புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
5 Posts - 14%
heezulia
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
4 Posts - 1%
mruthun
கிஸா பிரமிடுகள்!  Poll_c10கிஸா பிரமிடுகள்!  Poll_m10கிஸா பிரமிடுகள்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிஸா பிரமிடுகள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 20, 2015 4:20 pm


உலக அதிசயங்களில் ஒன்று எகிப்தின் பிரமிடுகள். இது எல்லாரும் அறிந்த உண்மைதான். அரச குடும்பத்தினரின் இறந்த உடல்கள் மீண்டும் உயிர் பெரும் என்ற நம்பிக்கை காரணமாக, அவர்களது உடல்களை பாதுகாக்கும் இடமாக இத்தகைய பிரமிடுகள் அமைக்கப்பட்டன.

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவை ஒட்டிய புறநகர் பகுதியில் அமைந் துள்ளது கிஸா. இங்குள்ள நைல் நதி கரையோரம் சுமார் 4ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய "கிஸா பிரமிடு' உள்ளது.

146 மீட்டர் உயரத்திலான இந்தப் பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. ஒவ்வொரு கற்களும் 2 முதல் 9 டன் வரை எடை கொண்டது.

இவ்வளவு கற்களை எங்கிருந்து, எப்படி இங்கு கொண்டு வந்தனர்?

இந்தக் கற்கள் அனைத்தும் சுமார் 800 கி.மீ., தொலைவில் இருந்து சதுரம் சதுரமாக வெட்டி எடுத்து வரப்பட்டன. அத்தனையும் மனித சக்தியால் மட்டுமே சாதிக்க முடிந்தது என்பதுதான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மிகக் குறுகிய காலத்திலேயே கடுமையான மனித சக்தி பயன்படுத்தப்பட்டு இந்த அதிசயம் சாதிக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகிறது. பிரமிடு ஒரு கோடி டன் எடை யுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது. சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாகப் பாலிஷ் செய்யப் பட்டு வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன.

23 லட்சம் சுண்ணாம்பு கற்கள், சுமார் 500 அடி உயரத்தில் எவ்வாறு கொண்டு செல்லப் பட்டு பணிகள் முடிக்கப்பட்டன என்பது மிகப் பெரிய ஆச்சரியமே.

மேலும், வெளிப்புறக்கற்களில் வித்தியாச மான எழுத்துக்கள் ஏராளமாகப் பதிக்கப் பட்டுள்ளன. இவற்றை மட்டுமே தொகுத்து பதிப்பித்தால் சுமார் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இத்தகைய கிஸா பிரமிட்டை யார் கட்டினர்? யாருடைய உதவியுடன் கட்டினர்? இவ்வாறு கட்டுவதற்கான கட்டுமான அறிவாற்றல் அவர்களுக்கு எப்படி ஏற்பட்டது?

கிஸாவில் உள்ள மூன்று பிரமிடுகளும் பித்தகோரஸ் என்கிற கணித விதிகளின் படியும், பிரபஞ்சத்தில் உள்ள மூன்று நட்சத்திரங்களைக் குறிக்கிற துல்லிய கோட் பாட்டின்படியும் அமைக்கப் பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.

மேலும், உள்ளே வைக்கப் பட்ட உடல்கள் கெட்டுப் போகா மல் முற்றிலும் உலர்ந்த நிலை யில் இருப்பது மிகப் பெரிய அதிசயமே.

பிரமிடுகளில் காணப்படும் ஏராள மான உள் அறைகளின் பயன்பாடு களும், அதன் குறுக்கும் நெடுக்கு மாகச் செல்கிற சதுரத் துளைகளின் பயன்பாடுகளும் மர்மங்களாகவே உள்ளன.

கி.மு.2566ம் ஆண்டில் எகிப்திய வம்சத்தைச் சேர்ந்த நான்காவது மன்னரான பாரோ குபூ என்பவர் தான் கிஸாவில் பிரம்மாண்டமான பிரமிட்டை அமைத்ததாக வரலாறு தெரிவிக்கிறது.

பிரமிடு அமைக்கப்பட்டு சுமார் 4,500 ஆண்டுகளுக்கு பிறகு, அதனுள் மறைந்து கிடக்கும் ரகசியத்தை முழுமையாக அறியும் ஆர்வம் லண்டனைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவருக்கு ஏற்பட்டது.

அவர் தானே வடிவமைத்த "மைக்ரோ ஸ்நேக்,' என்னும் அதிநுட்பக் காமிராவுடன் மிகச்சிறிய ரோபோ ஒன்றை பிரமிட்டிற்குள் சிறிய துளையிட்டு அனுப்பினார்.

இது நடந்தது 1993ம் ஆண்டு.

உள்ளே நுழைந்த ரோபோ, அங்கு ஒரு கதவு இருப்பதைக் கண்டுபிடித்தது. அந்தக் கதவு உலோகங்களிலான ஒரு கொக்கி மூலம் மாட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்தக் கொக்கியானது கதவைத் திறந்து மூடுவதற் கான சாவியாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதினர்.

அதன் பின்னர் 2002ம் ஆண்டு, மற்று மொரு ரோபோ பிரமிட்டிற்குள் அனுப்பப் பட்டது. அதுவும் சில படங்களை எடுத்து அனுப்பியது. அவற்றில் பிரமிட்டின் உள்ளே ஒரு அறை இருப்பது போலவும், அந்த அறை ஒரு கல்லினால் அடைக்கப்பட்டிருப்பது போலவும் இருந்தது.

எனினும் இந்த இரண்டு ரோபோக்களாலும் உள்ளே இருப்பது என்னவென்பதைத் தெளி வாகப் படம் பிடிக்க முடியவில்லை. எனவே, பிரமிடின் ரகசியங்கள் பெரிய அளவில் வெளியாக முடியாமல் போயிற்று.

இதன்பின்னர் 2004ம் ஆண்டு பிரமிட்டின் உள்ளே மற்றுமொரு மைக்ரோ ரோபா ஒன்று அனுப்பப்பட்டது. அது எடுத்த புகைப்படம் தொல்பொருள் ஆய்வாளர்களைத் திகைப்பில் ஆழ்த்தியது. அது
சிவப்பு நிறத்தில் எகிப்திய எழுத்துக்கள் பிரமிடின் சுவரில் எழுதப்பட்டிருந்தன. அந்த எழுத்துக்கள் மூலம் பிரமிடில் மறைந்து கிடக்கும் ரகசிய முடிச்சுகளை ஒவ்வொன்றாய் அவிழ்க்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்பினர்.

ஆனால், அதுவும் காலைவாரி விட்டது என்றே சொல்ல வேண்டும். காரணம், எழுத்துக்கள் மிகச் சிறியதாக இருந்ததால் அதனைப் படித்து புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று.

எனினும் அந்த மைக்ரோ ரோபோ அனுப்பிய புகைப்படங்களால் பிரமிடின் வடிவத்தை ஓரளவிற்குக் கணிக்க முடிந்தது.

பிரமிடில் ராஜாவுக்குத் தனி அடுக்கு காணப்படு கிறது. இதில் இருந்து வெளிவரும் இரண்டு இணைப்பு பிரமிடின் வெளிப்புறம் வரை நீட்டிக் கொண்டிருக் கிறது. உள்ளே காற்று செல்வதற்கான வழியாக இது இருந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

ராணிக்கு என்று தனியாக ஒரு அடுக்கும் இந்தப் பிரமிடுக்குள் அமைந்துள்ளது. இந்த அடுக்கில் இரண்டு சுரங்கபாதைகள் இணைக்கப்பட்டு, அவை இரண்டு கல் கதவுகளால் மூடப் பட்டுள்ளன.

ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வந்த போதிலும், பிரமிடினுள் பொதிந்து கிடக்கும் மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

உண்மையில் பிரமிடில் மறைந்து கிடக்கும் உண்மைதான் என்ன?

அதனுள் கோடிக்கணக்கான தங்கப் புதையல் கொட்டிக் கிடப்பதாகக் கூறப்படுகிறதே அது உண்மையா? உள்ளே இறந்தவர்களின் ஆவிகள் உலாவுவதாகச் சொல்லப்படுவது உண்மையா?

அங்குள்ள கல் கதவுக்குப் பின்னால் மறைந்து கிடக்கும் ரகசியம் என்ன?

உள்ளே இருக்கும் சுரங்கப் பாதைகள் மற்றொரு பிரமிடிற்குள் செல்வ தாகக் கூறப்படுவது உண்மையா?

இவற்றுக்கெல்லாம் சரியான விடை இது வரை கிடைக்கப்பட வில்லை.

ஆனால், இதனுள் மம்மிகள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அந்த மம்மிகள் எப்படி உள்ளே சமாதி ஆக்கப்பட்டன என்பது குறித்து ஆய்வாளர்கள் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதாவது, இறந்தவர்களின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச் சென்று, கட்டிலில் அவரைக் கிடத்துவர். பின்னர் அந்த உடம்பைப் பேரீச்சை மதுவாலும், நைல் நதி நீராலும் நன்றாகக் கழுவி சுத்தம் செய்வர்.

உடலின் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளான நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் உள்ளிட்டவை வெளியே எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

அந்தக்காலக் கட்டத்தில் இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டது. அதனால் அதனை வெளியே எடுக்கவில்லை.

ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு, மண்டைக்குள் குடைந்து, லாவகமாக மூளையை வெளியே எடுத்தனர்.

பின்னர் உடல் முழுவதும் கல் உப்பால் மூடப்படும்.

நாற்பது நாட்களுக்கு பிறகு உடலை மறு படியும் நைல் நதி நீரால் கழுவி, அதன் மீது வாசனை எண்ணெயைத் தடவுவர். உடலானது இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவது மாக இழந்திருக்கும்.

உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவர். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி என்று தனித் தனியாகச் சுற்றப்படும். இதன் பிறகே அந்த உடல் அடக்கம் செய்யப்படும். அதுவே "மம்மி' என்று அழைக்கப்படுகிறது.

1999ம் ஆண்டு அர்ஜென்டினாவின் "லுல்லைலிகோ' என்னும் மலைப்பகுதியில் மூன்று மம்மிகள் கண்டெடுக்கப்பட்டன.

சுமார் 500 ஆண்டுகளுக்கு மேலான இந்த மம்மிகளின் உடலில் இருந்த ரத்தம் உறையாமல் அப்படியே இருந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

"இன்கா' இனத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் மம்மி வடிவமும் அதில் ஒன்று. அந்தச் சிறுமிக்கு "லா டென்சிலா' என்ற பெயரைச் சூட்டியுள்ளனர் ஆய்வாளர்கள். அதாவது திருமணமாகாத இளம் பெண்' என்பதுதான் அந்தப் பெயருக்கான அர்த்தம்.

மதத்தின் பெயரால் இந்தப் பெண் உயிர் துறக்க நேரிட்டிருக்கலாம், என்று கருதப் படுகிறது. அதாவது கடவுளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பெண்ணை, கடவுளுடன் வாழ்வதற்காக இவ்வாறு மலைப்பாங்கான இடத்தில் கொண்டு வந்து விட்டிருக்கலாம் அல்லது ஏதாவது விஷம் கலந்த உணவை வற்புறுத்தி உண்ண வைத்து அவளை இங்கே கொண்டு வந்திருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இந்த டென்சிலாவின் உடல் பாகங்கள் எதுவும் கெட்டுப் போகவில்லை. ரத்தம் கூட உறையாத அளவிற்கு பதமாக இருந்திருக்கிறது. அந்தப் பெண்ணின் தோல் கூட புத்துணர்ச்சியுடன் இருப்பது தான் மிக ஆச்சர்யம்.

இந்நிலையில் அவளது முடியை வைத்து, அவள் என்ன மாதிரியான உணவுப் பழக்கவழக்கங்களைக் கொண்டவள் என ஆராய்ந்த தில், இன்கா மக்கள் தங்கள் குழந்தைகளை நன்கு கொழுக்க வைத்து கடவுளுக்கு அர்ப்பணித்தது தெரிய வந்தது.

கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே, விலங்கு களின் கொழுப்புகள் மற்றும் தானியங் களைக் கொடுத்து அக்குழந்தைகளை நன்கு செழிப்பாக்குவார்களாம்.

டென்சிலாவின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது, அவள் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஏதோ காய்கறி போன்ற உணவை உட்கொண் டிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டென்சிலாவின் உடல் இருந்த நிலையை வைத்து பார்க்கும் போது, அவள் இறப்பதற்கு முன்னதாக ஏதேனும் மருந்து உட்கொண்டிருக்கலாம், அதன் மூலம் அவளது மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் கருது கின்றனர்.

இவ்வாறு அர்ப்பணிக்கப்பட்டவர்களை அபாய கரமானதும், சிரமமானதுமான மலையின் உச்சிக்கு "இன்காக்கள்' சுமந்து செல்வர்.

இலக்கை அடைந்தவுடன் குடிக்க ஒரு மருந்து தரப் படுமாம். அதன் மூலம் வலி, பயம் மற்றும் எதிர்க்கும் மனோபாவம் அனைத்தும் இல்லாமல் போய்விடுமாம்.

பின்னர் அவர்களை உடன் சென்றவர்களே மூச்சுத் திணறச் செய்தோ, தலையில் ஓங்கி அடித்தோ அல்லது பனியில் உறைய விட்டோ பலி கொடுப்பார்களாம்.

நிறைய "இன்கா' குழந்தைகள் இதுபோல் திருவிழா வின் போதோ அல்லது சாதாரண நாட்களிலோ பலி கொடுக்கப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் முழுக்க, முழுக்க உண்மை என்று சொல்லி விட முடியாது. அனுமானங்கள் என்றாலும் பிரமிடுகளும், மம்மிகளும் இன்னும் மர்மம் பொதிந்த விஷயங்களாகவே இருக்கின்றன.



கிஸா பிரமிடுகள்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 6:31 pm

கிஸா பிரமிடுகள்!  103459460
-
கிஸா பிரமிடுகள்!  W10eqTy4TSENal3fQTeh+3pyramids_giza

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக