ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜில் டிப்ஸ்.......

Go down

ஜில் டிப்ஸ்....... Empty ஜில் டிப்ஸ்.......

Post by krishnaamma Mon 20 Apr 2015 - 0:10

ஐஸ்கிரீமை கடைகளில் மட்டும் தான் சாப்பிட முடியுமா? இதோ வீட்டிலேயே தயார் செய்ய...
சுண்டக் காய்ச்சிய பாலில், 5 பேரீச்சம் பழம், 2 துண்டு தர்பூசணி, 2 வாழைப்பழம், 4 முந்திரிப்பருப்பு போட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் மற்றும் ஐந்து செர்ரி பழங்களை நறுக்கிப் போட்டு, டைமன்ட் கல்கண்டு சிறிதளவு சேர்த்து, சிறு சிறு கோப்பைகளில் ஊற்றி, ப்ரிசரீல் வைத்து விடுங்கள்; சத்தான ப்ரூட் ஐஸ்கிரீம் தயார்.
ஐஸ்கிரீமை எடுத்து பரிமாறும் போது, ஸ்பூனை, அடிக்கடி தண்ணீரில் முக்குங்கள். எளிதாக ஐஸ்கிரீமை எடுக்க முடியும்.
ஐஸ்கிரீம் கெட்டியாகும் போது, இனிப்புதன்மை குறைந்து விடும். அதனால், முதலிலே அதிகமான இனிப்பை சேர்த்து விடுங்கள்.
பாதி அளவு கெட்டியாகிய ஐஸ்கிரீமை வெளியே எடுத்து, 'போர்க்' மூலம் நன்றாக கிளறி, மீண்டும் ப்ரிஜ்ஜில் வையுங்கள்; விரைவாக செட்டாகி விடும்.

ஜிகர்தண்டா!

தேவையான பொருட்கள்: பாதாம் பிசின் - ஒரு தேக்கரண்டி, சுண்டக் காய்ச்சி குளிர வைத்த பால் - ஒரு டம்ளர், கண்டன்ஸ்டு மில்க் - கால் கப், நன்னாரி அல்லது ரோஸ் சிரப் - 2 தேக்கரண்டி, வெனிலா ஐஸ்கிரீம் - ஒரு கப்.
செய்முறை: பாதாம் பிசினை எட்டு மணி நேரம் ஊற விடவும். ஒரு டம்ளரில் பாதாம் பிசினைப் போட்டு, சுண்டக் காய்ச்சிய பால், நன்னாரி அல்லது ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி, அதனுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கவும். மேலே வெனிலா ஐஸ்கிரீம் போட்டு சாப்பிடக் கொடுக்கவும்.

மிக்ஸ்டு வெஜ் ஜூஸ்!

தேவையான பொருட்கள்: கேரட் மற்றும் வெ ள்ளரி பிஞ்சு - தலா ஒன்று, மோர் - தேவையான அளவு, மிளகு - நான்கு, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை: கேரட் மற்றும் வெள்ளரியை சுத்தம் செய்து, புதினாவுடன் மிளகு சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். இதை மோருடன் கலந்து, உப்பு சேர்த்து பருகவும்.இந்த ஜூஸ் வெயில் நேரத்தில் தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

லெமன் பானகம்!

தேவையான பொருட்கள்: எலுமிச்சம் பழம் - ஒன்று, புதினா - சிறிதளவு,சுக்குப்பொடி மற்றும் ஏலக்காய்த்தூள் சிறிதளவு, பொடித்த வெல்லம் - தேவைக்கேற்ப.
செய்முறை: வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி, ஆற வைக்கவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும். இதனுடன், சுக்குப்பொடி மற்றும் ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைத்தால், லெமன் பானகம் தயார்! பரிமாறும் போது, சுத்தம் செய்த புதினா இலைகளை மேலே தூவிக் கொடுத்தால், சுவை கூடும். கோடையில் ஏற்படும் அதீத தாகத்தை தணிக்கும் இந்த பானகம்.

லெமன் - ஜிஞ்சர் டிரிங்க்!

தேவையான பொருட்கள்: எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி, தண்ணீர் - இரண்டு கப், துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி, பொடித்த வெல்லம் மற்றும் தேன் - தேவையான அளவு.
செய்முறை: தண்ணீரைக் கொதிக்க வைத்து இஞ்சி, வெல்லம் சேர்த்து, அரை கப்பாக சுண்டிய பின், இறக்கி வடிகட்டவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து பருக, கோடையில் வரும் பித்தத்தை தவிர்க்கலாம். .

அவல் புரூட் சாலட்!

தேவையான பொருட்கள்: அவல் - ஒரு கப், பச்சை திராட்சை - 10, வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம் பழம் - 10, பப்பாளி - ஒரு துண்டு, மாதுளை முத்துக்கள் - கால் கப்.
செய்முறை: வாழைப்பழம், பப்பாளி, பேரீச்சம்பழம் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். அதனுடன் மாதுளை முத்துக்கள், பச்சை திராட்சை சேர்த்துக் கலக்கவும். அவலை, ஐந்து நிமிடம் ஊற வைத்து அலசி, பழக் கலவையுடன் சேர்த்து பரிமாறவும்.

தர்பூஸ் டிரிங்!

தேவையான பொருட்கள்: தர்பூசணி துண்டுகள் மற்றும் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், சர்க்கரை - தேவையான அளவு.
செய்முறை: தர்பூசணி துண்டுகளை அரைத்து ஜூஸ் தயாரிக்கவும். தேங்காய்ப் பாலுடன் தர்பூசணி ஜூஸ், தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.
இதை அப்படியே பருகலாம் அல்லது குளிர வைத்தும் பருகலாம். .

கிர்ணிப்பழ லஸ்சி!

தேவையான பொருட்கள்: கிர்ணிப்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - அரை கப், பொடித்த சர்க்கரை - இரண்டு மேஜைக் கரண்டி, ஐஸ் கட்டிகள் -இரண்டு.
செய்முறை: மிக்சி ஜாரில் கிர்ணிப்பழத் துண்டுகள், தயிர், பொடித்த சர்க்கரை, ஐஸ் கட்டிகளை போட்டு நன்கு நுரை வரும் வரை அடிக்கவும். பின், கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

தர்பூசணி லஸ்சி!

தேவையான பொருட்கள்: நீர்விடாமல் கெட்டியாக கடைந்த தயிர் - இரண்டு கப், தர்பூசணி சாறு - ஒரு கப், ரோஸ் எசன்ஸ் - சிறிதளவு, சர்க்கரை - நான்கு மேஜை கரண்டி, ஐஸ் கட்டிகள் - சிறிதளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நன்கு நுரைக்க கலந்து, உயரமான கிளாஸ்களில் பரிமாறவும். விருப்பப்பட்டால் புதினா இலைகள் நான்கு சேர்க்கலாம்.

புரூட் லஸ்சி!

தேவையான பொருட்கள்: தயிர் - ஒரு கப், மாதுளை முத்துக்கள் - ஒரு கப், சர்க்கரை - நான்கு தேக்கரண்டி, ஐஸ் கட்டிகள் - நான்கு.
செய்முறை: மாதுளை முத்துக்களை மிக்ஸியில் அரைத்து, தயிருடன் கலக்கவும். பின், அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் ஐஸ் கட்டிகள் சேர்த்து நுரை வர அடித்து, குளிர வைத்து பருகவும்.

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ஷேக்!

தேவையான பொருட்கள்: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்.
செய்முறை: ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீமுடன், தேங்காய்ப் பால் சேர்த்து, மிக்சியில் அரைத்து நுரையுடன் பரிமாறவும். விரும்பினால், ஸ்ட்ராபெர்ரி பழத்துண்டுகளை மேலே சேர்த்து பருகலாம். தேங்காய்ப் பால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.

மேலே உள்ளவை என்னுடையவை அல்ல .......வாரமலரில் பார்த்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜில் டிப்ஸ்....... Empty Re: ஜில் டிப்ஸ்.......

Post by krishnaamma Mon 20 Apr 2015 - 1:28

* குளிர் பானங்கள் மூலமும் குளிர்ச்சி தரும் உணவு வகைகள் மூலமும் வெயிலில் தாக்கத்தில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் வித்தையைத் தெரிந்துகொண்டால் கோடை காலத்தைக் குதூகலத்துடன் கழிக்கலாம்.

* எலுமிச்சைச் சாற்றுடன் இரண்டு மடங்கு சர்க்கரையைக் கலந்து ஐஸ் டிரேயில் நிரப்பி ஃப்ரீசரில் வைத்துவிடுங்கள். தேவையான போது ஒரு டம்ளர் நீரில் ஒன்று அல்லது இரண்டு ஐஸ் கியூப்களைக் கலந்து பருகலாம்.

* குழந்தைகளுக்கு எலுமிச்சை ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் தரும்போது சிட்டிகை உப்பும் மிளகுத் தூளும் கலந்து கொடுத்தால் சளிப் பிடிக்காது.

* தயிர் சாதத்தில் கடுகுக்குப் பதில் ஓமத்தைத் தாளித்துச் சேர்த்தால் வாசனையாகவும் இருக்கும். செரிமானத்தையும் அதிகரிக்கும்.

* இரண்டு டீஸ்பூன் ஜாம் எடுத்து மிக்ஸியில் எடுத்துச் சிறிதளவு பால் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். பிறகு தேவையான பால் சேர்த்து நுரை வர அடித்து, சர்க்கரை சேர்த்தால் சுவையான மில் ஷேக் தயார். இதைக் குழந்தைகள் விரும்பி அருந்துவர்.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜில் டிப்ஸ்....... Empty Re: ஜில் டிப்ஸ்.......

Post by krishnaamma Mon 20 Apr 2015 - 1:28

கரகர மொறுமொறு வடாம்

* வடாமுக்கு மாவு கிளறும்போது உப்பை ஒரு பங்கு குறைத்துச் சேர்க்க வேண்டும். அப்போதுதான் பொரிக்கும்போது உப்பின் அளவு சரியாக இருக்கும்.

* எலுமிச்சம்பழத்தை அதிகமாகப் பிழிந்தால் மாவு சிவந்து விடும்.

* மாவு சரியாக வேகவில்லை என்றால் வடாம் பிழிந்த பிறகு அதிகமாகத் தூள் விழும். அதனால் மாவைப் பக்குவமாக வேகவைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வடாம், அரிசி வடாம் செய்யும்போது பச்சை மிளகாயுடன் பூண்டு பற்களையும் அரைத்துச் சேர்த்தால் மணமாக இருக்கும்.

* அவல் கருவடாம் செய்யும்போது அவலை 10 நிமிடம் ஊற வைத்தால் போதும். அப்போதுதான் வடாமைப் பொரிக்கும்போது கரகரப்பாக இருக்கும்.

* வடாம் மாவுடன் சிறிது கறிவேப்பிலையை அரைத்துச் சேர்த்தால் தனிச் சுவையுடனும் மணத்துடனும் இருக்கும்.

- என். நஜிமாபேகம், டி.ஆர். பட்டினம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜில் டிப்ஸ்....... Empty Re: ஜில் டிப்ஸ்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum