ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்

+7
சிவனாசான்
T.N.Balasubramanian
shobana sahas
krishnaamma
Dr.சுந்தரராஜ் தயாளன்
ayyasamy ram
சிவா
11 posters

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty தேசியச் செய்திகள்

Post by சிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.


Last edited by சிவா on Fri Feb 10, 2023 2:24 am; edited 1 time in total


தேசியச் செய்திகள் - Page 17 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Sun Feb 05, 2023 3:02 pm

138 சூதாட்ட செயலிகளுக்குத் தடை: மத்திய அரசு


சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சீனாவின் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை அவசர நிலை அடிப்படையில் தடைசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கும் பணிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் துவக்கியுள்ளது.

மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன்பு 288 சீன செயலிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது. இந்த ஆய்வில் இந்திய மக்களின் தனிப்பட்ட தரவுகளை சீன செயலிகள் எடுத்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை முடக்கவும், தடை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Admin இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by Guest Sun Feb 05, 2023 3:13 pm

போதாது. சீனாவை எதிரியாக பார்த்து தடை செய்யாமல்,கொட்டிக் கிடக்கும் இந்தியாவில் பாவிக்கும் உலகளாவிய செயலிகளையும் தடை செய்ய வேண்டும்.
avatar
Guest
Guest


Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Mon Feb 06, 2023 9:01 pm

மேக் இன் இந்தியா அல்ல ஜோக் இன் இந்தியா; மத்திய அரசை விமர்சித்த முதல்வர்!




மேக் இன் இந்தியா அல்ல என்றும் ஜோக் இன் இந்தியா என்றும் மத்திய அரசை கடுமையாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் விமர்சனம் செய்துள்ளார்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமதி என்ற கட்சியை சமீபத்தில் பாரத ராஷ்டிய சமாதி கட்சி என்று பெயர் மாற்றம் செய்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தற்போது அண்டை மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையான தாக்கி பேசினார். பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஜோக் இன் இந்தியா என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது என்றும் பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்தது என்றும், மொத்தத்தில் இந்தியாவை 75 ஆண்டுகளில் 70 ஆண்டுகள் இந்த இரு கட்சிகளை ஆட்சி செய்துள்ளன என்றும் இதனால் தான் நாட்டில் அனைத்து பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேக் இன் இந்தியா பிரச்சாரம் ஒன்றும் சாதிக்கவில்லை என்றும் சீன பொருள்கள் தான் இந்தியாவில் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேக் இன் தி இந்தியா திட்டம் வெற்றி பெற்று இருந்தால் ஒவ்வொரு ஊரிலும் சைனா பஜார் எப்படி இருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Admin இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Mon Feb 06, 2023 9:03 pm

2 கிமீ தூரத்திற்கு தண்டவாளங்களை திருடிய மர்ம நபர்கள்: அதிர்ச்சி சம்பவம்!


பீகாரில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்டவாளத்தை திருடி சென்ற மர்ம நபர்களால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பீகாரில் உள்ள பந்தோல் ரயில் நிலையம் என்ற பகுதியில் இருந்து லோகத் என்ற பகுதி வரையிலான தண்டவாளங்கள் திருடு போயிருப்பதாக தெரியவந்துள்ளது. திருடு போன ரயில் தண்டவாளர்களின் இரும்புகளின் மதிப்பு இலட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பீகார் நகரில் கடந்த 19ஆம் தேதி அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் மொபைல் கோபுரம் ஒன்றையும் திருடி சென்றுள்ளதாகவும் தெரிகிறது. இந்த மொபைல் கோபுரம் திருடு போனதை விசாரிக்க அதிகாரிகள் வந்த போது தான் ரயில் தண்டவாளமும் திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது, இதனை அடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Tue Feb 07, 2023 5:12 pm

பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பாஜக உறுப்பினர் பெருமிதமாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல் : எம்.பி. கனிமொழி விளாசல்!!



டெல்லி : பெண்கள் உடன்கட்டை ஏறுவதை பெருமிதமாக பேசிய பாஜக உறுப்பினருக்கு மக்களவை எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, 'தமிழகம், கேரளா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழகத்தில் தேர்தல் ஏதும் இல்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டவில்லை. தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளனர்.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அரசுடன் மோதல் போக்கை கையாளுகின்றனர்.ஆளுநர்களுக்கு அரசியல் சாசனத்தையும் , கூட்டாட்சி முறையையும் கற்பிக்க வேண்டும். மாநிலங்களின் நலன், மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. நாட்டில் சுமார் 4 கோடி இளைஞர்கள் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை.ஒன்றிய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி செல்கிறது. சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் ஒன்றிய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு மிக மிக குறைவாக நிதி ஒதுக்குகிறது. தமிழின் பெருமையை பற்றி மட்டும் மோடி பேசுகிறார். ஆனால் சமஸ்கிருதத்திற்கே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. சமஸ்கிருதத்திற்கு ரூ.198.98 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் , தமிழுக்கு ரூ.11.86 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.4 ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ்-க்கு மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரை பணிகள் தொடங்கவில்லை.

அதற்கான நிதியையும் ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்த பாஜகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது?. 27 நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிந்துவிட்டன. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ன ஆனது?.தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கவே ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்கிறது.பெண்களுக்கு 33% ஒதுக்கீடு குறித்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?.பாஜக உறுப்பினர் ஜோஷி பெண்கள் உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்படவைக்கும் செயல். ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது.ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது,'என்றார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Fri Feb 10, 2023 2:21 am

சீக்கியர்கள் தாக்குதல் எதிரொலி சண்டிகர் - மொஹாலியில் பாதுகாப்பு



தேசியச் செய்திகள் - Page 17 Tamil_News_large_3238311.jpg?w=640&dpr=1

சண்டிகர், தண்டனைக் காலம் முடிந்தும் சிறையில் உள்ள சீக்கியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, பஞ்சாப் மாநிலம் சண்டிகர் - மொஹாலி எல்லையில் நடந்த பயங்கர தாக்குதலை அடுத்து, இங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாடு முழுதும் தண்டனைக் காலம் முடிந்த பின்பும் சிறையில் உள்ள சீக்கியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, 'குவாமி இன்சாப் ஏக்தா மோர்ச்சா' என்ற அமைப்பினர், ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள், தங்கள் கோரிக்கை தொடர்பாக, சண்டிகரில் உள்ள முதல்வர் பகவந்த் மான் வீட்டை நேற்று முன்தினம் முற்றுகையிட முயன்றனர். குதிரை மற்றும் டிராக்டர்களுடன் நுழைய முயன்ற இவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.

இதில் ஆத்திரம்அடைந்த போராட்டக்காரர்கள், கட்டை, கத்தி, வாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் போலீசார் மீது கொடூர தாக்குதல் நடத்தினர்; அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவத்தில், ஏழு போலீசார் உட்பட 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, சண்டிகர் - மொஹாலி தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Fri Feb 10, 2023 2:23 am

குஜராத் 'புல்லட்' ரயில் திட்டம் 'கோத்ரெஜ்' நிறுவன மனு தள்ளுபடி

மும்பை,-ஆமதாபாத் - மும்பை இடையிலான, 'புல்லட் ரயில்' திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்து, 'கோத்ரெஜ்' நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குஜராத்தின் ஆமதாபாத், மஹாராஷ்டிராவின் மும்பை இடையே, 508 கி.மீ., துாரத்திற்கு, புல்லட் ரயில் அமைக்கும் பணியை, என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., எனப்படும் தேசிய அதிவிரைவு ரயில் கழகம் செய்து வருகிறது. இதில், 21 கி.மீ., துாரத்துக்கான ரயில் பாதை பூமிக்கு அடியில் அமைய உள்ளது.

நிலப்பகுதியில் இருந்து பூமிக்குள் ரயில் நுழையும் இடம் மும்பையின் விக்ரோலி பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள நிலம், 'கோத்ரெஜ் அண்டு பாய்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்த நிலத்தை கையகப்படுத்த அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து வந்ததை அடுத்து, அங்கு புல்லட் ரயில் திட்டப் பணிகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கையகப்படுத்தும் நிலத்துக்கான இழப்பீடு தொகையாக, 264 கோடி ரூபாயை கோத்ரெஜ் நிறுவனத்துக்கு அளித்து கடந்த ஆண்டு செப்., மாதம் மஹாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த இழப்பீட்டில் முறைகேடு உள்ளதாக, கோத்ரெஜ் நிறுவனம், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் நலன் சார்ந்தது. இதன் இழப்பீட்டு விவகாரத்தில் எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை. இத்திட்டத்தில், கூட்டு நலனே மேலோங்கி இருக்கிறது. தனியார் நலனுக்கு இடமில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Sat Feb 11, 2023 5:26 pm

பாஜக ஆட்சிக்காலத்தில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- உள்துறை அமைச்சர் அமித்ஷா


)
பாஜக ஆட்சிக் காலத்தில் காஷ்மீர் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தெலுங்கான மாநிலம் ஐதராபாத்தில் இன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பயிற்சி முகாம் நடந்ததது.

இந்த நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்த உள்துறை அமைச்சர் பேசியதாவது: மத்தியில் பாஜக ஆட்சி பதவியேற்ற 8 ஆண்டு காலத்தில் ஜம்மு –காஷ்மீரில் மாநிலத்தில் பயங்கரவாத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு மா நிலங்களில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் இயங்கங்களில் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் நடைபெற்ற சோதனையில் ஏஜென்சியில், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் மீது நடவ்டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளர்.

மேலும்,பாஜக ஆட்சியில்தான் வலுவான ஜனனாயகம் அமைய பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.:


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Sat Feb 11, 2023 5:27 pm

அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஜீன்ஸ், குட்டைப்பாவாடை அணியக்கூடாது

:

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நர்சுகள் உட்பட அனைத்து ஊழியர்களும் ஜீன்ஸ் குட்டை பாவாடை உள்ளிட்ட ஆடைகளை அணியக்கூடாது என ஹரியானா மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஜீன்ஸ் குட்டை பாவாடை போன்றவை பணி ரீதியிலான ஆடை கிடையாது என்றும் அதேபோல் டீசர்ட் மற்றும் இறுக்கமான பேண்ட் ஆகியவற்றை அனுமதிக்க முடியாது என்றும் ஒழுக்கம் ஒற்றுமை மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நிலை நிறுத்த உரிய ஆடைகளை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் அணிந்து வரவேண்டும் என்றும் அப்போதுதான் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற முடியும் என்றும் ஹரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

அரசு மருத்துவர்களுக்கான இந்த புதிய ஆடை கட்டுப்பாடு அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் தொழில்நுட்பம் சமையலறை துப்புரவு பணியாளர்கள் ஆகிய துறையில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் என்றும் அனைவரும் சீருடை அணிந்து வரவேண்டும் என்றும் தூய்மையான உடை அணிந்து வர வேண்டும் என்றும் ஹரியானா அரசு தெரிவித்துள்ளது
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by சிவா Sat Feb 11, 2023 5:28 pm

பிரதமர் மோடி நாட்டை தவறாக வழி நடத்துகிறார். தெலுங்கானா எம்.எல்.ஏ கவிதா..!



பிரதமர் மோடி நாட்டை தவறாக வழி நடத்துகிறார் என்றும் இளைஞர்கள் அனைவரும் பிரதமரின் பேச்சை கேட்டு அவர் எத்தனை பொய் சொல்கிறார் என்று எண்ணிக் கொண்டே வாருங்கள் என்றும் தெலுங்கானா மாநில எம்எல்ஏ கவிதா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா எம்எல்ஏ கவிதா பாஜக மீண்டும் வெற்றி பெறாது என்று நம்புகிறேன் என்றும் தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை என்றும் பாஜக வீட்டுக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என்றும் புதிய முகத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒன்றரை மணி நேரம் பேசிய பிரதமர் அதானி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நாட்டை பிரதமர் மோடி தவறாக வழிநடத்துகிறார் என்றும் பிரதமரின் பேச்சைக் கேட்டு அவர் எத்தனை பொய் சொல்லுகிறார் என இளைஞர்கள் எண்ணிக்கொண்டே வாருங்கள் என்றும் அவர் பேசினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசியச் செய்திகள் - Page 17 Empty Re: தேசியச் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 20 Previous  1 ... 10 ... 16, 17, 18, 19, 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum