புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
336 Posts - 79%
heezulia
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
8 Posts - 2%
prajai
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10தேசியச் செய்திகள் - Page 8 Poll_m10தேசியச் செய்திகள் - Page 8 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2015 9:28 pm

61 பச்சிளங்குழந்தைகளை காவு வாங்கிய ஒடிசா அரசு மருத்துவமனை: ஊழியர்களை குறை கூறும் அரசு

தேசியச் செய்திகள் - Page 8 11919124_929842163755548_852026685838690303_n

ஒடிசா மாநிலத்தில் உள்ள சிஷூ பவன் என்ற குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 61 பச்சிளங்குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து, ஒடிசாவை ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கெதிராக பா.ஜ.க உட்பட எதிர்க்கட்சியினர் பல்வேறு அரசு மருத்துவமனைகள் முன்பாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 5 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அலட்சியமான நடத்தையினால் பச்சிளங்குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாக இருந்த 3 ஊழியர்கள் மீது கிரிமினல் விசாரணையும் நடத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒடிசா அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது குறை கூறி வரும் நிலையில், அந்த மருத்துவமனையின் மூத்த அதிகாரி நிரஞ்சன் மொகந்தி, “இங்கு, ஒரு நாளைக்கு 50 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். வெளி நோயாளிகளாக மட்டுமே ஒரு நாளைக்கு 500 குழந்தைகளுக்கும் மேல் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. இவ்வளவு அழுத்தங்கள் இருக்கும் போது, நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வியெழுப்புகிறார்.

இப்படியே அரசும் ஊழியர்களும் மாறி மாறி ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால் இறந்த குழந்தைகளின் உயிர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடைய உயிர்களின் உத்தரவாதத்திற்கும் யார் பொறுப்பு? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:21 am

ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயர்

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பெயரை சூட்டி உள்ளது.

ஏவுகணை மேம்பாட்டுத் திட்டத்திற்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அளித்த பங்களிப்பிற்கு கெளவுரவம் அளிக்கும் வகையில் அவர் ஏவுகணை நாயகன் என்றே அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில், ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே உள்ள ஏவுகணை சோதனை மையமான வீலர் தீவுக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டியுள்ளது ஓடிசா மாநில அரசு. மாநில தலைநகர் புவனேஷ்வரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள இந்த தீவு இனி அப்துல் கலாம் தீவு என்று அழைக்கப்படும்.

இதேபோல் தில்லியில் உள்ள அவுரங்கசீப் சாலையும் அப்துல் கலாம் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீலர் தீவு இந்தியாவின் மிகவும் முக்கியமான ஏவுகணை ஏவும்தளம் ஆகும்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:22 am

ஐ.நா. பிரச்சார தூதுவராக ஏ.ஆர். ரஹ்மான் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் லட்சிய திட்டங்களை விளம்பரப்படுத்தும் பிரச்சார தூதர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பாலின பாகுபாடு களைதல், அனைவருக்கும் சமவாய்ப்பு உள்ளிட்ட 17 அம்சங்களை லட்சிய இலக்குகளை ஐ.நா. சபை நிர்ணயம் செய்துள்ளது.

இவைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்க சர்வதேச அளவில் பிரபலமானவர்களை பிரச்சார தூதுவர்களாக ஐ.நா. சபை நியமித்து வருகிறது. அந்த பட்டியலில் ஆஸ்கர் விருது வென்ற தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உட்பட பலர் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:23 am

‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் அமித்ஷா உறுதி

ராணுவ வீரர்களுக்கு ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா உறுதி அளித்துஉள்ளார்.

முன்னாள் ராணுவத்தினரின் நீண்ட கால கோரிக்கையான, ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் சில காரணங்களால் இந்த திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் கடும் போராட்டத்தை தொடர்வோம் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்நிலையில், ராணுவ வீரர்களுக்கு ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா உறுதி அளித்துஉள்ளார். பாரதீய ஜனதா - ஆர்.எஸ்.எஸ். மூன்றுநாள் ஒருங்கிணந்த கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்றது. தலைவர்கள் கூட்டத்தில் ‘ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டமும் முக்கிய அங்கம் வகித்தது. சங்பரிவார் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், இது விரையில் செய்யப்படும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தலைவரின் கருத்தும் உள்ளது என்று கூறிஉள்ளார்.

வைத்யா பேசுகையில் “ ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம்’ திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா கூறிஉள்ளார்,” என்று கூறிஉள்ளார்.

இதற்கிடையே முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் சாத்பீர் சிங் பேசுகையில், “விரைவில் திட்டத்தை ஒருதலைப்பட்சமாக மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. எங்களுடைய கோரிக்கைப்படி இருந்தால் நாங்களும் வரவேற்கிறோம், அரசுக்கும் நன்றி. எங்களுடைய கோரிக்கைகள் இல்லாமல் இருந்தால், ஒருதலைப்பட்சமான முடிவானது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது கிடையாது. நாங்கள் எங்களுடைய போராட்டத்தை தொடர்வோம்,” என்று கூறிஉள்ளார்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:28 am

பிறந்த குழந்தையின் மூக்கை கடித்த எலி: மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்

மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்ட மருத்துவமனையில், பிறந்து 45 நாட்களே ஆன குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றி செவிலியர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்று தினங்களுக்கு முன்பாக நடந்த இந்த கொடூர சம்பவம் நேற்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது.

தனியார் மருத்துவமனையில் பிறந்த அந்த குழந்தையின் நிலை கவலைக்கிடமானதையடுத்து மாவட்ட மருத்துவமனைக்கு பெற்றோர்கள் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களிடம் குழந்தை காட்டப்படவில்லை. குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து அந்த குழந்தையின் மூக்கை எலி கடித்துள்ளது.

இது குறித்து, மருத்துவமனை அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 2 பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இதே போன்று, ஆந்திர மாநிலம் குண்டூர் அரசு பொது மருத்துவமனையில் எலி கடித்ததால் பச்சிளம் குழந்தை இறந்தது நினைவிருக்கலாம்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:28 am

எல்லாமே என் அம்மாதான்: உருகும் பிரணாப் முகர்ஜி

ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒரு நாள் ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

இதற்கான நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக 10–ம் வகுப்பு, 11–ம் வகுப்பு மாணவ– மாணவிகள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதலில் இந்திய வரலாறு பற்றிய பாடம் நடத்தினார். தொடர்ந்து தனது அரசியல் அனுபவங்கள் பற்றி பேசினார். அரசியல் அமைப்பு சட்டம் பற்றியும் உரையாற்றினார். அப்போது நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது பொருளாதார சீர் திருத்தங்களின் அவசியம் பற்றியும், அதில் நரசிம்மராவின் பங்கு பற்றியும் குறிப்பிட்டார்.

பின்னர் பிரணாப் முகர்ஜி, “நான் ஒரு மந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ உங்கள் முன் இப்போது இல்லை. நான் உங்கள் முகர்ஜி, உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய சிறந்த ஆசிரியர் என் அம்மாதான். நான் மிகவும் சேட்டைக்காரன் என்பதால் அம்மாவிடம் அடிக்கடி அடி வாங்குவேன். ஆனால், அடித்து முடித்த கொஞ்ச நேரத்திலேயே, என்னிடம் வந்து, அன்போடும் அக்கறையோடும், காலையிலிருந்து மாலை வரை நடந்த எல்லாவற்றையும் வரிசையாக என்னிடம் சொல்லுமாறு கேட்பார். என்னுடைய அனைத்து வெற்றிக்கும் காரணம் என்னுடைய அம்மாதான். கண்டிப்பாக உங்கள் அம்மாதான் உங்களுக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும்” என்றார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள மிராடி என்ற கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான கமாடா கிங்கர் முகர்ஜிக்கும் ராஜிலெட்சுமிக்கும் மகனாகப் பிறந்தார் பிரணாப் முகர்ஜி. தந்தையின் காலம் சிறைச்சாலை மற்றும் கட்சி அலுவலகத்தை சுற்றியே இருந்தது. இதனால், அவர் தாய்தான் அவரை கடும் சிரமங்களுக்கிடையில் கவனித்துக்கொண்டார்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:48 pm

கசகசா தூள் விற்பனைக்கான தடைக்கு இடைக்காலத் தடை

கசகசா தூள் மற்றும் ஓபியம் விற்பனைக்கு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் மருந்துச் சீட்டின் பேரில் கசகசா தூள், கஞ்சா இலை ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் சண்டீகரைச் சேர்ந்த ஒரு தன்னார்வ அமைப்பு, இவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்குமாறு கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தது.

அந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இப்பொருள்களின் விற்பனைக்குத் தடை விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் கசகசா தூள், கஞ்சா இலை ஆகியவற்றின் மொத்த விற்பனைக்கான உரிமம் பெற்றுள்ள, தினேஷ் கோஸ்வாமி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கண்ட பொருள்களின் விற்பனைக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:55 pm

எல்லையில் 10 தீவிரவாதிகளை வீழ்த்திய ஜவான் வீரமரணம்

காஷ்மீரில் 11 நாட்களில் 10 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவத்தின் சிறப்புப் படை கமாண்டோ தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியபோது அவர்களை எதிர்த்த சிறப்புப் படை கமாண்டோ வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் சிறப்பு கமாண்டோப்படைப் பிரிவு வீரர் லான்ஸ் நாயக் மோகன்நாத் கோஸ்வாமி, காஷ்மீரில் பயங்கரவாத தடுப்புப்பிரிவில் பணியாற்றி காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு தேடுதல் வேட்டை நடத்தி கடந்த 11 நாட்களில் 10 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றார்.

மேலும், உதாம்பூரில் நடந்த வேட்டையில் முகமது நவீத் யாகூப் என்று என்ற தீவிரவாதியை உயிருடன் பிடிக்க இவர் காரணமாக இருந்தார். தொடர்ந்து ஹாந்த்வாரா என்ற இடத்தில் நடந்த சண்டையின் போது அவர் தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். இதனை ராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

வீரமரணம் அடைந்த மோகன்நாத் என்ற வீரர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் இறுதி மரியாதைக்காக அவரது சொந்த கிராமமான இந்திரா நகருக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வீரர் மோகன்நாத்துக்கு மனைவி மற்றும் 7வயது மகள் உள்ளனர்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 5:08 pm

பர்கான்வானி ஏரியாவில் செல்போன் டவரில் பாகிஸ்தான் கொடியை அகற்றிய ராணுவ வீரர் தேசிய கொடியை பறக்கச் செய்தார்

ஸ்ரீநகர், காஷ்மீரில் பார்கான் வானி ஏரியாவில் செல்போன் டவரில் ஏற்றப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிய ராணுவ வீரர் இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையில் இதுவரைக்கும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீரிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பர்கான் வானியின் ஏரியாவான திராலில் உயரமான செல்போன் டவரில் ஏற்றப்பட்டு இருந்த பாகிஸ்தான் கொடியை ராணுவ வீரர் அகற்றினார். அவர் உயரமான டவரில் ஏரி இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார்.

இச்சம்பவம் முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ நேற்று முதல் வைரலாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:37 pm

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

முதல்–மந்திரி கெஜ்ரிவாலுக்கு இன்று 48–வது பிறந்த தினம் ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘‘டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

பிரதமரின் வாழ்த்துக்கு கெஜ்ரிவால் உடனடியாக டுவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்தார். அதில் உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி எனக் கூறப்பட்டு இருந்தது.டெல்லி அரசை செயல்படவிடாமல் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார் என்று சமீப காலமாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜியும் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.



தேசியச் செய்திகள் - Page 8 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக