ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

+3
M.M.SENTHIL
krishnaamma
சிவா
7 posters

Go down

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Empty கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

Post by சிவா Fri Apr 24, 2015 12:10 am


விடுமுறையில என்னல்லாம் செய்யலாம்.. எங்கல்லாம் போலாம்'னு நாம கேட்கறதுக்கு முன்னே, நமக்கு 'ஐடியா' குடுக்க நிறைய பேர் இருக்காங்க... ஆனா.., பணத்துக்கு எங்கே போறது..?

'ஐடியா, குடுக்கறவங்க... அப்படியே ஆயிரமோ, ரெண்டாயிரமோ, கடனாக் குடுத்தா பரவாயில்லை..'

நியாயம்தான். பணப் பற்றாக்குறை, அநேகமா எல்லார் வீடுலயுமே இருக்கு. ஏன்னா.., நம்முடைய ‘பட்ஜெட்’ல விடுமுறை செலவுக்குன்னு தனியா எடுத்து வைக்கற பழக்கம் இல்லையே...

'ஆமா.., போட்ட பட்ஜெட்டுக்கே பணம் போதாம, எப்படி எப்படியோ ஓட்டிக்கிட்டு இருக்கோம். இதுல, விடுமுறை காலச் செலவுன்னு வேற தனியா எடுத்து வைக்க, எங்கே எடம் இருக்கு..?'

இதுவும் நியாயம்தான். ஆனா வேற சில வழிகள்ல, இதைச் சரி செய்ய முடியும்.

உதாரணத்துக்கு பார்த்தீங்கன்னா, இப்பல்லாம் எல்லார் வீட்டுலயுமே, காலையில பேப்பர் வாங்கற பழக்கம் இருக்கு. இது ரொம்ப ஆரோக்கியமான முன்னேற்றம்தான். இப்படி வாங்கற பேப்பர், புத்தகங்களை, ஒரு வருஷத்துக்கு சேர்த்து வச்சி, கோடை விடுமுறையில் மட்டும், மொத்தமா போடற மாதிரி வச்சிக்கிடலாம்; குறைந்த பட்சம் ஒரு நாளைக்கேனும், குடும்பத்தோட வெளியில போயிட்டு வர, இது உபயோகமா இருக்கும்.

இதே மாதிரி, துணிமணி, பிளாஸ்டிக் பொருள், பழசாகிப்போன ரேடியோ, டேப் ரிகார்டர் இப்படி.., எதையெல்லாம் வேண்டாம்னு தீர்மானிக்கிறோமா, அதையெல்லாம் சேகரிச்சு வச்சு போட்டாலே, கணிசமான பணம் வரும்.

ஆங்கிலத்துல இதைத்தான், 'ஸ்க்ராப் மேனேஜ்மென்ட்'னு சொல்றாங்க. அதாவது, வேண்டாதவைகளை நிர்வகிப்பது.

இதன் மூலம், வருவாய் கிடைக்கும் என்பதை நாம் சற்றும் எண்ணிப் பார்ப்பதில்லை.

அடுத்ததாக நாம் பார்க்க வேண்டியது, ஏற்கனவே செய்து வரும் செலவுகள். எவ்வளவுதான் பணக் கஷ்டம்னாலும், எந்த ஒரு மாதத்திலும், 'தவிர்க்க முடியும்' என்கிற சிலவற்றை செய்துதான் வருகிறோம். இதற்கு என்ன பொருள்..? இந்தச் செலவைச் செய்யா விட்டாலும், எதுவும் கெட்டுப் போயிடாது. கேளிக்கைகள் தொடங்கி, ஆண்களின் மதுப் பழக்கம் வரை, உண்மையில் தவிர்க்க முடிகிற செலவுகளின் மதிப்பு எவ்வளவு...? இது குறித்து, நாம் தீவிரமாக சிந்தித்துப் பார்க்கவில்லை. ஒன்றைப் பெற வேண்டும் என்றால் வேறு ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும் என்கிற தத்துவம், பண விஷயத்தில்தான் அதிகம் பொருந்தும்.

தவிர்க்க முடிகிற செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு வீண் செலவாகத் தெரிவது, வேறு ஒருவருக்கு அவசியமாகப்படும். முன்னர் சொன்ன மதுப் பழக்கம், பெட்ரோல் செலவு, மொபைல் போனுக்கான ரீசார்ஜ் கட்டணம், ஒப் பனைப் பொருட்கள், வறட்டு கவுரவத்துக்காக, திருமணம் போன்ற வைபவங்களில் வழங்கும் உயர்ந்த பரிசுகள்... இப்படி எத்தனை செலவுகள்....!

குறைந்த பட்சம் நீண்டகால விடுமுறை நாட்களின் போதாவது, இவற்றைத் தவிர்த்தால், நிச்சயம் நிறையவே பணம் மிச்சப்படும். வெளியூர் செல்வதாக இருந்தால், கோடைக் காலங்களில் எங்கெல்லாம் கூட்டம் அதிகம் வருமோ, அது போன்ற இடங்களையே நாமும் தேர்வு செய்து போகக்கூடாது. ஊட்டி, கொடைக்கானலுக்கு பதிலாக, ஏற்காடு, ஏலகிரி சென்று வரலாம். பஸ், ரெயிலில் சவுகரியமாக போய் வர முடியும் என்றால், தனியே வாடகைக் கார் எதற்கு?.

வீட்டில் இருக்கிற அதே வசதிகளை, வெளியிலும் எதிர்பார்ப்பது கூடாது. சற்றே வசதிக் குறைவு இருந்தாலும், சகித்துக் கொள்ள வேண்டியதுதான்.

கூட்டத்தோடு கூட்டமாய்ப் பயணிப்பதும், சக சுற்றுலாப் பயணிகளுடன் வசதிகளைப் பகிர்ந்து கொள்வதும், சிறுவர், சிறுமியருக்கு, வாழ்க்கையின் யதார்த்தம் என்ன என்பதை எளிதில் விளக்கும். இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடக் கூடாது. செலவுகளை மிச்சப்படுத்தவும் கூட, கோடைகாலப் பயணங் கள் உதவும்.

எப்படி என்கிறீர்களா..?

நாம் போகும் ஊரில் அல்லது போய் வரும் வழியில், மொத்த விற்பனையில், குறைந்த விலையில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றனவோ, அவற்றை வாங்கி வந்தால், நமது மாத பட்ஜெட் கணிசமாகக் குறையும்.

சுமந்து வர வேண்டுமே.. என்பதற்காக, பலரும் இதைச் செய்வதில்லை. தரமான பொருள், குறைந்த விலையில் கிடைக்கிற போது, அதை வாங்கிக் கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனம்.

நீண்ட விடுமுறை என்றால், மிக நீண்ட தூரம்தான் போக வேண்டும் என்பதில்லை. நாம் வசிக்கிற ஊரிலேயே அல்லது குறைந்த தூரத்திலேயே, நம்மைச் சுற்றி, எத்தனையோ முக்கிய இடங்கள் உள்ளன.

பொதுவாகவே, அருகில் இருப்பவை உலகத்தையே கவர்ந்தாலும், நாம் அதை கவனத்தில் கொள்வதே இல்லை.

இது மட்டுமல்ல. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில், குடும்பத்தினருடன், 'காலார' நடந்து போய் வந்தாலே உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருக்கும். பிற நாட்களில் இவற்றுக்கு எல்லாம் நமக்கு நேரம் ஏது..?

கோவில், பூங்கா, கடை வீதி.. என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு, குடும்பத்தோடு வெறுமனே போய் வருதலே நல்ல பொழுது போக்கு தான்.

சற்றே வளர்ந்த பிள்ளைகள், அவர்களின் நண்பர்களுடன் ஊர் சுற்றப் போனால், யார் யாருடன் எங்கே போகிறார்கள்? என்பதை அறிந்து கொண்டு அனுமதிப்பதுதான் நல்லது. பெற்றோருடன் மட்டும்தான் வெளியே போகலாம் என்று அடம் பிடிப்பதால், வீண் சச்சரவும், தேவையற்ற செலவுகளும்தான் மிஞ்சும். சக நண்பர்களுடன் பயணிக்கிற போது, இருப்பதை வைத்துக் கொண்டு சிக்கனமாகப் போய் வந்து விடுவார்கள்.

பணத்தைக் கையாள்வது, வெளிச் சூழலுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்வது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது போன்ற பல நல்ல விஷயங்களை அவர்கள் அப்போது கற்றுக் கொள்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. விடுமுறைப் பயணத்தில் அதுதானே மிக முக்கியம்.

வெளியில் எங்கும் போகாமலே வேறு விதமாகவும் விடுமுறையைக் கொண்டாடலாம்.

வீட்டில் சைக்கிள் இல்லாதவர்கள், பிள்ளைகளுக்கு சைக்கிள் வாங்கித் தரலாம். கிரிக்கெட் பேட், ஸ்போர்ட்ஸ் ஷ¨, கேரம் போர்டு, செஸ் போர்டு போன்ற விளையாட்டு தொடர்பான பொருட்களை வாங்கித் தருவதால், இரண்டு பயன்கள் கிடைக்கும். ஒன்று, இவையெல்லாம் ஒரு வகையில் நிரந்தரமாக இருக்கும். இரண்டு, பெற்றோருக்கு தொந்தரவு தராமல் அவர்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு போவார்கள். பெற்றோரும் உடன் சேர்ந்து ஆடினால், பிள்ளைகளுக்கும் ஆனந்தம்; பெற்றோருக்கும் ஆரோக்கியம்.

பெற்றோர், தமக்குத் தெரிந்த கலை, தொழிலை, பிள்ளைகளுக்குக் கற்றுத் தரலாம். ஓவியம் வரையத் தெரியுமா..? ஆட, பாட வருமா..? வெளியில் வகுப்புகளுக்கு அனுப்புவதை விட, நீங்களே சொல்லித் தந்து பாருங்கள்.

சொந்தமாய்க் கடை நடத்துகிறீர்களா..? பிள்ளைகளை உடன் அழைத்துச் செல்லுங்கள். பெரிதாக வியாபாரம் பற்றிய அறிவுரைகளைத் தந்து கொண்டு இருக்காதீர்கள்.

பொழுது போகத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து செயல் படுங்கள். அடுத்தடுத்த நாட்களும் உங்களுடன் வருவதற்கு, அவர்களாகவே உங்களுக்கு முன்பு தயாராய் இருப்பார்கள். கடை வேலை செய்வதில், உங்களுக்கும் அசதி தெரியாமல் இருக்கும். இப்படி எத்தனையோ வெவ்வேறு வழிகளில் விடுமுறையைக் கழிக்கலாம்.

பணம் செலவு செய்துதான் லீவு நாட்களை ஓட்ட வேண்டும் என்பது இல்லை. கையில் அதற்கென்று பணம் இருந்தாலும், பார்த்துச் செலவு செய்ய வேண்டும்.

ஒன்றில் மட்டும் உறுதியாய் இருங்கள். விடுமுறைச் செலவுக்கென்று கடன் வாங்கவே கூடாது.

கை மாத்து, அதாவது வட்டி இல்லாமல் வருகிற கடன். குறைந்த காலத்தில், அப்போ வாங்கி அப்பவே குடுக்கறது. அதுவுமா கூடாது..?'

ஆம். அதுவும்தான். ஏன்..? விடுமுறை முடிந்த கையோடு, பள்ளி, கல்லூரிக்குக் கட்டணம் செலுத்தியாக வேண்டும்; சீருடை, புத்தகங்கள் வாங்க வேண்டும். இப்படி, ஏராளமான தவிர்க்க முடியாத அத்தியாவசிய செலவுகள் நம்மைச் சுழற்றி அடிக்கும். அந்த சமயத்தில், நமக்கு இந்த 'கைமாத்து'தான் கை கொடுக்கும்.

விடுமுறை செலவுகளுக்கு நாம் கடன் வாங்கினால், அடுத்த ஓரிரு மாதங்களில் மிக முக்கியமான சமயத்தில் கிடைக்காமல் போகலாம். 'என்ன இவங்க..? கைமாத்து வங்கறதே பொழப்பா வச்சிருக்காங்களே..' என்று எண்ணி, 'இல்லை' என்று சொல்லி விட்டால் என்ன செய்வது..? ஆகவேதான் சொல்கிறோம். கல்வி, மருத்துவம் தவிர்த்து வேறு எதற்கும் கடன் வாங்கவே வாங்காதீர்கள். பின்னாளில், கஷ்டப்படாதீர்கள்.

அதே போல, சேமிப்புக் கணக்கில் இருக்கிற பணமும். ஏதோவொரு அவசரத்துக்கு உதவக்கூடிய உடனடிப் பணம். வேறு யாரிடமும் சென்று கையேந்த வேண்டிய நிலையில் இருந்து நம்மைக் காப்பாற்றுவது இந்தப் பணம்தான். ஆகவே, கையில் இருக்கிற பணம் எல்லாவற்றையும் செலவழித்து விட வேண்டாம்.

நிறைவாக ஒன்று. பழங்காலத்தில், தமிழர் வீடுகளில், 'கூட்டாஞ்சோறு' என்று ஒன்று உண்டு. பொருள் தெரியாதவர்கள், அந்தக் கால பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்த விடுமுறையில், இதை வாரம் ஒரு முறையேனும் முயற்சி செய்து பார்க்கலாம். தொன்று தொட்டு வந்த ஒரு நல்ல பழக்கத்தை, இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதில், மகிழ்ச்சியும், முழு மன நிறைவும் கிடைக்கும்; மனித உறவுகளும் வலுப்படும்.

[thanks]தினத்தந்தி[/thanks]


கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Empty Re: கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

Post by krishnaamma Fri Apr 24, 2015 12:40 am

அருமையான பகிர்வு சிவா புன்னகை .....நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Empty Re: கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

Post by M.M.SENTHIL Fri Apr 24, 2015 6:47 am

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 3838410834 கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 3838410834 கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 103459460 கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Empty Re: கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

Post by விமந்தனி Fri Apr 24, 2015 8:57 am

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 3838410834 கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 103459460 கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 1571444738


கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Empty Re: கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

Post by T.N.Balasubramanian Fri Apr 24, 2015 10:24 am

நல்ல பகிர்வு .கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 3838410834 கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 103459460

ஒன்றில் மட்டும் உறுதியாய் இருங்கள். விடுமுறைச் செலவுக்கென்று கடன் வாங்கவே கூடாது.
'தவிர்க்க முடியும்' என்கிற சிலவற்றை செய்துதான் வருகிறோம்.
'ஸ்க்ராப் மேனேஜ்மென்ட்'னு சொல்றாங்க. அதாவது, வேண்டாதவைகளை நிர்வகிப்பது.
இதுவும் நல்ல உத்திதான் .
மாமியார்களும் மருமகள்களும் இதை காண்பித்து ஒருவருக்கொருவர் , மற்றவர்களை கழிக்காமல்
இருந்தால் சரி .
சில யூனியன் தலைவர்கள் "SCRAP MANAGEMENT " கொடி பிடிப்பதும் உண்டு

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Empty Re: கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

Post by பாலாஜி Fri Apr 24, 2015 12:19 pm

நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Empty Re: கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

Post by ayyasamy ram Fri Apr 24, 2015 12:52 pm

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!' Empty Re: கடன் படாதீங்க! கஷ்டப்படாதீங்க!'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum