ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா? Poll_c10கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா? Poll_m10கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா?

Go down

கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா? Empty கடனாளி மாணவனா? அறிவாளிமாணவனா?

Post by krishnaamma Thu Apr 09, 2015 10:20 am

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்குமாடல்ல மற்றை யவை' கல்விச் செல்வத்தைக் காட்டிலும் பெரியதொரு செல்வம் இந்த உலகத்தில் இல்லை என்று வள்ளுவர் வியந்துரைக்கிறார். ஒருவரை அடையாளம் காட்டும் தனிக்கூறுகளில் கல்விக்கே முதன்மைப் பங்கு. இதன் பொருட்டே அவ்வையும் 'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்கிறார்.

கிழக்கிந்தியக் கும்பலிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா, கல்வியின் அருமையை உணர்ந்ததால்தான் கல்வி என்பது அடிப்படை உரிமை எனும் சிந்தனைக்கு அடித்தளமிட்டது. இதன் பொருட்டே, முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொழில் உருவாக்கம், அடிப்படைக் கட்டமைப்பு வசதி ஆகியவற்றோடு கல்விக்கும் முதன்மையளித்து செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன.தமிழகத்தைப் பொறுத்தவரை மாபெரும் கல்விப் புரட்சிக்கு கால்கோளிட்டவர் காமராஜரே. அவர், தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற காலத்தில் கல்வியறிவு வெறும் 13 சதவீதம். உணவைக் காரணம் காட்டி கல்வி கற்க வராமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து வியக்க வைத்தவர்.

இன்றைய நிலை ?

கல்வியைக் கற்று அறிவாளியாய் சமூகத்திற்கு கிடைக்க வேண்டிய மாணவன், கடனாளியாய்த் திரும்புகிறானென்றால், நம் கல்வி முறை எதை நோக்கி பயணம் செய்கிறது என்பதுதான் இன்றைய கேள்வி. 


கல்வி வணிகமயமானது ஒருபுறமென்றாலும், அதனை நியாயப்படுத்தும் விதத்திலான அரசின் கொள்கை முடிவுகள் மற்றொருபுறம். நிர்வாகம், பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளை செல்வந்தர் குழந்தைகள் மட்டுமே கற்க முடியும் என்ற நிலையிருந்ததை மாற்றி, ஏழைக் குழந்தைகளும் கற்கும் விதமாக கல்விக்கடன் வழங்கி மத்திய அரசு மாற்றத்தை தொடங்கி வைத்தது. ஆனால் அக்கல்விக் கடன் வழங்குவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள். விளைவு, உலகக் கடனாளியாக நிற்கும் இந்தியாவின் பிரதிபலிப்பாக ஒவ்வொரு மாணவனும் 'மாணவக் கடனாளி'யாக கூனிக்குறுகி நிற்கின்றான்.


கல்வி வழங்குவது அரசின் கடமை என்ற நிலையிலிருந்து விலகி, அது ஒரு விற்பனைப் பண்டம் என மாற்றம் பெற்ற உலகமய சிந்தனையை ஒட்டி, இந்திய அரசு நடைபயிலத் தொடங்கி இருபது ஆண்டுகளைக் கடந்து விட்டது. இன்றைய தலைமுறையினருக்கு வழங்கப்படும் கல்வி என்பது எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணி என்பதை ஏனோ அரசுகள் உணரவில்லை. வளர்ச்சிக்கான, சமூக மாற்றத்துக்கான அடித்தளம் என்பது கல்வி முறையிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால் நடைமுறை அவ்வாறு உணர்த்தவில்லை.

எப்படி பெறுவது ?

அரசு வழங்கும் கல்விக்கடன் மூலம், அதிகபட்சமாக உள்நாட்டில் பயில 
ரூ.10 லட்சமும், வெளிநாட்டில் பயில ரூ.20 லட்சமும் பெற முடியும். இதில் ரூ.4 லட்சம் வரை பெற்றோரின் ஒப்புகைக் கையொப்பமும், ரூ.4 லட்சத்திற்கு மேல் ரூ.7.5 லட்சம் வரை பெற்றோரின் கையொப்பத்தோடு, மூன்றாவது நபரின் பிணைக் கையொப்பமும் தேவை. ரூ.7.5 லட்சத்திற்கு மேல் பெறும் கடனுக்கு சொத்துக்கள் அடமானமாகப் பெறப்படுகின்றன. கல்விக்கடன் பெறும் மாணவன் கல்வி நிறைவடைந்த காலத்திலிருந்து ஓராண்டுக்குப் பிறகு, அடுத்து வரும் பத்தாண்டுகளில் 120 மாதத் தவணைகளில் வங்கி நிர்ணயம் செய்துள்ள வட்டியின்படி கடனை திரும்பச் செலுத்த வேண்டும்.
வங்கிகளின் நிர்ப்பந்தம் 

வங்கிகள் இதற்கு நேர்மாறாகச் செயல்படுவதுதான் வருத்தம் தருகி றது. படிக்கும் காலத்திலேயே கடனை திருப்பி செலுத்த சொல்லி கொடுக்கின்ற நிர்ப்பந்தம் மாணவர்களுக்கு மன உளைச்சல் தருகிறது. கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்வதில் வங்கிகளுக்கிடையே வேறுபாடும் காணப்படுகிறது. குறைந்தபட்சம் 11 சதவிகிதத்தில் இருந்து 16 சதவீதம் வரை வட்டி வித்தியாசப்படுகிறது.

மாணவர்கள் இந்த தேசத்தின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் எதிர்காலச் சிற்பிகள் என்ற மனநிலையிலிருந்து அரசும், வங்கிகளும் மாணவர்களை அணுகத் தவறி நிற்கின்றன. கல்விக்கடன் நிலுவை எனச் சொல்லி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிழற்படத்தை ஒரு வங்கி வெளியிட்டு அசிங்கப்படுத்தியது மனிதமாண்புக்கு எதிரான செயலன்றோ? மாணவன் விரும்பும் கல்வியை அவனது தன்மானத்திற்கும், மரியாதைக்கும் இழுக்கின்றித் தரும் கடமை அரசுக்கு உண்டு.
இதுஒருபுறமிருக்க, உரிய நேரத்தில் வழங்கப்படாத கல்விக்கடனால், தற்கொலை செய்து கொண்டவரும் உண்டு. நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகவே சொத்துக்களை பிணையாகக் கொடுத்த ஏழைக் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்த கதைகளும் நிறைந்துதான் கிடக்கின்றன.

பெருந்தொழில் நிறுவனங்கள் தர வேண்டிய கடன் தொகை ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளதாக மத்திய அரசே கூறியுள்ளது. வங்கிகளையும், அரசுகளையும் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இயங்கும் அவர்களையல்லவா வங்கிகள் சந்திக்குக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்? பிற வாராக்கடன்களோடு ஒப்பிடும்போது கல்விக் கடன் கடுகளவு தானே.

கடந்த 2013--2014 ம் நிதியாண்டில் பல்வேறு வகைகளில் வங்கிகள் வழங்கிய கடன் தொகை ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 600 கோடி. இவற்றில் வசூல் செய்யப்பட்டது 30 ஆயிரத்து 590 கோடி. கடந்த 2000-2013க்கு இடைப்பட்ட 13 ஆண்டுகளில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட கடன் தொகை ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் கோடி. இத்தொகையின் மூலமாக 15 லட்சம் குழந்தைகளுக்கு கல்லூரி வரை இலவசமாக தரமான கல்வியை வழங்கியிருக்க முடியும்.

கல்விக்கடனை தள்ளுபடி செய்யவோ அல்லது வட்டியை குறைத்துக் கொள்ளவோகூட மாணவர் தரப்பிலிருந்து கோரிக்கை எழவில்லை. வழங்குகின்ற கடனை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நேர்மையாக, உரிய தவணைக்கெடுவில் திரும்பத் தருவதற்கே விருப்பம் கொண்டுள்ளனர் எனும்போது, வங்கிகளின் நிர்ப்பந்தங்கள் எதற்காக? லோக் அதாலத், கல்விக்கடன் தீர்வு முகாம் என்ற பெயரில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தொடர்ந்து கொடுக்கப்படும் நெருக்கடி எதற்கு?
கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் குறித்த பட்டியலை, இந்திய கடன் தகவல் ஆணையத்தில் பதிவு செய்வது மற்றொரு அபத்தம். கல்விக்கடன் தொடர்பான கொள்கைகளையும், நடத்தை நெறிமுறைகளையும் அரசு வகுக்க வேண்டும். இந்த தேசத்திற்குத் தேவை அறிவாளி மாணவனே தவிர, கடனாளி மாணவன் அல்ல என்பதை உணர்ந்து வங்கிகளும் செயல்பட வேண்டும்.


இரா.சிவக்குமார்எழுத்தாளர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum