புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவுக்காக... I_vote_lcapஅம்மாவுக்காக... I_voting_barஅம்மாவுக்காக... I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
அம்மாவுக்காக... I_vote_lcapஅம்மாவுக்காக... I_voting_barஅம்மாவுக்காக... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அம்மாவுக்காக... I_vote_lcapஅம்மாவுக்காக... I_voting_barஅம்மாவுக்காக... I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
அம்மாவுக்காக... I_vote_lcapஅம்மாவுக்காக... I_voting_barஅம்மாவுக்காக... I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவுக்காக... I_vote_lcapஅம்மாவுக்காக... I_voting_barஅம்மாவுக்காக... I_vote_rcap 
5 Posts - 45%
ayyasamy ram
அம்மாவுக்காக... I_vote_lcapஅம்மாவுக்காக... I_voting_barஅம்மாவுக்காக... I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
அம்மாவுக்காக... I_vote_lcapஅம்மாவுக்காக... I_voting_barஅம்மாவுக்காக... I_vote_rcap 
2 Posts - 18%
VENKUSADAS
அம்மாவுக்காக... I_vote_lcapஅம்மாவுக்காக... I_voting_barஅம்மாவுக்காக... I_vote_rcap 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவுக்காக...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 07, 2015 11:26 pm

பன்னிரண்டாம் வகுப்பு இறுதித் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த வேளை. பள்ளியில் ""ஸ்டடி லீவு'' தொடங்கிவிட்டது. எவ்வித பதட்டமும் இல்லாமல் ஆகாஷ் கூலாக எப்போதும்போல சுற்றித் திரிந்தவண்ணம் இருந்தான். ஆகாஷ் நன்றாகப் படிப்பவன்தான். இருந்தாலும் பொதுத் தேர்வு எழுதும்போது ஒருவித கலவரம் எல்லா மாணவர்களுக்கும் இருப்பது சகஜம். மாணவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, பெற்றோர்க்கு அது ஒரு பெரிய இறுக்கம் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

 ஆகாஷ் ஒரு அம்மா பையன். சதா அம்மாவைச் சுற்றிச் சுற்றி வருவான். ""பிளஸ் டூ படிக்கற பையன். என்ன இப்படி ஒரு குழந்தையைப்போல அம்மாவையே சுத்தறான்?'' என அக்கம் பக்கத்தினர் செய்யும் கேலிகளைக் கண்டுகொள்ளவே மாட்டான். 

 ஆகாஷின் அம்மா காமு ஒரு உழைப்பாளி. அதிகம் பேச மாட்டாள், மிக்க சாது. தன் குடும்பத்தை மிகவும் நேசிப்பவள். ஓய்ச்சல் ஒழிவின்றி சதா வேலை செய்துகொண்டே இருப்பாள். பார்த்துப் பார்த்து தன் குடும்பத்தைக் கவனிப்பதில் அவளுக்கு ஒரு திருப்தி. காமு அதிகம் படிக்காதவள். அவளுக்கு ஆகாஷின் படிப்பு பற்றி பயம் அதிகம் இருக்கவில்லை. தன் மகன் எப்படியும் நன்றாகப் படித்து தேறிவிடுவான் என்று முழுமையாக நம்பினாள். 

 மேலும் ஆகாஷின் தந்தை விஸ்வா, காமு, ஆகாஷ், விஸ்வாவின் வயதான தாய் தந்தையர் என்று எல்லோரும் ஒன்றாகக் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையுடன் வாழ்ந்தனர். காமு தன் குடும்பமே உலகமென நினைப்பாள். விஸ்வாவின் தாய் தந்தையர் அக்குடும்பத்தின் மதில் தூண்போல. ஒரு நல்ல முன் உதாரணமாகவும், வழிகாட்டிகளாகவும் விளங்கினர். ஆகாஷ் தன் குடும்பத்தின் மீது மிக்க அன்பும், மரியாதையும் வைத்திருந்தான். 

 ஆகாஷ் மட்டுமல்ல, வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவர்மீது ஒருவர் அன்புடனும், அக்கறையுடனும் பழகி வந்தனர். 

 ஆகாஷின் தந்தை விஸ்வா நன்கு படித்தவர். பேங்கில் பொது மேலாளராகப் பணிபுரிபவர். பொறுப்பான குடும்பத் தலைவர். வேலைப்பளு அதிகம் இருந்தபோதும், வீட்டு வேலைகளையும் அக்கறையுடன் செய்வார். மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், பால், மளிகை, காய்கறி வாங்குதல் போன்ற வெளி வேலைகளைச் சமாளிப்பது விஸ்வாவின் பொறுப்பு.

 விஸ்வாவிற்கு எப்போதும் முதல் மாணவனாக இருக்கும் தன் மகன் தனது விளையாட்டு புத்தியால் எங்கே பொதுத் தேர்வில் கோட்டை விட்டுவிடுவானோ என்ற பயம் அதிகமாய் இருந்தது. தினமும் காலை பணிக்கு புறப்படுமுன் ""ஆகாஷ், விடுமுறை நேரத்தை வீண் பண்ணாதே... நல்லா தயார் பண்ணு''என்று சொல்வார். பணி முடிந்து வீடு திரும்பியவர் ""என்னடா, இன்னிக்கு ஒழுங்கா படிச்சியா?'' என்று கேட்பார். எப்பொழுதும் மகனைப் பற்றிய சிந்தனைதான் அவருக்கு. 

 ஆகாஷ்,""கவலைப் படாதீங்கப்பா...,நல்லா தயார் பண்ணியிருக்கேன்...,நம்பிக்கை இருக்கு..., நல்ல மார்க் வாங்குவேன்''என்று பதில் கூறிவிட்டுச் செல்வான். அவனை மேலும் உற்சாகப் படுத்தவேண்டி ""ஆகாஷ், இங்க வா..., நீ தேர்வுல நல்ல மதிப்பெண் வாங்கினால் அப்பா உனக்கு நீ என்ன கேட்டாலும் செய்வேன்'' என்றார்.""நெஜமாவாப்பா?''

 என்று கேட்ட ஆகாஷிடம் ""ஆமாண்டா...நிச்சயமா''என்று வாக்குக் கொடுத்தார். 
 ஆகாஷ் புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் படித்தான். தேர்வு எழுதினான். இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகிய செய்தி அறிந்து, தன் மகன் என்ன மதிப்பெண் பெற்றானோ என்று கவலையுடன் கணிணியில் முடிவுகளைப் பார்க்கப் போனார். அவர் எதிர்பார்த்ததைவிட அதிகமான மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் மட்டுமல்ல, மாநிலத்திலும் முதல் மாணவனாக விளங்கினான் ஆகாஷ்! மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார் விஸ்வா! 

 ஊடகங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளி லிருந்து பேட்டி என்று வீடே பரபரப்பாக இருந்தது! எல்லோரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்! விஸ்வாவும் காமுவும் ஆகாஷினால் பெருமையடைந்தனர்!
 ""அப்பா, நீங்க கொடுத்த வாக்கு என்னாச்சு?'' என்றான் ஆகாஷ்.
 ''உனக்கு என்ன வேண்டும் கேள்''என்றார் விஸ்வா.

 ""நாம எல்லாரும் தஞ்சாவூர் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகணும்ப்பா'' என்றான் ஆகாஷ்.
 என்னவோ கேட்கப்போகிறான் வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணிய விஸ்வாவிற்கு அதிர்ச்சி ஆயிற்று. தன் மனைவியின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று சில வருடங்கள் ஆகியிருந்தது.

 ""ஆமாண்டா ஆகாஷ். எத்தனை வருஷமாச்சு. தஞ்சாவூர்போய். கண்டிப்பா போலாம். நான் ஆபீஸýக்கு ஒரு வாரம் லீவு போட்டுடறேன். நீ, நான், அம்மா, தாத்தா, பாட்டி எல்லாருமே கட்டாயம் போகலாம்''.
 காமுவுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மகனின் வெற்றியோடு பிறந்த வீட்டிற்குக் குடும்பத்தினருடன் செல்லப் போகும் சந்தோஷத்தில் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தாள். 

 எல்லோரும் கிளம்பி தஞ்சாவூர் சென்றனர். காமுவின் பெற்றோருக்கு மாப்பிள்ளை, சம்பந்தி சகிதமாய் தன் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்தது, இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. பேரன் முதல் மாணவனானதை, குடும்பமே ஒன்றாகச் சேர்ந்து திருவிழாபோல கொண்டாடியது. காமுவின் தாயும், காமுவும் சேர்ந்து வகை வகையான இனிப்பு, பலகாரம், தின்பண்டங்கள் தயார் செய்து வேளா வேளைக்கு விதவிதமாய் அளித்தனர். அனைவரும் திருப்தியாய் உண்டு மகிழ்ந்தனர். கோயில் குளங்களுக்குச் சேர்ந்து சென்றனர். காமு தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தாள். ஒரு வாரம், ஒரு வினாடியாக முடிந்தது.

 கிளம்பும் தருவாயில் காமு ""ஆகாஷ் இங்க வாயேன்'' என்று தன் மகனை அழைத்தாள். ""என்னம்மா?'' என்றான் ஆகாஷ். காமு ஆகாஷின் இரு கரங்களையும் தன் கைகளுடன் சேர்த்துப் பற்றிக்கொண்டு அவனை நன்றியுடன் பார்த்தாள். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவளால் ஒன்றும் பேச முடியவில்லை. அவளது இரு கண்களிலும் ஆனந்த நீர்த்துளிகள். அம்மாவைப் புரிந்துகொண்ட விஸ்வா கண் சிமிட்டி புன்னகை பூத்தான்.
 
அனுராதா ஸ்ரீதர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக