ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_m10சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

5 posters

Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by ayyasamy ram Wed Apr 22, 2015 12:08 pm

நான் சமீபத்தில் 1955-56 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் ஒரு தேர்வில் மகாத்மா காந்தியைக் கொன்றது யார் என்ற ஒரு வார்த்தையில் பதிலளிக்க வேண்டிய கேள்வி வந்தது. அதன் விடையை பாடத்தில் படித்திருந்தாலும் உப்பிலிக்கு காந்தியைக் கொன்றவரின் பெயர் அச்சமயம் பார்த்து மறந்து தொலைத்தது.

ஆனால் வேறு விஷயம் அரைகுறையாக நினைவுக்கு வரவே, மகாத்மா காந்தியைக் கொன்றது ஒரு வயதான நபர் என எழுதித் தொலைத்தான். மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வினியோகிக்கும் சமயம் ஆசிரியர் ரங்காராவ் அன்றைக்கென்று மழமழவென சவரம் செய்து வந்திருந்தார். ஆகவே அவர் கோபத்துடனேயே இருப்பார் என்பது மாணவர்களது சரியான அனுமானம்.

அப்படிப்பட்டவர் “உப்பிலி எழுந்திரு” என கர்ஜிக்க, உப்பிலிக்கு சர்வநாடியும் ஒடுங்கிற்று. “மகாத்மா காந்தியைக் கொன்றது யார்” என அவனிடம் முழு வகுப்பில் எல்லோருக்கும் முன்னால் கேள்வி கேட்க, தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என தெளிந்த உப்பிலி, அசட்டுத் துணிச்சலுடன் “கோட்ஸே சார்” என்று கூற, “பின்னே ஏன் காந்தியைக் கொன்றவர் ஒரு வயதானவ்ர் என எழுதினாய்” என ரங்காராவ் கர்ஜித்தார்.

உப்பிலி பவ்யமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு, “அப்படித்தான் புத்தகத்தில் போட்டிருக்கு” என்று கூற, எல்லா மாணவர்களுக்கும் ஒரே திகைப்பு. உப்பிலி மேலும் பவ்யமாகக் கூறலானான். “சார் புத்தகத்தில் போட்டிருக்கு சார், ‘மகாத்மா காந்தியை 1948, ஜனவரி 30-ஆம் தேதி மாலை கோட்ஸே என்கிற கயவன் சுட்டுக் கொன்றான்’ என்று” கூறினான்.

அடுத்த நிமிடம் ரங்காராவ் சார் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தார். “அடே அசடு கயவன்னாக்க கிழவன்னு அர்த்தம் இல்லை, சரி உட்கார்” எனக்கூறிவிட்டு, கயவன் என்றால் கெட்டவன், தீயவன் என்றெல்லாம் விளக்கம் அளித்தார்.

இப்போது எனது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். கிழவனை சரியாக உச்சரிக்காமல் ஒரு பெரிய கோஷ்டியே கெயவன் என்றும், கியவன் என்றும், கிளவன் என்றும் கூறிவரும் நிலையில் அப்பாவி உப்பிலி மட்டும் கயவனும் கிழவனே என முடிவுக்கு வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

இதுவாவது பரவாயில்லை, ஹாஸ்யமாக போயிற்று. இருப்பினும் தவறான உச்சரிப்பால் உயிருக்கே கேடு வந்ததும் நடந்திருக்கிறது.

எங்கே பிராமணன் சீரியல் பகுதி-2, ஆறாம் எபிசோடில் சோ அவர்கள் இதை சுவையாக விளக்குகிறார். இது பற்றி நான் இட்ட பதிவிலிருந்து சில வரிகள்:

“உமாவுக்கு பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் பண்ணிப் பார்த்தார்களா என வேம்பு சாஸ்திரிகள் கேட்க, அவ்வாறு செய்வது சட்ட விரோதம் என நீலகண்டனும் அவர் சம்பந்தியும் கூறுகின்றனர். ஆணோ பெண்ணோ நல்லபடியாக பிறந்தால் போதும் என பர்வதம் கூறுகிறாள்.

நுணலும் தன் வாயால் கெடும் என்னும் கணக்காக வேம்பு சாஸ்திரிகள் எல்லாம் தெரிந்த சிரோன்மணி அசோக் உமாவுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை கூறலாமே எனக் கிண்டலாகக் கேட்டு, சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார். அவர் முறைப்படி மந்திரங்கள் உச்சரித்திருந்தால், அவற்றின் அதிர்வுகளை உமாவின் கருவிலுள்ள குழந்தை பெற்றிருக்கும், அதையும் இவர் உணர்ந்திருந்தால் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என வேம்பு சாஸ்திரிகளே கூறிடலாமே தான் எதற்கு என அசோக் வினயமாக பதிலளிக்கிறான். வேம்பு சாஸ்திரி திடுக்கிடுகிறார். தான் சொன்ன மந்திரங்களில் என்ன குறைவு என அவர் துணுக்குற்று கேட்க, எல்லோர் எதிரிலும் வேண்டாம், அவரிடம் தான் தனியாக கூறுவதாக அவன் தயங்க வேம்பு சாஸ்திரிகள் அவன் இப்போதே கூற வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறார். அவரது மந்திரங்களில் ஸ்வரப்பிழை இருந்ததாக அசோக் கூறுகிறான்.

“ஸ்வரப்பிழையா, இது என்ன கச்சேரியா” என சோவின் நண்பர் வியக்க, கச்சேரியாக அமையக்கூடாது என்பதுதான் சரி என சோ விளக்குகிறார். வேதத்தின் ஸ்வரத்தை மாற்றல், அவசரப்படல், உணர்ச்சியின்றி அதை உச்சரித்தல், சொல் மாற்றிக் கூறுதல், அனாவசியமாக தலையெல்லாம் ஆட்டி சேஷ்டைகள் செய்தல் முதலியவை அடங்கிய ஆறு குறைகளை சோ அவர்கள் பட்டியலிடுகிறார். இந்திரனைக் கொல்லும் ஆற்றல் பெற்ற பிள்ளை பெறும் வரம் வேண்டி தவம் இருந்த ஸ்வஷ்டா என்னும் தேவத்தச்சன், தனது கோரிக்கையை ஸ்வரப்பிழையுடன் கூறியதில் இந்திரனால் கொல்லப்படும் மகன் என உருமாறி, அவனுக்கு பிறக்கும் மகனை இந்திரன் கையால் சாவதாக வரும் கதையையும் சோ கூறுகிறார். தினசரி வாழ்க்கையிலும் இம்மாதிரி தொனி மாறிய வரவேற்புரைகள் விபரீத பொருளை தருவதையும் உதாரணத்துடன் விளக்குகிறார்”.

அந்த எபிசோடின் வீடியோவுக்கான சுட்டி இதோ. (இந்த எபிசோடே இரண்டு வீடியோக்களில் உள்ளன. முதல் வீடியோ சுமார் 11 நிமிடங்கள், இரண்டாவது வீடியோ சுமார் 10 நிமிடங்கள். அதன் லொகேஷன் திரைக்கு கீழ் பகுதியில் வருகிறது. இரண்டையும் பார்த்தல் நலம்).

அதே போல “தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளாய்” என்னும் பாடலை பல பாடகர்கள் தாயே யசோதா உந்தன் நாயர் குலத்துதித்த மாயன் கோபாலகிருஷ்ணன் என்றெல்லாம் சிதைத்துப் பாடியதில் ஒரு குழந்தை கிருஷ்ணர் ஒரு நாயர் என்று முடிவுக்கு வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான்.

அம்மாதிரியான பிழைகள் வரலாகாது என்பதற்காகவே வடமொழி சுலோகங்களை தமிழில் எழுத முயலும்போது சரியான உச்சரிப்புக்காக கிரந்த எழுத்துக்களை பாவிக்கிறேன் என ஒருவர் கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

விருப்பம் உள்ளவர்கள் பாவியுங்கள், மற்றவர்கள் விட்டுத் தொலையுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by ராஜா Wed Apr 22, 2015 1:19 pm

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 3838410834 ரசிக்கத்தகுந்த கட்டுரை , பிழையுடன் எழுதுவதும் உச்சரிப்பதும் எவ்வளவு பெரிய விளைவுகளை உருவாக்கும் என்பதையும் விளக்குகிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by M.M.SENTHIL Wed Apr 22, 2015 1:38 pm

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 103459460 சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by T.N.Balasubramanian Wed Apr 22, 2015 5:57 pm

2010-11முதல் நான் விரும்பி படித்த பதிவர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by T.N.Balasubramanian Wed Apr 22, 2015 6:26 pm

நேற்றைய airtel - T20 பாட்டு போட்டியில் , ஸ்பூர்த்தி என்ற சிறு பெண் பாடி முடித்ததும் ,
நடுவர் ஜேம்ஸ் வசந்தன் கூறியது ," உன்னுடைய மைனஸ் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை .
ஆனால் , உந்தன் உச்சரிப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . சொல் என்பதை எல்லோரும் ,
'ஸொல் 'என்றே உச்சரிப்பர் . பாட்டிலும் அப்பிடியேதான் இருந்தது . ஆனால் சிறு குழந்தை நீ .சரியாக
'சொல் 'வருகின்றமாதிரி உச்சரித்ததற்கே உனக்கு முழு மார்க் தரவேண்டும் .
அவள் பாடிய பாட்டு " மன்னவன் வந்தானடி "
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by விமந்தனி Wed Apr 22, 2015 7:10 pm

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 3838410834 சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் 103459460


சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by விமந்தனி Wed Apr 22, 2015 7:15 pm

T.N.Balasubramanian wrote:நேற்றைய airtel - T20 பாட்டு போட்டியில் , ஸ்பூர்த்தி    என்ற சிறு பெண் பாடி முடித்ததும் ,
நடுவர் ஜேம்ஸ் வசந்தன் கூறியது ," உன்னுடைய மைனஸ் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை .
ஆனால் , உந்தன் உச்சரிப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . சொல் என்பதை எல்லோரும் ,
'ஸொல் 'என்றே உச்சரிப்பர் . பாட்டிலும் அப்பிடியேதான் இருந்தது . ஆனால் சிறு குழந்தை நீ .சரியாக
'சொல் 'வருகின்றமாதிரி உச்சரித்ததற்கே உனக்கு முழு மார்க் தரவேண்டும் .
அவள் பாடிய பாட்டு " மன்னவன் வந்தானடி "
ரமணியன்
     
நிஜமாகவே எனக்கு நேற்று தான் தெரியும் சொல் - ஸொல் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம். ஜேம்ஸ் ன் விளக்கம் அருமை .


சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by T.N.Balasubramanian Wed Apr 22, 2015 7:23 pm

அப்பிடி சொல்லுங்க !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by ayyasamy ram Wed Apr 22, 2015 9:08 pm

T.N.Balasubramanian wrote:2010-11முதல் நான் விரும்பி படித்த பதிவர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1132202
-
தன்னம்பிக்கை உள்ள மனிதர்...
-
அவரது கேள்வி - பதில், பகுதிகளை நான் விரும்பிப் படிப்பதுண்டு...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் -  டோண்டு ராகவன் Empty Re: சரியான உச்சரிப்பின் முக்கியத்துவம் - டோண்டு ராகவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum