புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
366 Posts - 49%
heezulia
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
25 Posts - 3%
prajai
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_m10தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 27, 2015 11:10 pm

தாலியும் தமிழரும்! - "செந்தமிழ் வேள்விச் சதுரர்" திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார் எழுதியது தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? DNkpdAyQSqi2ovDHtDTI+images

என் கைபேசி பாடி அழைத்தது; அன்று 12-3-2015. எடுத்துப் பேசியதில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியிலிருந்து பழகிய குரல் என்னை அழைத்தது. அன்று மாலை ‘மக்கள் மேடை’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துக்களைக் கூற வேண்டும் என்றார் அவர். எது பற்றி என்று கேட்ட போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி வளாகத்தில் அன்று காலை 3.00 மணிக்கு யாரோ சில விஷமிகள் குண்டு எறிந்து அது வெடித்தது என்றும், நல்ல வேளையாக எந்த நபரும் அதனால் பாதிக்கப்படவில்லை என்றும், அந்த வளாகத்தின் சில பகுதிகள் சேதாரமடைந்தன என்றும் சொன்னார்.

  எதனால் இந்தக் குண்டு வெடிப்பு என்று கேட்ட போது இரு நாட்களுக்கு முன் ‘உரக்கப் பேசுவோம்’ என்ற நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தது என்றும், அந் நிகழ்ச்சியின் தலைப்பு ‘தாலி மகளிர்க்கு அவசியமா’ என்றும், மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக அதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும், அவசியம் என்று 32 மகளிரும், தேவையே இல்லை என்று 32 மகளிரும் கலந்து கொண்டு விவாதித்தனர் என்றும் சொன்னார். உண்மையிலேயே ‘சிறப்பு’ நிகழ்ச்சி தான் இது என்று சிரித்துக் கொண்டே நான் சொல்லி, குண்டெறிதல் வரை கூட்டிச் சென்றது சிறப்பு தானே என்றேன்.

  உண்மையிலேயே நிகழ்ச்சி ஒளிபரப்பப்படவே இல்லை என்றார். பிறகு ஏன் இந்தக் குண்டெறிதல் என்று கேட்டேன். நிகழ்ச்சி ஒளி பரப்பப்படப் போகிறது என்று அதிலிருந்து சில காட்சிகளை மட்டும் முன்னாளிலிருந்து முன்னோட்டம் தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்பட்டு வந்தது என்றும், அதில் தாலி தேவை இல்லை என்ற கருத்துடைய ஒரு பெண் நிகழ்ச்சி அரங்கிலேயே தாலியைக் கழற்றி எறிகிற காட்சி காட்டப்பட்டது என்றும் இதைப் பார்த்து ஆத்திரமடைந்த சிலர் நிகழ்ச்சி ஒளி பரப்பப்படும் நாள் காலை கூட்டமாக வந்து தொலைக்காட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து அங்கு பல லட்சக் கணக்கான மதிப்புடைய ஒளிப்பதிவுக் கருவிகளைப் போட்டு உடைத்து எறிந்துவிட்டு, அலுவலகத்தில் பணி புரியும் பெண் நிருபர்கள், பணியாளர்களை வாய்க்கு வந்தபடி வசைமாரி பெய்து கலகத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஏதோ ஒரு இந்து அமைப்பினர் என்று கூறிக் கொண்டனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்து அந்நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டது தொலைக்காட்சி நிர்வாகம். எனவே அந்நிகழ்ச்சி ஒளி பரப்பப்படவே இல்லை.

   ‘இருந்தும் ஏன் குண்டெறிதல்?’ என்று கேட்டேன். குண்டெறிதல் அன்று நடக்கவில்லை என்று இரு நாட்கள் கழித்து 12-3-2015 ஆகிய இன்று காலையில் தான் நடந்தது. இது பற்றி தான் இன்று ‘மக்கள் மேடை’ நிகழ்ச்சியில் அலச இருக்கிறோம், தாங்கள் வர இயலுமா என்று வேண்டுகோள் விடுத்தனர். சரி, என்று ஒப்புக்கொண்டு என் இல்லத்தில் தொலைக்காட்சியைத் திருப்பினால் இது பற்றிய செய்தியே எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பாகிக் கொண்டிருந்தன. ஏன், நாடாளுமன்றத்திலேயே கண்டனக் குரல்கள் ஒலித்தன. ‘ஜெயம்’ என்ற பெயருடைய ஒரு இளைஞர் காவி உடையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் இது தொடர்பாக சரணடைந்து, தான் ‘இந்து இளைஞர் சேனை’யின் தலைவர் என்றும், தான் தான் குண்டெறியச் செய்தவன் என்றும் ‘மிக்க மகிழ்ச்சி’யுடன் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.

  அன்று ‘மக்கள் மேடை’ நிகழ்ச்சிக்கு ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்குச் சென்றிருந்தேன். எனக்கு இடம், வலமாக திரு.சித்தண்ணன் என்கிற ஓய்வு பெற்ற காவல் அதிகாரியும், மார்க்சிஸ்டு கட்சித் தலைவர்களில் ஒருவரான திரு.மகேந்திரன் அவர்களும் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சியில் கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களிலிருந்து சில அன்பர்களும் தொலையமர் காட்சியில் கலந்து கருத்துக்களைப் பரிமாறினர். நெறியாளராக திரு. G.S.வெங்கடபிரகாஷ் கேள்விகளை முன்வைத்துக் கொண்டிருந்தார்.

    நிகழ்ச்சியில் என்னிடம் வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு வந்தேன். ஆனால் அதன்பின் எந்தத் தொலைக்காட்சியைத் திருப்பினாலும் இது பற்றியே காரசாரமான விவாதங்களே நடந்து கொண்டிருந்தன. செய்தித்தாள்களிலும் இதே பரபரப்பு – விளைவு, தாறுமாறான கருத்துக்கள் தாலியைப் பற்றி வெளிவந்தன. தமிழ்க் கலாச்சாரத்தின் அடிநாதமான இது பற்றி இனியும் மௌனம் காத்தல் அறநெறியாகாது என்று உணர்ந்ததாலும், இது பற்றி தாங்கள் தெளிவாக்குங்கள் என்று ‘தெய்வ முரசு’ நேயர்கள் வற்புறுத்தியதாலும் இதை எழுத நேர்ந்தது.

 மேலே கூறிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குண்டெறிந்த வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துவிட்டு, எந்த மதமும் வன்முறையைப் போதிக்கவில்லை என்று அவை பற்றி மட்டும் கருத்துக்களைத் தெரிவித்தேனே ஒழிய சர்ச்சைக்குரிய ‘தாலி’ விவகாரம் பற்றி அதிகம் பேசவில்லை. ஆனால் தொடர்ந்து ‘தாலி’ பற்றி உண்மைக்கு மாறான கருத்துக்களே இரு சார்பாளர்களாலும் எடுத்து வைக்கப்பட்டு வருவதால் ‘தெய்வ முரசு’ அன்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியவனானேன்.

  சொல்லப்பட்ட நிகழ்ச்சியிலேயே திரு.மகேந்திரன் அவர்கள் சங்க இலக்கியங்களிலேயே தாலி பற்றி பேச்சே இல்லை என்றும், சங்க இலக்கியங்களில் துறை போன ஐயா அவர்கள் இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார்.

  அதே போன்று திரு.சித்தண்ணன் அவர்கள் இந்து திருமணச் சட்டத்தில் தாலியே கிடையாது; சப்தபதி என்கிற சடங்கு தான் முக்கியமானது என்று கூறப்பட்டிருக்கிறது என்றார்.

  இவ்விருவர்க்கும் மேற்படி நிகழ்ச்சியிலேயே விளக்கமளித்தேன். அது பற்றி விரிவாக வரும் பகுதியில் விவரிக்கப்படும்.

  16-3-2015 – ஆம் நாளிட்ட ‘தி இந்து’ என்கிற தமிழ் நாளேட்டில் தாலி பற்றிய சர்ச்சை இப்போது புதிதாக எழவில்லை என்றும், 1954-லிலேயே சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களும், ஆய்வறிஞர் மா.ராசமாணிக்கனார் அவர்களும் கருத்துப்போர் நடத்தி இருக்கிறார்கள் என்றும், ம.பொ.சி. சிலப்பதிகாரத்திலேயே தாலி பற்றிக் கூறப்பட்டுள்ளது எனவும் மா.ராசமாணிக்கனார் அதை மறுத்து எழுதி வந்ததாகவும் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

    இந்த விவாதங்களின் மொத்த சாரம் தான்: தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? (தொடரும்)

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Mar 28, 2015 8:36 am

தாலியின் அருமை பெருமை தெரியாத பையித்தியங்களின் முட்டாள்தனமா விவாதங்களுக்கு முக்கியத்துவம் ஏன்?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2015 9:00 am

தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக,
இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.

சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில்
புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள்,
மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.

நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக
மாறியிருக்கிறது

.பதி​னோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்
என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்
பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
வெளியிட்டிருக்கும்​ “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.
-
நன்றி- இணையம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Mar 28, 2015 12:35 pm

நல்ல பதிவு............. தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? 1571444738

ஆனால் இது ஆரோக்கியமான விவாதம் இல்லை.....



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 28, 2015 3:58 pm

2)தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? QNINxWpQL6MmWW2T1JdX+MKM-20150312SEG1

இந்த விவாதங்களின் மொத்த சாரம் தான்: தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா? உரியது தான் என்று கூறுபவர்கள் தெளிவான ஆதாதரங்களோடு தான் கூறுகிறார்களா? உரியது இல்லை என்று கூறுபவர்கள் மறுப்பிற்கான சரியான ஆதாரங்களை முன் வைக்கிறார்களா? என்றால், இருவருமே தாங்கள் தாங்கள் சார்ந்த சார்புகளால் உந்தப்பட்டு காய்தல் உவத்தல் இன்றி நடுநிலையோடு கூறவில்லை என்பது தான் உண்மை.

   முதலில் தாலி வேண்டும், அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று கூறும் குண்டெறிபவர்களையும், அவர்களுக்கு சார்பில் நின்று கொதிக்கக் கொதிக்க கூச்சலிடுபவர்களைப் பார்ப்போம்.

   இவர்கள் யார் என்றால் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி நடுவண் அரசில் கொற்றமாள வந்த பின் நேரடியாக முழு வீச்சோடு களங்களில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் புதிது புதிதாகப் புறப்பட்டிருப்பவர்கள். குறிப்பாக இக் குண்டெறிதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘இந்து இளைஞர் சேனை’ எப்போது தோன்றியது? அங்கீகாரம் பெற்ற அமைப்பா என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்று சொல்லப்பட்ட மக்கள் மேடை நிகழ்ச்சியில் கலந்து  கொண்ட இன்னொரு அமைப்பான இந்து மக்கள் கட்சியின் பிரதிநிதி கூறினார். அத்துடன் குண்டெறிந்ததற்கு தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தார். ஆனால் முதல் நாள் புதிய கருவிகளை உடைத்துக் கலகம் செய்தவர்கள் இந்து மக்கள் கட்சியும் அல்ல; இந்து இளைஞர் சேனையும் அல்ல; இன்னொரு விஷயம்: இந்து முன்னணித் தலைவரும் இத்தகைய குண்டெறிதல் கண்டனத்திற்கு உரியது என்று ஊடகங்களில் செய்தியைக் கசிய விட்டார்.

  எனவே இந்த இந்து அமைப்புகள் தனித்தனியாகச் செயல்படுபவை என்று தெரிகிறது. ஆனால் தாலியைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்பதில் மட்டும் ஒத்த கருத்துடையவர்கள். பா.ஜ.க. அன்பர்கள் கூட இக்கருத்தை தொலைக்காட்சி விவாதங்களில் ஆக்ரோஷமாக வெளியிட்டதைக் காண முடிந்தது.

   ஆனால் பா.ஜ.க. உள்ளிட்ட இந்த இந்து அமைப்புகள் தாலிக்கு ஆதரவாகப் பேசும் போதே கூட தாலி தமிழர்களின் பண்பாடு என்று சொல்வதில்லை. அது இந்துக்களின் பண்பாடு என்று தான் குரலெழுப்புகிறார்கள்.

   ஆனால் நண்பர் திரு.சித்தண்ணன் (ஓய்வு பெற்ற காவல் அதிகாரி) கூறியது போல இந்துத் திருமணச் சட்டத்தில் தாலியைப் பற்றிய பேச்சே இல்லை என்பது தான் பட்டவர்த்தனமான உண்மை. அது இந்துக்களின் பண்பாடு என்றால் இந்து திருமணச் சட்டத்தில் ஏன் இல்லை?

   அதே மாதிரி தமிழர்கள் இந்துக்கள் தானே என்றால் தமிழர்களின் திருமணத்தில், குறிப்பாக பிராம்மணப் புரோகிதர்களே நடத்தும் தமிழர் இல்லத் திருமணங்களில் கூட இந்து திருமணச் சட்டத்தில் இன்றியமையாதது என்று விதிக்கப்பட்டுள்ள ‘சப்தபதி’ சடங்கு ஏன் இல்லை? அப்படி என்றால் அவ்வாறு நடத்தப்பட்டு வரும் திருமணங்கள் எல்லாம் சட்டப்படி செல்லாதவை தானா? ஏன் இப்படி பிராம்மணப் புரோகிதர்கள் சட்டத்திற்கு மாறாக தமிழர்களுக்கும், சட்டத்திற்குட்பட்டு தமக்கும், தம் இனத்தார்க்கும் ‘சப்தபதியோடு’ சடங்கு செய்து திருமணங்களை செய்து வைக்கிறார்கள்?

    இந்தக் கேள்வியின் நோக்கம் சப்தபதி சடங்கை எல்லா திருமணங்களிலும் பரப்பிவிட வேண்டும் என்பதல்ல; பிராம்மணப் புரோகிதர்கள் சட்டப்படி தமக்கும், சட்டத்திற்கு மாறாக பிறர்க்கும் திருமணங்களைச் செய்வதன் உள்பொருள் அல்லது நோக்கம் என்ன என்பது தான் கேள்வி!

   இந்தக் கேள்வி எழுப்பப் படுவதன் காரணம், மேற்கூறிய இந்து அமைப்புகள் எதுவானாலும் அதில் உள்ளவர்கள் அனைவரும் பிராம்மணர்கள் அல்ல; அவர்களுக்கு தமக்குச் செய்து வைக்கப்படும் திருமணங்கள் இந்து சட்டப்படி செய்து வைக்கப்படுவதல்ல என்பதும், இந்து சட்டத்தில் தாலி இல்லை என்பதால் தாலியை இந்துப் பண்பாட்டின் கூறாக கொள்ள வேண்டியது இல்லை என்பதும் தெரியவே தெரியாது என்பது தான் உண்மை. இந்த உண்மையை அறிந்தால் அவன் தேவையின்றி குண்டெறியும் குதர்க்கமான வீரப் போராட்டங்களிலிருந்து விலகி நிற்பான் அல்லவா?

(தொடரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 28, 2015 4:13 pm

இருந்ததோ இல்லையோ ஆனால் கீழ்த்தட்டு மக்களின் மற்றும் விவசாயிகளின்
தாலி மார்வாடி கடையில் தான் இருக்கு - மேல்தட்டு மக்களில் இன்று பலர்
இருந்தும் அணிவதில்லை இல்லையேல் மாற்றி கொள்கிறார்கள்




Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 28, 2015 7:17 pm

தாலி தேவையோ இல்லையோ, இன்று தமிழர்களுக்குத் தேவை ‘பஞ்சாப் தாலி’ !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 28, 2015 9:30 pm

ஊடகங்கள் எதைஒன்னாலும் வெளியிடலாம் விவாதம் செய்யலாம் போல் தெரிகிறது. அதனால் .................என்னங்க இந்த விவாதம் தேவைதானா.? பெண்கள் ஆண்கள் உடை உடுத்தும் போது ஆண்கள் கழுத்தில்ங நாங்கள்..... கட்டினால் என்ன என்று வாதம்கூட செய்ய முன்வரும் பெண்பேய்கள் கூட இருக்கும்.......சே சே....

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Mar 29, 2015 1:51 pm



காஆஆஆஆஅர   சாரஆஆஆஆஅம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Mar 31, 2015 3:51 pm

3) தாலி தமிழர் பண்பாட்டிற்கு உரியதா, இல்லையா?  - தொடர்ச்சி

உண்மை தான்; சட்டத்தில் தாலி இல்லாவிட்டாலும் பிராம்மணர்கள் நடத்தும் தம் இல்லத் திருமணங்களில் சப்தபதியுடன் தாலி கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறதே என்று கேள்வி எழுப்பலாம்.

   முதலில் பிராம்மணர் இல்லத் திருமணங்களில் கட்டப்படும் தாலியும் தமிழர் இல்லத் திருமணங்களில் கட்டப்படும் தாலியும் ஒரே கருத்துடையவை என்று கருத முடியாது. காரணம், தமிழர் இல்லத் திருமணங்களில் கட்டப்படும் தாலி ஒன்று தான்; ஆனால் பிராம்மணர்களோ வேட்டகத்து தாலி என்றும் புகக்காத்துத் தாலி என்றும் இரண்டைக் கட்டுவார்கள். எனவே அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

   அடுத்து இந்தத் தாலி கட்டலும் பிராம்மணர்களிடையே மிகப் பிற்காலத்தில் தான் ஏற்பட்டது என்பதை காமகோடி மடம் வெளியிட்ட ‘விவாஹ மந்த்ரார்த்ங்கள்’ என்ற நூல் குறிப்பிடுகிறது. அதில் உள்ள பகுதியை இங்கே காண்போம்:

   “இந்தப் பாணிக்கிரகணத்துக்கு முன்னால் வெகு நாளைய சம்ப்ரதாயப்படி மாங்கல்ய தாரணம் என்ற சுபகர்மம் அனுஷ்டிக்கப்படுகிறது. மாங்கல்ய தாரணத்துக்கான வேத மந்த்ரம் ஒன்றும் இல்லாதபடியால் சூத்ரகாரர் அதைப்பற்றி இங்கே சொல்லவில்லை என்றே நாம் நினைக்க வேண்டி இருக்கிறது. இதைப்பற்றி நவீன ஆராய்ச்சியாளர்கள் பலவாறாகப் பேசுகிறார்கள்.

    திராவிட மக்களிடையே இந்த மாங்கல்ய தாரணம் என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருவதாகவும் அதையே ஆரியர்களும் கைக்கொண்டு விட்டதாகவும், ஆரியர், திராவிடர் என்றெல்லாம் நாட்டைப் பிரித்துப் பேசும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.” (பக்கம் 86; ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’)

    மேற்காணும் ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’ என்னும் நூல் எதன் அடிப்படையில் எழுந்தது என்றால், ‘ஆபஸ்தம்பர்’ என்ற மகாபுருஷர்’ எழுதிய சனாதன தர்ம நூல்கள் முப்பதில் இருபத்தைந்து இருபத்தாறாக இரண்டு ப்ரச்னங்கள் ‘கிருஹ்ய சூத்திரம்’ என்ற தலைப்பில் எழுதிய நூலின் அடிப்படையில் எழுந்தது. இவை வேதத்திலுள்ள ‘ஏகாக்கினி காண்டமாகிற மந்த்ர பாகம்’ என்று மேற்படி நூல் குறிப்பிடுகிறது.

    அது மேலும் குறிப்பிடுவதாவது: “ரிக் வேதத்தில் 10-ஆம் மண்டலத்தில் 85-ஆம் சூக்தத்தில் சோமன் என்கிற தேவன் விவாஹம் செய்து கொள்ள விரும்பி, சூர்யை என்பவளை மணந்து கொள்வதற்காக அச்வனி தேவதைகளை அனுப்பி வைத்தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த விவாஹ முறையைப் பின்பற்றித்தான் மந்த்ர ப்ரச்னத்தில் உள்ள மந்த்ரங்களும், கிருஹ்ய சூத்ர கிரமமும் ஏற்பட்டிருக்கின்றன”.

    இதற்கு மேலும் இந்நூலின் பக்கம் 45-ல் குறிப்பிடுவதாவது: “ஆபஸ்தம்ப சூத்திரத்தில் மாங்கல்ய தாரணம் வெளிப்படையாகச் சொல்லப்படாததனால் சிலர் பலவித ஊகங்களைச் செய்கிறார்கள். தொன்றுதொட்டு திருமாங்கல்ய தாரணம் வழக்கமாக இருந்திருக்காது என்றும், மற்றும் சிலர் தென்தேசத்திலிருந்து இந்த வழக்கத்தை நாம் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.”

   எனவே, ரிக் வேதத்தில் காணப்படும் ஒரு திருமணத்தின் மந்த்ர பாகத்தை எடுத்து ஆபஸ்தம்பர் திருமண மந்த்ரங்களையும் சடங்குகளையும் வரிசைப்படுத்தி எழுதியது தான் ஏகாக்னி காண்டத்தின் கிருஹ்ய சூத்ரம். அந்த விவாஹ மந்த்ரங்களை எடுத்து வரிசைப்பட ஆரிய திருமணச் சடங்குகள் காட்டி உரை செய்த நூல் தான் மேற்படி ‘விவாஹ மந்த்ரார்த்தங்கள்’ என்ற நூல்; காமகோடி மடத்தால் வெளியிடப்பட்டது.

   காமகோடி மட வெளியீடு மட்டுமல்ல; ‘மந்த்ர ப்ரச்னம்’ என்ற கடலங்குடி பப்ளிகேஷன் வெளியிட்ட நூலும் இதை இப்படியே உறுதி செய்கிறது.

   “இதுவே பாணிக்கிரஹணம் என்றதாலும் குறிக்கப்படுகின்றது. இந்தப் பாணிக்கிரஹணத்திற்கு முன்னால் ‘மாங்கல்ய தாரணம்’ என்றதொரு காரியம் நமது சம்பிரதாயத்தில் நடைபெறுகிறது. சாஸ்திரப் பயிற்சி அற்றவர்கள் அதையே பிரதான கார்யமாகக் கருதி லக்னம் முதலியன தவறா வண்ணம் மிக்க ஜாக்கிரதையுடன் நடத்தி வருகின்றனர் என்பது ப்ரத்யக்ஷமே. ஆயினும் கிருஹ்ய சூத்திரங்களிலோ, மந்திரங்களிலோ இவ்விஷயத்தைப் பற்றிக் கொஞ்சமேனும் கூறவில்லை. பாணிக்கிரஹணம், சப்தபதீ முதலியனவே பிரதானமாய் உபதேசிக்கப்பட்டிருக்கின்றன. இக்கார்யங்களுள் ஒன்றான பாணிக்கிரஹத்தைத் தான் நல்ல லக்னத்தில் தவறா வண்ணம் நடத்த வேண்டும் என்று சாஸ்திர மூலம் வெளியாகின்றது. ஆயினும் மாங்கலிய தாரணத்திற்கு மூலம் யாது என்பது முதலியவற்றை முகவுரையில் விசாரிப்பாம்.” ( – மந்த்ரப் ப்ரச்னம் – தமிழுரையுடன் – பக்கம் 34-35)

    ஆகவே, முன் காட்டியபடி வடவேத முறைப்படி செய்யும் திருமணச் சடங்கில் தாலி கட்டும் சடங்கே இல்லை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மேலும், தாலி கட்டும் வழக்கம் திராவிட மக்களிடையே தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம் என்றும் இதையே ஆரிய மக்கள் கைக்கொண்டு விட்டதாகவும் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கருத்தை முறைப்படி நூலாசிரியர் ஏற்றுக்கொள்ளவில்லை; இது ஆரியர்-திராவிடர் என்று நாட்டைப் பிரித்துப் பேசுபவர்களின் கருத்து என்பது ஒன்றே அவர் மறுப்பிற்குக் காட்டும் காரணம்.

    ஆனால் த்ராவிட என்ற சொல்லே சமஸ்கிருதத்தில் இருந்து தான் வந்தது என்பதால் அப்படி ஓர் இனம் ஆரியர்களுக்கு மாறானதாக இருந்தால் தானே அந்தத் ‘த்ராவிட’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் வந்திருக்கும்; எனவே அந்தச் சொல்லே காட்டிக் கொடுத்து விடுகிறது. அத்துடன் சில ஆராய்ச்சியாளர்கள் வேண்டுமென்றே மக்களை ஆரியர்-திராவிடர் என்று பிளவு படுத்துகிறார்கள் என்றால் இன்று தென்னாட்டில் உள்ள பெரும்பான்மையான கறுப்பு நிற திராவிட மக்களை இந்த நூலாசிரியரோ அல்லது ஆரியர்களோ தங்கள் இனம் என்று ஏன் ஏற்று கலந்து வாழாமல் தீண்டாமையைப் பின்பற்றி தவிர்க்கிறார்கள் என்பதற்குப் பதிலில்லை. நடைமுறையில் இவர்களே திராவிடர்களிடமிருந்து தம்மை தனிப்பிரிவாக பிளவுபடுத்திக் கொண்டு வாழ்ந்து கொண்டு வேறு யாரோ சிலர் பிளவுபடுத்துகிறார்கள் என்பது போலிக் கூச்சல்.

  மாறாக ஆரியர்-திராவிடர் என்கிற இரு வேறு இனங்கள் உண்டு என்பதற்கு உலகெங்கிலுமுள்ள வரலாற்றாசிரியர்கள் சான்று காட்டி நிறுவியுள்ளதால் அந்த உண்மையை மறுக்க முடியாது. வரலாற்றாசிரியர்கள் ஒரு புறம் இருக்க, ஆன்மிக அருளாளர்களான அப்பர், ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்றும், ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்றும் பாடி இருப்பது ஆரியர்-திராவிடர் என்று இரு வேறு இனம் உண்டென்பது வரலாற்றாசிரியர்கள் கூற்றை ஆன்மிக உலகமும் ஏற்றுக் கொண்ட உண்மை என்பதைக் காட்டுகிறது.

  எனவே, மேற்படி நூலின் ஆசிரியர் கூறும் கூற்று, அதாவது ஆரியர்-திராவிடர் என்ற இரு வேறு இனங்களே இல்லை என்பது உண்மையை முற்றிலுமாக மறைக்கும் முயற்சி என்று புறக்கணிக்கப்பட வேண்டியது.

  இதனால் திராவிடர்களிடம் தொன்றுதொட்டு தாலி கட்டும் வழக்கம் இருந்து வந்தது என்றும் பின்னால் ஒரு காலத்தில் ஆரியர்கள் அதாவது பிராம்மணர்களும் ஏற்றுக் கொண்டனர் என்ற கருத்திற்குப் பலமான சான்று வடவேத மந்த்ரங்களிலோ, திருமண சடங்குகளை அவ்வேத மந்த்ரங்களின் அடிப்படையில் தொகுத்த கிருஹ்ய சூத்ரத்திலோ தாலி கட்டும் பேச்சோ, அதற்குரிய மந்த்ரமோ இல்லை என்பது தான்.

  இதனால் தான் பிராம்மண புரோகிதர்களிடையே மாங்கல்யம் கட்டும் போது ஒரே வகையான சுலோகம் பின்பற்றப்படாமல் ஒருவர் ‘மாங்கல்யம் தந்து நானே’ என்றும், ஒருவர் ‘சர்வ மங்கள மாங்கல்யே’ என்றும் மாறி மாறி ஓதுகிறார்கள். வேத மந்த்ரம் இருக்குமானால் அதையே எல்லோரும் ஒரே மாதிரி ஓதும் வழக்கம் வந்திருக்கும். ஆக, தாலிக்கு வடவேதத்தில் மந்த்ரம் இல்லை என்பது நன்கு நிரூபணம் ஆகிறது.

  அடுத்து இந்து திருமண சட்டம் என்பது சுதந்திர இந்தியாவில் இந்திய அரசாங்கத்தால் உருவாகி நடைமுறைப்படுத்தப்பட்டதல்ல. வெள்ளையர்கள் ஆட்சியில் இருக்கும் போது கொல்கத்தாவில் இருந்த வெள்ளைக்கார கவர்னரால் அங்கு அரசுடன் நெருக்கமாக இருந்த வட வேத பிராம்மணப் புரோகிதர்களை ஆலோசித்து உருவாக்கப்பட்டது தான் இந்து திருமணச் சட்டம். வட வேத பிராம்மணர்கள் தங்கள் வேதத்தில் தாலி இல்லாததால் அதை நீக்கி தாங்கள் முக்கியமாகக் கருதும் சப்தபதி சடங்கு என்பதை மட்டும் சட்டத்தில் சேர்க்கக் காரணமானார்கள். அப்போது வடவேத வழக்கமே தென்னாட்டு மக்களின் வழக்கம் என்று தவறாக வெள்ளையர்கள் வழி நடத்தப்பட்டதால் வந்த விளைவால் இந்து திருமணச் சட்டத்தில் தாலி இடம் பெறவில்லை. தவறான வழிகாட்டுதலால் வெள்ளையர்கள் உருவாக்கிய சட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் சுதந்திர இந்தியாவில் இந்திய அரசாங்கங்கள் இன்று வரை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருப்பது தான் கொடுமையிலும் கொடுமை.

   நல்ல வேளையாக, பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு இயற்றிய சீர்திருத்த திருமண சட்டம் 1967 வடக்கிலிருந்து வந்த இந்து திருமணச் சட்டத்திற்கு மாற்றாக அமைந்தது. இந்தச் சட்டத்தின் பெயர் “இந்துத் திருமணங்கள் (சென்னைத் திருத்தம்) சட்டம் 1967”.

   இந்தச் சட்டம் இந்து திருமணச் சட்டத்தின் 7-வது பிரிவிற்கு பின் 7-ஏ என்ற புதிய பிரிவைப் புகுத்தியது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது.


(தொடரும்)

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக