனால்
அனைத்தையும் நன்கொடை செய்து விட்டார், அதன் பிறகு தான் தன் கருப்பு தோலை
வெள்ளையாக மாற்ற காஸ்மெடிக் அறுவை சிகிச்சை செய்துகொண்டு வெள்ளைக்காரனாக!
மாறினார். பணம் இருந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதற்கும்,
இயற்கையை மீறினால் என்றுமே ஆபத்து தான் என்பதற்கும் இவரே சிறந்த உதாரணம்
இதனால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார். இவர் இந்த நிலைக்கு காரணமே இந்த
தோலை மாற்றியதும் என்று என்று அனைவரும் கூறுகிறார்கள்.

அதன் பிறகு சிறுவனுடன் ஓரின சேர்க்கை பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்,
இதற்க்கு பல மில்லியன் டாலர்களை நஷ்டஈடாக கொடுத்தார், இதை போல செலவுகள்
அவரை பெரும் சிக்கலில் தள்ளியது. சவுதியில் ஒரு நிகழ்ச்சி செய்ய பணம்
வாங்கி விட்டு அவர் அதை செய்யாததால் அதிலும் பல சிக்கல்கள், பிறகு உலகையே
அதிர்ச்சி அல்லது ஆச்சர்யம் அடையும் வைக்கும் விதமாக முஸ்லிம் மதத்திற்கு
மாறினார், உலகில் உள்ள பிரபலமான செலிபிரிட்டி ஒருவர் மதம் மாறியது
பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர் பெயர் உட்பட தன்னை
மாற்றிக்கொண்டாலும் அவர் இறந்த பின்னும் உலகம் அவரை மைக்கேலாகவே
நினைத்தது, இசைக்கும் நடனத்திற்கும் மதம் ஒரு தடையில்லை என்பதை
நிரூபித்தார், அவர் என்னாவாக மாறினாலும் அவரது ரசிகர்கள் அவர் மீதுள்ள
அன்பில் கொஞ்சமும் மாறமாட்டார்கள் என்பதற்கு பல உதாரணங்களை கூறலாம்.

தற்போது கூட "இறுதித் திரை" என்று நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தார்,
இதற்காக அனைவரும் ஒத்திகை பார்த்துக்கொண்டு இருந்தார்கள், ஆனால் இறுதி
திரை செல்லாமலே இறுதி பயணத்தில் கலந்து கொண்டு விட்டார் என்பது பலரையும்
கண்ணீரில் ஆழ்த்திய நிகழ்ச்சி. கலந்து கொண்டு இருந்தால் உலகம் இருக்கும்
வரை நினைவு கூறும் ஒரு நிகழ்ச்சியாக இது இருந்து இருக்கும் என்பதில்
எள்ளளவும் சந்தேகமில்லை.

மைக்கேல் இறந்த போது அவருக்கு BBC கொடுத்த முக்கியத்துவம் நான்
எதிர்பாராதது, ஒரு நாள் முழுக்க வேறு எந்த செய்தியும் இல்லாமல் அவர்
சமபந்த்தப்பட்ட விசயங்களையே கூறிக்கொண்டு இருந்தார்கள். இவர் இறப்பு
செய்தியால் சோசியல் தளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் BBC செய்தி
தளங்கள் அதிக வருகையாளர்களால் திணறி விட்டன. தளங்களின் சர்வர்கள் திடீர்
கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தவித்து விட்டன. இவை அனைத்திற்கும் சிகரம்
வைத்தது போல மைக்கேலை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள மற்றும் விவரங்களை
அறிந்து கொள்ள ஓட்டு மொத்தமாக பார்வையாளர்கள் கூகிள் தேடுதலை நாடிய போது,
கூகிள் தளமே ஸ்தம்பித்து விட்டது, தங்கள் தளத்தை திட்டமிட்டு
தாக்குகிறார்களோ என்று சந்தேகம் வரும் அளவிற்கு பயந்து விட்டதாக கூகிள்
நிறுவனம் கூறி உள்ளது.

மேற்க்கூறியதே போதும் மைக்கேல் ஜாக்சனின் புகழை நிரூபிக்க, அவர் எந்த
அளவிற்கு உலகில் மிக முக்கியமான நபராக விளங்கி இருக்கிறார் என்பதை
எடுத்துக்காட்ட. பிரபலம் ஆவது பெரிய விசயமில்லை ஆனால் அந்த பிரபலம் எப்படி
மக்களை கவர்ந்து இருக்கிறார் என்பதே பெரிய விஷயம், அதில் மைக்கேல் எந்த
நிலை என்று யாரும் கூறி தெரியவேண்டியதில்லை.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக