Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 11:15
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!
4 posters
Page 1 of 1
வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!
ஓர் ஊழியர் அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் இருக்கிறார் என்பதைவிட, அலுவலக நேர ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்கிறாரா, அலுவலக நேரத்தில் எத்தனை வேலைகளை ஸ்மார்ட்டாகச் செய்து முடிக்கிறார் என்பதே முக்கியம்!
1.அட்டவணைப்படுத்துங்கள்!
வாழ்க்கை - வேலை இரண்டுமே முக்கியமான விஷயங்கள்தான். ஆனால், வேலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துக் குடும்பத்தைக் கவனிக்காமலோ அல்லது குடும்பத்துக்கு முக்கியத் துவம் அளித்து வேலையைக் கவனிக்காமல் போனாலோ சிரமம்தான்.
உங்களது ஒருநாளை அட்டவணைப் படுத்துங்கள். ஒருநாளில் எத்தனை மணி நேரம் அலுவலக வேலைகளைக் கவனிக்க வேண்டும், எவ்வளவு நேரம் குடும்பத்தோடு செலவிட வேண்டும் என்பதைத் திட்டமிட்டால், உங்களது வேலை மற்றும் குடும்பத்துடனான நேரம் என்பது சமநிலையில் அமையும். இப்படிச் செய்தால், வேலைக்காக அதிக நேரம் செலவழித்து குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்றோ, குடும்பத்துக்காக அதிக நேரம் செலவழித்து வேலையில் கோட்டை விட்டுவிட் டோமே என்றோ பிற்பாடு கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.
2.புத்துணர்ச்சி அடையுங்கள்!
ஒரு வேலையைச் செய்து முடிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. அல்லது நீங்கள்திட்டமிட்ட நேரத்துக்குள் அந்த வேலையை முடிக்க முடியவில்லை எனில், உங்களுக்கு சோர்வுதான் ஏற்படும். இந்த சோர்வுடனேயே அந்த வேலையைச் செய்யும்போது, மேலும் பரபரப்பு உண்டாகி, அந்த வேலையைத் தவறாக செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும்.
இதுமாதிரியான சமயங்களில் அந்த வேலைக்கு சிறிது அவகாசம் தந்துவிட்டு, நீங்கள் புத்துணர்ச்சி அடைந்தவுடன் அதே வேலையைச் செய்தால், எந்தத் தவறும் இல்லாமல் சிறப்பாக அந்த வேலையைச் செய்து முடிக்க முடியும். சின்னதாக ஒரு வாக்கிங் போவது, செல்போனில் எஃப்எம் ரேடியோவில் ஒன்றிரண்டு பாட்டு கேட்பது, ஒரு காபி குடிப்பது (தயவு செய்து சிகரெட் பிடிக்க வேண்டாம்! இதனால் டென்ஷன் அதிகமாகவே செய்யும்!) என நம்மை நாமே புத்துணர்ச்சி பெற செய்துகொள்ளலாம்.
3.நல்ல தருணங்களை இழக்காதீர்கள்!
உங்கள் வேலைதான் முக்கியம். அதுதான் உங்கள் குடும்பத்தை நடத்த உதவுகிறது. இதற்காக வேலையே கதி என்று இருந்து விடாதீர்கள் ஊரில் நடக்கும் திருவிழா போன்ற விழாக்களுக்கோ அல்லது உங்கள் உறவினர் கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ அலுவலக வேலை களை முன்னரே திட்டமிட்டு முடித்துவிட்டு, அந்த நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் சென்று வாருங்கள்.
அப்போதுதான் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். வேலையைக் காரணம்காட்டி முக்கியமான நிகழ்ச்சிகளை நீங்கள் தவிர்த்தால், மகிழ்ச்சியான தருணத்தை உங்களால் அனுபவிக்க முடியாத சூழல் ஏற்படுவ துடன், சொந்தபந்தங்களை இழக்கவேண்டிய கட்டாயமும் ஏற்படும். எனவே, அந்தத் தவறை மட்டும் செய்யாதீர்கள்.
4.இரண்டையும் கலக்காதீர்கள்!
அலுவலகத்தில் வேலை பார்க்கும் நேரத்தில் ஒருசிலர் தங்கள் வீட்டுக்கு போனில் பேசிக்கொண்டும்; வீட்டில், குழந்தைகளுடன் விளையாடு வதற்கு பதிலாக லேப்-டாப்பை எடுத்துவைத்து அலுவலக வேலை களையும் பார்த்துக் கொண்டு் இருப்பார்கள்.
இப்படி ஒன்றோடு ஒன்றை கலப்பதை நிறுத்தினாலே உங்கள் குடும்பம் - வேலை சமநிலை அடைந்து விடும். அலுவலகத்தில் குடும்பம் பற்றிய நினைப்பு வேண்டாம்; வீட்டுக்கு வந்தவுடன் அலுவலகம் பற்றிய சிந்தனை வேண்டாம். இரண்டையும் ஒன்றோடு ஒன்றை கலக்காமல் இருந்தாலே, வாழ்க்கையை அனுபவித்த திருப்தி யோடு, நல்ல ஊழியர் என்கிற பெயரும் கிடைக்கும்.
5. முழுக் கவனத்தோடு செயல்படுங்கள்!
நீங்கள் செய்யும் வேலையில் முழுக் கவனத்தோடு செயல் படுவதும் அவசியம். கவனமில்லாமல் செய்யும் வேலை உங்களின் நீண்ட நேரத்தை ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளது. அதனால் நீங்கள் சோர்வடைவீர்கள். அப்படி அடையும்போது உங்கள் குடும்பத்துக்கான நேரத்தை நீங்கள் கடன் வாங்க வேண்டியிருக்கும். இதனால் நீங்கள் குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் குறைந்து, உங்கள் வாழ்க்கை சமநிலை பாதிக்கப்படும். உங்கள் வேலையை முழுக் கவனத்துடன் செய்யும்போது, உங்கள் வேலையும் துரிதமாக முடியும். நீங்கள் குடும்பத்துடன் சேர்ந்து செலவழிக்கும் நேரமும் அதிகமாகும்.
6.ஸ்மார்ட்னஸை வளர்த்துக்கொள்ளுங்கள்!
சிலர் அலுவலத்தில் அதிக நேரம் இருந்தாலே, கஷ்டப்பட்டு வேலை செய்வதாக நினைத்துக் கொள்வார் கள். அல்லது அப்படி ஓர் எண்ணத்தை அலுவலகத் தின் சக ஊழியர்கள் மத்தியிலும், குடும்பத்தினர் மத்தியிலும் ஏற்படுத்த நினைப்பார்கள். இது தவறு. ஓர் ஊழியர் அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் இருக்கிறார் என்பதைவிட, அலுவலக நேர ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்கிறாரா, அலுவலக நேரத் தில் எத்தனை வேலை களை ஸ்மார்ட்டாக செய்து முடிக்கிறார் என்பதே முக்கியம். குறைந்த நேரத்தில் ஒரு வேலையை சரியாக செய்துமுடிக்கும் ஸ்மார்ட்னஸ் வேண்டும். இந்த ஸ்மார்ட்னஸ் வரப்பெற்ற ஊழியர்கள், எல்லா வேலைகளையும் சரியாகச் செய்துவிட்டு, ஆபீஸில் நல்ல பெயர் வாங்கிவிட்டு, குழந்தை களை சினிமாவுக்கும் அழைத்துச் செல்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
7.மனநிலையைச் சரியாக வைத்திருங்கள்!
வீட்டில் உள்ள கோபத்தை அலுவலகத்திலோ அல்லது அலுவலகத்தில் ஏற்பட்ட மனக் கவலையை வீட்டிலோ காட்டா தீர்கள். வீட்டில் நுழையும் முன்பு செருப்பைக் கழற்றி வைக்கும் போதே, அலுவலகம் தொடர்பான அதிருப்தியான எண்ணங்களையும் மறந்து விடுங்கள். அதேபோல, வீட்டில் இருக்கும் பிரச்னையை அலுவலகத்தில் ஸ்வைப்பர் கார்டினைக் காட்டி வருகைப்பதிவை பதியும் போதே, மனதிலிருந்து அழித்துவிடுங்கள். வீடு வேறு, அலுவலகம் வேறு என நீங்கள் நினைத்து செயல் பட்டால் மட்டுமே, வீட்டில் குழந்தை களிடம் கொஞ்சி விளையாடவும் முடியும்; அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சிரித்துப் பேசி, வேலையை க்ரியேட்டிவ்வாகச் செய்யவும் முடியும்.
8.வொர்க்ஹாலிக் vs ஹோம் சிக்!
சிலர் எப்போதும் குடிபோதையில் இருக்கிற மாதிரி, வேலை, வேலை என்று வேலை போதையில் இருப் பார்கள். இப்படி வொர்க் ஹாலிக்காக இருப்பவர்கள், அலுவலக வேலையை அலுவலகத்தில் மாய்ந்து மாய்ந்து செய்தது போதாதென்று, அந்த வேலையை வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் செய்வார்கள். அந்த நேரத்தில் குழந்தைகள் விளையாட அழைத்தால், வள்ளென்று விழுவார் கள். இன்னும் சிலரோ, சின்னக் காரணம் கிடைத்தாலும் வீட்டுக்கு வந்து முடங்கிவிடக்கூடிய ஹோம் சிக்னஸ் கொண்டவர்களாக இருப்பார்கள். வானம் லேஸாக இருட்டினாலும், சார், மழை வரும் போல இருக்கு. நான் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குக் கிளம்பலாமா என்று கேட்பார்கள். இந்த இரண்டு மனோபாவமும் தவறு. அலுவலகம், வீடு என இரண்டுக்கும் சமமான கவனத்தைக் காட்டினால்தான், முன்னேற முடியும்.
9.இரு தரப்பினருக்கும் புரிய வையுங்கள்!
அலுவலகம் பற்றி குடும்பத்தினருக்கு புரிதல் இல்லாதபோதும், குடும்பத்தினர் பற்றி அலுவலகத்துக்கு எதுவும் தெரியாதபோதும், தேவை இல்லாத பிரச்னை உருவாகின்றன. மனைவி கர்ப்பமாக இருக்கும்போது சில உதவிகளை செய்ய வேண்டிய கடமை ஓர் ஊழியருக்கு இருக்கலாம். இதனால் ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை போட வேண்டிய கட்டாயம் ஓர் ஊழியருக்கு ஏற்பட லாம். ஆனால், அந்தத் தகவல் அலுவலகத்துக்குத் தெரியாதபோது, அலுவலகத்துக்கு வராமல் ஊர் சுற்றுவதாக தான் உயரதிகாரி நினைப்பார். இதேபோல, அலுவலகம் எப்படிப்பட்டது என்பது குடும்பத்தினருக்கு நன்றாக எடுத்துச் சொல்லிவிட்டால், சில சமயங்களில் ஆபீஸில் அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது, தவறாக நினைக்கும் வாய்ப்பு ஏற்படாது.
10.முழுநாள் ஓய்வு!
ஒரு வாரத்துக்கு மொத்தம் 168 மணி நேரம். இதில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் என உழைத்தால், ஆறு நாட்களில் 60 மணி நேரம் போய்விடும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கினால் 56 மணி நேரம் போய்விடும். மீதமுள்ள 52 மணி நேரத்தை அடுத்த வாரத்துக்கு தம்மைத் தயார் செய்துகொள்ள செலவழிக்க வேண்டும். கண்ணுக்கு ஓய்வு, கை, காலுக்கு ஓய்வு, மொத்த உடலுக்கும் மனதுக்கும் ஓய்வுதருவதன் மூலமே நம்மை நாம் சுறுசுறுப்பாக்கிக்கொள்ள முடியும்.
--விகடன்1.அட்டவணைப்படுத்துங்கள்!

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!
அருமையான பகிர்வு பாலாஜி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!
நல்ல தகவல் பாலாஜி சார். ஆனா வீட்ல முழு நாள் ஓய்வு எங்க சார் தர்ராங்க. அன்றைக்கு தான் எல்லா வேலையும் நம்ம தலையில விழுது. ஆனா அவுங்க மட்டும் சீரியல் உக்காந்துடராங்க. காலம் ரொம்ப கொட்டுப் போச்சிங்க சார். பேசாம நமிதா வீட்டுக்கு சாமியாரா போயிடாலாம்னு பாக்குறேன், நீங்க என்ன சொல்ருரீங்க???????
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!
மேற்கோள் செய்த பதிவு: 1131233மாணிக்கம் நடேசன் wrote:நல்ல தகவல் பாலாஜி சார். ஆனா வீட்ல முழு நாள் ஓய்வு எங்க சார் தர்ராங்க. அன்றைக்கு தான் எல்லா வேலையும் நம்ம தலையில விழுது. ஆனா அவுங்க மட்டும் சீரியல் உக்காந்துடராங்க. காலம் ரொம்ப கொட்டுப் போச்சிங்க சார். பேசாம நமிதா வீட்டுக்கு சாமியாரா போயிடாலாம்னு பாக்குறேன், நீங்க என்ன சொல்ருரீங்க???????
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!
நல்ல..அருமையான பதிவு!நன்றி!
monikaa sri- பண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
Similar topics
» திடீர் வேலை இழப்பு... சமாளிக்க 10 வழிகள் !
» கிரிஸ்டல் ரிபோர்ட் நமது வாடிக்கையாளர் கணினியில் வேலை செய்ய என்ன செய்ய வேண்டும் (கேள்வி)
» கணவன் - மனைவி சண்டையை சரி செய்ய வழிகள்...
» உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
» வேலை வேறு, குடும்பம் வேறு-Work from Home

Permissions in this forum:
You cannot reply to topics in this forum