ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

+3
M.Saranya
சரவணன்
ராஜா
7 posters

Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by ராஜா Thu Apr 09, 2015 2:31 pm

ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.
2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு 95e4e69f-0d2b-4935-9e6c-8d3672c85db6_S_secvpf
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது. உடலை அசைக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள். ஆனால் வேலேரிக்கு 30 வயது ஆவதுடன், அவரது உடல் நிலையும் மோசமாகிவருகிறது.

இதனால் கடைசி முயற்சியாக, மிகவும் ஆபத்தான தலையை, மூளை சாவடைந்து ஆரோக்கியமாக உள்ள உடல் ஒன்றில் பொறுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இத்தாலியை சேர்ந்த, சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சை நிபுணரான செர்ஜியோ கனாவேரோ-வை தொடர்பு கொண்டார். மருத்துவர் செர்ஜியோவும் இந்த ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் உலகின் பல முன்னணி மருத்துவ நிபுணர்கள், இது மரணத்தை விட மோசமானது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 45 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கை வைத்து தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புதிய தலையை உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல், 8 நாட்களுக்கு பிறகு அந்த குரங்கு இறந்துவிட்டது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு, மூளை சாவு அடைந்த ஒருவரின் உடல் தேவை. மேலும் 36 மணி நேரம் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு மொத்தமாக 7 மில்லியன் யூரோ பணம் தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. வேலேரி ஸ்ரிடோனோவ் தலையை அதி நவீன பிளேடால் வெட்டி எடுத்து, உடலின் முதுகு தண்டுடன் இணைக்கவேண்டும். இதுதான் மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான செயலாகும். அறுவை சிகிச்சைக்கு பிறகு வேலேரி ஸ்ரிடோனோவ் அசைய கூடாது என்பதால் அவர் 4 நாட்களுக்கு கோமாவில் வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இந்த மரணத்துடனான விளையாட்டின் கதாநாயகன் வேலேரி ஸ்ரிடோனோவ் இதுபற்றி கூறும் போது, உங்களுக்கு பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள், பயமாக இருக்கிறது அதைவிட சுவாரசியமாகவும் இருக்கிறது. இதில் உள்ள ஆபத்துகளை புரிந்து கொண்டே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டுள்ளேன்.

இது முதன்முதலில் விண்வெளிக்கு பயணம் செய்தவரை போல் தான், எல்லோரும் எதிர்மறையாக நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. இதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்பதால் நான் இதை செய்யவில்லை, ஆபத்தான முயற்சிகளுக்கு தங்களை அர்ப்பணித்தவர்களால் தான் அறிவியல் இந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முயற்சிக்கு என்னுடைய குடும்பம் முழு ஆதரவு தெரிவித்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு கணினி துறையில் வேலேரி ஸ்ரிடோனோவ் வேலை பார்த்து வருகிறார்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by ராஜா Thu Apr 09, 2015 2:33 pm

அதிர்ச்சி அதிர்ச்சி இதற்கு என்ன பின்னூட்டம் இடுவதேன்றே தெரியவில்லை.

மனிதன் தன் நாகரீகத்தின் உச்சகட்டத்தை எட்டிவிட்டான் என்றே சொல்ல வேண்டும் , இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துவிட்டால். அதன் பிறகு என்னவெல்லாம் நடக்கும் இந்த உலகில் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by சரவணன் Thu Apr 09, 2015 3:50 pm

இதே நம்ம ஊரா இருந்தா பானையில (முதுமக்கள் தாழி) ஆள உள்ளார உட்கார வச்சு, கொஞ்சம் தண்ணி, ஒரு அகல் விளக்கு வச்சு உசுரோட பொதச்சிடுவோம்....... ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு TN_130923104604000000
இவங்களுக்கு அதை பற்றி எல்லாம் தெரியாது போலருக்கு நிறைய செலவு செய்றாங்க....

அறிவியல் வளர்ச்சியை பாராட்டியே ஆகணும்....


Last edited by சரவணன் on Thu Apr 09, 2015 4:04 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by M.Saranya Thu Apr 09, 2015 3:55 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by ஜாஹீதாபானு Thu Apr 09, 2015 4:19 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by krishnaamma Thu Apr 09, 2015 6:56 pm

அவரின் மன தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும் இங்கு புன்னகை  சூப்பருங்க

//இந்த மரணத்துடனான விளையாட்டின் கதாநாயகன் வேலேரி ஸ்ரிடோனோவ் இதுபற்றி கூறும் போது, உங்களுக்கு பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள், பயமாக இருக்கிறது அதைவிட சுவாரசியமாகவும் இருக்கிறது. இதில் உள்ள ஆபத்துகளை புரிந்து கொண்டே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டுள்ளேன்.

இது முதன்முதலில் விண்வெளிக்கு பயணம் செய்தவரை போல் தான், எல்லோரும் எதிர்மறையாக நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. இதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்பதால் நான் இதை செய்யவில்லை, ஆபத்தான முயற்சிகளுக்கு தங்களை அர்ப்பணித்தவர்களால் தான் அறிவியல் இந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முயற்சிக்கு என்னுடைய குடும்பம் முழு ஆதரவு தெரிவித்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.//



இந்த விபரீத ஆபரேஷன் வெற்றிபெற பெருமாளை வேண்டுகிறேன் புன்னகை 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by ayyasamy ram Thu Apr 09, 2015 7:26 pm


இந்த விபரீத ஆபரேஷன் வெற்றிபெற விநாயகரை வேண்டுகிறேன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by T.N.Balasubramanian Fri Apr 10, 2015 6:50 am

ayyasamy ram wrote:
இந்த விபரீத ஆபரேஷன் வெற்றிபெற  விநாயகரை வேண்டுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1129470


ஆம் ஆரம்பித்து வைத்தவர் அவர்தானே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by krishnaamma Fri Apr 10, 2015 11:21 am

T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:
இந்த விபரீத ஆபரேஷன் வெற்றிபெற  விநாயகரை வேண்டுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1129470

ஆம் ஆரம்பித்து வைத்தவர் அவர்தானே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1129530

அட்டகாசம் ஐயா புன்னகை .................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி வி.பொ.பா. சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு Empty Re: 2016-ல் உலகத்தின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
» ஆசியாவில் முதல் முறையாக கை மாற்று அறுவை சிகிச்சை நடத்தி கேரள மருத்துவர்கள் சாதனை
» அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும் AR ரஹ்மானும்.
» முழங்கால் அறுவை சிகிச்சை: மருத்துவக்குழு, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி - நடராஜன் டுவிட்
» முகமாற்று அறுவை சிகிச்சை: மருத்துவ துறையின் 'புதிய முகம்'

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum