by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
தேசியச் செய்திகள்
Page 19 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்
பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.
இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்! |
பசுவை கொல்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறிய போது பசுவை கொல்பவர்கள் மற்றும் பசுவை கொல்வதை அனுபதிப்பவர்கள் நரகத்தில் சித்திரவதை அனுபவிப்பார்கள் என்று தெரிவித்தனார்
மேலும் நாட்டில் பசுவதையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பசுவை பாதுகாக்கப்பட்ட விலங்காகவும், தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனார்.
மேலும் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதால் அனைத்து மதத்தின் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்றும் பசுவை இந்து மதத்தினர் தெய்வமாக கருதும் விலங்கு என்பதால் மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனார்.
ஐ.நா. தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம்: இந்தியா
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய இந்திய தூதரக அதிகாரி சீமா புஜானி. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த தனிச்சிறப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது என்று இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஸ்விட்சா்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரக அதிகாரி சீமா புஜானி பேசியதாவது:
வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் சுதந்திரத்துக்கு பாகிஸ்தான் மக்கள் போராடி வருகின்றனா். இது அந்நாட்டு அரசு தவறான விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை எடுத்துக்காட்டுகிறது. அதுகுறித்து சிந்திக்காத அந்நாடு, இந்தியா குறித்து அளவுக்கு அதிகமாக சிந்திக்கிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்த பெரும்பாலான பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் அளித்த தனிச்சிறப்பு பாகிஸ்தானுக்கு உள்ளது. அந்நாட்டின் முதன்மையான ராணுவ அகாதெமிக்கு அருகில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்தாா். லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹஃபீஸ் சயீத், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அசாா் ஆகியோருக்கு பல்லாண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைப்புகள் அடைக்கலம் அளித்து பாதுகாத்து வருகின்றன. இந்தப் பயங்கரவாதிகளின் பெயா்கள் பாகிஸ்தானின் வரலாற்றுப் பதிவேடுகளில் உள்ள சில பயங்கரமான பெயா்களாகும்.
உலகில் ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கு பாகிஸ்தானின் கொள்கைகள்தான் நேரடி பொறுப்பு. இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமில்லாத பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து, பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு உழைப்பதில் அந்நாட்டுத் தலைவா்களும் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.
முஸ்லிம் நாடுகள் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதி சாா்பில் (ஓஐசி) ஜம்மு-காஷ்மீா் குறித்து தேவையற்ற கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரும் லடாக்கும் எப்போதும் இந்தியாவின் அங்கமாக இருக்கும். இந்திய நிலப்பகுதியை பாகிஸ்தான்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதையும், இந்திய நிலப்பகுதி ஆக்கிரமிப்பையும் கைவிடுமாறு பாகிஸ்தானிடம் கூறுவதை விடுத்து, கொடிய பிரசாரத்துக்கு ஓஐசியை தவறாகப் பயன்படுத்த அந்த அமைப்பு அனுமதித்துள்ளது.
இதேபோல துருக்கியும் ஜம்மு-காஷ்மீா் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதை அந்நாடு தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.
வரலாற்று உச்சத்தில் ரஷிய கச்சா எண்ணெய் கொள்முதல்
ரஷியாவில் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவு கடந்த பிப்ரவரியில் வரலாற்று உச்சத்தை எட்டியது.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷியா முக்கிய நாடாகத் திகழ்ந்து வருகிறது. உக்ரைன்-ரஷியா போா் காரணமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதன் காரணமாகத் தனது கச்சா எண்ணெயை மலிவு விலையில் ரஷியா வழங்கி வருகிறது.
சீனா, அமெரிக்காவுக்குப் பிறகு கச்சா எண்ணெயை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. தனது தேவையில் 85 சதவீத கச்சா எண்ணெயை இறக்குமதி மூலமாகவே இந்தியா பூா்த்தி செய்து வருகிறது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் எதிா்ப்பையும் மீறி ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது.
உக்ரைன்-ரஷியா போா் தொடங்குவதற்கு முன் ரஷியாவிடமிருந்து வெறும் 0.2 சதவீத அளவில் மட்டுமே கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்துவந்த நிலையில், தற்போது அது 35 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் வரலாற்று உச்சமாக நாளொன்றுக்கு 16.2 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ரஷியாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது இராக், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டுமொத்த அளவைவிட அதிகமாகும்.
இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணெயை வழங்கும் நாடுகள் பட்டியலில் ரஷியா தொடா்ந்து 5-ஆவது மாதமாக முதலிடத்தில் நீடிக்கிறது. கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் சவூதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் அளவு 16 சதவீதமும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் அளவு 38 சதவீதமும் குறைந்துள்ளது.
கடந்த மாதத்தில் நாளொன்றுக்கு இராக் 9.39 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயையும், சவூதி அரேபியா 6.47 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயையும் இந்தியாவுக்கு விற்பனை செய்தது. அவ்விரு நாடுகளிடமிருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ள கச்சா எண்ணெய் அளவு கடந்த 16 மாதங்களில் இல்லாத குறைந்தபட்சமாகும்.
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பதில் ஐக்கிய அரபு அமீரகம் 4.04 லட்சம் பீப்பாய்களுடன் 4-ஆவது இடத்திலும், அமெரிக்கா 2.48 லட்சம் பீப்பாய்களுடன் 5-ஆவது இடத்திலும் உள்ளன.
‘இந்தியா சாதனை’ : இஸ்ரோவின் மறுபயன்பாட்டு ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இன்று (ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனையை (ஆர்எல்வி) வெற்றிகரமாக செய்துள்ளது. மறுபயன்பாட்டு ராக்கெட் வாகனத்தை வெற்றிகரமாக தரையிறக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது.
இஸ்ரோவின் கூற்றுப்படி, இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் காலை 7.10 மணிக்கு ஆர்.எல்.வி உடன் புறப்பட்டு 4.5 கி.மீ உயரத்திற்கு பறந்தது. அதன் பின் திட்டமிட்டபடி ஏவுகணை தானாகவே பூமியில் தரையிறங்கியது என்று கூறியுள்ளது. மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ எட்டிய முக்கிய மைல்கல் இது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனத்தை ஏவுவதற்கு பின்பற்றப்பட்ட தொழில்நுட்பம் உலகில் முதல் முறையாக இந்தியா பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது. இறக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர் மூலம் 4.5 கிமீ உயரத்திற்கு ஏவுகணை எடுத்துச் செல்லப்பட்டு பின் திட்டமிட்டபடி ஏவுகணை தானாகவே தரையிறங்கியது என்று இஸ்ரோ கூறியுள்ளது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் உயர்வு - தமிழ்நாட்டின் நிலை என்ன?
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (CMIE) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை 2022 டிசம்பரில் 8.30 சதவீதமாக அதிகரித்து இருந்தது. பின்னர் ஜனவரியில் 7.14 சதவீதமாகக் குறைந்தது. பிப்ரவரியில் மீண்டும் 7.45 சதவீதமாக உயர்ந்தது. தற்போது அதைவிட 0.35 சதவீதம் வேலைவாய்ப்பின்மை நாட்டில் அதிகரித்துள்ளது. நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 8.4 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.5 சதவீதமாகவும் இருந்ததாக தரவுகள் கூறுகின்றன.
மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் வேலையில்லாத் திண்டாட்டம் ஹரியானாவில் 26.8 சதவீதமும், அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 26.4 சதவீதமும், ஜம்மு காஷ்மீர் 23.1 சதவீதமும், சிக்கிம் 20.7 சதவீதமும், பீகார் 17.6 சதவீதமும் மற்றும் ஜார்கண்ட் 17.5 சதவீதமும், உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கரில் 0.8 சதவீதமும், புதுச்சேரியில் 1.5 சதவீதமும், குஜராத்தில் 1.8 சதவீதமும், கர்நாடகாவில் 2.3 சதவீதமும், மேகாலயா மற்றும் ஒடிசாவில் தலா 2.6 சதவீதமும் உள்ளது. தமிழ்நாட்டிலும் வேலையின்மை பிப்ரவரி மாதத்தை விட அதிகரித்திருக்கிறது. அதன்படி பிப்ரவரியில் இது 3 சதவீதமாக இருந்தது. மார்ச் மாதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் என்பது நீண்ட காலமாகவே பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப நாட்டில் போதிய அளவு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதுபோன்ற சூழலில் சமீபகாலமாக நிலவும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையிலும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நிறுத்திவைத்தும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய கட்சி அந்தஸ்து பெற்ற ஆம் ஆத்மி; அங்கீகாரத்தை இழந்த திரிணாமுல் காங்கிரஸ், என்.சி.பி, சி.பி.ஐ
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கிய இந்திய தேர்தல் ஆணையம், தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி), அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏ.ஐ.டி.சி) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ) ஆகிய கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்தை ரத்து செய்தது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கட்சி அந்தஸ்து குறித்து ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கடந்த வாரம் கர்நாடக உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக 2019 ஜூலையில், அந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவர்களின் செயல்பாட்டிற்குப் பிறகு, அவர்களின் தேசியக் கட்சி அந்தஸ்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதை விளக்குமாறு கேட்டு, ஜூலை 2019 இல் இந்திய தேர்தல் ஆணையம் மூன்று கட்சிகளுக்கும் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வரவேற்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான ட்விட்டரில், “இவ்வளவு குறுகிய காலத்தில் தேசிய கட்சியா? இது அதிசயத்திற்கு குறைவானது அல்ல. எங்களை இந்த நிலைக்கு அழைத்து வந்துள்ள நாட்டின் அனைத்து கோடி மக்களுக்கும் வாழ்த்துக்கள். மக்கள் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். இன்று மக்கள் எங்களிடம் இந்த மாபெரும் பொறுப்பை வழங்கியுள்ளனர். ஆண்டவரே, இந்த பொறுப்பை சிறப்பாக நிறைவேற்ற எங்களை ஆசீர்வதியுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
பாரா 6B இன் கீழ் தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பகிர்வு) ஆணை, 1968, ஒரு கட்சி நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இருந்தால், அதன் வேட்பாளர்கள் கடந்த மக்களவை அல்லது சட்டமன்றத் தேர்தலில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் செல்லுபடியாகும் வாக்குகளில் குறைந்தபட்சம் 6% பெற்றிருந்தால் மற்றும் கடந்த தேர்தலில் குறைந்தபட்சம் நான்கு எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அல்லது குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் மொத்த மக்களவைத் தொகுதிகளில் குறைந்தது 2% வெற்றி பெற்றால், அது தேசியக் கட்சியாகக் கருதப்படுவதற்குத் தகுதியுடையது;
டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி பெரும் பெரும்பான்மையுடன், மிகப் பெரிய வாக்குப் பங்குகளுடன் ஆட்சியில் உள்ளது. மேலும் மார்ச் மாதம் நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் 6.77% வாக்குகளைப் பெற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் அக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது.
உத்தரப் பிரதேசத்தில் ராஷ்டிரிய லோக் தளம், ஆந்திராவில் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்), மணிப்பூரில் மக்கள் ஜனநாயகக் கூட்டணி (பி.டி.ஏ), புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க), மேற்கு வங்கத்தில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்.எஸ்.பி) மற்றும் மிசோரத்தில் மிசோரம் மக்கள் மாநாடு.ஆகிய கட்சிகளுக்கு வழங்கப்பட்ட மாநிலக் கட்சி அந்தஸ்தையும் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில் ரத்து செய்தது.
எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத ராகுல் எம்.பி., பதவி நீக்க விவகாரம்
பிரதமர் வேட்பாளராக பேசப்படும் ராகுலின் எம்.பி., பதவி நீக்கம், மக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதது, காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
காங்., பிரதமர் வேட்பாளரான, நேரு குடும்ப வாரிசு ராகுலின் எம்.பி., பதவி நீக்கம், நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்; காங்கிரசுக்கு எழுச்சியை கொடுக்கும் என, அக்கட்சியினர் நம்பிக்கையோடு இருந்தனர்.
'என்னை எம்.பி., பதவியிலிருந்து நீக்கியதன் வாயிலாக, பா.ஜ.,வுக்கு எதிராக போராடுவதற்கான ஆயுதத்தை, அவர்களே வழங்கி விட்டனர்' என, ராகுல் கூறினார்.
ஆனால், ஒரு சில நாட்கள் ஆங்காங்கே சில போராட்டங்கள் நடந்ததோடு சரி. பெரிய அளவில் எந்த போராட்டங்களும் நடக்கவில்லை.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், காங்கிரஸ் வலுவாக உள்ள கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட, ராகுலுக்கு ஆதரவான போராட்டங்கள், பா.ஜ.,வுக்கு சிறு நெருக்கடியை கூட தரவில்லை.
சந்தேகம்
இது, காங்கிரசின் மூத்த தலைவர்கள், மாநில தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இனி ராகுலை முன்னிறுத்தினால் பா.ஜ.,வை வீழ்த்த முடியாது என்ற சந்தேகம், அவர்களுக்கு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது:
எம்.பி., பதவி நீக்கத்தை வைத்து, பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் தலைமையும், மாநில தலைவர்களும் தவறி விட்டனர். மாறாக, சாவர்க்கர் பற்றிய ராகுலின் பேச்சை, பா.ஜ., சர்ச்சையாக்கி விட்டது.
இப்போது காங்கிரஸ் தலைவராகவோ, காங்கிரஸ் பார்லிமென்ட் குழு தலைவராகவோ ராகுல் இருந்திருந்தால், அவரது எம்.பி., பதவி நீக்கம், சர்வதேச அளவில், பா.ஜ.,வுக்கு நெருக்கடியை தந்திருக்கும்.
ராகுல் தான், காங்கிரசை வழிநடத்துகிறார். காங்கிரஸ் வென்றால், ராகுல் தான் பிரதமர் என்பதை அறிந்தாலும், அதிகாரப்பூர்வமாக அவர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இல்லை. யதார்த்த அரசியலை ராகுல் புரிந்து கொள்ள வேண்டும்.
தாராளவாதி
காங்கிரசை வழிநடத்தும் ஒருவர், தேசிய சிந்தனை கொண்டவராக மட்டுமே இருக்க முடியும். ஆனால், தேசத்திற்கு எதிராக கோஷமிட்ட கன்னையாகுமாரை காங்கிரசில் சேர்க்கும் அளவுக்கு தாராளவாதியாக இருக்கிறார்.
ராகுலின் நண்பர்களும், அவருக்கு ஆலோசனை சொல்பவர்களில் 90 சதவீதத்தினரும், தேசியவாத சிந்தனைக்கு எதிரானவர்கள்.
தி.மு.க., போன்ற மாநில கட்சிகளின் தலைவர்களை போல, ஹிந்திக்கு எதிராகவும், 'இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்' என்றெல்லாம் ராகுல் பேசுகிறார்.
அனுபவம், அமைப்பு திறன், காங்கிரசின் தேசியவாத சிந்தனைகள் மீது பிடிப்பு, பெரும்பான்மை மக்களை அரவணைத்து செல்லும் மனப்போக்கு கொண்ட தலைவர்களை உடன் வைத்துக் கொண்டு, பாட்டி இந்திரா, தந்தை ராஜிவ் வழியில் பயணித்தால் மட்டுமே, கட்சியை கரை சேர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் ஒதுக்கீடு ரத்து': அமித் ஷா திட்டவட்டம்
ஹைதராபாத்: ''தெலுங்கானாவில் பா.ஜ., ஆட்சி அமைத்தால், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள செவலா நகரில் பா.ஜ., சார்பில் 'சங்கல்ப் சபா' என்ற பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷா பேசியதாவது:
தெலுங்கானாவில் போலீஸ் மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பெரிய அரசியல் நடக்கிறது. மத அடிப்படையிலான இட ஒதுக்கீடுகள், நம் நாட்டு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானவை. இங்கு பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, பட்டியல் ஜாதி, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான உரிமையை அளிக்கும்.
ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஓவைசியின் திட்டங்கள் தெலுங்கானாவில் அமல்படுத்தப்படுகின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்,தெலுங்கானா அரசு ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்படும்; ஓவைசிக்காக நடத்தப்படாது. இவ்வாறு அவர் பேசினார்.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து
மண்டியா: மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதன் முதலாக நேற்று பங்கேற்று பேசிய ஆதித்யநாத் இதுகுறித்து மேலும் கூறியது: மத அடிப்படையில் வழங்கப்படும் எந்தவொரு இட ஒதுக்கீடும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படும். இந்த விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு கண்டனத்துக்குரியது.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் உள்ளதையடுத்து உத்தரபிரதேசத்தில் இரட்டை இயந்திர அரசு காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் எந்த கலவரமும் ஏற்படவில்லை.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவை (பிஎப்ஐ) திருப்திப்படுத்துவதற்காகவே மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் ஆதரவளித்து வருகிறது. இது இந்திய அரசியல் சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது. அதேநேரம், பிஎப்ஐ அமைப்புக்கு நாடு முழுவதும் தடைவிதித்து பாஜக எடுத்த நடவடிக்கை இஸ்லாமிய அமைப்பின் செயல்பாட்டை பலவீனமாக்கியுள்ளது.
இன்னொரு பிரிவினை..: இந்தியா 1947-ல் மத அடிப்படையில் பிரிவினைக்கு உள்ளானது. இதனால், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அங்கீகரிக்க முடியாது. அத்துடன் மற்றொரு பிரிவினைக்கு நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
பீகார்: 40 பெண்களுக்கு ஒரே கணவர்? - அதிர்ச்சியளிக்கும் சாதிவாரி கணக்கெடுப்பும், ஆச்சரியமூட்டும் உண்மையும்
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது 40 பெண்கள் ஒரே கணவர் பெயரை பதிவு செய்துள்ளனர்.
பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது 40 பெண்கள் ஒரே கணவர் பெயரை பதிவு செய்திருப்பதும், அப்பகுதியை சேர்ந்த பல குழந்தைகள் ஒருவரது பெயரையே தங்களுடைய தந்தையின் பெயர் என்று கூறியதும் அரசு அதிகரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை சில மாதங்களாக நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பில் அங்கு வசிக்கும் மக்களின் சாதிகள், துணை சாதிகள், சமூகம் மற்றும் பொருளாதார நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் அரசு இந்த கணக்கீட்டிற்காக சுமார் ரூ.500 கோடி நிதியையும் பட்ஜெட்டில் ஒதுக்கி உள்ளது. இதற்காக அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று 17 தலைப்புகளில் கணக்கெடுப்பு நடத்தினர். இந்நிலையில் அரவாலி வார்டு எண் 7ல் அமைந்துள்ள சிவப்பு விளக்கு பகுதியில் அதிகாரிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுப்பட்டிருந்தபோது ஒரு வினோதமான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது இப்பகுதியில் பல ஆண்டுகளாக பாலியல் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 40 பெண்கள் சாதிவாரி கணக்கெடுப்பின்போது தங்கள் கணவனின் பெயரை ‘ரூப்சந்த்’ என்று பதிவு செய்திருந்தனர். அவர்களின் குழந்தைகளும் தங்களது தந்தையின் பெயரை ‘ரூப் சந்த்’ என்றே குறிப்பிட்டிருந்தனர்.
இதனால் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அதிகாரிகள் அவர்களது ஆதார் அட்டையை வாங்கி பார்த்தபோது ’ரூப் சந்த்’ என கணவர் பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. ரூப்சந்த் ‘நட்டு’ சாதியை சேர்ந்தவர். எனவே அவர்கள் அனைவருக்கும் நட்டு சாதிக்கு நிர்ணயிக்கப்பட்ட 97 என்ற எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு வசிக்கும் பெண்களிடம் ‘ரூப்சந்த்’ குறித்து கேட்டதற்கு ‘பணம் தருபவர்’. ‘எனது குழந்தைகளின் தந்தை’ என பெண்கள் கூறியுள்ளனர். இந்த விவரங்களை அதிகாரிகளும் பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த பகுதியில் வாழும் பெண்களுக்கு ஆடல், பாடல் பல ஆண்டுகளாக தொழிலாக இருந்து வருகிறது.
இந்த பகுதியில் இதுபோன்ற டஜன் கணக்கான குடும்பங்கள் உள்ளன. அவர்கள் அனைவரும் ரூப்சந்தை தங்களுடைய உறவினராக கருதி வருகின்றனர். ஆனால் ‘ரூப்சந்த் யார்?’ என்று விசாரித்ததில் ‘ரூப்சந்த் ஒரு ஆண் இல்லை’ என்றும், பாலியல் தொழில் மூலம் அவர்களுக்கு கிடைத்த பணத்தை ‘ரூப்சந்த்’ என பெயர் வைத்து அழைத்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் ‘ரூப்சந்த்’ என்ற பெயரை அப்பகுதி பெண்கள் கணவனாக அல்லது தந்தையாக கருத காரணம் இதுதான் என்றும் தெரியவந்தது.
- Sponsored content
Page 19 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்