Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசியச் செய்திகள்
+7
சிவனாசான்
T.N.Balasubramanian
shobana sahas
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
ayyasamy ram
சிவா
11 posters
Page 9 of 20
Page 9 of 20 • 1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 20
தேசியச் செய்திகள்
First topic message reminder :
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.

Last edited by சிவா on Fri Feb 10, 2023 2:24 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தேசியச் செய்திகள்
காஷ்மீரில் நிலவி வரும் வன்முறையால் ஆப்பிள் பழங்களின் விலை அதிகரிக்கும் அபாயம்
நாட்டின் மொத்த ஆப்பிள் பழ உற்பத்தியில் 70 சதவீதத்தை காஷ்மீர் கொண்டுள்ளது. இந்நிலையில், அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நிலவி வரும் வன்முறையால் ஆப்பிள் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அளவுக்கு விலையும் தற்போது உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஆப்பிள் பழங்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் இருப்பதாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பழ உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆப்பிள் பழங்களின் வரத்து கைகொடுத்து வரும் நிலையில், புதுடெல்லியில் மொத்த விலை சந்தையில் 25 கிலோ ஆப்பிள் பெட்டி ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு 350 லாரிகளில் 12 டன் ஆப்பிள்கள் வரத்து இருக்கும். ஆனால், தற்போது 200 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது.
காஷ்மீரில் இருந்து ஆப்பிள்கள் வரும் வரை விலை அதிகரித்தே காணப்படும். காஷ்மீர் வன்முறை நீடித்தால் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு பழங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மொத்த ஆப்பிள் பழ உற்பத்தியில் 70 சதவீதத்தை காஷ்மீர் கொண்டுள்ளது. இந்நிலையில், அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நிலவி வரும் வன்முறையால் ஆப்பிள் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அளவுக்கு விலையும் தற்போது உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஆப்பிள் பழங்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் இருப்பதாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பழ உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆப்பிள் பழங்களின் வரத்து கைகொடுத்து வரும் நிலையில், புதுடெல்லியில் மொத்த விலை சந்தையில் 25 கிலோ ஆப்பிள் பெட்டி ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு 350 லாரிகளில் 12 டன் ஆப்பிள்கள் வரத்து இருக்கும். ஆனால், தற்போது 200 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது.
காஷ்மீரில் இருந்து ஆப்பிள்கள் வரும் வரை விலை அதிகரித்தே காணப்படும். காஷ்மீர் வன்முறை நீடித்தால் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு பழங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசியச் செய்திகள்
புதுடெல்லி பேக்கரியில் வெடிப்பு சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
புதுடெல்லி, புதுடெல்லியில் பேக்கிரி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்று தீயணைப்பு படை அதிகாரிகள் கூறிஉள்ளனர்.
புதுடெல்லியின் குரெஜி பகுதியில் பேக்கரி ஒன்றில் அதிகாலை 5.30 மணி அளவில் 20 ஊழியர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த போது வெடிப்பு நேரிட்டது. சமையல் அறையின் அருகே வேலையில் ஈடுபட்டு இருந்தவர்கள் காயம் அடைந்தனர்.
விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக நான்கு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது: மோடிக்கு எழுதிய கடிதத்தில் சித்தராமையா திட்டவட்டம்
பெங்களூரு: தென்மேற்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்யாததால் காவிரியில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை 10% குறைவாகவே கிடைத்துள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். இதனால் காவேரி அணைகளில் நீர்இருப்பு சராசரியாக பாதி அளவே இருப்பதாக கூறியுள்ள அவர், காவிரி படுகையில் வழக்கமான 7 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடிக்கு பதிலாக இந்த ஆண்டு 2.24 ஹெக்டேர் பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 மாதங்களில் பருவமழை போதிய அளவில் பெய்யாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சித்தராமையா, நீர்ப்பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவி்த்துள்ளார். காவிரி நீர் நம்பி இருக்கும் நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால், பெங்களூரு நகரத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குடிநீருக்காக அன்றி, விவசாயத்திற்காக காவிரி அணைகளில் இருந்து நீர் திறப்பது இயலாத காரியம் என அவர் தமது கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்

உலகிலேயே 72 பிரிவு இஸ்லாமிய மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே; ராஜ்நாத் சி்ங் பேச்சு
திராங்கா யாத்திரையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியவை பின்வருமாறு:-
கடந்த காலங்களில் இந்திய எல்லையில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் அத்துமீறல்களையும், ஆக்ரோஷத்தையும் காட்டிய போதெல்லாம் நம் மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து அவர்களுக்கு சவால் விடுத்தார்கள். மதத்தின் பெயரால் நம் மக்களை பிரிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள். சுதந்திர போராட்ட தியாகிகளான அஸ்ஃபாகுல்லா கான்- ராம்பிரசாத் பிஸ்மில் நட்புறவையே அவர்கள் பிரிக்க முயற்சித்து பிறகு தோற்றுப்போனார்கள்.
அதேபோல் தற்போதும் சிலர் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இடையே வேற்றுமையை பரப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தோல்வியையே சந்திக்கிறார்கள். இந்திய மக்களை யாராலும் பிரிக்க முடியாது. நம் இந்தியாவை சிறந்த ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என மக்கள் விரும்பினால் அவர்கள் அனைவரும் மதம், இனம், சாதியை கடந்து ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும்.
72 பிரிவுகளை சார்ந்த அனைத்து இஸ்லாமிய மக்களும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையுடன் வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே என்பதை இந்திய முஸ்லிம்கள் நன்றாக அறிவார்கள். இது போன்று இஸ்லாமிய நாடுகளிலும் கூட பார்க்க முடியாது. அதேபோல், அனைத்து பிரிவு கிறிஸ்துவ மக்களும் ஒன்றாக இணைந்து வாழும் நாடு இந்தியாதான்.
பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீரில் அமைதியை குலைக்க முயற்சித்து வருகிறது. ஒரு நாட்டில் தீவிரவாதியாக இருப்பவர் மற்றொரு நாட்டில் கதாநாயகனாக இருக்க முடியாது. ஒரு பிரச்சனைக்கு வன்முறை போராட்டங்கள் ஒருபோதும் தீர்வாக முடியாது. முதலில் அமைதி ஏற்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்

Last edited by சிவா on Sat Aug 20, 2016 9:03 pm; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசியச் செய்திகள்
பிராட்பேண்ட் இணையதளத்தின் குறைந்தபட்ச வேகத்தை 4 மடங்கு வரை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, டவுண்லோடு செய்வதி்ல் இது தாமதத்தை ஏற்படுத்துகிறது. நாட்டில் வயர்லெஸ் நெட்வொர்க் அபரிமிதமாக முன்னேறி வரும் நிலையில் பிராட்பேண்ட் இணையதளத்தையும் தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சராசரி குறைந்தபட்ச பிராட்பேண்ட் இண்டர்நெட் வேகத்தில் தென் கொரியா 29 MBPS வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே 21.3 MBPS, சுவீடன் 20.6 MBPS வேகத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தற்போது இந்தியாவில் குறைந்தபட்சமாக பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் 512 KBPS ஆக உள்ளது. இதை 4 மடங்கு வரை அதிகரித்து 2 MBPS ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தகவல்தொடர்பு அமைச்சகம் செய்து வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமனம்
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்து வரும் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில், தற்போது துணை ஆளுநராக இருக்கும் உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரை பற்றிய விபரம் பின்வருமாறு;-
52 வயதாகும் உர்ஜித் படேல் பிரபல பொருளாதார வல்லுனர்களில் ஒருவராவார். லண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் இருந்து பி.ஏ. பட்டம் பெற்றவர். உலகின் பிரபல பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து 1986-ம் ஆண்டு எம்.பில் பட்டமும், மற்றொரு உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகமான யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து 1990-ம் ஆண்டு பொருளாதார பிரிவில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.
அதன்பிறகு, சர்வதேச நிதியத்துடண் இணைந்து அமெரிக்கா, இந்தியா, பகாமாஸ், மியான்மர் நாடுகளில் பணியாற்றியவர். அதன்பிறகு, மத்திய நிதி அமைச்சகம் மற்றும் பொருளாதார விவகாரத்துறையின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இதுதவிர, பல்வேறு அரசு உயர்மட்ட பொறுப்புக்களி்ல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2013-ம் ஆண்டு உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இவர் வகித்த முக்கிய உயர் பொறுப்புக்களில் எம்.சி.எக்ஸ் எனப்படும் இந்திய பொருட்சந்தையின் இயக்குனர்களில் ஒருவராகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது

50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து மூதாட்டி உயிரிழந்த கொடூரம்
திருவனந்தபுரத்தில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தின் மாநில தலைமை செயலகத்தில் இருந்து 10கி.மீ தொலைவில் உள்ளது புலுவில்லா . இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இதைப்பற்றி அப்பகுதியை சேர்ந்த மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனுமில்லை.
இந்நிலையில் நேற்றிரவு 9.00 மணியளவில் சீலூவம்மா (65) என்பவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரை கடித்து குதறியதில் அவர் இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்தார்.
அவரை தேடி வந்த அவரது மகன் சீலூவம்மா இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்பு அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்

வாழ்த்துகள் உர்ஜித்.
சீனியர் சிட்டிசன் படும் கஷ்டங்களை உறுதி செய்துக் கொண்டு, அவர்கள் கஷ்டங்களை நிவர்த்தியுங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தேசியச் செய்திகள்
ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்.... தீவிரவாதிகள் இருவர் பலி...
ஸ்ரீநகரில் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள தூரு சாகாபாத் பகுதியில் இந்திய ராணுவம் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு பேரை உயிருடன் பிடித்துள்ளனர்.
இன்று அதிகாலை முதலே பலகட்டமாக நடந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்பு ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்ற சிலர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் அருகே இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 பாதுகாப்பு வீரர்களில் ஒருவர் மாத்திரம் சிகிச்சை பலனளிக்காமல் வீரமரணமடைந்தார்.
அதன் பிறகு தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்த போது மசூதயில் மறைந்திருந்த தீவிரவாதைகளை பாதுகாப்பு படையினர் நெருங்கியதும் இரு தரப்புக்கும் இடையே மாறி,மாறி நடந்த துப்பாக்கி சூட்டுக் கொண்டனர். பிறகு ராணுவத்தினர் குறிவைத்து தாக்கியதில் 2 பயங்கரவாதிகள் இறந்தனர்.
தீவிரவாதிகளுக்கு அதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த பகுதி முழுதும் தற்காலிகமாக இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டது.
ஸ்ரீநகரில் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள தூரு சாகாபாத் பகுதியில் இந்திய ராணுவம் தீவிரவாதிகளுடன் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு பேரை உயிருடன் பிடித்துள்ளனர்.
இன்று அதிகாலை முதலே பலகட்டமாக நடந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பின்பு ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மற்ற சிலர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்நிலையில் அருகே இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 3 பாதுகாப்பு வீரர்களில் ஒருவர் மாத்திரம் சிகிச்சை பலனளிக்காமல் வீரமரணமடைந்தார்.
அதன் பிறகு தலைநகர் ஸ்ரீநகரில் நூர்பாக் என்கிற இடத்தில் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ராணுவவீரர்கள் ஈடுபட்டிருந்த போது மசூதயில் மறைந்திருந்த தீவிரவாதைகளை பாதுகாப்பு படையினர் நெருங்கியதும் இரு தரப்புக்கும் இடையே மாறி,மாறி நடந்த துப்பாக்கி சூட்டுக் கொண்டனர். பிறகு ராணுவத்தினர் குறிவைத்து தாக்கியதில் 2 பயங்கரவாதிகள் இறந்தனர்.
தீவிரவாதிகளுக்கு அதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த பகுதி முழுதும் தற்காலிகமாக இணைய சேவைகள் தடைசெய்யப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தேசியச் செய்திகள்
இந்தியா அடுத்த சர்ஜிக்கள் தாக்குதலுக்கு தயார்
காஷ்மீர் பகுதியில் ஒரு சில இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில் தற்போது 250 க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து சுமார் 27 வழிகளில் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகிறது…
கடந்த 2016 ஆம் ஆண்டில் இந்தியா சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்னும் தாக்குதல் நடத்திய போது 160 ஆக இருந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பிறகு 190 என்று பெருகி தற்போது 230 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் வரையில் 8 பயங்கரவாத குழுக்கள் லிபா பள்ளத்தாக்கு பகுதியில் உருவாகியுள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவினுள் ஊடுருவ இஸ்கர் - இ - தொய்பா, மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் இந்திய வனப்பகுதியோரமாக கள ஆய்வுகள் நடத்திவருவதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் வந்துள்ளது.
எனவே நம் இந்திய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக தன் அடுத்த கட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எனப்படும் துல்லியமான தாக்குதல் நடத்த தாயாராகி வருவதாக தெரிகிறது.

Similar topics
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» சில செய்திகள்
» தேசியச் சின்னத்தை வடிவமைத்த ஓவியர் காலமானார்
» செய்திகள்
» தேசியச் சின்னங்கள் முன்பு செல்ஃபி எடுக்கத் தடை: ஒரு வாரம் மட்டுமே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum