ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Mon Apr 13, 2015 11:03 pm


சித்திரை மாதம் பிறப்பதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் `சித்திரை திருநாள் ` வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

"சித்திரை முதல் நாளை முதுவேனில் காலத்தின் தொடக்க நாளாக நெடுங்காலமாக தமிழ் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஐப்பசி, கார்த்திகையில் மேகங்கள் பொழியும் மழையை எதிர்கொண்டு, தமிழர்கள் கொண்டாடும் ஆண்டின் முதல் நாளான தைத் திங்களில் பொங்கல் திருவிழா கண்டு அறுவடை நடத்தி, ஆவினங்களுக்கும், நிலத்துக்கும் நன்றி செலுத்தி மாசி, பங்குனியில் வசந்தத்தையும் இளவேனிலையும் வரவேற்று மகிழ்ந்து, சித்திரைத் திங்களில் கடற்கரை மணல் வெளியில், ஆற்றுப் படுகைகளில் தமிழர்கள் விழா எடுத்து வந்துள்ளனர்.

இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. “சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்” என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார்.

வெப்பம் மிகுந்துள்ள இக்காலத்தில், குளிர்ந்த நீரையும், பழங்களையும் வழங்கி கோடையின் தகிப்பைப் போக்குதல் தமிழர்களின் வழக்கமாகும்.

தமிழக வாழ்வாதாரங்களுக்கு, குறிப்பாக காவிரி நீர் உரிமைக்கு கேடு விளைவிக்க கர்நாடக அரசு முனைந்துள்ளது.

20 அப்பாவி தமிழர்கள் ஆந்திர அரசின் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட வேதனை தமிழ் இனத்தை சூழ்ந்துள்ள வேளையில், கொலைகாரர்கள் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 14 ஆம் நாள்தான் இந்திய அரசியல் சட்டத்தை யாத்துத் தந்த மாமேதை பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள். ஆதலால், அப்பெருமகனார் கனவுகண்ட சமூக நீதி மலர உறுதிகொள்வோம்.

தாய்த் தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.



சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Mon Apr 13, 2015 11:04 pm

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

" உழைப்புடனும், கொண்டாட்டத்துடனும் நெருங்கிய தொடர்புள்ள சித்திரை திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தை திங்கள் முதல் நாள் தான் தமிழ் புத்தாண்டு என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதன்படி தான் தை முதல் நாளாம் உழவர் திருநாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. சித்திரை முழுநிலவு நாளில்தான் மாமல்லபுரத்திலும், பூம்புகாரிலும் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள்.

அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறையும் காலம் என்பதால் சித்திரை திருநாள் முழுவதும் ஊர் முழுக்க திருவிழாக்கள் நடைபெறும். மக்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர். ஆனால் ஊழல் நிறைந்த ஆட்சியில் தமிழக மக்களால் கனவில் கூட மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை.
சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் ஊழல்களும், தீமைகளும் அகன்று உண்மையும், நன்மையும் துணை சேரும் என்று நம்பலாம். உலகுக்கே உணவு படைக்கும் உழவர் வாழ்விலும், உழைக்கும் தமிழர் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் சூழ வேண்டும் என்பதற்காக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ள நாம் நமது இலக்கை அடைவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த நன் நாளில் உறுதி ஏற்போம்" என்று அவர் கூறியுள்ளார்.

இதே போல கொங்கு நாடு ஜனநாயகக் கட்சி தலைவர் ஜி.நாகராஜ் , "தமிழகத்தில் ஒற்றுமை வளர வேண்டும்.மகிழ்ச்சி பொங்க வேண்டும் என தமிழக மக்கள் அனைவருக்கும் கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் மதுவை ஒழித்து,மனித வளத்தை மேம்படுத்தி ஒற்றுமை நிறைந்த வளமான தமிழகத்தை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை இந்நன்னாளில் ஏற்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by ayyasamy ram Tue Apr 14, 2015 2:49 am

வாழ்த்திய தலைவர்களுக்கு... சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! 1571444738
-
சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! ZeNUVXQtS6gaKDSiqhNQ+collage_2372814f
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Tue Apr 14, 2015 12:12 pm

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்:-

சித்திரை முதல் நாள் சிரமங்களை போக்கும் திருநாள் என தமிழர்கள் உவகையோடு கொண்டாடும் தமிழ்புத்தாண்டு தினத்தில் தமிழக மக்கள் அனைவரும் அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டி தே.மு.தி.க. சார்பில் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Tue Apr 14, 2015 12:13 pm

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்:

மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு காரணமாக தமிழக மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். இத்தகைய துன்பங்களில் இருந்து மக்கள் விடுபட்டு வருகிற மன்மத ஆண்டில் எல்லா வளங்களும் பெற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்துகிறேன். தமிழ் புத்தாண்டே வருக. தமிழக மக்களுக்கு புதிய பொலிவை தருக.


சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Tue Apr 14, 2015 12:14 pm

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

தமிழ் புத்தாண்டு சித்திரை-1, இத்தரையில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க முத்திரையாய் மத்தியில் மோடி ஆட்சி செய்கிறார். செல்வமகள் சேமிப்பு திட்டம் என பெண் குழந்தைகளை கொண்டாடி இருக்கிறார்.

அதே நல்லாட்சி தமிழகத்தில் மலர வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் நல்லாட்சியின் நன்மைகளை உணர வேண்டும். அதற்கு இந்த புத்தாண்டு வழி வகுக்கட்டும். வளம் கூட்டும் வாழ்க்கை மலர்ந்து, ஒளிக்கூட்டும் ஒளிமயமான வாழ்க்கையை தமிழருக்கு வழங்கட்டும்.


சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Tue Apr 14, 2015 12:14 pm

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

தமிழக அரசியல் கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு வேறுபாடுகளை மறந்து தமிழக பிரச்சினைகளை சுமூகமாக தீர்ப்பதற்கு முன்வர வேண்டும். உலகளவில் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தம் வாழ்வில் அனைத்து நலங்களையும், வளங்களையும் பெற்று வாழவும், உயரவும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Tue Apr 14, 2015 12:14 pm

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:-

தமிழ் புத்தாண்டான மன்மத வருடம் உலகம் எங்கும் உள்ள தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைப்பதை உறுதி செய்வதாக அமையட்டும். இந்த ஆண்டில் பருவமழை தவறாது பெய்து வறட்சி நீங்கி விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களில் உயரவும், தமிழ் மக்களின் வாழ்வில் வளமையும், மகிழ்ச்சியும் நிறைந்திருப்பதாக அமையட்டும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்களுக்கு என் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Tue Apr 14, 2015 12:15 pm

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

தமிழ் வாழவும், தமிழகம் செழிக்கவும், தமிழர்கள் தன்மானத்துடன் வாழவும் இழந்த உரிமைகளை மீட்கவும், புதிய நன்மைகளை உருவாக்கவும், அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அறம் தழைக்கச்செய்யும் ஆண்டாக தமிழ் புத்தாண்டு விளங்கட்டும்.


சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by சிவா Tue Apr 14, 2015 12:15 pm

புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்:-

பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சியில் வளமான தமிழகம், வலிமையான பாரதம், வெறும் வார்த்தைகளாக இல்லாமல், நடைமுறையில் இருக்க வேண்டும். உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் இனிய மன்மத ஆண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து! Empty Re: சித்திரை திருநாள்: தலைவர்கள் வாழ்த்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum