புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
107 Posts - 49%
heezulia
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
9 Posts - 4%
prajai
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
3 Posts - 1%
Barushree
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
234 Posts - 52%
heezulia
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
18 Posts - 4%
prajai
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
5 Posts - 1%
Barushree
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
"நிழல் நினைவுகள்" Poll_c10"நிழல் நினைவுகள்" Poll_m10"நிழல் நினைவுகள்" Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நிழல் நினைவுகள்"


   
   
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Wed Apr 15, 2015 10:51 am

என்னுரை...
வாழ்க்கை - கடந்து சென்ற நிகழ்வுகள் காலத்தால் நம் மனதில் எழுதிய சுவடுகளின் தொகுப்பு.

வாழ்வின் வடிவழகை வடிகட்டிப் பார்க்க விழைவது என் இயல்பு.முழு வாழ்வையும் புரட்டிப் பார்க்க இயலாத இத்தருணத்தில் நம் மூன்றாண்டு வாழ்வையாவது புரட்டிப் பார்க்க முயல்கிறேன்.
இனிமை குறையாத இளமைக்கு இனிமை கூட்டுவது கனவுப்பூக்கள் பூக்கும் கல்லூரி வாழ்வே. இப்பூக்களின் பரிணாமத்தை சற்றே உற்று நோக்குங்கள். இவை பள்ளியில் அரும்பி, இளங்கலையில் துள்ளி, முதுகலையில் முதிரக்கூடியவை.எனினும் இவற்றிலும் சில விதிவிலக்குகள் இருப்பது விந்தையே.ஆம்.சிலர் வாழ்வில் இவை மணமில்லா அழகுகொண்ட நெகிழிப் (பிளாஸ்டிக்) பூக்களாய் மலர்வதும் உண்டு.
கனவுகள் துள்ளிய நம் இளங்கலை வாழ்வை சற்றே புரட்டுவோம்...வாருங்கள்...!
பள்ளி வாசனையோடும் பாடற்பிரிவு யோசனையோடும் பக்கத்துக் கல்லூரிக்குள் நம் பயணம் தொடங்கியது.பயணத்தில் ரசித்த நிகழ்வுகளை பட்டியல்போட விழைகிறது என் மனம்.ஆம். புதுச்சூழல் பதற்றம் , புதுமுக அணிவகுப்பு,புதுப்பிக்காத புத்திமதி,எளிதில் கூடிய நட்பு,எளிதில் கூடாத காதல்,பேசிய கண்கள்,பேச மறுத்த இதயங்கள், மதிப்பெண்ணுக்காக மனப்பாடம், மனதில் தங்காத கல்வி, புரட்டாத புத்தகப் பக்கங்கள், புத்தகப் புழுவாய் சில நொடிகள், செய்யத் துடித்த செய்முறைப் பயிற்சிகள், தள்ளிப்போட்ட தேர்வுகள், முகங்களை மறவாத நகல் எந்திரங்கள், அடக்கி ஆண்ட அக மதிப்பெண்கள், பெற்றோரையும் தன்னையும் ஏமாற்றி நண்பர்கள் வீட்டில் கண்ட புதுப்படிப்பு, ஆரவாரப் பருவத் தேர்வுகள், இறுதி நொடியில் மனதில் பதியாத மனப்பாட வரிகள், விரைவாய் பகிர்ந்து கொண்ட விடைத்தாட்கள், தேர்வறையில் துணைநின்ற துண்டுக் காகிதங்கள், தேட விரும்பாத தேர்வு முடிவுகள், சிலுவையில் திருநீறால் பிறை வரைந்த நண்பர்கள், தவறிய நட்பில் தவறான பழக்கங்கள், தவறுக்குத் தவறாத தவறான நட்புகள், அப்பாவி(ன்) பணத்தில் ஆடம்பர செலவுகள், வகுப்பறை வாய்ஜாலங்கள், வாத்தியாரோடு வாக்குவாதங்கள், சிறுசிறு ஊடல்கள், சிறப்பான கூடல்கள், சுற்றித் திகட்டாத சுற்றுலா, கலைகட்டிய கலை நிகழ்ச்சிகள், கலங்கி நின்ற கவலைகள், கண்குளிரக் கண்காட்சிகள், சிலதடவை சிற்றுண்டி உணவு, பலதடவை பட்டினிச் சுகம், உரிமையில் பறிபோன உணவுகள், கலந்துண்டு மகிழ்ந்த கலவைச் சாப்பாடு , அடக்கி வைத்தபோதும் அலறல் போட்டுக் காட்டிக் கொடுத்த அலைபேசிகள்,தப்பியோட வைத்த திரைப்படங்கள், தப்ப முயன்ற தண்டணைகள், விடுப்பு விண்ணப்பத்தில் தந்தையான தருணங்கள், கடைசி நாளில் கையொப்பம் கேட்ட மரங்கள், படியில் வாழ்ந்த பேருந்துப் பயணங்கள், தாமத வருகைக்கு பழிசுமத்தப்பட்ட பேருந்துகள், கனவிலும் நினையாத நண்பர் வீட்டு மரண ஓலங்கள்,முதல்நாளே முந்திச் சென்ற நண்பர் வீட்டு விழாக்கள், கூடியிருந்த தருணங்களில் பற்றாக்குறையான புகைப்படச்சுருள்கள், மறக்க முடியாத மனத்தடுமாற்றங்கள், மறைக்க முடியாத மனக்களவுகள், கடிதங்களின் மத்தியில் காதலர் தினங்கள், விளைவறியாது விடுத்த விண்ணப்பங்கள், விளைவறிந்தபின் விளக்கிய தருணங்கள், கண்ணீரில் நனைத்த காதல் மறுப்புரைகள், கடிதங்களில் மடிந்த கண்ணீர் துளிகள், கசப்பில் சுரந்த இனிப்பாய் அமைந்த ஒருதலைக் காதல்கள், விலக்கினாலும் விலகாத விருப்பங்கள், விரும்பினாலும் விலகிநிற்கும் விலகல்கள், பிரியம் கொள்ளாத பிரிவு, பிரிவைக் கொல்லும் பிரியம், காண விரும்பாத கடைசி நாள் என நம் நினைவில் வாழத்துடிக்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கை என்றும் முடிவிலிகளே.
நாம் இளங்கலையில் கல்வி பயின்றதை விட, கொண்டாட்டங்களில் குடை பிடித்து, ஆனந்த மழையில் நனைந்த தருணங்கள்தான் அதிகம். ஈரேழு உலகினை ஈடாய்க் கொடுத்து அழைத்தாலும் திரும்பிப் பார்க்காதவை அத்தருணங்கள்.ஆம். காலம் நம்மை அதிவிரைவு ரயிலில் அழைத்துச் சென்று சொர்க்கம் காட்டி சுமை குறைத்தது. சொர்க்க வாழ்வில் சொக்கிப்போன நாம் இன்று பூமி வர மறுப்பதை வேடிக்கை என்பதா? அல்லது வேதனை என்பதா?- விளங்கவில்லை.
கண்முன்னே கடந்து சென்ற நிகழ்வுகளை நான் திரும்பிப் பார்த்த தருணம்,மனதை வருடிநின்ற வரிகளை, வாக்கியத்தால் வரவேற்றது என் பாக்கியம்.ஆம். அவற்றைக் கவித்துவம் கொடுத்து காகிதத்தில் அமர்த்தினேன்...! இமைப்பொழுதில் மூன்றாண்டுகளை விழுங்கிய நமக்கு, ஆயுள் முழுக்க அசைபோட நினைவுகளாவது மிஞ்சட்டுமே என்று...! இருப்பினும், நீங்கள் நிகழ்கால நிகழ்வுகளை விடுத்து, இறந்தகால நினைவுகளோடு மட்டும் வாழ்ந்தால், உங்கள் எதிர்காலம் இறந்துவிடும். உங்கள் நிகழ்கால வாழ்வில் உள்ள கேள்விக்குறிகளை நேராக்க நீங்கள் முயன்றால், உங்கள் எதிர்கால வாழ்வு பல ஆச்சரியக்குறிகளைக் கொண்டிருக்கும் என்பது திண்ணம்.
நம் வசந்தகாலம் சற்று வற்றத் தொடங்கிவிட்டது.ஆம். வருமானத் தேடல், குடும்பம், பொறுப்பு, கடமை என சுமைகள் பல தம்மைச் சுமக்க நமக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கிவிட்டன. வெள்ளை உள்ளத்தின் வெளிப்பாடாய் நரை தோன்றும் காலத்தில் கூட, பொக்கை வாயில் புன்னகை தேடுவது என்பது இயந்திர வாழ்வில் இயலாத ஒன்று. மனக்குமுறல்களின் மத்தியில் நம் இதழ்களில் புன்னகை மலர்வது என்பது இளமை இனிமைகளைப் புரட்டும்போது மட்டும்தான்.
வந்த பாதையை நீங்கள் நிந்தனை செய்ய முயலும் போது, என் வரிகள் உங்கள் முன்வந்து நிற்பது திண்ணம்.ஆம். என் கருத்துக்கசிவுகளை நீங்கள் வாசிப்பதைக் காட்டிலும் சுவாசிக்க முயலுங்கள். இன்னல்களின் மத்தியில் நீங்கள் இளைப்பாற இந்த நிழல்நினைவுகள் நிச்சயம் உதவும். புகைப்படங்களோடு உறவுகொள்ள விழையும் இதயங்களோடு,புதைந்த படங்களாய் இந்நினைவுகள் நிழல்போல தொடர்ந்துவந்து உறவுகொள்ளும். எனவேதான் நிழல்களை நிஜமாக்கும் இந்த "நிழல் நினைவுகள்" ஓர் நினைவுப் பரிசு !
உங்கள் மத்தியில் ஓர் அன்பு வேண்டுகோள் ! போராட்டத் தீவிரத்தில், புன்னகை சிந்த புதுவழிதேடும் இந்த புதிர் வாழ்வில், இறைவன் அருளால் இன்னொரு சந்திப்பு நேருமானால், மௌனத்தின் ஆழத்தில் புதைந்த வார்த்தைகளுடன், இதயங்களில் கண்ணீர்ப்பூக்கள் மலர்ந்தாலும்,அவை உங்கள் இதழ்களில் புன்னகைப்பூக்களாய் உதிரட்டும்! நீங்கள் சிந்தும் இருதுளிக்கண்ணீர், பிரிவின் மடியில் உறவுகொள்ளத் துடிக்கும் இதயங்களுக்கு ஆறுதல் கூட்டட்டும்...!
இன்னொரு சந்திப்பை இறைவனிடம் யாசிக்கிறேன் - இருதுளிக் கண்ணீருக்காக!!!
- பா.வெ.
கல்லூரி வாழ்க்கை...
அறியா முகமாய் அறிமுகம்!...
யாவரும் அறியும் முகமாகும் எண்ணம்கொண்டு
அறியாத முகங்களோடு காணும் - அறிமுகம்!
இலட்சியம் மழையாய் பொழிய,
கற்பனைகள் பெருக்கெடுத்தோட,
புத்துணர்ச்சிக் கடலில் மூழ்கிதினம்
புதுமைகள் காண விழையும் - புதுமுகம்!
கல்லூரிக்கு இனிதே ஓர்
அறிமுகம்!
கல்லூரி!...
எதிர்காலத்தின் பிறப்பிடம்!
எதார்த்தங்கள் வாழுமிடம்!
நீங்காத இனிய நினைவுகளின்
நினைவிடம்!
முதிராக் காதல், முடிவுறா நட்பு,
தொடரும் கல்வி, தொய்வுறா மகிழ்ச்சி ... தொன்றுதொட்டு தோன்றுமிடம்!
பெற்றோர் சிலர்தம் கனவுகள் பலிக்குமிடம்!!!
கல்வி!...
அறியாமை இருள்நீக்க ஆண்டவன் கொடுத்த ஒளிவிளக்கு!
அமோக விற்பனையில் என்றும் இல்லை - விதிவிலக்கு!...?
தகுதியையும் திறமையையும் தகர்த்து விற்பனையில் சாதனை!
ஏழைகளுக்கு எட்டாக்கனியாய் என்றும் இருக்கும் வேதனை!
மாணவர் மனதில் நுழைய கொண்டாட்டங்களுடன் கடும் எதிர்ப்பு!
இறுதியாண்டில்தான் மனத்திறப்பு!
நேர்முகத்தேர்விலோ பரிதவிப்பு!

அருமை ஆசான்!...
வாழ்வில் முன்னேற முன்நிற்கும் முன்னோடிகள்!
விளங்கா பொருளுக்கு விளக்கப் பொருள் தரும்
விளக்கங்கள்!
எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏற்றம்பெற உதவும் ஏணிகள்!
கிண்டல் கேலிகளுக்கு இறுதிவரை பொறுமைகாக்கும் நெஞ்சங்கள்!
அருமை புரிந்திடாத அந்த நாட்கள் மீண்டும் வர ஆண்டவனைக் கெஞ்சுங்கள்! நண்பர்களே! கொஞ்சம் கெஞ்சுங்கள்!!!
நலமே தரும் - நட்பு!... உதிரத்தில் கலந்து நிற்கும் உதிரத் தொடர்பில்லா உறவு! உறவுகளைத் தோற்கடித்து முன்நிற்கும் உறவில்லா உறவு! உயிருக்குள் உயிர்புகுத்தும் உயிர்த் தொழில்நுட்பம்!!!
காதலைச் சுமக்கும் கலப்படக் கருவறையாய்ச் சில தருணங்களில்! காதல் பிறந்த பின் காக்க இயலாமல் கல்லறையில் பல தருணங்களில்!
எதிர்பாராத கரு (காதல்)ச் சிதைவிலும் ஏமாற்றத்தின் விளிம்பில் எத்தனையோ தருணங்களில்!
நண்பர்களோடு நொடிகள் விழுங்கி வகுப்பறைக் கொண்டாட்டம்! நாளும் மறுமுறை இளங்கலை பயில மனம் கொள்ளும்- நாட்டம்!
உணர்வுகளைப் பகிர்ந்திட நொடிகளில் என்றும் - பற்றாக்குறை! பகிர்ந்திடாத உணர்வுகள்... இறப்பு வரை - ஓர் மனக்குறை!!!
காத்திருந்த காதல்!... சிந்தனையும் உணர்ச்சியும் எதிர்மாறலில் கடும்போட்டியிட,... சிந்தனை அலுத்து உறங்கிய சில நொடிகளில்,... சிரமமின்றி உள்நுழைந்தது உணர்ச்சி! - காதலாய்!!!
நனவிலும் ஹார்மோன்களின் நச்சரிப்பு -
நாளும் இதழில் குறைந்தது புன்சிரிப்பு!
கற்பனைகளைத் திரட்டிக் கொண்டு எதார்த்தத்தை எதிர்க்கும் காதல் மனங்கள்! இறுதியில் எஞ்சும் இரணங்கள்!
சூழல்காற்று சுழல்காற்றாய் சுற்றிநின்று வீச, எதிர்க்க பலமின்றி திசைமாறிப்போகும் ஏழைக்காதல்கள்!
கசப்பான அனுபவங்களையும் இனிமையான நினைவுகளாக்கும் ஒருதலைக் காதல்கள்!!!
பருவத் தேர்வு!...
எதிர்கால நிர்ணயம் சுமந்துவரும் அரையாண்டு அதிவேகத்தேர்!
ஆறுமாதங்களாய் அள்ளியவற்றை அதிவேகமாய்க் கொட்ட நினைக்கும் மூன்று மணிநேர முயற்சி!
முதல்நாள் இரவில் மட்டும் பயிற்சி!!!

விரும்பாத விடுமுறை!...
பிற்கால பிரிவுத்துயர் பொறுக்க மனதிற்கு ஓர் தற்காலிக பயிற்சி !
பிரிவில் தனித்து நொடிகளை நகர்த்தி தோல்வி கண்டது - முயற்சி !
கல்வியும் சுமையாய் வாட்டிய சில தருணங்கள்,
மனம் மறுப்பின்றி நாடியது - விடுமுறை தினங்கள்!
நட்பின் வாசம் வீசாது போனதால் அன்று விரும்பிய தினங்கள் இன்றோ - வெறுப்பின் விளிம்பில்!!!
பிரிவு (முடிவு)!...
கண்ணிமையாய் இருந்தோரை கணநேரத்தில் பிரிக்க காலம் செய்த சதி!
கண்ணீரைக் கையூட்டாய்க் கொடுத்தாலும் தப்பமுடியவில்லை -இது எழுதப்படாத விதி!
தொப்புள் கொடியிலிருந்தே தொடர்ந்து விரட்டுகிறது - பிரிவு!
தொடாதே என்று கெஞ்சினாலும் காட்ட மறுக்கிறது - பரிவு!
நாளும் நட்பால் பட்ட பனிக்காயங்கள் பிரிவுத்துயரில் நனைந்துருகி மறைந்துபோகும் மாயங்கள்!
கண்ணீர்பஞ்சம் கொண்ட நெஞ்சங்கள் - இன்றோ...
தண்ணீர்பஞ்சம் தணிக்குமளவு துயரத்தில்!
மூன்றாண்டு ஓய்வுக்குப் பிறகு முதன்முறையாக - வேளைப்பளு!
காட்டாறாய்ச் சுரக்கின்றன - கண்ணீர்ச் சுரப்பிகள்!
விலகல்களின் நெருக்கம் - இதயத்தில் ஓர் இறுக்கம்!
நெருக்கங்களின் விலகல் - மனதில் நாளும் முனகல்!
தொடர்கல்வி கொண்டோர்க்கு தொடரும் நட்பு தினம் தினம்!
திசைமாறித் தவிப்போர்க்கு
நினைவுகள் மட்டுமே நிரந்தரம்!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக