புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_m10சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 11:25 pm

சர்ச்சையான ஐஸ்வர்யா ராயின் நகைக்கடை விளம்பர படம்!

சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Aishwarya%20Rai%20racist%20picture%20long

சென்னை: நகைக்கடை விளம்பரத்தில் இனவெறியை தூண்டும் வகையில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குள்ளான அந்த விளம்பரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நகை அலங்காரத்தில் ஜொலிக்க, அவருக்கு அருகே ஒரு கறுப்பினக் குழந்தை குடையை உயர்த்திப் பிடித்தபடி நிற்பதுபோல் உள்ளது.

இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் இன வெறியை தூண்டும் வகையில் நடித்துள்ளதாகவும், குழந்தைத் தொழிலாளர் முறையை ஆதரிப்பதுபோல் நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக ஐஸ்வர்யா ராய்க்கு சமூக ஆர்வலர்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஐஸ்வர்யா உடனடியாக அந்த விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, இந்த விளம்பர படத்தை நீக்குவதாக கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.




சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 24, 2015 11:14 pm

காஷ்மீரில் சிறுமியை கற்பழித்து கொன்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை

வடக்குகாஷ்மீர் பகுதியில் குப்வாராவில் உள்ள பத்போரா லங்கேட் கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி 4 பேர் 8 வயது சிறுமியை ஒரு பழத்தோட்டத்திற்கு கடத்திச்சென்றனர். பின்னர் சிறுமியை 4 பேரும் கற்பழித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்போது பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சிறுமியை கற்பழித்து கொன்றதாக அதே கிராமத்தைச் சேர்ந்த சாதிக் மிர், அசார் அகமது மிர், மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மோச்சி ஜஹாங்கிர் அன்சாரி, ராஜஸ்தானைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.வழக்கை விசாரித்த குப்வாரா கோர்ட்டு நீதிபதி முகம்மது இப்ராகிம் வானி, சிறுமியை கற்பழித்து கொலை செய்த 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.



சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 12:14 am

திருமண விழாவில் நடனம் ஆட மறுத்த பெண் சுட்டுக்கொலை

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் நடனக்கலைஞர் பியூ (வயது 23). திருமண விழா போன்றவற்றின் போது நடைபெறும் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடுவார். இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றின் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடினார். அப்போது பார்வையாளர்கள் தங்களது தாய் மொழி பாடல் ஒன்றுக்கு அவரை நடனமாடும் படி கூறினர். அதனை பெண் நடனகலைஞர் ஏற்கமறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பார்வையாளர்களில் ஒருவரான பப்லு குமார் என்பவர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து பப்லு குமார் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.



சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 25, 2015 3:23 am

சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 103459460
-
தகவல் பகிர்வுகளுக்கு... சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 1571444738

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 25, 2015 9:18 pm

மலையேற்ற வீரர் மஸ்தான் பாபுவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

இந்தியாவை சேர்ந்த பிரபல மலையேற்ற வீரர் மல்லி மஸ்தான் பாபுவின் உடல் ஆந்திர பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக 100க்கும் அதிகமானோர் வந்திருந்தனர்.

கடந்த மாதம் அர்ஜெண்டினா மற்றும் சிலி பகுதிகளுக்கு இடையேயான உயர்ந்த மலை பகுதியில் ஏறுவதற்காக மேற்கொண்ட பயணத்தின்போது பாபு மரணம் அடைந்துள்ளார். ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த 40 வயது நிறைந்த மலையேற்ற வீரரான பாபுவின் உடலுக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் இறுதி மரியாதை அளித்தனர்.

அவரது மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று மல்லியின் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்த நாயுடு கூறியுள்ளார். அர்ஜெண்டினாவில் இருந்து மல்லியின் உடல் நேற்று டெல்லி வந்தடைந்தது. அதன்பின் ஏர் இந்தியா விமானத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. உடன் மல்லியின் சகோதரி தொரசனம்மா இருந்தார். அர்ஜெண்டினாவின் மலைகளில் பருவநிலை காரணமாக அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது.

உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட 7 கண்டங்களில் உள்ள ஏழு மலைகளில் ஏறி உச்சிக்கு சென்று சாதனை படைத்துள்ளார் பாபு. கடந்த மார்ச் இறுதியில் அர்ஜெண்டினாவுக்கு சென்ற அவர் காணாமல் போனார். அதன் பின்னர் அவர் மரணம் அடைந்தது தெரிய வந்தது. அவரது உடலை இந்தியாவிற்கு திரும்ப கொண்டு வர வெளியுறவு விவகார துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உதவிடும்படி நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த நாயுடு கேட்டு கொண்டார்.



சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 26, 2015 12:17 am

திருமணமான 2 ஆண்டுகளாக யுத்தக்களம்: கருப்புத்தோல் கணவன் தலையை சுத்தியலால் நசுக்கி கொன்ற இளம்பெண்

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்த பாருக் மாலிக்(22) என்பவருக்கு பர்ஸானா பானு(22) என்ற பெண்ணை கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

சல்மான்கான், அமீர்கான் போன்ற கணவர் வாய்க்க வேண்டும் என்று இளம்வயதில் மனக்கோட்டை கட்டிவந்த பர்ஸானாவுக்கு அம்ஜத்கானைப் போன்ற கருப்பு நிறம் கொண்ட பாருக் மாலிக் கணவராக வந்து வாய்த்தார். இதனால், கணவர் மீது வெறுப்பு வார்த்தைகளை நெருப்பாய் வாரி வீசிய பர்ஸானா, அவருடன் தாம்பத்தியம் தொடர்பான அனைத்தையும் தவிர்த்து விட்டார்.

'இரவு நேரம் பிறரைப்போலே என்னையும் கொல்லும், துணை இருந்தும் இல்லை என்று போனால் ஊரென்ன சொல்லும்?' என பாருக் பாடிய விரகப் பாடல்கள் பர்ஸானாவின் மனதை கரைக்கவில்லை. கணவரின் தொந்தரவு அதிகமாகும் வேளையில் அவரது நச்சரிப்பில் இருந்து தப்பிக்க தனது பெற்றோரின் வீட்டுக்கு அவர் சென்று விடுவது வழக்கம். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு வந்தது.

வழக்கம்போல் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தாய்வீட்டுக்கு சென்ற பர்ஸானா, பத்து நாட்களுக்கு முன்னர் கணவர் வீட்டுக்கு வந்தார். மீண்டும் இருவருக்கும் இடையில் சண்டை தொடங்கியது. கடந்த புதன்கிழமை சண்டை மும்முரம் அடைந்து அடிதடியில் முடிந்தது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை கணவருடன் பண்ணை வீட்டுக்கு சென்ற பர்ஸானா, அங்கிருந்த பெரிய சுத்தியலால் அடித்து, பாருக் மாலிக்கின் தலையை நசுக்கிக் கொன்றார். இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் விரைந்துவந்த போலீசார் பர்ஸானாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 27, 2015 2:00 am

ஐநா அமைதிப்படையில் இந்தியா முதலிடம்: பிரதமர் பெருமிதம்

ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய வானோலியில் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பான பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில் மோடி நிகழ்த்திய உரையில், "அண்மையில் நான் பிரான்ஸ் நாடு சென்றிருந்த போது, முதலாம் உலகப் போரில் மாண்டவர்களுக்கென்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவுச் சின்னத்துக்குச் சென்றேன். அதற்கு ஒரு சிறப்பான காரணமும் உண்டு.

நடப்பு ஆண்டு முதலாம் உலகப் போரின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் ஆண்டு என்பது ஒரு பக்கம், இது முதலாம் உலகப்போரில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் சாகசத்துக்கும் தியாகத்துக்கும் இது நூற்றாண்டாகத் திகழ்த்துகிறது. மேலும் சேவா பரமோ தர்ம என்ற உன்னதமான கோட்பாட்டை எப்படி நமது நாடு நடைமுறைப் படுத்தியது என்பதற்கும் இது ஒரு நூற்றாண்டுக் கால நிறைவு. 1914ம் ஆண்டு தொடங்கி 1918 வரை முதலாம் உலகப் போர் நடைபெற்றது; 15 லட்சம் இந்திய வீரர்கள் தங்கள் இன்னுயிரை இந்தப் போரில் தியாகம் செய்தார்கள் என்பது பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இந்தியப் போர் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக உயிர் துறக்கவில்லை. இந்தியாவுக்கு எந்த நாட்டின் மீதும் படை எடுக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை, எந்த நாட்டையும் ஆக்ரமிக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை. ஆனால் இந்தியர்கள் ஒரு ஆச்சரியமான சாகசத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த முதலாம் உலகப் போரின் போது கிட்டத்தட்ட நமது 74000 இந்தியர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தார்கள் என்பதும் கூட பல பேர்களுக்குத் தெரியாது. இவர்களில் சுமார் 9200 வீரர்களுக்கு சாகசத்துக்கான விருது அளிக்கப்பட்டது; அது மட்டுமல்ல, மேலும் 11 வீரர்களுக்கு மிகவும் உயர்ந்த விருதான விக்டோரியா க்ராஸ் விருது வழங்கப்பட்டது. இது உண்மையிலேயே நமக்கு கௌரவம் அளிக்கும் விஷயம்.

குறிப்பாக பிரான்ஸ் நாட்டில், இந்தப் போர் நடைபெற்ற போது, 1915ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 4700 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் வகையில் பிரான்ஸ் நாடு அவர்களுக்கு என பிரத்யேகமாக ஒரு நினைவுச் சின்னத்தை ஏற்படுத்தியது. நான் அங்கே என் அஞ்சலியைச் செலுத்தச் சென்றேன், நமது முன்னோர்களின் வீரத்துக்குத் தலைவணங்கச் சென்றேன்.

உலகின் அமைதிக்காகவும், நலனுக்காகவும், மகிழ்வுக்காகவும், இந்த நாடு சிந்திக்கிறது, செயல்படுகிறது, தேவை ஏற்பட்டால், உயிர்த் தியாகமும் செய்கிறது; இதைத் தான் இந்த நிகழ்வுகள் எல்லாம் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன. ஐ.நா.வின் அமைதிப்படையில் பங்கு பெறும் படையினரின் எண்ணிக்கையில் இந்தியா தான் முதலிடம் வகிக்கிறது. இது நமக்கெல்லாம் பெருமிதம் அளிக்கும் விஷயமல்லவா?" என்றார் பிரதமர் மோடி.



சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 10:43 pm

வெளிநாட்டு நிதிபெறும் 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து மத்திய அரசு நடவடிக்கை

வெளிநாட்டு நிதிபெறும் 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

வெளிநாட்டு நிதி பெறும் ‘கிரீன்பீஸ் இந்தியா’ என்ற தொண்டு நிறுவனத்தின் உரிமம், சமீபத்தில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வெளிநாட்டு நிதி பெறும் சுமார் 9 ஆயிரம் தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. 2009–10, 2010–11, 2011–12 ஆகிய நிதியாண்டுகளுக்கான ஆண்டு கணக்கை தாக்கல் செய்யுமாறு 10 ஆயிரத்து 343 தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீசு அனுப்பியது. அதற்கு 229 நிறுவனங்கள் மட்டுமே பதில் அனுப்பின. எவ்வித பதிலும் வராததால், 8 ஆயிரத்து 975 தொண்டு நிறுவனங்களின் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில், நோட்டீசு பட்டுவாடா செய்யப்படாமல் திரும்பி வந்த 510 நிறுவனங்களும் அடங்கும்.




சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 10:44 pm

சென்னை உள்பட 38 நகரங்கள் உயர் ஆபத்து நிலநடுக்கம் மண்டலங்களில் இருப்பதாக நிபுணர்கள் தகவல்

கடந்த 25-ந்தேதி நேபாள தலைநகர் காட்மாண்டில் இருந்து 80 கிலோமீட்டர் தூரம் உள்ள லாம்ஜங் பகுதியை மையமாக கொண்டு 7. 9 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. காட்மாண்டு, போக்ரா, கீர்த்திநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இது பேரழிவை ஏற்படுத்தியது. வீடுகள், ஓட்டல்கள், கோவில்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.

இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானவர்கள் பாலியானார்கள்.இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் ஏராளமான மனித உடல்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டும் என கூறப்படுகிறது.

7953 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நேபாளத்தில் மீட்பு பணி யில் இந்தியா உள்பட பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.உணவு, தண்ணீர் மற்றும் தங்குமிடத்திற்கு மிகுந்த தடுப்பாடு ஏற்பட்டு உள்ளது. நேபாளத்தில் இதற்கு முன்பு பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் தற்போது உலகின் மிக உயரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் அருகே நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

பூமியின் மிகப்பெரிய 2 ராட்சத நிலத்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று அதிவேகமாக மோதிக் கொண்டதால் ஏற்பட்டதாகும். இது 80 ஆண்டுகளில் ஏற்கனவே உருவான நிலநடுக்கங்களை விட மிகப்பெரியதாகும். இந்திய தரைஅமைப்பு ஆய்வில், தமிழ்நாட்டில் காவிரி, வைகை கரையோர பகுதிகள், கன்னியாகுமரி பகுதி போன்றவற்றில் பூகம்பம் வந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிய வந்துள்ளது.

இந்தியா முழுவதும் 38 நகரங்கள் நில நடுக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாத அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பூகோளஅமைப்பில் சமீப ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் நிலத்தட்டு வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இது வடஇந்தியாவில் பூகம்பத்தை ஏறபடுத்தி வருகிறது. 2005-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு சுமார் 80 ஆயிரம் பேர் பலியானார்கள்.

2004-ம் ஆண்டு 9.3 ரிக்டர் அளவு கோலுக்கு ஏற்பட்ட பூகம்பம் 14 நாடுகளின் நிலப்பரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன் பிறகு இந்தியாவில் ஸ்ரீநகர், கவுகாத்தி இரு நகரங்களும் பூகம்ப தாக்குதலின் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் 5-ம் நிலையில் இருப்பதாக கணித்துள்ளனர். டெல்லி நகரம் 4-ம் நிலையில் உள்ளது. சென்னை, மும்பை, கொல் கத்தா நகரங்கள் மூன்றாம் கட்ட அபாய நிலையில் இருக்கின்றன. பூமி நிலத் தட்டு எந்த நேரத்திலும் நகரலாம். அப்போது ஆபத்து ஏற்படலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.




சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 28, 2015 10:45 pm

சீனாவில் பிரதமர் மோடியின் உரைக்கு அதிகரிக்கும் வரவேற்பு

வரும் மே 16-ந்தேதி பிரதமர் மோடி சீனாவின் ஷாங்காய் நகரில் உரையாற்றுகிறார்.

சென்ற ஆண்டு அமெரிக்காவின் மேடிசன் சதுக்கத்தில் பிரம்மாண்ட உரையை ஆற்றிய மோடி இந்த ஆண்டும் சீனாவில் மிகப் பிரம்மாண்ட உரையை ஆற்றுகிறார்.

இதற்கு சீனாவிலுள்ள இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை, இந்நிகழ்ச்சிக்காக சீனாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சுமார் 45 ஆயிரம் இந்தியர்கள் பதிவு செய்துள்ளனர். அதில், 13 ஆயிரம் பேர் மாணவர்களாவர்.

பிரதமர் மோடியின் சீன சுற்றுப்பயணத்தின் போது சீன முதலீட்டாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் பற்றியும் வர்த்தக மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

அதேபோல், சிங்குவா பல்கலைக்கழகத்தில் சீன மாணவர்களிடையே உரையாற்றுகிறார் பிரதமர் மோடி. இந்திய தலைவர் ஒருவர் இதுபோன்ற பிரம்மாண்ட கூட்டத்தில் சீனாவில் உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.




சதவீதம் - தேசியச் செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 20 Previous  1, 2, 3 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக