புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 12:36 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:43 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 4:57 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 4:53 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:52 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 4:46 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 4:23 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 4:11 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 10:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 10:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 9:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 8:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 5:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
156 Posts - 79%
heezulia
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
prajai
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
Pampu
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
321 Posts - 78%
heezulia
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_m10முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 12:24 am

''இந்தாப்பா மேஸ்திரி... அங்கே கல் எடுத்து போடறாரே... யார் அது?'' என்று கேட்டான் சதுர்வேதி.

காலை, 10:00 மணிக்கே கட்டட வேலை சூடு பிடித்திருந்தது. காலம் கட்டி, பில்லர்கள் எழுப்பி, முதல் தளம் போட்டு முடித்திருக்க, சுவர் எழுப்பும் வேலையில் மேஸ்திரி, சித்தாள்கள் மும்முரமாக இருந்தனர். அடுத்த தளம் எழுப்புவதற்காக, சிலர் கம்பி கட்டியபடி இருந்தனர். மொத்தம், ஆறு வீடுகள் கொண்ட அடுக்ககம். எல்லாமே ஒப்பந்தமாகி விட்டது.

இன்னும் சில மாதங்களில் முடித்து, உரிமையாளர்களிடம் சாவி கொடுக்க வேண்டியது தான் பாக்கி.
காரில் சைட்டுக்கு வந்திருந்தான், பில்டர் சதுர்வேதி. 30 வயதிருக்கும்; டிப்ளமா இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து, பில்டர் ஒருவரிடம் தொழில் பழகி, இப்போது தனியாக, 'சதுர் பில்டர்ஸ்' துவங்கி, வெற்றிகரமாக நடத்தி வருகிறான்.

அதிகம் ஒத்துக் கொள்வதில்லை. நாலு ப்ளாட் அல்லது ஆறு ப்ளாட் கொண்ட அதிகபட்சம் மூன்று அடுக்குகளோடு முடித்து, சொன்ன தேதியில் தரம் குறையாமல் கட்டிக் கொடுப்பதால், அவனுக்கு நல்ல பெயர். அந்த நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறையில், பில்டிங் சம்பந்தமான எந்த வேலையாக இருந்தாலும், ரொம்ப கவனமாக இருந்தான்.

கட்டட வேலையை பார்வையிட்டவனின் பார்வையை, ஒரு காட்சி உறுத்தியது. 50 வயதுக்கும் மேற்பட்ட ஒரு மனிதர், தட்டுத்தடுமாறி வேலை செய்தபடி இருந்தார்.

அவரைப் பார்த்தாலே, இந்த வேலைக்கு அவர் புதுசுன்னு தெரிஞ்சது. 'இப்படி வேலை தெரியாத ஆளை வச்சு எப்படி வேலையை சீக்கிரம் முடிக்கிறது...' என்று நினைத்த சதுர்வேதி, ''மேஸ்திரி... அந்த ஆளு யாரு... உனக்கு வேண்டப்பட்ட ஆளா... கல்லை எடுக்கக் கூட தடுமாறுறாரே... இந்த மாதிரி ஆட்களை வச்சா, எப்படி வேலை சீக்கிரம் முடியும்...'' என்று கடிந்து கொண்டான்.

''இல்ல சார்... ஆட்களை ஏத்திட்டு வர அனுப்பிச்ச வண்டிக்காரன், ஆள் குறையுதுன்னு இவரையும் கூட்டிட்டு வந்துட்டான். இவரப் பார்த்ததுமே, இவருக்கு இந்த வேலை சரி வராதுன்னு சந்தேகம் வந்துச்சு. ஆனா, வண்டிக்காரன் தான், நல்ல அனுபவம் உள்ளவர்ன்னு சொன்னான்,''என்றார்.

''இந்த நொண்டி சமாதானமெல்லாம் எனக்கு பிடிக்காது; கூப்பிடு அவரை,'' என்றான்.
அடுத்த நொடி, கலவர முகத்தோடு வந்த அந்த மனிதரைப் பார்த்ததும், அதிர்ந்த சதுர்வேதி, ''ஐயா... நீங்களா?''என்றான் அதிர்ச்சியுடன்!
''சார்... இவரு...''என்று இழுத்தான் மேஸ்திரி.
''என் தெய்வம்யா,'' என்றான் உணர்ச்சி பொங்க சதுர்வேதி.

வேலை ஆள் டீ வாங்கி வர, அதை ஆற்றிக் கொடுத்தான் சதுர்வேதி. புங்கை மர நிழலில் நின்று, ஊதி ஊதி குடித்தார். அவர் குடித்த வேகமே, அவர் பசியை சொன்னது.

''தம்பி... உண்மையிலேயே எனக்கு உங்கள அடையாளம் தெரியல மன்னிச்சுடுங்க,'' என்றார்.
''பரவாயில்லங்கய்யா... என்னை உங்களுக்கு தெரியலன்னாலும், உங்கள எனக்கு தெரியுமே... நானும் பழவூரைச் சேர்ந்தவந்தான்; எங்க அப்பா உங்க வீட்ல தான் டிரைவரா வேலை பாத்தார்,'' என்றான் சதுர்வேதி.

''ஓ... இப்ப நினைவுக்கு வருது. அண்ணாமலை மகனா நீ... விசுவாசமான டிரைவர்ய்யா உங்க அப்பா. உன்ன இப்படி பெரிய ஆளா பாக்கும் போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,'' என்றார்.

''ஆனா, எனக்கு வேதனையா இருக்கே... எவ்வளவு பெரிய ஆளு நீங்க; திரும்பின பக்கமெல்லாம் நிலபுலன், தோப்புகள்... அரண்மனை மாதிரி வீடு; ஆள் அம்பு... நீங்க போயி கட்டட வேலைக்கு வந்திருக்கீங்களே...'' என்றான் வேதனையுடன்!

''அதையெல்லாம் நினைவுபடுத்தி, என்னை இங்கிருந்து துரத்திடாதேப்பா. பணக்கார ஆறுமுகம் எப்பவோ செத்துட்டான்; உன் முன்னாடி நிற்கிற ஆறுமுகம் வேற,'' என்றவர், ''ஆளுங்கெல்லாம் நம்மையே பாக்கறாங்கப்பா... நான் உனக்கு வேண்டப்பட்டவன்னு தெரிஞ்சா, என்னை வேலை வாங்க சங்கோஜப்படுவாங்க; நான் போறேன் தம்பி,'' என்றார்.

''ஐயா... நீங்க வேலை எல்லாம் செய்ய வேணாம்; முதல்ல என் வண்டில ஏறுங்க,'' என்றான்.
''தம்பி...'' என தயங்கியவரை, வற்புறுத்தி காரில் ஏற்றி தன் அலுவலகத்திற்கு அழைத்து வந்தான்.

''அந்த சீட்ல போய் உட்காருங்க,'' என்று தன் இருக்கையை காட்டினான். அவர் தயங்கவே, அவரை கட்டாயப்படுத்தி அமர வைத்தவன், ''இனிமே நீங்க தான் இந்த நிறுவனத்துக்கு தலைவர். இந்த ஆபீஸ் உங்களோடது; நீங்க எந்த வேலையும் செய்யவோ, எங்கும் அலையவோ வேண்டாம். நீங்க பழைய ஆறுமுகம் ஐயாவா, கம்பீரமா இருக்கணும்,'' என்றான்.
இதைக் கேட்டதும் அழுது விட்டார்.

''என்னா தம்பி... பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட... நானாவது முதலாளியாவதாவது... உனக்கு நான் என்ன பெருசா செஞ்சிட்டேன்னு இப்படி ஒரு பதவியில உட்கார வைக்கிற... அன்பால் செய்றியா, அனுதாபத்தால் செய்றியான்னு தெரியல. வாழத் தெரியாதவன் தம்பி நான்; இல்லன்னா அத்தனை சொத்துக்களையும், திரும்பிப் பாக்கறதுக்குள்ள தொலைச்சுட்டு நிப்பேனா...
''கட்டிக் காப்பாத்துவேன்னு பெரியவங்க வச்சுட்டு போனத காப்பாத்த முடியல; ஊரார் என்னை திட்டியிருந்தாக் கூட பரவாயில்ல; ஆனா, எல்லாரும் எனக்காக பரிதாபப்பட்டத தான் தாங்க முடியல. அதனால தான், வீட்டை விட்டு வந்துட்டேன். என்னைப் போய் முதலாளி, தலைவர்ன்னெல்லாம் சொல்றியே வேணாம்பா,'' என்று சொல்லி எழுந்தவர், ''நான் வேறெங்காவது போறேன்... ஒரு உதவி செய்; என்னை பாத்ததா தெரிஞ்சவங்க யாருக்கும் சொல்லிடாதே,'' என்று கிளம்பியவரை தடுத்தான்.

''அவசரப்படாதீங்க... முதல்ல ரெண்டு நாள் ஓய்வெடுங்க; அப்புறமா ஒரு முடிவுக்கு வருவோம்,'' என்றான்.
அன்று இரவு, சதுர்வேதியிடம் மனம் திறந்து பேசினார் ஆறுமுகம்.

''உங்க அப்பா சொல்வாரு... 'பிள்ளைங்களுக்காக சொத்து சேத்து வைக்க வேண்டிய அவசியமில்ல; அவங்களுக்கு நல்ல கல்வியக் கொடுத்து, திறமைசாலியாய் வளத்தாலே போதும்; எதிர்காலத்தில தனக்கு வேண்டியதை, அவனே சம்பாதிச்சுக்குவான். பையன் திறமைசாலியா இல்லாட்டா மலையளவு சொத்தையும் சீக்கிரமா அழிச்சுடுவான்'ன்னு சொல்வார். என் விஷயத்தில அது சரியா போச்சு.

''ஒரே பிள்ளைன்னு என்னை ரொம்ப செல்லமா வளத்தாங்க. ஒரு வேலையும் சொல்லித் தரல; செய்யவும் விடல. வெளியூர்ல காலேஜ் முடிச்சுட்டு வந்ததுமே, கல்யாணம் செய்து வச்சுட்டாங்க. பொண்டாட்டி வந்து பிள்ளை பிறந்தும் கூட பொறுப்பு இல்லாம, 'நமக்கு இருக்கும் சொத்துக்கு நாம ஏன் வேலை செய்யணும்'ன்னு நினைச்சு, கார்ல ஊரூராய் ஜாலியா சுத்திக்கிட்டு இருப்பேன்.

thodarum..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 20, 2015 12:29 am

'சொத்து நம்மள காப்பாத்தணும்ன்னா, முதல்ல சொத்தை நாம காப்பாத்தணும். பெரியவங்க கஷ்டப்பட்டு சம்பாதித்து கொடுத்ததை தக்க வைக்கணும்ன்னா, நாமளும் பாடுபட்டு உழைச்சு, அதில் கிடைக்கிற பலனை அனுபவிச்சு, மத்தவங்களுக்கும் கொடுத்து, நிரவலா வாழ்க்கையை கொண்டு போயிருந்தா, இந்த நிலை எனக்கு வந்திருக்காது.

''உழைக்காம, பெருக்காம, இருக்கிறதையே எடுத்து செலவழிச்சா எத்தனை நாளைக்கு வரும்... விதை நெல்லையே பொங்கி தின்னுட்டா, விதைப்பு ஏது, அறுவடை ஏது? அந்தக் கதையா போச்சு என் கதை. சிரிச்சு பேசினவங்களையெல்லாம் நல்லவங்கன்னும், கடிஞ்சு சொன்னவங்கள எல்லாம் எதிரிங்கன்னும் தப்பு கணக்கு போட்டுட்டேன். சரி விடு... ஏதோ என் பிள்ளை மாதிரி உன்கிட்ட என் மனசுல உள்ளத கொட்டிட்டேன்.
''ஆனா, ஒண்ணு தம்பி... இப்பவாவது தெளிவு வந்துதேன்னு ஒரு பக்கம் சந்தோஷம். உழைச்சு, நாலு காசு சம்பாதிச்சு, புத்தியைக் கொண்டு மேலே வந்துடணும்ன்னு, ஒரு வைராக்கியத்துல தான் இப்படி வீட்டுக்கு தெரியாம வந்துட்டேன். வந்த இடத்துல, உன் கண்ணுல நான் பட்டு, என்னை போய் முதலாளி நாற்காலியில உட்கார வச்சுட்டியே...'' என்று வேதனைப்பட்டார்.

''அதுக்கு நீங்க தகுதியானவர் தான். உங்க படிப்பு, அறிவு இரண்டையும் சேர்த்திங்கன்னா விட்டதை பிடிச்சிடலாம்,'' என்றான் சதுர்வேதி.

''சின்ன வயசுன்னாலும், உனக்கு பெரிய மனசு தம்பி. ஆனா, நீ சொன்ன வார்த்தைகள் எனக்கு ஊக்கத்தை கொடுக்குது. சென்னைக்கு வந்தவுடனே, நானும் அப்படித்தான் எங்காவது படிப்புக்கேத்த வேலை கிடைக்குமான்னு தேடினேன்.

''ஆபீஸ் வேலைக்கான வயசு அதிகமாயிட்டது ஒரு பக்கம்ன்னா, தொடர்ந்து தேட முடியாம பசி இன்னொரு பக்கம் என் தேடல முடக்கிடுச்சு. கையை உடைச்சாவது கஞ்சி குடிக்கணுமேன்னு தான், பிளாட்பாரத்துல கூலி வேலைக்குப் போக காத்திருந்தவங்களோடு சேர்ந்து வேன்ல ஏறிட்டேன். ஏதோ கொஞ்சம் புண்ணியம் செஞ்சிருக்கேன் போலிருக்கு; அதான் உன்கிட்ட வந்துட்டேன்,'' என்றார்.

'எங்கிட்டேயே இருந்திருங்க,'' என்றான் சதுர்வேதி.
''நான் உன்னோடு இருக்கணும்ன்னா ஒரு நிபந்தனை...''
''சொல்லுங்க...''
''என் முன்னேற்றத்திற்கு நீ வழிகாட்டியா இருக்கணும்,'' என்றார்.
''என்ன செய்யணும்ன்னு சொல்லுங்க?'' என்றான் சதுர்வேதி.

''வேலைய அடிமட்டத்திலிருந்து சொல்லிக் தா. கல்லு, மண்ணு, கம்பி, சிமென்டுன்னு ஒரு வாத்தியார், மாணவனுக்கு கத்துத் தர்றது போல, ஒவ்வொண்ணா கத்துக் கொடு. ஒரு காலத்தில, நான் வாழ்ந்த வாழ்க்கைய எண்ணி, எந்த சலுகையும் காட்டாதே; நானும் உன்கிட்ட எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன். பயிற்சி கொடு; பிடிச்சிட்டு மேலே வந்தேன்னா, என்னை பார்ட்னரா சேர்த்துக்க. இல்லன்னா செய்யற வேலைக்கு மட்டும் சம்பளமா கொடு. என்ன சொல்ற,'' என்று சொல்லி, நேருக்கு நேர் பார்த்தார்.

'' உங்க நேர்மையான பேச்சு எனக்கு பிடிச்சுருக்கு. விழறது தப்பில்லே; விழுந்த பின் எழாமல் இருக்கறது தான் தப்புன்னு சொல்வாங்க. நீங்க எழுந்துக்க முயற்சிக்கிறீங்க. இனிமே, உங்களை நான் அனுதாபத்தோடு பாக்க மாட்டேன். என் நண்பரா பாத்து, எனக்கு தெரிஞ்சதை சொல்லித் தர்றேன். பிடிச்சுகிட்டு மேலே வர்றது, உங்க சாமர்த்தியம்,'' என்றான் சதுர்வேதி.

அந்த நொடியிலிருந்து அவன் சொல்லிக் கொடுக்க, அவர் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.
வேலை நடக்கும் இடத்திற்கு போனால், சதுர்வேதி ஒரு பெரியவருக்கு கட்டளை இட்டுக் கொண்டிருப்பான். அவன் இழுத்த வேகத்துக்கு, அவரும் சுறுசுறுப்பாக ஓடியபடி இருப்பார்.

எப்படியும் மேலே வந்துவிட வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு. அவரை எப்படியும் கை தூக்கி விட வேண்டுமென்ற எண்ணம் சதுர்வேதிக்கு!

முயன்றால் முடியாமலா போகும்? முடியும்!

துர்கா பிரசாத்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Apr 20, 2015 12:33 am

சொத்து இருந்து என்ன பயன். புத்தி வேண்டுமே...

அருமையான கதை அம்மா முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! 3838410834 முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! 3838410834 முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! 3838410834
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 2:18 pm

முடிவிலிருந்து ஒரு ஆரம்பம்! 103459460

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக