புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Poll_c10பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Poll_m10பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Poll_c10பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Poll_m10பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Poll_c10 
59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 24, 2015 4:45 pm

பிரான்சில் 148 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் ஏர்பஸ்-320 என்ற பயணிகள் விமானம் இன்று ஜெர்மனியின் டஸ்சல்டிராப் நகரில் இருந்து ஸ்பெயினின் பார்சிலோனா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. அதில், 142 பயணிகள்,2 விமானிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணம் செய்தனர்.

இந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு மேலே பறந்தபோது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனை காவல்துறையும், விமான போக்குவரத்து துறையும் உறுதி செய்துள்ளது.

ஆனால், விமானத்தில் பயணம் செய்தவர்களின் நிலை பற்றி தெரியவில்லை. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த விபத்தில் 150 பேர் வரை இறந்திருக்கலாம் என பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.-maalaimalar

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 24, 2015 5:03 pm

அதிர்ச்சியான செய்தி ... சோகம் சோகம் சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 24, 2015 5:13 pm

பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? 6cA8EiovS7SOUC394a4L+Flightradar_2351505a
-
விபத்து நடந்த இடம் நெருங்க
கடினமான இடமாம் ...
-

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 24, 2015 5:29 pm

2000க்கு பிறகு நடந்த மோசமான விமான விபத்துகள்

* 2000, ஜன.30: கென்யா ஏர்வேஸ் நிறுவன விமானம், அட்லாண்டிக் கடலில் விழுந்த விபத்தில் 169 பேர் பலி.

* 2000, ஏப்.19: பிலிப்பைன்ஸ் நாட்டில் போயிங் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 131 பேர் பலி.

* 2000, ஜூலை 25: பிரான்ஸ் நாட்டில் ஏர் பிரான்ஸ் நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 109 பேர் பலி.

* 2000, ஆக.23: பெர்சியன் வளைகுடா அருகே நடந்து விபத்தில், ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 152 பேர் பலி.

* 2001, ஜூலை 4: ரஷ்யாவில் டுபுலோவ் டூ 154 ரக விமானம் விபத்துக்குள்ளானதில், 145 பேர் பலி.

* 2001, நவ.12: அமெரிக்கன் ஏர்லைன்ஸ்சின் ஏர்பஸ் ஏ300, நியூயார்க் அருகே விழுந்து நொறுங்கியதில், 265 பேர் பலி.

* 2002, ஏப்.15: தென்கொரியாவில், சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 128 பேர் பலி.

* 2002, மே 7: சீனாவில் எம்.டி., 82 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 112 பேர் பலி.

* 2002, மே 25: தைவான் வான்பரப்பில், சீன ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 225 பேர் பலி.

* 2003, ஜூலை 8: சூடானில் போயிங் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 117 பேர் பலி.

* 2003, டிச.25: மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள பெனின் நாட்டில் போயிங் 727 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 151 பேர் பலி.

* 2004, ஜன.3: பிளாஷ் ஏர்லைன்ஸ் விமானம், செங்கடலில் விழுந்த விபத்தில் 148 பேர் பலி.

* 2005, ஆக.14: கிரீஸ் நாட்டில், போயிங் 737-300 ரக விமானம் விபத்தில் 121 பேர் பலி.

* 2005, அக்.22: நைஜீரியாவில் முர்தலா முகமது சர்வதேச விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 117 பேர் பலி.

* 2005, டிச.10: நைஜீரியாவில் சோசோலிசோ ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 108 பேர் பலி.

* 2006, மே 3: கருங்கடலில், அர்மாவியா ஏர்பஸ் ஏ320 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் பலி.

* 2006, ஜூலை 9: ரஷ்யாவில் எஸ்7 ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 128 பேர் பலி.

* 2006, ஆக.22: உக்ரைன் நாட்டில், புல்கோவோ ஏவியேஷன் என்டர்பிரைஸ் விமானம் விபத்துக்குள்ளாகி 170 பேர் பலி

* 2007, மே 5: கென்ய ஏர்லைன்ஸ் விமானம், கேமரூன் நாட்டில் விபத்துக்குள்ளானதில் 114 பேர் பலி.

* 2007, ஜூலை 17: பிரேசில் நாட்டில், டி.ஏ.எம்., ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியதில் 199 பேர் பலி.

* 2008, ஆக.20: ஸ்பெயின் நாட்டின் பரஜஸ் விமான நிலையத்தில், "டேக்ஆப்' ஆகும் போது ஏற்பட்ட விபத்தில் 154 பேர் பலி.

* 2009, ஜூன் 1: பிரேசிலில் இருந்து பிரான்ஸ் சென்ற ஏர்பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பேர் பலி.

* 2009, ஜூலை 15: ஈரானில் காஸ்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 153 பேர் பலி.

* 2010 , மே 12: லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலி.

* 2010, மே 22: ஏர் இந்தியாவின் போயிங் 737-800 ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலி.

* 2010, ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமாபாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி, 152 பேர் பலி.

* 2014, மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து-பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் என்ன ஆனதென்றே தெரியவில்லை.

* 2014, ஜூலை 17: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லையருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேர் பலி.

* 2014, ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவலைத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.

* 2014, டிச.28: இந்தோனேசியாவின் சுரபயா விமானநிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் பலி.

பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 25, 2015 12:27 pm

பிரான்ஸ் விமானம் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கியது விமான பயணிகள் 150 பேர் பலி

பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலை பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானத்தில் சென்ற 150 பேர் பலியானார்கள்.

150 பேருடன் புறப்பட்ட விமானம்

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய விமான நிறுவனம், லுப்தான்சா.

இதன் துணை நிறுவனமான ‘ஜெர்மனி விங்ஸ்’, மலிவு கட்டண விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஏர் பஸ் ஏ–320 ரக விமானம் ஒன்று, ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியின் டசல்டார்ப் நகருக்கு உள்ளூர் நேரப்படி நேற்று காலை 10.01 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்று மதியம் 2.25 மணிக்கு) புறப்பட்டு சென்றது. இதில் 144 பயணிகள், 2 விமானிகள், 4 பணியாளர்கள் என 150 பேர் பயணம் செய்தனர்.

இந்த விமானம், காலை 11.49 மணிக்கு டசல்டார்ப் நகரை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால் காலை 11 மணிக்கே அந்த விமானம் ரேடார் திரையில் இருந்து மறைந்தது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.

கூண்டோடு பலி

இந்த நிலையில், அந்த விமானம் பிரான்ஸ் நாட்டில் ஆல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், பார்சிலோனட் நகருக்கு அருகே விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் பயணம் செய்த அத்தனைபேரும் கூண்டோடு பலியாகி விட்டனர். விபத்துக்குள்ளான விமானம் 24 ஆண்டுகளாக இயங்கி வந்த விமானம் ஆகும். விமானத்தின் சிதைவுகளை பார்சிலோனட் அருகே பிரான்ஸ் ஹெலிகாப்டர்கள் கண்டறிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

தலைவர்கள் வேதனை

இந்த விபத்து குறித்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே வருத்தம் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர்கூறும்போது, ‘‘விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்த எல்லா பயணிகளும், பணியாளர்களும் பலியாகி விட்டனர் என அஞ்சப்படுகிறது. யாரும் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை. பலியானவர்களில் ஜெர்மனி மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருப்பார்கள். விபத்து நடந்துள்ள இடம், எளிதில் யாரும் போய்ச்சேரும் வசதியற்ற பகுதி ஆகும்’’ என்றார்.

ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய், ‘‘விபத்து குறித்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். விசாரணையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவோம்’’ என கூறினார்.

மீட்பு பணி

இதற்கிடையே விபத்து நடந்த பகுதிக்கு தரை வழியே வாகனங்கள் செல்ல முடியாது என்பதால் ஹெலிகாப்டர்கள் சென்று, மீட்பு பணியை தொடங்கி உள்ளது. அங்கு பிரான்ஸ் விசாரணை குழுவும் விரைந்துள்ளது. 

விபத்து நேர்வதற்கு முன்பாக காலை 10.47 மணிக்கு, அந்த விமானம் 5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது, விமானத்தில் இருந்து ஆபத்து சமிக்ஞைகள் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

கடைசி நிமிடங்களில்...

சிவில் விமான போக்குவரத்து துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர் மேரி ஸ்சியாவோ விபத்து பற்றி குறிப்பிடுகையில், ‘‘கடைசி நிமிடங்களில் 38 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், 6 நிமிடங்களில் 24 ஆயிரம் அடிக்கு வந்துள்ளது. அதாவது, 14 ஆயிரம் அடி கீழே வந்துள்ளது. எனவே, விபத்து, திடீரென நிகழ்ந்து விடவில்லை. விமானி, விமானத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், விமானத்தை அவர் அவசரமாக தரை இறக்க முயற்சித்திருக்கவும் கூடும்’’ என கூறினார்.

விபத்தில் பலியானவர்கள் பற்றிய முழு விவரம் உடனடியாக தெரிய வரவில்லை. இருப்பினும் பெரும்பாலோர் ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியர்கள் யாரும் பயணம் செய்ததாக தகவல் இல்லை.

விபத்து குறித்த தகவல்கள் அறிந்ததும் ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக