புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
5 Posts - 14%
heezulia
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
8 Posts - 2%
prajai
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_m10நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!!

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Fri Apr 24, 2015 12:12 pm

வாழ்க்கை -
கடந்து சென்ற நிகழ்வுகள்
காலத்தால் நம் மனதில் எழுதிய
சுவடுகளின் தொகுப்பு!

வாழ்வின் வடிவழகை
வடிகட்டிப் பார்க்க விழைவது
என் இயல்பு!

முழு வாழ்வையும் புரட்டிப் பார்க்க
இயலாத இத்தருணத்தில் நம்
மூன்றாண்டு வாழ்வையாவது
புரட்டிப் பார்க்க முயல்கிறேன்!

இனிமை குறையாத இளமைக்கு
இனிமை கூட்டுவது
கனவுப்பூக்கள் பூக்கும்
கல்லூரி வாழ்வே!

இப்பூக்களின் பரிணாமத்தை
சற்றே உற்று நோக்குங்கள்! இவை
பள்ளியில் அரும்பி, இளங்கலையில் துள்ளி,
முதுகலையில் முதிரக்கூடியவை!

கனவுகள் துள்ளிய நம் இளங்கலை
வாழ்வை சற்றே புரட்டுவோம்...
வாருங்கள்...!

பள்ளி வாசனையோடும்
பாடற்பிரிவு யோசனையோடும்
பக்கத்துக் கல்லூரிக்குள் நம்
பயணம் தொடங்கியது!

பயணத்தில் ரசித்த நிகழ்வுகளை
பட்டியல்போட விழைகிறது
என் மனம்!ஆம்!..

புதுச்சூழல் பதற்றம் ,
புதுமுக அணிவகுப்பு,
புதுப்பிக்காத புத்திமதி,...

எளிதில் கூடிய நட்பு,
எளிதில் கூடாத காதல்,
பேசிய கண்கள்,
பேச மறுத்த இதயங்கள்,…

மதிப்பெண்ணுக்காக மனப்பாடம்,
மனதில் தங்காத கல்வி,
புரட்டாத புத்தகப் பக்கங்கள்,
புத்தகப் புழுவாய் சில நொடிகள்,…

செய்யத் துடித்த செய்முறைப் பயிற்சிகள்,
தள்ளிப்போட்ட தேர்வுகள்,
முகங்களை மறவாத நகல் எந்திரங்கள்,
அடக்கி ஆண்ட அக மதிப்பெண்கள்,…

பெற்றோரையும் தன்னையும் ஏமாற்றி
நண்பர்கள் வீட்டில் கண்ட புதுப்படிப்பு,
ஆரவாரப் பருவத் தேர்வுகள்,
இறுதி நொடியில் மனதில் பதியாத
மனப்பாட வரிகள்,…

விரைவாய் பகிர்ந்து கொண்ட விடைத்தாட்கள்,
தேர்வறையில் துணைநின்ற துண்டுக் காகிதங்கள்,
தேட விரும்பாத தேர்வு முடிவுகள்,…

சிலுவையில் திருநீறால்
பிறை வரைந்த நண்பர்கள்,!!!
தவறிய நட்பில் தவறான பழக்கங்கள்,
தவறுக்குத் தவறாத தவறான நட்புகள்,
அப்பாவி(ன்) பணத்தில் ஆடம்பர செலவுகள்,…

வகுப்பறை வாய்ஜாலங்கள்,
வாத்தியாரோடு வாக்குவாதங்கள்,
சிறுசிறு ஊடல்கள்,
சிறப்பான கூடல்கள்,…

சுற்றித் திகட்டாத சுற்றுலா,
கலைகட்டிய கலை நிகழ்ச்சிகள்,
கலங்கி நின்ற கவலைகள்,
கண்குளிரக் கண்காட்சிகள்,…

சிலதடவை சிற்றுண்டி உணவு,
பலதடவை பட்டினிச் சுகம்!,
உரிமையில் பறிபோன உணவுகள்,
கலந்துண்டு மகிழ்ந்த
கலவைச் சாப்பாடு ,…

அடக்கி வைத்தபோதும் அலறல் போட்டுக்
காட்டிக் கொடுத்த அலைபேசிகள்,
தப்பியோட வைத்த திரைப்படங்கள்,
தப்ப முயன்ற தண்டணைகள்,…

விடுப்பு விண்ணப்பத்தில்
தந்தையான தருணங்கள்,
கடைசி நாளில் கையொப்பம்
கேட்ட மரங்கள்,
தாமத வருகைக்கு
பழிசுமத்தப்பட்ட பேருந்துகள்
படியில் வாழ்ந்த பேருந்துப் பயணங்கள்,!!!...

கனவிலும் நினையாத
நண்பர் வீட்டு மரண ஓலங்கள்,
முதல்நாளே முந்திச் சென்ற
நண்பர் வீட்டு விழாக்கள்,
கூடியிருந்த தருணங்களில்
பற்றாக்குறையான புகைப்படச்சுருள்கள்,…

மறக்க முடியாத மனத்தடுமாற்றங்கள்,
மறைக்க முடியாத மனக்களவுகள்,
கடிதங்களின் மத்தியில்
காதலர் தினங்கள்,!!!...

விளைவறியாது விடுத்த விண்ணப்பங்கள்,
விளைவறிந்தபின் விளக்கிய தருணங்கள்,
கண்ணீரில் நனைத்த காதல் மறுப்புரைகள்,
கடிதங்களில் மடிந்த கண்ணீர் துளிகள்,!!!...

கசப்பில் சுரந்த இனிப்பாய் அமைந்த
ஒருதலைக் காதல்கள்,!!!...
விலக்கினாலும் விலகாத விருப்பங்கள்,
விரும்பினாலும் விலகிநிற்கும் விலகல்கள்,…

பிரியம் கொள்ளாத பிரிவு,
பிரிவைக் கொல்லும் பிரியம்,
காண விரும்பாத கடைசி நாள்!!!...
என நம் நினைவில் வாழத்துடிக்கும்
நிகழ்வுகளின் எண்ணிக்கை
என்றும் முடிவிலிகளே!!!...

நாம் இளங்கலையில் கல்வி பயின்றதை விட,
கொண்டாட்டங்களில் குடை பிடித்து,
ஆனந்த மழையில் நனைந்த
தருணங்கள்தான் அதிகம்!

ஈரேழு உலகினை ஈடாய்க் கொடுத்து
அழைத்தாலும் திரும்பிப் பார்க்காதவை
அத்தருணங்கள்!ஆம்!..

காலம் நம்மை அதிவிரைவு ரயிலில்
அழைத்துச் சென்று
சொர்க்கம் காட்டி சுமை குறைத்தது!

சொர்க்க வாழ்வில் சொக்கிப்போன நாம்
இன்று பூமி வர மறுப்பதை
வேடிக்கை என்பதா? அல்லது
வேதனை என்பதா?- விளங்கவில்லை!!!...

கண்முன்னே கடந்து சென்ற நிகழ்வுகளை
நான் திரும்பிப் பார்த்த தருணம்,…
மனதை வருடிநின்ற வரிகளை,
வாக்கியத்தால் வரவேற்றது
என் பாக்கியம்!ஆம்!...

அவற்றைக் கவித்துவம் கொடுத்து
காகிதத்தில் அமர்த்தினேன்...!

இமைப்பொழுதில் மூன்றாண்டுகளை
விழுங்கிய நமக்கு, ஆயுள் முழுக்க அசைபோட
நினைவுகளாவது மிஞ்சட்டுமே என்று...!

இருப்பினும்,…
நீங்கள் நிகழ்கால நிகழ்வுகளை விடுத்து,
இறந்தகால நினைவுகளோடு மட்டும் வாழ்ந்தால்,
உங்கள் எதிர்காலம் இறந்துவிடும்!!!

உங்கள் நிகழ்கால வாழ்வில் உள்ள
கேள்விக்குறிகளை நேராக்க
நீங்கள் முயன்றால், ...
உங்கள் எதிர்கால வாழ்வு
பல ஆச்சரியக்குறிகளைக்
கொண்டிருக்கும் என்பது திண்ணம்!!!.

நம் வசந்தகாலம் சற்று
வற்றத் தொடங்கிவிட்டது!ஆம்!!!...
வருமானத் தேடல், குடும்பம்,
பொறுப்பு, கடமை என
சுமைகள் பல தம்மைச் சுமக்க
நமக்கு அழைப்பு விடுக்கத்
தொடங்கிவிட்டன!

வெள்ளை உள்ளத்தின் வெளிப்பாடாய்
நரை தோன்றும் காலத்தில் கூட,
பொக்கை வாயில் புன்னகை தேடுவது என்பது
இயந்திர வாழ்வில் இயலாத ஒன்று!

மனக்குமுறல்களின் மத்தியில் நம்
இதழ்களில் புன்னகை மலர்வது என்பது
இளமை இனிமைகளைப்
புரட்டும்போது மட்டும்தான்!!!

வந்த பாதையை நீங்கள்
நிந்தனை செய்ய முயலும் போது,
என் வரிகள் உங்கள் முன்வந்து
நிற்பது திண்ணம்!ஆம்!

என் கருத்துக்கசிவுகளை நீங்கள்
வாசிப்பதைக் காட்டிலும் சுவாசிக்க முயலுங்கள்!
இன்னல்களின் மத்தியில்
நீங்கள் இளைப்பாற இந்த
நிழல்நினைவுகள் நிச்சயம் உதவும்!

புகைப்படங்களோடு உறவுகொள்ள
விழையும் இதயங்களோடு,…
புதைந்த படங்களாய் இந்நினைவுகள்
நிழல்போல தொடர்ந்துவந்து உறவுகொள்ளும்!
எனவேதான் நிழல்களை நிஜமாக்கும் இந்த
"நிழல் நினைவுகள்" ஓர் நினைவுப் பரிசு !!!...

உங்கள் மத்தியில் ஓர்
அன்பு வேண்டுகோள் !
போராட்டத் தீவிரத்தில்,
புன்னகை சிந்த புதுவழிதேடும்
இந்த புதிர் வாழ்வில்,
இறைவன் அருளால்
இன்னொரு சந்திப்பு நேருமானால், ...
மௌனத்தின் ஆழத்தில்
புதைந்த வார்த்தைகளுடன்,
இதயங்களில் கண்ணீர்ப்பூக்கள் மலர்ந்தாலும்,…
அவை உங்கள் இதழ்களில்
புன்னகைப்பூக்களாய் உதிரட்டும்!!!

நீங்கள் சிந்தும் இருதுளிக்கண்ணீர்,…
பிரிவின் மடியில் உறவுகொள்ளத் துடிக்கும்
இதயங்களுக்கு ஆறுதல் கூட்டட்டும்...!

இன்னொரு சந்திப்பை இறைவனிடம் யாசிக்கிறேன் -
இருதுளிக் கண்ணீருக்காக!!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 24, 2015 5:38 pm

நிழல் நினைவுகள் - கலையாத கல்லூரி கனவுகள்!!! 3838410834

monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 24, 2015 9:22 pm

அருமை!அருமை!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக