ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

3 posters

Go down

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ் Empty குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

Post by சிவா Fri Apr 24, 2015 12:34 am

விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் இது பலனற்ற விபரீதமான விளையாட்டு! குழந்தைகளின் எதிர்காலத்தை முற்றிலுமாக தகர்க்கும் விளையாட்டு!

அந்த சிறுவன் பரீட்சை எழுத சென்றான். அவனால் பரீட்சையை எழுத முடியவில்லை. கை வலித்தது. கண்கள் இருண்டது. சோர்ந்து போய் வீடு திரும்பினான். அவனை டாக்டரிடம் பெற்றோர் அழைத்து சென்றனர். ‘இவனால் பேனா பிடிக்க முடியவில்லை. கைவிரல்கள் வலிக்கின்றன என்கிறான். என்ன நோய் என்று கண்டுபிடியுங்கள்’ என்று டாக்டரிடம் கேட்டுக்கொண்டார்கள்.

டாக்டர் பரிசோதித்துவிட்டு, என்ன நோய் என்று சொன்னதும் பெற்றோர் அதிர்ந்து போய்விட்டார்கள். அந்த நோயின் பெயர் ‘வீடியோ கேமேர்ஸ் தம்ப்’! நிரந்தரமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவதால் பெருவிரல் வீங்கி, நீர்கட்டுடன் காணப்படுவதுதான் இந்த நோயின் அறிகுறி. மகன் கேட்டபோதெல்லாம் அவன் இஷ்டத்திற்கு மொபைல்போனில் போட்டுக்கொடுத்த விளையாட்டுகள் இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணும் என்று பெற்றோர் நினைத்துப்பார்த்திருக்கவில்லை.

விரல் வீக்கம் முதல்–திருட்டு மனோபாவம் வரை பல விபரீதங்கள் இந்த கேம்ஸ்களால் சிறுவர், சிறுமியர்களிடம் ஏற்படுகின்றன. பஸ்சுக்கு காத்திருக்கும்போது, படிக்க விருப்பம் இல்லாதபோது, ராத்திரி உறக்கம் வராதபோது... இப்படிப்பட்ட பல நேரங்களில் பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன் கேம்ஸ்கள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே சிதறடிக்கிறது.

திருடனை பிடிப்பது–மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது–மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது...போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே ‘ஹீரோ’ ஆகிக்கொள்கிறார்கள். நண்பர்களோடு சேர்ந்து விளையாடும்போது ஒருவரை ஒருவர் வீழ்த்தப்பார்க்கிறார்கள்.

மேலோட்டமாக பார்க்கும்போது இந்த விளையாட்டுகள் புள்ளிகள் அதிகம் எடுக்கவும், அடுத்த லெவலுக்கு செல்லவும் ஏற்ற பொழுதுபோக்கு என்று சொல்வார்கள். ஆனால் குழந்தைகள் இதில் ஆழ்ந்துவிட்டால் தேவைக்கு அதிகமாக ஆவேசம் காட்டுவார்கள். கேம்ஸ்சின் ‘பிரேக் டைம்’ நேரத்தில் காத்திருக்க முடியாமல் மொபைலில் தேதியை மாற்றிவிட்டும் ‘பேக்’ செய்துவிட்டும், பெரும்பாலான குழந்தைகள் அடுத்த விளையாட்டை ஆரம்பித்துவிடுகிறார்கள்.

பஸ்சிலும், வகுப்பறையிலும், படுக்கை அறையிலும் மறைத்து வைத்து விளையாடும் வசதி மொபைல் போனில் இருக்கிறது. அதனால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகள் அதில் இருந்தாலும் அந்த விளையாட்டுக்கு தேவையான உடல் சக்தியும், மனோபவமும் மொபைல் கேம்ஸ்க்கு தேவையில்லை. அதனால் அந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.

குழந்தைகள் மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாக என்ன காரணம்?

அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்கும் விதத்தில் அது உள்ளது. மதுவுக்கு அடிமையாவது போன்ற சூழல் இல்லை என்றாலும், சில குழந்தைகளிடம் அதைவிட மோசமான பாதிப்பையும் இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தியிருக்கின்றன.

விளையாட்டில் அவர்களுக்கு வெறித்தனம் அதிகரிக்க அதிகரிக்க படிப்பு உள்பட்ட அவர்களது அன்றாட செயல்கள் அனைத்தையும் அது பாதிக்கும். முழு கவனமும் விளையாட்டை நோக்கி சென்று குழந்தைகளை அடிமையாக்கும் முன்பு அவர்களை காப்பாற்றியாக வேண்டும்.

‘எனது குழந்தை சமர்த்து. அவன் ஒருபோதும் மொபைல் கேம்ஸ்க்கு அடிமையாகமாட்டான்’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

தவறு!. அப்படி நினைக்காதீர்கள். எவ்வளவு புத்திசாலியான குழந்தை என்றாலும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடும். எப்போதும் துறுதுறுவென்று இருக்கும் ‘ஹைப்பர் ஆக்டிவிட்டி’ குழந்தைகள் எளிதாக இந்த விளையாட்டுக்கு அடிமையாகிவிடுவார்கள். பெற்றோர் அருகில் இல்லாத குழந்தைகளும், பெற்றோரின் கண்காணிப்பு குறைவாக உள்ள குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படும். மூளைப்பகுதியில் ‘டோபாமின்’ என்ற ஹார்மோன் சில குழந்தைகளுக்கு அதிகம் சுரக்கும். அவர்கள் இந்த விளையாட்டுக்கு எளிதாக அடிமையாகிவிடுவார்கள்.

‘ஆன்லைனில்’ குழந்தைகள் அதிக நேரம் விளையாடுவதும் ஆபத்துதான். அவை குழந்தைகளை தொடர்ச்சியாக விளையாடவைக்கும். பிரச்சினைக்குரிய பெரியவர்களோடு தொடர்பினை ஏற்படுத்தி புதிய தொந்தரவுகளையும் உருவாக்கும்.

உங்கள் குழந்தைகள் தினமும் 1–2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே, அதற்கு பதிலாக நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். ‘விளையாட்டில் இருந்து விலகி, முழு நேரமும் படிக்க வேண்டும்’ என்பதுபோல் வற்புறுத்த வேண்டாம். ‘அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் பார்க், பீச், நல்ல சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன். நீச்சல் போன்ற பயிற்சிகளுக்கு அனுமதிப்பேன்’ என்று கூறி, குழந்தைகளை ஊக்குவியுங்கள்.

உங்கள் குழந்தை மொபைல் கேம்ஸ்களுக்கு அடிமையாகிவிட்டால் குழந்தைக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் கவுன்சலிங் அவசியம். அதற்காக மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுங்கள்.

கேம்ஸ் அடிமைகளின் அறிகுறி என்ன?

தூக்கமின்மை
ஒற்றை தலைவலி
சோர்வு
பலகீனம்
பள்ளி பாடங்களில் பின்னடைவு
கை, கால், முதுகு, கழுத்துவலி
மன அழுத்தம்
காரணமற்ற கோபம்
எரிச்சல்
தோற்றத்தில் அலட்சியம்
சுத்தமின்மை
விளையாடுவதற்காக பொய் சொல்லுதல்
முக்கியமான நண்பர்கள் அழைத்தாலும் போன் எடுத்து பேசாமல் இருத்தல்.
சக பள்ளி நண்பர்களிடம் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துதல்
பணத் தேவையை பூர்த்தி செய்ய திருடுதல்
திடீரென்று உடல் எடை அதிகரித்தல் அல்லது மெலிந்து போகுதல்
உணவு மீது விருப்பமின்மை...!

– இப்படி பல்வேறு அறிகுறிகள் இருக்கின்றன.


குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ் Empty Re: குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

Post by krishnaamma Fri Apr 24, 2015 12:46 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ம்...ரொம்ப கஷ்டம் தான் .....குழந்தைகளை 'கண் கொத்தி பாம்பு ' போல பார்த்துக்கணும் போல இருக்கே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ் Empty Re: குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

Post by விமந்தனி Fri Apr 24, 2015 12:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ் Empty Re: குழந்தைகளை பாதிக்கும் மொபைல் கேம்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum