ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்

Go down

கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ் Empty கம்பரின் கற்பனையில் கதிரவன்- கு.காமராஜ்

Post by CHENATHAMIZHAN Sun Mar 29, 2015 1:39 pm

கம்பரின் கற்பனையில் கதிரவன்
                                                                                     கு.காமராஜ், எம்.ஏ, எம்,ஏ, எம்.ஃபில்.,
                                                                          முனைவர் பட்ட ஆய்வாளர்,பாரதியார் பல்கலைக்கழகம்.

(பன்முக நோக்கில் கம்பராமாயணம் என்னும் தலைப்பில் நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட ஆய்வுக்கட்டுரை)

     ஒரு இலக்கியப் படைப்பாளியின் கருத்திற்கும் கற்பனைக்கும் அவர் சார்ந்திருக்கும் நாட்டுச் சூழல்தான் அடிப்படைக்காரணம் என்பதனைப் பல்வேறு இலக்கியங்களின் வாயிலாக அறியமுடிகிறது. ஆலங்கட்டி மழையில் நனைந்தால் எப்படியிருக்கும் என்பதனை உணர்வுபூர்வமாக வருணனையில் வடிக்கவேண்டுமெனில் அதில் நனைந்தவரால்தான் முடியும். அவ்வாறே மலை, காடு, வயல்வெளி, கடல், பாலைவனம்- என எவ்வகையான இயற்கையின் வடிவங்களாக இருந்தாலும் அவற்றைச்சார்ந்து வாழ்பவர்களாலேயே எழுத்திலும் அவற்றை முழுமையாய்க் கொணரமுடியும். அதனாலேயே தங்கள் வாழ்வியலோடு கலந்த இயற்கைப் பொருட்களைப் பாடுபொருட்களாகக் கொண்டு பாக்கள் வடிக்கும் வழக்கம் உலகக்கவிஞர்களிடையே  பரவியிருக்கிறது எனக்கொள்ளலாம்.

       செழிப்பான இயற்கைச்சூழ் நிலப்பரப்பினைக் கொண்ட தமிழகத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களிலும் இயற்கை முக்கியப்பங்கினை வகிக்கிறது. உயர்ந்த மலைகள்,  அடர்ந்த காடுகள், பசுமையைப்போர்த்தியிருக்கும் வயல்வெளிகள், முப்புறமும் சூழ்ந்திருக்கும் கடல், காலைக்கதிரவனின் உதயம், மாலைக் கதிரவனின் மறைவு, குன்றுகளிலிருந்து குளிர்ச்சியாய்ச் சாடும் அருவிகள், நிறைந்தோடும் ஆறுகள், அகன்ற ஏரிகள், அழகிய குளங்கள்  எனப்  பலவகை இயற்கைக் கலவைகளைக் கண்டுகளித்து வாழ்ந்ததால் தமிழ்ப்புலவர்களின் கற்பனைகளும் இயற்கையை ஆழமாய் ஊடுருவின.  புலவர்களின் கற்பனை ஊற்றுக்குத் தோற்றுவாயாகத் தமிழகத்தின் கவின்மிகு இயற்கை அமையப்பெற்றதனாலேயே  தமிழன்னையின் இலக்கிய அணிகலன்களில் ஏராளமான இயற்கை முத்துக்கள் மிளிர்கின்றன எனலாம்.
கற்பனைச்சிறப்பால் காப்பியத்தின் தரத்தைச் சிகரத்தில் ஏற்றிய புலவர்களுள்  முன்னவராகத் திகழ்பவர் கம்பர். இராமகாதை நிகழ்ந்தகாலத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் வான்மீகியால்  படைக்கப்பட்ட இராமாயணத்தைத் தழுவி இயற்றப்பட்ட கம்பராமாயணம்,  “கற்பனையழகில் மூலநூலையே மிஞ்சிவிட்டது” என்று போற்றப்படும் அளவிற்கு உலகக் காப்பியங்களுள் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. அத்தகைய கம்பராமாயணக் கதையோட்டத்தின் கற்பனைக்காட்சிகளில் பல்வேறு இயற்கைப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் கதிரவன் குறித்த கம்பரின் கற்பனை இக்கட்டுரையில் இடம்பெறுகிறது.

மிதிலையில் தமிழ்க்கதிரவன்

    கடலையும் மலையையும் காணாதவர் இருக்கலாம், அருவியையும் நதியையும் காணாதவர் இருக்கலாம் ஆனால் கதிரவனைக் காணாத மாந்தர் உலகில் இருக்கமுடியாது. அதனால்தான் அண்டவெளியில் மட்டுமல்லாது  அவனியின் இலக்கியங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் கதிரவன். ஆனால் கதிரவனின் தோற்றத்தையும், மறைவையும் குமரிக்கடலில் காண்பவரின் கற்பனையும் அவற்றைப் பாலைவனப்பகுதில் காண்பவரின் கற்பனையும் ஒரேமாதிரியாக இருக்க வாய்ப்பில்லை.  அந்தவகையில் முப்புறமும் ஆழியால் சூழப்பட்டிருக்கும் தமிழர்நாட்டில் பிறந்த கம்பர்,  கடலிலிருந்து எழும் காலைக்கதிரவனையும்   சாயும் மாலைக்கதிரவனையும் கண்ணுற்றவர். அதனால்தான் மிதிலை மாநகரில் மறையும் ஆதவனும் அவரது கற்பனையில் தமிழ்க்கதிரவனாகத் தெரிகிறான்.

    தற்போதைய நேபாள நாட்டிலிருக்கும் சனக்பூர் நகரம்தான் அன்றைய மிதிலை என்று நம்பப்படுகிறது. சீதையின் தந்தையான சனகனின் பெயரினால் சனக்பூர் என்றழைக்கப்படும் இந்த மிதிலை நகரில்தான்  இராமாயணக் கதையின்படி இராமரும் சீதையும் முதன்முதலாகச் சந்தித்தனர். “கண்ணும் கண்ணும் கவ்வ இருவர் உணர்வும் ஒன்றாகி அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்” என்று கம்பர் பாடியதும் அந்தச் சந்திப்பைத்தான். இராமபிரானோடு உணர்வால் இணைந்துவிட்டபின்பு சீதையின் மனதில் ஏற்பட்ட ஏக்கத்தைக் “காமத்தீ” என்று குறிப்பிடும் கம்பர், அந்தக் காமத்தீயின் வெம்மையினைக் கதிரவானாலும் தாங்கமுடியவில்லை என்கிறார்.

“அன்ன மென் நடையவட்கு அமைந்த காமத்தீ
தன்னையும் சுடுவது தரிக்கிலான் என
நல் நெடுங் கரங்களை நடுக்கி, ஓடிப்போய்
முன்னை வெங் கதிரவன்- கடலில் மூழ்கினான்”
                                                      (பாலகாண்டம்-மிதிலைக்காட்சிப் படலம்)

“அன்னம்போன்ற நடையழகுடைய சீதைக்கு ஏற்பட்ட காமத்தீயானது அவளைமட்டுமன்றித் தன்னையும் சுடுவதைப் பொறுக்கமாட்டாத கதிரவன் தனது கதிர்க் கைகளெல்லாம் நடுங்க கடலில் மூழ்கினான்” என்று மிதிலையில் மறையும் கதிரவனையும், சீதையின் நிலையினையும் கற்பனையோட்டத்தால் மெருகேற்றியுள்ளார் கம்பர். கடல் எதுவும் இல்லாத மிதிலையின் கதிரவ மறைவானது கடல்சூழ்ந்த தமிழகத்துக் கவிஞரான கம்பரின் கற்பனைக் கண்களுக்குக் கடலுள் தெரிவதனை இதன்மூலம் அறியலாம்.

நெற்றிக்கண் கதிரவன்

      பண்டைக்காலத்தில் சமயச்சார்பற்ற வாழ்க்கைமுறையினைக் கொண்டிருந்த தமிழர் இயற்கையையும், முன்னோர்களையும், வீரர்களின் நடுகற்களையும் வணங்கினர் என்பதனை வரலாற்றின் மூலம் அறியமுடிகிறது. சமயம்சார்ந்த வழிபாட்டுமுறை ஏற்பட்ட பின்னர் சிவனை வழிபடுவோர் சைவர் எனவும் திருமாலை வணங்குவோர் வைணவர் எனவும் அழைக்கப்பட்டனர்.
சைவர் மற்றும் வைணவரிடையே இறைவனின் பெயரால் ஏற்பட்ட பூசல்கள்  மாற்றுச்சமய நம்பிக்கையாளர்களை மன்னர்களின் துணையோடு கொலைசெய்யுமளவிற்குச்  சமயவெறியாக மாறியிருந்தது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி கலப்புத் தமிழ்இனமான சாளுக்கியச் சோழர்கள் தமிழ்மண்ணை ஆண்டகாலத்தில்தான் இத்தகையச் சமயப்பூசல்கள் உச்சநிலையில் இருந்திருக்கின்றன. அந்தவகையில் சாளுக்கியச் சோழனான குலோத்துங்கனின் அவைப்புலவராக அறியப்படும்  கம்பர் வாழ்ந்த காலத்திலும் சைவ-வைணவ மோதல்கள் மிகுந்திருக்கவேண்டும். ஆக,  சமயமோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் இராமனை திருமாலின் அவதாரமாக முன்னிறுத்தி கம்பரின் இராமவதாரம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் வைணவ இலக்கியமான கம்பராமாயணத்தில்  சிவபெருமானையும்  குறிப்பிட்டு தமது சமயப் பொறையுடைமையைக் காட்டியுள்ளார் கம்பர் என்பதனை,  

“ புதை இருளின் எழுகின்ற புகர்புக
 யானையின் உரிவைப் போர்வை போர்த்த
 உதயகிரி எனும் கடவுள் நுதல் கிழித்த
 விழியேபோல் உதையஞ் செய்தான்”
                                            (மிதிலைக் காட்சிப்படலம்)
என்னும் பாடலடிகளின் வாயிலாக அறியமுடிகிறது.

   ‘பகலவன் உதிக்கும் மலை’ என்னும் பொருளில் உதயகிரி என்றுகுறிப்பிட்டவர் அதன் கருமை வண்ணத்தை வர்ணிக்க யானையின் தோலைப் போர்த்தியிருப்பதாகக் கற்பனைசெய்கிறார். அத்துடன் அந்த மலையிலிருந்து உதிக்கும் கதிரவனை, நெற்றியைக் கிழித்து வெளிப்படும் சிவபெருமானின் நெற்றிக்கண்ணுக்கு உவமையாக்கியிருக்கும் கவியழகு,   ‘கற்பனையின் கடவுள்தான் கம்பரோ’ என்று வியக்கும் அளவிற்கு உள்ளது.

குருதியில் குளித்த கதிரவன்

      தமிழ் இலக்கியங்களில் அதுவரை இடம்பெறாத சொற்கள் பற்பல கம்பரின் காவியத்தில்  மின்னுவதைக் காணமுடிகிறது.

“...அல்லின் மாரி அனைய நிறத்தவள்
சொல்லும் மாத்திரையின் கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்: அது
வில்லின் மாரியின் வீரன் விலக்கினான்”
                                            (பாலகாண்டம்: தாடகைவதைப் படலம்)

   தாடகையின் நிறத்தினை இரவில் பெய்யும் மழைக்கு உவமையாக ‘அல்லின் மாரி’ என்று குறிப்பிட்ட கம்பர், ஒரு சொல்லினை உச்சரிக்கும் நேரத்திற்குள் கடலையே தூர்த்துவிடும் அளவிற்கு கற்களை வீசியெறிந்தாள் என்பதனைச் சுட்ட ‘கல்லின் மாரியைக்  கைவகுத்தாள்’  என்கிறார்.  அவற்றையெல்லாம் தனது அம்புகளால் தடுத்த இராமனை ‘வில்லின் மாரியின் வீரன்’ என்று புகழ்கிறார். ஆக அல்லின் மாரி, கல்லின் மாரி, வில்லின் மாரி- என்று கம்பர் தனது கவியால் “சொல்லின் மாரி” பொழிந்துள்ளார். கவிச்சக்கரவர்த்தியின் இத்தகையச் சொல்லாட்சி, யுத்த காண்டத்தில் அவர் காட்சிப்படுத்தும் கதிரவனின் எழுச்சியிலும் தொடர்கிறது.
‘ஒரு செயலை ஏழுமுறை செய்துவிட்டால் அது முழுமை நிலையினை அடைந்துவிட்டதாகிவிடும்’ என்ற நம்பிக்கை பண்டுதொட்டு நிலவி வருவதனை பழக்கவழக்கங்கள்,  இலக்கியச்சான்றுகள் மற்றும் புராணச்செய்திகளின் மூலம் அறியமுடிகிறது.

   கரிகால்சோழன் தன்னிடம் பரிசில் பெற்ற பாணருடன் ஏழு அடி நடந்து சென்று அவர்களை வழியனுப்பும் வழக்கமுடையவன் என்ற செய்தியினை பொருநராற்றுப்படையின் வாயிலாக அறியமுடிகிறது. இந்த வழக்கம் பற்றிய குறிப்பு  ரிக்வேதத்தின் சுலோகங்களிலும் இருப்பதனைக் காணலாம். இவை மட்டுமன்றி அந்தணரால் வேதமந்திரங்கள் ஓதி நடத்திவைக்கப்படும் திருமணங்களில், நெருப்பை வலம்வரும் மணமக்கள் ஏழு அடி நடக்கும் வழக்கமும் நடைமுறையில் இருப்பதனைக் காணமுடிகிறது. அத்துடன்  ஏழுபிறவி, ஏழுகடல் முதலான சொற்களும்  ஈண்டு நினையத்தக்கவை.

    அவ்வண்ணமே அரக்கசேனையின் குருதியால் உப்புநீர்க் கடலும் குருதிநீரால் சிவந்தது என்று யுத்தக்காட்சியை விளக்கும் கம்பருக்கு, போர்க்காலத்தில் உதித்த கடுஞ்சிவப்பு பகலவனும் குருதிவெள்ளத்திலிருந்து ஏழு முறை மூழ்கி எழுந்தவனாகத் தெரிகிறான். ‘தனது ஒளிக்கரத்தால் இருள் என்னும் யானையைக் கொன்று ஏழுமுறை குருதிவெள்ளத்துள் மூழ்கி எழுந்தவன் போல உதித்தான் கதிரவன்’- என்னும் தற்குறிப்பேற்ற அணியின்  கற்பனைச்சிறப்பினை

“அதிரும் வெஞ் செரு அன்னது ஒன்று அமைகின்ற அளவில,
கதிரவன் செழுஞ் சேயொளிக் கற்றை அம் கரத்தால்,
எதிரும் வல் இருட் கரி இறுத்து, எழு முறை மூழ்கி,
உதிர வெள்ளத்துள் எழுந்தவன் ஆம் என, உதித்தான்.”
                                                        (யுத்தகாண்டம்:படைத்தலைவர் வதைப்படலம்)
என்னும் பாடலடிகளால் அறியமுடிகிறது.



சிகரமும் சிறுகுன்றுகளும்

“பாற்கடலை பூனை ஒன்று நக்கிக்குடிக்க முயற்சிப்பதைப்போல் மாபெரும் இராமகாதையை நான் எழுத முற்பட்டுள்ளேன்”- என்று கம்பர் வெளிப்படுத்திய  அவையடக்கத்தினை,
                     “ஒசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
                      பூசை முற்றவும் நக்கு புக்கென...”
என்னும் நூற்பாவடிகள் தாங்கி நிற்கின்றன. ஆனால் ‘தனது சொல்லாட்சியினால் கடலை மட்டுமல்லாது மொத்த பிரபஞ்சத்தையுமே  காப்பியத்துள் அடக்கியவர் கம்பர்’ என்று கூறுமளவிற்கு இலக்கியமேதைகளின் பார்வையில் உயர்ந்து நிற்கிறார் அவர்.  

    “ ஹோமர் எழுதிய இலியட்டையும், வெர்கில் எழுதிய ஈனியட்டையும், மில்டனுடைய சுவர்க்க நீக்கத்தையும் மட்டுமல்லாமல் மூலநூலான வான்மீகி இராமாயணத்தையும் கூட அதன் பெருங்காப்பிய அம்சத்தினால் கம்பராமாயணம் வென்றுவிட்டது”- என்னும் வ.வே.சு. ஐயரின் கூற்று உண்மை என்பதனை இன்றளவும் உலகுக்கு விளக்கிக்கொண்டிருக்கிறார் கம்பர்.

     எவராலும் முறியடிக்கப்படாமல் என்றென்றும் நிலைத்திருக்கும் ஆற்றல்மிக்கவை சிலரின் சாதனைகள். காமராசரின் கல்விப்புரட்சி, கண்ணதாசனின் திரையிசைப் பாடலியற்றுத்திறன், சிவாஜிகணேசனின் நடிப்பாற்றல்,  எடிசனின் அறிவியற் கண்டுபிடிப்புத்திறன் போன்றவற்றை இவற்றிற்குச் சான்றாகக் குறிப்பிடலாம். இவ்வண்ணமே எவராலும் மிஞ்சமுடியாத கற்பனைத்திறத்திற்கும், வெல்லமுடியாத சொல்லாட்சிக்கும்  சொந்தக்காரராகக் கம்பரும் நிலைகொண்டிருக்கிறார்.

       வான்மீகியைத் தொடர்ந்து எத்தனையோ இராமாயணங்கள் இயற்றப்பட்டுள்ளன. வடமொழியில் போசராசனால் எழுதப்பட்ட சம்புராமாயண், காளிதாசரின் இரகுவம்சம், துளசிதாசரின் இராமசரிதமானசு, இராமசர்மாவின் அத்யாத்மராமாயண் தெலுங்கில் கோணபுத்தரெட்டியால் எழுதப்பட்ட இரங்கநாத ராமாயணம், கன்னடத்தில் நரஹரியின் தொரவேராமாயணம், மலையாளத்தில் துஞ்சத்து எழுத்தச்சனின்  அத்யாத்மகதா, மராட்டியில் ஏகநாதரால் எழுதப்பட்ட பாவார்த ராமாயணம், வங்காளமொழியில் கிருத்திவாசின் கிருத்திவாசராமாயணம், ஒரியமொழியில் பலராமதாசின் செகமோகன்ராமாயணம், அசாமி-யில் மாதவ்கந்தலியின் அசாமிராமாயணம்- இவ்வாறு கூறிக்கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கம்பராமாயணம் என்னும் மிக உயர்ந்த சிகரத்தின் முன்னர்  சிறுகுன்றுகளாகவே தெரிகின்றன. உலகமாக்கவிஞர், கவிச்சக்ரவர்த்தி- என்று போற்றப்படும் கம்பர், கதிரவன் இருக்கும்வரை இலக்கிய உலகில் இருந்துகொண்டுதானிருப்பார்.
                         ===============================================================
CHENATHAMIZHAN
CHENATHAMIZHAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 04/02/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum