ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டரை தொடர்பு கொள்ளும் ‘பேண்டேஜ்'

Go down

டாக்டரை தொடர்பு கொள்ளும் ‘பேண்டேஜ்' Empty டாக்டரை தொடர்பு கொள்ளும் ‘பேண்டேஜ்'

Post by சிவா Thu Apr 02, 2015 10:45 pm


உடலில் ஏற்படும் காயம், புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ் அந்தக் காயம் அல்லது புண்ணை கிருமிகளிடம் இருந்து காத்து, குணப்படுத்தும் வேலையை மட்டும்தானே செய்யும்?

ஆனால் காயம் மோசமானால், தானாகவே டாக்டருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யும் 'பேண்டேஜ்கள்' வரவிருக்கின்றன.

மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விமையம் மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இரண்டின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வு, அமெரிக்காவில் உள்ள ஆய்வுக்கூடத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய மருத்துவ சிகிச்சைமுறைகளின் செலவைக் குறைப்பது எப்படி என்பதும், தற்போதைய சிகிச்சையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதும்தான் இதில் ஈடுபட்டிருக்கும் ஆய்வாளர்களின் முக்கிய நோக்கம். அதன் ஒரு பகுதியாக அவர்கள் இந்த புத்திசாலித்தனமான பேண்டேஜ்களை வடிவமைப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

சரி, இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்களில் அப்படியென்ன தனிச்சிறப்பு அல்லது புத்திசாலித்தனம்?

இந்த பேண்டேஜ்களால் காயம் அல்லது புண்ணின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

அதாவது, இந்த பேண்டேஜில் இருக்கும் பல்வேறு சென்சார்களால், புண்ணில் இருக்கும் ஆக்சிஜனின் அளவு, அதன் அமிலத்தன்மையின் அளவு மற்றும் அதன் வெப்பநிலைமை ஆகிய மூன்று முக்கிய காரணிகளை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

புண்கள் அல்லது காயங்கள் மோசமானால் இந்த பேண்டேஜ்களால் உடனடியாக செயல்பட முடியும்.

இந்த பேண்டேஜின் பின்புறத்தில் சிகிச்சைக்கான மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த மருந்தை எந்த அளவுக்கு காயத்தில் அல்லது புண்ணில் செலுத்துவது என்பதை இந்த பேண்டேஜின் பின்புறத்தில் இருக்கும் சிறப்பு வெப்பமானி முடிவு செய்யும். அதாவது இந்த மருந்தைச் செலுத்தவேண்டும் என்று பேண்டேஜ் முடிவு செய்தால், பேண்டேஜின் பின்புறம் சூடாகும், மருந்துத் துகள்கள் சுருங்கும். அப்படி சுருங்கிய மருந்துத்துகள்கள் புண் அல்லது காயத்துக்குள் நேரடியாக செலுத்தப்படும்.

இந்த பேண்டேஜ் தேவைப்பட்டால் தானாகவே டாக்டரையும் தொடர்புகொள்ளும். ஆமாம். இந்த பேண்டேஜ் டாக்டரிடம் இருக்கும் தொலைத் தொடர்புக் கருவிக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பக்கூடியது. எனவே, இந்த புண் அல்லது காயத்தில் ஏதாவது பிரச்சினை என்று இந்த பேண்டேஜ் கண்டறிந்தால் அதுகுறித்து உடனடியாக டாக்டரிடம் இருக்கும்.

தொலைத்தொடர்புக் கருவிக்கு தகவல்களை அனுப்பும். உதாரணமாக புண் அல்லது காயத்தில் பாக்டீரிய தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று இந்த பேண்டேஜ் கண்டுபிடித்து தகவல் அனுப்பினால், உடனடியாக டாக்டர், பேண்டேஜில் இருக்கும் மருந்தின் அளவை அதிகப்படுத்தவோ அல்லது மருந்திடும் கால இடைவெளியை குறைக்கவோ செய்வார். அதன்மூலம் அந்த காயம் அல்லது புண்ணைக் குணப்படுத்தும் சிகிச்சையை தொலைதூரத்தில் இருந்தபடியே டாக்டரால் செய்ய முடியும்.

இனிமேல் எதிர்காலத்தில் இந்த வகையான பேண்டேஜ்களே காயங்களுக்கான சிகிச்சையின் அடிப்படையாக அமையுமா என்று தற்போதைய நிலையில் உடனடியாக சொல்ல முடியாது. காரணம் இந்த பேண்டேஜை உருவாக்கி லாபகரமாக விற்பனை செய்ய முடியுமா என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

ஆனால், இந்த ஸ்மார்ட் பேண்டேஜ் உருவாக்குவதற்கான ஆய்வின் முடிவுகள் பரிசோதனைக்கூடத்தில் முழு வெற்றி பெற்றால், வர்த்தக ரீதியில் இவை இரண்டே ஆண்டுகளில் சந்தைக்கு வந்துவிடக் கூடும்.

மின்னணுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காயம் மற்றும் புண்களைக் குணப்படுத்தும் மருத்துவ முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் எதிர்பார்க்கப்படும் வெற்றி கிட்டுமானால் காயங்கள் மற்றும் புண்களை குணப்படுத்துவதில் இது மிகப்பெரிய திருப்பு முனையாக பார்க்கப்படும்.

காரணம், காயத்தைக் குணமாக்கும் தற்போதைய சிகிச்சை முறை காலதாமதமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொருமுறையும் இந்த காயத்தின் கட்டுகளை பிரித்துப்பார்த்து மருந்து போடும் முறையால் காயம் ஆறுவதற்கு நீண்டநாட்கள் பிடிக்கின்றன.

தற்போதைய சிகிச்சை முறையில் ஒவ்வொரு முறையும் காயத்தின் கட்டுகளைப் பிரித்து மீண்டும் புதியகட்டு போடும் சமயத்தில் புதிய தொற்றுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

அத்தகைய ஆபத்துக்களையும், காலதாமதத்தையும் இந்த ஸ்மார்ட் பேண்டேஜ்கள் குறைக்கும் என்று இவற்றை உருவாக்கும் மருத்துவ ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.


டாக்டரை தொடர்பு கொள்ளும் ‘பேண்டேஜ்' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum