புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
73 Posts - 77%
heezulia
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
238 Posts - 76%
heezulia
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
8 Posts - 3%
prajai
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
2 Posts - 1%
Barushree
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சுகபோக வாழ்வு Poll_c10சுகபோக வாழ்வு Poll_m10சுகபோக வாழ்வு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகபோக வாழ்வு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2015 7:55 am

மாதம் மும்மாரி மழை பொழியும் என்பர் அல்லவா?
விஜயநகரத்தில் மழைக்குப் பஞ்சமே இல்லை.

மழை பெய்து புற்கள் தழைத்து நின்றதால், அந்தப் புல்
தரையில் இளைஞன் ஒருவன் ஆனந்தமாகப்படுத்துத்
தூங்கிக் கொண்டிருந்தான்.”குளிர்ந்த காற்று வீசிக்
கொண்டிருந்தது.

மாமன்னர் கிருஷ்ண தேவராயரும், அப்பாஜியும்
நகர்வலம் வந்த போது இதனைக் கண்டனர்

“”ஓரளவு குளிர்ந்த காற்று அடித்தாலும் நம்மால் அதைத்
தாங்க முடியவில்லையே… இவன் இவ்விதம்
கவலையில்லாமல் படுத்து உறங்குகிறானே, இவனால்
இவ்விதம் படுத்து உறங்க எவ்விதம் முடிகிறது,”என்று
தன் சந்தேகத்தை அப்பாஜியிடம் கேட்டார் மன்னர்.

அப்பாஜி புன்னகை புரிந்த வண்ணம், மன்னருக்குப்
பதிலளித்தார்..

“”மன்னர் அவர்களே, இயற்கையுடன் இயற்கையாக ஒன்றி
வாழ்பவர்களை எந்தக் குளிரும் ஒன்றும் செய்து விடாது.
நாமெல்லாம் இயற்கைக்குப் பயந்து சுகம் தேடி அலைகிறோம்.
அவர்கள் நம்மைப் போன்று அல்லர். எதையும் பொருட்
படுத்தாமல் வாழ்ந்து இயற்கையோடு ஒன்றி வாழ்வதில்
இன்பம் காண்பவர்கள்;

அவர்களை எந்தக் குளிரோ, வெயிலோ எதுவும் செய்துவிடாது.
வெற்று உடம்பினராய் வாழ்வர், போர்த்திக் கொள்ள மாட்டனர்,
இயற்கை தரும் காய்கனி வகைகளை உண்டு நிம்மதியுடன்
வாழ்வர். ஆற்று நீரும், ஊற்று நீரும், அருவி நீரும், அவர்களுக்கு
ஆனந்த வாழ்வு தருபவையாகும். அவர்களுக்கு எந்தவித உடல்
உபாதையும் ஏற்படுவது இல்லை.
இயற்கையோடு இயற்கையாக வாழ்வதால் அவர்கள் என்றுமே
நலமுடன் வாழ்கின்றனர்.

“”அவர்களுடையே எளிய உணவுப் பழக்கமும் ஒரு முக்கியமான
காரணமாகும். இவ்விதம் அவர்கள் வாழ்வதால் தான்,
நோய் நொடியின்றி இனிதாக வாழ்கின்றனர். இந்த இளைஞனும்
இயற்கையோடு இயற்கையாக ஒன்றி வாழ்வதால்தான்,
அதாவது காற்றிலும், மழையிலும் அவன் காணும் சுகம்தான்
இவனை நலமுடன் வாழ வைக்கிறது. இவனுக்கு ஈரமான
புல்தரையும், இளம் வெயிலும் இன்பத்தையே தருபவையாகும்.

இவனை நாம் அழைத்துச் சென்று கொஞ்சம் சுகபோக வாழ்வைக்
கொடுத்தோமென்றால் இயற்கை வாழ்விலிருந்தும் இவனைப்
பிரித்து விடுவதால் நோய் வந்து உடனே இவனைத் தாக்க
ஆரம்பித்து விடும்,” என்று நீண்ட உரை யாற்றினார் அப்பாஜி.

இவ்விதம் கூறியவைகளையெல்லாம் மன்னர் எண்ணிப் பார்த்தார்.

இந்த இளைஞனை அழைத்து வந்து அவனுக்கு ஒரு வேலையைக்
கொடுத்து, அவனை இயற்கை வாழ்விலிருந்து பிரித்துப் பார்க்கலாமே
என்று எண்ணிய மன்னர், அப்பாஜியிடம் அந்த இளைஞனை
அழைத்து வர ஏற்பாடு செய்யச் சொன்னார்.

அரசருடைய படைப் பிரிவில் வேலை கிடைத்தது. அவன்
சுகபோக வாழ்க்கையில் ஈடு பட்டான். நல்ல வசதியான வீட்டில்
தங்கிச் சுகம் கண்டான்.

ஒரு மழை நாளில், வாடைக் காற்றும், பலமாக வீசிய வண்ணம்
இருந்தது.
அந்த நிலையில் பணியாளன் ஒருவனை அனுப்பி அந்த இளைஞனை
வரவழைத்தனர்.
அவன் வந்ததும், “”இளைஞனே, நீ ஒரு முக்கிய பணியைச் செய்து
முடிக்க வேண்டும். இதை மிகவும் ரகசியமாகவே செய்ய வேண்டும்.
இந்தப் பணியைச் செய்யும் முழு ஆற்றலையும் பெற்றவன் நீ
என்பதை உணர்ந்து தான் இந்தப் பணியை உன்னிடம் ஒப்படைக்கிறோம்.
இந்தக் கடிதத்துடன் இன்றிரவே நீ புறப்பட்டுச் செல்ல வேண்டும்!”
என்று கூறி அவன் செல்ல வேண்டிய இடம் பற்றியும், சந்திக்க
வேண்டிய நபர் பற்றியும் அவனிடம் கூறப்பட்டது.

அந்த இளைஞன் கடிதத்தையும், முகவரியையும் பெற்றுக் கொண்டான்;
மகிழ்ச்சியுடன் தன் வீடு சென்று தன் தாயாரிடம் விஷயத்தைக் கூறிக்
காலையில் புறப்படப் போவதாகக் கூறினான்.

அவன் வெற்றியுடன் முடித்து விட்டுத் திரும்புவான் என்று தான்
எண்ணினார்கள் மன்னரும், அப்பாஜியும். ஆனால், அவன் வேலையை
முடித்த மறுநாளே வர வேண்டியவன் வரவில்லை.

சந்தேகப்பட்ட அப்பாஜி அவனுடைய வீட்டிற்கு ஒரு பணியாளை
அனுப்பிப் பார்த்தார். அவன் உடல் நலமின்றி அவதிப் பட்டுக்
கொண்டிருப்பதாக அந்தப் பணியாள் வந்து கூறினான்.

மன்னர் பெரிதும் ஆச்சரியப்பட்டார். ஆனால், அப்பாஜி ஆச்சரியப்
படவில்லை. அவர் இதை எதிர்பார்த்ததுதான்.

“”இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவனை அங்கிருந்து பிரித்து வந்து
அவனுக்குச் சுகபோக வாழ்வு அளித்ததால், அவனால் குளிரையும்,
மழையையும் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அவன் ஈரத் தரையில் படுத்து உறங்கியவன்தான்; மழைச்சாரலில்
நனைந்தவன்தான். அது ஒரு காலம்.

“”ஆனால், இப்போதோ… அவன் கட்டிலில் படுத்துச் சுகம் அனுபவிக்கத்
தொடங்கினான்; கம்பளிப் போர்வை போர்த்தி படுக்க ஆரம்பித்தான்.
கையையே தலையணையாக வைத்துப் படுத்தவன், நல்ல இலவம்
பஞ்சுத் தலையணை வைத்துப் படுக்க ஆரம்பித்தான்.

பழைய சோற்றை உண்டு வந்த அவன், இப்போது சூடுபறக்க
இட்டிலியும், வடையும் சாப்பிட ஆரம்பித்தான்; அதுமட்டுமின்றி,
நன்றாகப் பசியெடுத்த பின்னரே உண்டு வந்த அவன், இப்போது
நேரம் பார்த்துச் சாப்பிட ஆரம்பித்தான்.

“”கடைசியில் எல்லாமுமாகச் சேர்ந்து என்னவாயிற்று.
அவனுடைய நோய் எதிர்ப்புச் சக்தி முற்றிலும் அழிந்து விட்டது.
ஆம், அவனை விட்டு அந்த மகத்தான சக்தி சிறுகச் சிறுகச் சென்று
விட்டது. எனவே, துன்பம் அடைய ஆரம்பித்தான்!”

இவைகளை எல்லாம் உணர்ந்து கூறிய அப்பாஜியை, மன்னர்
கிருஷ்ண தேவராயர் பெரிதும் பாராட்டினார்.

பின்னர், அரண்மனை மருத்துவரை அழைத்து அந்த இளைஞனுக்கு
சிகிச்சையளிக்கக் கூறினர்.

அவனோ, தனக்கு எந்த மருந்துமே தேவையில்லையென்றும்
பழையபடியே இயற்கை வழி முறைகளைப் பின்பற்றப் போவதாகக்
கூறினான்; அவன் கூறியது போன்றே தன்னைக் குணப்படுத்திக்
கொண்டான்; மேலும், இயற்கையுடன் ஒன்றி வாழப் போவதாகவும்
உறுதியுடன் கூறி விட்டு தன் ஊருக்கேச் சென்றார்.

————————————
சிறுவர் மலரில் வந்த மூலக்
கதையின் சுருக்கம்

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Mar 28, 2015 12:31 pm

அருமையான கதை............



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சுகபோக வாழ்வு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 28, 2015 11:48 pm

ரொம்ப அறுபுதமான கருத்துள்ள கதை, நாம் இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்த தால் தான் நிறைய வியாதிகள் பெருகிவிட்டன புன்னகை..............பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக