புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
61 Posts - 47%
heezulia
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
38 Posts - 29%
mohamed nizamudeen
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
5 Posts - 4%
Raji@123
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
3 Posts - 2%
prajai

kavithasankar
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
176 Posts - 41%

174 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_m10 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:26 am

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் 11008475_859684650771300_6440298623241212746_n

மலேசியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று பெட்டாலிங் ஜெயாவில் புதிய விவகாரம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில், உள்ள ஒரு தேவாலயத்தின் சுவற்றில் இருந்த சிலுவையை அகற்றும் படி, நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த சுமார் 50 குடியிருப்பாளர்கள் தேவாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

95 சதவிகித முஸ்லிம்கள் வசிக்கும் அந்த இடத்தில் கிறிஸ்தவர்கள் சிலுவையை வைக்கக் கூடாது என்று கூறி அவர்கள் தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்துள்ளனர்.

இந்நிலையில், தேவாலயத்திலிருந்து சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்றியது கிறிஸ்துவர்களை அவமதிக்கும் செயல் என சிலாங்கூர் மாநில மந்திரி புசார் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

“கிறிஸ்தவர்களின் புனித சின்னம் சிலுவை. அதை கட்டாயப்படுத்தி  அகற்ற வைப்பது, அவர்களை அவமதிக்கும் செயல்” என அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:27 am

சிலுவை அகற்றம்: ஆர்ப்பாட்டக்காரர்களில் காலிட்டின் சகோதரரும் ஒருவர்!

தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களில் தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரரும் ஒருவர்.

டத்தோ அப்துல்லா அபு பாக்கார் என்ற அவர் தாமான் லிண்டுகன் ஜெயா அம்னோ தொகுதித் தலைவராகவும் செயல்பட்டு வருகின்றார்.

தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதில் எந்த தவறும் இல்லை என்று கூறி வரும் அப்துல்லா, ஐஜிபி சகோதரர் என்பதற்காக தான் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தான் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்ததாகக் கூறப்படுவதையும் அப்துல்லா மறுத்துள்ளார்.

தேவாலய நிர்வாகத்தினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் சுமூகத் தீர்வை ஏற்படுத்தவே தான் முயன்றதாகவும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

அப்துல்லா ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில் செய்து வருவதாகவும் ‘தி மலாய் மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:28 am

சிலுவை விவகாரம்: “அது தேச நிந்தனை குற்றம் அல்ல” – காலிட்

தேவாலயத்தில் சிலுவையை அகற்றுவதற்காக செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார்.

“அந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த வகையான தேச நிந்தனையும் இல்லை. காரணம் அந்த ஆர்ப்பாட்டம் எந்த வகையிலும் மதத்தையோ அல்லது கிறிஸ்தவ நம்பிக்கைகளையோ இழிவு படுத்தவில்லை. அங்குள்ள குடியிருப்புவாசிகள் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள்” என்று காலிட் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஆர்ப்பாட்டத்தில் எந்த ஒரு வன்முறையும் இல்லை என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களில் தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பாக்காரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:29 am

சிலுவையை அகற்றப் போராடியவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும் – சாஹிட் ஹாமிடி உறுதி

தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய குழுவினர் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயலாம் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹாமிடி கூறியுள்ளார்.

இதுபோன்ற விவகாரங்களில் நான் இன வித்தியாசம் பார்ப்பவனல்ல. காவல் துறையினரும் இன வித்தியாசம் பார்க்கமாட்டார்கள். கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – எடுக்கப்படும் என உறுதியுடன் கூறியுள்ள சாஹிட் “மதம் குறித்து தீய எண்ணத்துடன் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயும்” என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இங்கு செர்டாங்கில் உள்துறை அமைச்சின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த போது, சாஹிட் பத்திரிக்கையாளர்களிடம் இதனைத் தெரிவித்தார் என ‘ஸ்டார்’ இணைய செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

ஆனால், சிலுவையை அகற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து கருத்துரைத்த முன்னதாக கருத்துரைத்த காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், அவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டம் பாயாது என்று கூறியிருந்தார்.

தற்போது இதற்கு நேர்மாறாக, உள்துறை அமைச்சர் கூறியிருக்கின்றார்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அம்னோ உறுப்பினர்களாக இருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு, “அம்னோ மற்ற மதங்களுக்கும் மதிப்பளிக்கின்றது. எனவே, மற்ற மதங்களை இழிவுபடுத்தும் அம்னோ உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். அவர்கள் அதற்குரிய பிரதிபலன்களை எதிர்நோக்க நேரிடும்” என்றும் அம்னோ உதவித் தலைவருமான சாஹிட் கூறியிருக்கின்றார்.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:31 am

“இன மோதலைத் தவிர்க்கவே சிலுவையை அகற்ற முனைந்தோம்” – ஐஜிபி சகோதரர் கூறுகிறார்

தாமான் மேடானில் சிலுவையை அகற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன மோதலைத் தவிர்க்கவே நாங்கள் அவ்வாறு செய்ய முனைந்தோம் என விளக்கம் கூறியிருக்கின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பில் பேசிய டத்தோ அப்துல்லா அபு பாக்கார், அந்த வட்டாரத்தில் இருந்த கிறிஸ்துவ தேவாலயத்தின் நடவடிக்கைகள் தங்களின் இஸ்லாமிய மதத்தின் மீது ஊடுருவி ஆதிக்கம் செலுத்தக் கூடும் என்ற அச்சத்தினாலேயே நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன எனக் கூறியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்த தேவாலயத்தில் பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

டத்தோ அப்துல்லா, காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்காரின் மூத்த சகோதரரும் ஆவார்.

தேவாலயத்தை அகற்றுவதற்குப் பதில் சிலுவையை அகற்றினோம்

“எங்கள் வட்டாரத்திலுள்ள இளைஞர்கள் அந்த தேவாலயத்தை முற்றாக அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், நாங்கள் சிலுவை சின்னத்தை மட்டும் அகற்றுவதற்கு அவர்களை ஒப்புக் கொள்ள வைத்தோம்” என்றும் அப்துல்லா தெரிவித்ததாக ஸ்டார் இணைய செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

“அந்த இளைஞர்கள், எங்களின் சமுதாயத்தில் மூத்தவர்கள் என்ற முறையில் எங்களை அணுகி பிரச்சனையைக் கூறி, தீர்வுகாணக் கேட்டுக் கொண்டார்கள். பிரச்சனை எல்லை மீறிப் போய்விடக் கூடாது என்பதற்காக நாங்களும் தலையிட்டுத் தீர்வு கண்டோம்” என்ற அப்துல்லா இன்று திங்கட்கிழமை பெட்டாலிங் ஜெயா மாநகரசபைத் தலைவரைச் (mayor) சந்தித்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் இந்த விளக்கத்தை வழங்கினார்.

இந்தப் பிரச்சனையை பெட்டாலிங் ஜெயா மாநகரசபைத் தலைவர் மாநில அளவில் கொண்டு சென்று விசாரிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும், அந்த தேவாலயம் அங்கு இடம் பெற்றிருக்க அவர்கள் முன் அனுமதி பெற்றிருந்தார்களா என்பது குறித்து ஆராயவிருப்பதாகவும் அப்துல்லா மேலும் தெரிவித்தார்.

“மேடம் விக்டோரியா என்ற தேவாலயத்தின் பிரதிநிதியையும் மற்றவர்களையும் நாங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது சந்தித்து எந்தவிதப் பிரச்சனையும் இன்றி தீர்வு கண்டோம். அவர்கள் எந்தவித கட்டுப்பாடும் இன்றி சிலுவை சின்னத்தை அகற்ற ஒப்புக் கொண்டனர். பிரச்சனையை இளைஞர்களின் கைகளில் விட்டிருந்தால், நிலைமை மோசமாகியிருக்கும். எங்களின் அணுகுமுறையால் இனமோதலை மிகவும் சொற்ப அளவில் குறைப்பதில் வெற்றி பெற்றோம்” என்றும் அப்துல்லா கூறியுள்ளார்.

அரசியல் நோக்க நடவடிக்கை அல்ல!

தாமான் லிண்டுங்கான் ஜெயா அம்னோ கிளையின் தலைவருமான அப்துல்லா, எதிர்க்கட்சிகள் குறை கூறுவதைப் போன்று இது அரசியல் நோக்கத்தைக் கொண்டதல்ல என்றும் விளக்கினார்.

“எங்களில் சிலர் அம்னோ உறுப்பினர்களாக இருக்கலாம். ஆனால் இது எங்களின் முஸ்லீம் சமூகத்திற்கும் தேவாலயத்திற்கும் இடையில் உள்ள பிரச்சனைதான். நாங்கள் இந்த பகுதியில் பல வருடங்களாக வாழ்ந்து வருகின்றோம். இந்தப் பகுதியில் இனங்களுக்கிடையில் மிகவும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகின்றது என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். அதனால்தான் இதில் தலையிட்டோம்” என்றும் அப்துல்லா, பலத்த சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள நேற்றைய சம்பவம் குறித்து விளக்கம் தந்துள்ளார்.

தனது சகோதரரான ஐஜிபி இந்த சம்பவம் குறித்து தன்னை அழைத்ததாகவும் அவரிடம் நடந்த உண்மையான நிலவரங்களை விவரமாகத் தெரிவித்துள்ளோம் என்றும் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பில் தேச நிந்தனைச் சட்டம் பாயாது என காவல் துறைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறியுள்ள வேளையில், உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடியோ, மதம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றார்.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:31 am

சட்டத்தை மீறியிருந்தால் பாகுபாடின்றி நடவடிக்கை – காலிட் திட்டவட்டம்

தாமான் மேடானில் தேவாலயத்தில் இருந்த சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில், சட்டம் மீறப்பட்டிருந்தால், அது தன் சகோதரராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

காவல்துறை இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டத்தை மீறியிருப்பதாகத் தெரிந்தால், பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது சகோதரர் அப்துல்லா அபு பக்கர் இந்த விவகாரத்தில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை கட்டாயப்படுத்தி அகற்ற வைத்த முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு காலிட் அபு பக்காரின் மூத்த சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கர் தலைமை வகித்தார் என நேற்று பல்வேறு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:33 am

சாலைகளில் ‘குறுக்கு சந்திப்புகளையும்’ அகற்றுங்கள் – வேள்பாரி கருத்து

தாமான் மேடானில் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மஇகா வியூக இயக்குநர் எஸ்.வேள்பாரி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சிலுவை இருப்பது இஸ்லாமியர்களுக்கு இடையூறாக இருக்குமானால், சாலைகளில் குறுக்கு சந்திப்புகளையும் (Cross junctions) வளைவுகளாக (roundabouts) பொதுபணித்துறை மாற்ற வேண்டிய நிலை வரும் என்றும் வேள்பாரி கூறியுள்ளார்.

அதே போல், பள்ளிகளில் தங்களது குழந்தைகளுக்கு என்றுமே ‘+’ கூட்டல் குறியீட்டைக் கற்றுத் தரக்கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என வேள்பாரி குறிப்பிட்டுள்ளார்.

“அவர்களின் குழந்தைகளுக்கு கழித்தல், பெருக்கல், வகுத்தல் மட்டுமே கற்றுத்தர வேண்டும். இல்லையென்றால், கூட்டலுக்கு பதிலாக வேறு ஏதாவது ஒரு மாற்றுக் குறியீடு ஒன்றை தான் தேட வேண்டும். அதே போல், ஆங்கிலத்தில் ‘t’ -க்கு பதிலாக அவர்கள் குழந்தைகளுக்கு ‘T’ தான் கற்றுக் கொடுக்க வேண்டும். காரணம் ‘t’ சிலுவை குறியீட்டை நினைவு படுத்தும்” என்று வேள்பாரி மலேசியாகினிக்கு அளித்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

குறுகிய மனப்பான்மை

எல்லா முஸ்லிம்களையும் தான் சாடவில்லை என்று கூறியுள்ள வேள்பாரி, தான் குறிப்பிடுவது குறுகிய மனப்பான்மை கொண்டவர்களை மட்டுமே என்று விளக்கமளித்துள்ளார்.

“மற்ற மதங்களின் சின்னங்கள் இருப்பதால் தங்களது புனிதம் கெட்டுவிடும் என்று எல்லா முஸ்லிம்களும் நினைப்பதில்லை என நம்புகின்றேன். தமிழில் ஒரு பழமொழி உண்டு. பயப்படுபவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் பேயாகத் தெரியும் என்பார்கள். இப்படி தான் சிலரின் மனப்போக்கு உள்ளது ” என்றும் வேள்பாரி கூறியுள்ளார்.

ஐஜிபி சொல்வது தவறு

மலேசியாவில் எல்லா மதங்களையும், இனங்களையும் ஏற்றுக் கொண்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்று கூறப்படுவதற்கு நேர்மாறாக இந்த சிலுவை அகற்றும் ஆர்ப்பாட்டம் உள்ளது என்றும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது காரணம் அவர்கள் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளைத் தொடவில்லை என்று ஐஜிபி (தேசிய காவல் படைத் தலைவர்) காலிட் அபு பக்கர் கூறுகின்றார். ஆனால் சிலுவை என்பது கிறித்தவர்களின் நம்பிக்கைகளில் ஒன்று. அது கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகளில் தொடர்புடையது இல்லை என்ற பட்சத்தில் எதற்காக அதை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும்?” என்றும் வேள்பாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை மிக கவனமாக செயல்பட்டு இரு தரப்பிலும் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது எந்த ஒரு அச்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேள்பாரி தெரிவித்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா தாமான் மேடானில் நேற்று முன்தினம் தேவாலயம் ஒன்றின் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த சிலுவை தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 50 முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேவாலய நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி சிலுவையை அகற்ற வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:34 am

பிரதமர் எச்சரிக்கை

க்க்சொப்ப் தாமான் மேடான் தேவாலயத்தில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பிதமர் நஜிப் கண்டித்ததோடு போலீஸ் அந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யும் என்று கூறினார்.

சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட தேசநிந்தனைச் சட்டம் 1948 ஐ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறினர் என்று கருதப்பட்டால் அவர்கள் விசாரணைக்கு ஆளாவார்கள் என்று அவர் கூறினார்.

“தேசநிந்தனைச் சட்டம் இனங்களுக்கிடையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதோடு அனைத்து சமயங்களையும் இனங்களையும் பாதுகாப்பதற்காகும்”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

மக்கள் சட்டத்திற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதோடு மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளவாறு அனைத்து சமயங்களையும் அவற்றின் நடைமுறைகளையும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மேலும் கூறினார்.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:36 am

தொழுகை இடமாக செயல்பட தேவாலயத்திடம் அனுமதி இல்லை

ஆர்ப்பாட்டத்துக்கு இலக்கான தேவாலயம் அது வழிபாட்டு இல்லமாக செயல்பட அனுமதி பெற்றிருக்கவில்லையாம். கடைவீட்டைத் தொழுகை இடமாக மாற்ற அனுமதி கேட்டு அது இதுவரை விண்ணப்பம் செய்யவில்லையாம்.

ஒரு கடைவீட்டை வழிபாட்டு இல்லமாக மாற்ற நினைத்தால் அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என பிஜே மாநகராண்மைக் கழக(எம்பிபிஜே) பொது உறவு அதிகாரி சைனுன் ஜக்கரியா கூறினார்.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 22, 2015 1:37 am

தேவாலய-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஜி-25 கண்டித்தது

மலாய் மேன்மக்களைக் கொண்ட அமைப்பு (ஜி25), ஒரு தேவாலயக் கட்டிடத்திலிருந்து சிலுவையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத் தவறினால், அது சமுதாயத்தில் உள்ள சமயத் தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைவதுடன் மற்ற சமயத்தவரின் உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கலாம் எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்றும் அவர்கள் நம்பத் தொடங்கி விடுவார்கள்.

“அதுவே, மலேசியாவில் இப்போது இன இணக்கமும் சமய சுதந்திரமும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதற்குச் சான்றாதாரமாகவும் அமைந்து விடும்”, என ஜி25 ஒர் அறிக்கையில் தெரிவித்தது.

“கேளிக்கை நிகழ்ச்சிகள் தொடர்பில் கேள்விக்குரிய வழிகாட்டும் விதிகளை ஜாகிம் வெளியிட்டுள்ள வேளையில் இந்த அவப்பேறான சம்பவமும் நிகழ்ந்திருப்பது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை உண்டுபண்ணலாம். அது அச்சத்தைக் கொடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சுற்றுப்பயணிகளையும் விரட்டி அடித்து விடலாம்”, என்று அது எச்சரித்தது.

 மலேசியாவில் கட்டாயப்படுத்தி தேவாலயத்தின் சிலுவை அகற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக