ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
Dr.S.Soundarapandian
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
heezulia
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
i6appar
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 
Jenila
திரையரங்கும் சினிமாவும் Poll_c10திரையரங்கும் சினிமாவும் Poll_m10திரையரங்கும் சினிமாவும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையரங்கும் சினிமாவும்

Go down

திரையரங்கும் சினிமாவும் Empty திரையரங்கும் சினிமாவும்

Post by ayyasamy ram Thu Apr 23, 2015 9:06 am

திரையரங்கும் சினிமாவும் 81zp57ruSYiBXuF6295M+z4
-


உன்னதமானதாக நான் கருதும் ஒரு படத்தைப் பற்றி யாராவது மோசமான கருத்தைக் கூறினால் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி ‘எங்கே, எப்படி அதைப் பார்த்தீர்கள்?’ என்பதுதான். வீட்டில் டிவிடிமூலம் பார்த்ததாகப் பதில் வந்தால், நான் பேச்சைத் தொடருவதில்லை. ஒரு திரைப்படத்தைக் குறுவட்டு இயக்கிமூலம் வீட்டில் சின்னத்திரையில் பார்ப்பதற்கும், இருண்ட அரங்கில் அமர்ந்து பெரிய திரையில் பார்ப்பதற்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு. இவை இரண்டும் அடிப்படையிலேயே மிகவும் வேறுபட்ட அனுபவங்கள். ஒரு திரைப்படத்தை உள்வாங்குவதிலும் எதிர்கொள்வதிலும் புரிந்துகொள்வதிலும் இந்த வேறுபாடுகளின் தாக்கம் இருக்கும்.

மேலோட்டமான ஒப்பீடுமூலம் இதை விளக்க முயல்கிறேன். கச்சேரியில் ஒருவரின் இசையை நேரிடையாகக் கேட்பதற்கும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சங்கீதத்தை வீட்டிலிருந்தபடி கேட்பதற்கும் உள்ள வேறுபாட்டை மனத்தில் கொள்ளுங்கள். ஓரிடத்தில் ஆசனத்தில் அமர்ந்து கச்சேரியின் குவிமையமாக இருக்கும் இசைக் கலைஞரை நோக்கியபடி நீங்கள் இசையைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பாடகரின் உடல்மொழி, இசைக் கருவிகளை உடன் வாசிக்கும் கலைஞர்களின் இருப்பு ஆகியவையும் இசை கேட்கும் அனுபவத்தின் முக்கியப் பரிமாணங்கள். வேறு எந்தக் குறுக்கீடும் அங்கு இல்லை. அந்த அனுபவத்துடன் நீங்கள் ஒன்றிப்போகிறீர்கள். சில தருணங்களில், ஒலிபெருக்கி போன்ற எந்த மின்கருவிகளும் இல்லாமல் இசை கேட்பது இன்னும் ஆழமான அனுபவம். சென்னையில் வசித்தபோது நடனக் கலைஞர் சந்திரலேகாவின் வீட்டில், Spaces அரங்கில் குண்டேச்சா சகோதரர்களின் துருபத் கச்சேரி கேட்டது அத்தகைய மறக்க முடியாத, ஆழ்ந்த அனுபவம்.

சினிமா பெரிய திரைக்காகத் தயாரிக்கப்படுவது. சினிமா தோன்றி ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் கழித்துத்தான் தொலைக் காட்சி வந்தது. அதற்கும் பல பத்தாண்டுகள் கழித்துத்தான் குறுவட்டு நமக்குக் கிடைத்தது. சினிமா சார்ந்த பெரும்பாலான அழகியல் கோட் பாடுகளும் நியதிகளும் உத்திகளும் சின்னத்திரை, குறுவட்டு போன்ற நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் தோன்றுவதற்கு முன்பே உருவானவை என்பதை நினைவில் கொள்ள வேண் டும். சினிமாவின் அழகியல் நியதிகள் பெரிய திரைக்கு ஏற்ப உருவானவை.

எடுத்துக்காட்டாகப் பரந்த வெளிக்காட்சிகள் சின்னத்திரையில் எடுபட மாட்டா. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ‘தெய்வம் தந்த பூவே’ பாடல் காட்சியில் விரிந்த கடற்புறம், கரையோரக் காட்சிப்படிமங்கள் திரையை நிரப்பி இருக்கும். அந்த ஆண்டு தேசிய விருது பெற்றதற்கு இந்தப் பாடலின் எழிலார்ந்த காட்சிப் படிமங்களும் முக்கியக் காரணம். அந்தப் பரந்த மணற்பரப்பின் அழகும் பிரமிப்பும் சின்னத்திரையில் தோன்றும்போது தொலைந்துவிடுகின்றன. கடற்கரையில் அந்நிகழ்வு நடப்பதை மட்டுமே உணர முடியும். ஆனால் பாதிப்பு இருக்காது. இன்னொரு எடுத்துக்காட்டு. ‘பரதேசி’ படத்தில் பரந்த வறண்ட நிலப்பரப்பில், தொடுவானத்தில் மக்கள் கூட்டமொன்று எறும்பு வரிசைபோலச் சட்டத்தின் ஒரு விளிம்பிலிருந்து அடுத்த விளிம்புவரை நகரும் காட்சி உண்டு. இந்தக் காட்சிப் படிமங்களின் தாக்கம் சின்னத்திரையில் பார்க்கும்போது எடுபடாமல் போய்விடுகிறது.

பாரம்பரியமாக ஒரு திரைப்படத்தைப் பார்க்க நாம் திரையரங்குக்குச் செல்கிறோம். அங்குக் கதவுகள் மூடப்பட்டு, புறவுலகு மறைக்கப்பட்டு, விளக்குகள் அணைக்கப்பட்டு, கண்கள் திரையில் பதிய, அமைதி சூழ, வேறு உறுத்தல் ஏதுமின்றி இருளில் படத்தைப் பார்க்கிறோம். நம் புலன்களுக்கு வேறு சீண்டல் ஏதும் இல்லாமல், கவனம் முழுவதும் திரையில் பதிகிறது. திரையில் ஓடும் படத்துடன் நாம் ஒன்றிப்போகிறோம். நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள், நம் கவனம் சிதறாமல் திரையில் பதிதல் ஆகியவையே இந்த அனுபவத்தின் முக்கியப் பரிமாணங்கள். திரையில் தோன்றும் படத்தையும் அதுசார்ந்து எழும் ஒலியையும் மட்டுமே நாம் உள்வாங்குவதால், நமது சினிமா அனுபவம் ஆழமானதாக அமைகிறது. திரையரங்கின் இருளின் அநாமதேயத்தில் நாம் சிரிக்கலாம், அழலாம். மற்றவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று நம் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதில்லை.

இயக்குநர் உருவாக்கிய அந்தக் கனவுலகில் நாம் நுழைந்து, அதன் கதாபாத்திரங்களுடன் சஞ்சரிக்கிறோம். அவை உலவும் அதே வெளியில் நாமும் உலவுகிறோம். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் தனுஷ்கோடி மணற்பரப்பில் சிம்ரன், கீர்ச்சனாவுடன் நாமும் இருக்கிறோம். ஓடுகிறோம். பாடுகிறோம். கதாபாத்திரங்கள் சஞ்சரிக்கும் வெளியை நாமும் பகிர்ந்துகொள்கிறோம். இந்த உணர்வுதான் திரையரங்கில் சினிமா பார்ப்பதின் முக்கிய அம்சம். இந்த உணர்வு பார்வையாளருக்கும் கதாபாத்திரங்களுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் மிக அண்மைக் காட்சிகள் (close-up shots) பார்வையாளருக்கும் நடிகருக்குமான நெருக்கத்திற்கு ஏதுவாகின்றன. இந்த ஒருவழி நெருக்கம்தான் விசிறிகள் உருவாவதற்கும் நட்சத்திரங்கள் உருவாவதற்கும் அடிப்படை. ஒரு நட்சத்திரத்துடன் மிகவும் நெருங்கியிருப்பதுபோல விசிறி உணர்வார். ஆனால் அந்த நட்சத்திரத்திற்கு இவர் யாரென்றே தெரியாது. இந்த நெருக்கமும் உறவும் திரையரங்கத்தில் படம் பார்க்கும் அனுபவத்தில் உருவாகின்றன.

அதிலும் எந்தக் குறுக்கீடும் இல்லாமல் முழுத் திரைப்படத்தை ஒரே மூச்சில் பார்ப்பது இந்த அனுபவத்தை ஆழமானதாக்கும். வெளிநாடுகளில் இன்டெர்வெல் என்னும் குறுக்கீடு இல்லாமல் படம் திரையிடப்படுகிறது. நம் நாட்டிலும் திரைப்பட விழாக்களில் திரையிடுதலில் எந்தவிதமான குறுக்கீடும் இருக்காது. இருந்தால் படம் பார்க்கும் அனுபவம் சிதைக்கப்பட்டுவிடுமே! வீட்டில் குறுவட்டுமூலம் படத்தைப் பார்க்கும்போது, அந்த சினிமா உலகத்தினுள் நாம் நுழைவதில்லை. உடன் இருப்பவர்களுடன் பேசிக்கொள்கிறோம். தொலைபேசி அவ்வப்போது அழைக்கிறது. இப்படிப் பல இடையூறுகளுக்கு நடுவே படத்தையும் பார்க்கிறோம். நாம் வெளியிலிருந்து அதைப் பார்க்கிறோம்.

இந்த இடையூறுகள் சினிமாவின் முக்கியப் பரிமாணமான ஒலியின் தாக்கத்தைச் சிதைக்கின்றன. சொல்லப்போனால் ஒலியின் பாதிப்பே இல்லாமல் போய்விடுகிறது. வீட்டிலிருக்கும் நம்மைச் சுற்றியுள்ள பல சத்தங்கள், தெருவோசைகள், படம் பார்க்கும் அனுபவத்திலிருந்து நம்மை அன்னியப்படுத்துகின்றன. நமக்காக இயக்குநர் உருவாக்கும் உலகின் பாதிப்பு ஆழமாக அமைய ஒலி மிகவும் அவசியம். புறவுலகு நம்மைச் சூழ்ந்திருப்பது போன்ற பிரமையை அது தோற்றுவிக்கிறது. தான் வேலைசெய்யும் படங்களில் சுற்றுப்புற ஒலிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறும் ஆஸ்கார் விருதுபெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, ‘ஒலி பார்வையாளனின் ஆழ்மனத்தைப் (subconscious) பாதிக்கிறது’ என்று (Deep Focus Cinema, Nov.2014) கூறியிருக்கிறார். திரையில் மலையோடை ஒன்று காட்டப்படும்போது நீரின் சலசலப்பு நமக்குக் கேட்டால்தான் ஓடை உயிர்பெறுகிறது. வீட்டில் படம் பார்க்கும்போது இத்தகைய ஒலிகள் சிதைகின்றன. கடற்கரைக் காட்சி ஒன்றில் அலையோசையை நாம் கேட்க முடிவதில்லை. இயக்குநர் வுடி ஆலன் தன் படம் ஒன்று வெளியிடப்படும் முன் நியூயார்க் நகரில் திரையரங்குகளுக்குச் சென்று ஒலி உபகரணங்கள் தரமாக இருக்கின்றனவா எனப் பரிசோதித்துவிட்டுத்தான் பட வெளியீட்டை அனுமதிப்பார்.

அதுபோலவே ஒளியூட்டத்தையும் (lighting) நாம் சின்னத்திரையில் உணர முடிவதில்லை. ‘அவள் அப்படித்தான்’ படத்தில் இயக்குநர் கதாபாத்திரங்களின் அடி மனத்தின் உணர்வுகளைக்காட்ட ஒளி யூட்டத்தை அருமையாகப் பயன்படுத்தியிருந்தார். சின்னத்திரையில் அது கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடுகிறது. ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகள் முகத்தில் பிரதிபலிப்பதை நாம் சின்னத் திரையில் இழக்கக் கூடும். ‘Lunch Box’ படத்தைப் பார்த்தவர்களுக்கு இது எளிதாக விளங்கும். இயக்குநர் ஒரு சட்டத்திற்குள் (frame) பல விவரங்களைக் காட்டும் போது, அவை சின்னத் திரையில் பார்வையாளரால் கவனிக்கப்படாமல் போவதுண்டு.

ஆனால் விமர்சிக்கவோ ஆராயவோ ஒரு படத்தைப் பார்க்க வேண்டியிருந்தால், குறுவட்டு நல்ல வசதியான உபகரணமாக அமையும். ஒரு காட்சிப் படிமத்தை ‘உறைய வைத்து’ அதைக் கூர்ந்து அவதானிக்க முடியும். ஒரு காட்சியை மறுபடியும் ஓடவிட்டுப் பார்க்க முடியும். ஆனால் சினிமாவை அனுபவிக்க, அதன் ஆழத்தை உணர, பெரிய திரையும் இருண்ட அரங்கும் அவசியம். வீட்டின் சிறிய திரையில் நாம் பார்க்கும் திரைப்படத்தைப் புலனளவில் மட்டுமே எதிர்கொள்ள முடிகிறது. அந்நியப்படுத்தப்பட்ட அனுபவமாக அது அமைந்துவிடுகிறது. அந்த அனுபவத்தின் பேரில் அந்தப் படத்தை விவாதிப்பது நியாயமல்ல என நினைக்கிறேன்.

சு. தியடோர் பாஸ்கரன்

காலச்சுவடு செய்திகள்:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum