புதிய பதிவுகள்
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
24 Posts - 65%
heezulia
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
8 Posts - 22%
Balaurushya
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 3%
Barushree
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 3%
nahoor
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 3%
kavithasankar
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
78 Posts - 78%
heezulia
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
4 Posts - 4%
Balaurushya
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
2 Posts - 2%
prajai
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
2 Posts - 2%
nahoor
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 1%
Barushree
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 1%
Shivanya
வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_m10வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:26 am

வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி 201503131421002751_Just-biceps-Tigers-suppressed_SECVPF

வெறும் கைகளால் புலிகளை அடக்க முடிந்தவர்களைக் காண முடிவது அபூர்வம். மயக்க மருந்து தந்து புலியின் வலிமையைக் குறைத்தும், சர்க்கஸ் போன்ற இடங்களில் பயிற்றுவிக்கப்பட்ட புலியைக் கையாண்டும், புலியை அணுக முடிந்தவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் கடுமையான காட்டுப் புலிகளைத் தனி மனிதனாக, வெறும் கைகளாலேயே கட்டுப்படுத்தி அடக்குவது என்பது பெரும் சாகசமே! அப்படி அடக்க முடிந்த ஒருவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி வரை வட இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார்.

புலி சுவாமி(Tiger Swami)மற்றும் சோஹம் சுவாமி (Soham Swami) என்ற பெயர்களால் அழைக்கப்பட்ட அவர், வட இந்தியாவில் டாக்காவில் (தற்போதைய வங்காள தேசத்தில்) பிறந்து வளர்ந்தவர். இவருடைய இயற்பெயர் ஷ்யாமகண்ட உபாத்யாயா. பெரும் உடல் பலத்தைப் பெற்றிருந்த இவர், எப்படிப்பட்ட சீற்றமுள்ள புலியாக இருந்தாலும் அதைப் பூனை போல் அடங்க வைக்கும் சக்தியைப் பெற்றிருந்தார்.

இத்தனைக்கும் அவர் புலியை அடக்க எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை. எத்தனை தான் பலசாலியாக இருந்தாலும் சீறும் புலியை எதிர்கொள்கையில் செயலிழந்து போவது தான் இயல்பு என்பதால் ஷ்யாமகண்ட உபாத்யாயாவை அக்காலத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து புலிகளை அவர் அடக்குவதைப் பலரும் கண்டு களித்தார்கள்.

ஒரு நாள் ஒரு துறவி ஷ்யாமகண்ட உபாத்யாயாவின் தந்தையிடம் வந்து 'உங்கள் மகன் மீது புலிகளின் இனத்தில் பெரும் வெறுப்பும் ஆத்திரமும் இருக்கிறது. அதனால் அவர் தேவையில்லாமல் புலிகளின் வெறுப்பை மேலும் சம்பாதித்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் புலிகளால் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டி வரும். அதன் விளைவு பயங்கரமாக இருக்கும். ஆறு மாத காலமாவது கடும் நோயால் அவதிப்பட நேரிடும்' என்று கூறினார்.

அந்தத் தந்தையும் மகனிடம் வந்து துறவியின் எச்சரிக்கையைத் தெரிவித்தார். ஷ்யாமகண்ட உபாத்யாயாவுக்கு துறவியின் எச்சரிக்கை வேடிக்கையாகவும் அர்த்தம் இல்லாததாகவும் தோன்றியது. பெரும் உடல் வலிமையையும், மன தைரியத்தையும் பெற்றிருந்த அவர் துறவியின் எச்சரிக்கையைக் கேட்டுப் பயப்படும் தந்தையைக் கடிந்து கொண்டார்.

அது வரை எத்தனையோ புலிகளைச் சந்தித்து வென்றிருந்த அவர் புலிகள் போன்ற கொடிய விலங்கினங்கள் மனிதர்களால் அடக்கவும் வெல்லவும் பட வேண்டியவையே என்று தந்தையிடம் வாதாடினார். புலிகளால் எத்தனையோ பாவப்பட்ட மனித உயிர்கள் பறி போயிருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார். அதற்கு மேல் அவருடைய தந்தைக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை.

அந்த எச்சரிக்கைக்குப் பின் சில மாதங்கள் கழித்து ஷ்யாமகண்ட உபாத்யாயா கிழக்கு இமாலய அடிவாரத்தில், தற்போதைய மேற்கு வங்காளத்தில் உள்ள கட்ச் பீகார் (Cooch Behar ) பகுதிக்குச் சென்றார்.

அந்தப் பகுதி அப்போது ஒரு தனி அரசரின் ஆட்சியில் இருந்தது. ஷ்யாமகண்ட உபாத்யாயா புகழ் அப்போது இந்தியா முழுவதும் பரவி இருந்ததால், அவர் வருகை அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரைப் பார்த்து விட்டுப் போவதற்கென்றே மக்கள் வர ஆரம்பித்தனர்.

அச்செய்தி அரசரின் செவிக்கும் எட்டியது. அரசரிடம் 'ராஜா பேகம்' என்ற ராயல் பெங்கால் புலி இருந்தது. அது சீற்றம் மிகுந்த வலிமையான புலி. அதைச் சில மாதங்கள் முன்பு தான் அவர் காட்டில் இருந்து பிடித்து வந்திருந்தார். அரசர், ஷ்யாமகண்ட உபாத்யாயாவை அரண்மனைக்கு வரச் சொல்லி ஆள் அனுப்பினார். ஷ்யாமகண்ட உபாத்யாயாவும் அரசரைச் சந்திக்கச் சென்றார்.

அரசர், ஷ்யாமகண்ட உபாத்யாயாவிடம் ஏளனமாகக் கேட்டார், 'நீங்கள் புலியை அடக்குபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் மயக்க மருந்து தரப்பட்ட கிழப்புலியை அடக்குபவரா?. இல்லை நிஜமாகவே காட்டுப்புலியையும் அடக்குவீர்களா?'.

அந்தக் கேள்வி ஷ்யாமகண்ட உபாத்யாயாவை ரோஷமடையச் செய்தது. 'மயக்க மருந்து தரப்பட்ட கிழப்புலிகளை அடக்க என்னைப் போன்ற ஆட்கள் தேவை இல்லை அரசரே. நான் இதுவரை அடக்கிய புலிகள் எல்லாம் காட்டுப்புலிகள் தான். அதுவும் புலிகளை அடக்க நான் என் கைகளையே நம்பி இருக்கிறேன். ஆயுதங்களைக் கூடப் பயன்படுத்தியதில்லை'.

'அப்படியானால் உங்களால் என்னிடம் உள்ள ராயல் பெங்கால் புலியான ராஜா பேகத்தை அடக்க முடியுமா?' அரசர் கேட்டார்.

'எந்தப் புலியையும் என்னால் அடக்க முடியும்' என்றார் ஷ்யாமகண்ட உபாத்யாயா.

'என் புலியான ராஜா பேகத்தை அதன் கூண்டில் சந்தித்து, அதை அடக்கி சங்கிலியால் கட்டி உயிரோடு நீங்களாகவே வெளியே வர வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் வென்றவர் என்று நான் ஒத்துக் கொள்வேன். உங்களுக்குப் பரிசாக அந்தப் புலி ராஜா பேகத்தையே தருகிறேன். கூடவே சில ஆயிரம் ரூபாய்களும் தருவேன். ஆனால் தோற்றாலோ நீங்கள் பலரும் புகழ்வதற்கு உகந்தவர் அல்ல, போலி என்று நாடு முழுவதும் பறைசாற்றுவேன்' என்றார் அரசர்.

ராஜா பேகம் புலியை வெல்ல ஒரு வார அவகாசம் தந்த அரசர், போட்டிக்கு முன்பு அந்தப் புலியை ஷ்யாமகண்ட உபாத்யாயா பார்க்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்தார். அந்தப் புலியைப் பார்த்தால் அவர் ஹிப்னாடிசம் ஏதாவது செய்து விடுவாரோ என்று அரசர் பயந்தது போல இருந்தது.

ஷ்யாமகண்ட உபாத்யாயா அரசருடைய சவாலை ஏற்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சில ஆயிரம் ரூபாய்கள் என்பது, இக்கால மதிப்பில் கோடி ரூபாய் பெறும் என்றாலும், அந்தப் பணத்தை விட அவருக்கு தன் கவுரவத்தை நிலைநாட்டுவது மிக முக்கியமாகப்பட்டது.

அரசர் அவரிடம் பேசிய நாளில் இருந்து அந்தப் புலிக்கு உணவளிப்பதை மிகவும் குறைத்து விட்டார். இயல்பாகவே மிக ஆக்ரோஷமான அந்தப் புலிக்கு தரப்படும் உணவும் மிகவும் குறைவாக இருந்ததால், அந்தப் புலியின் ஆக்ரோஷம் பல மடங்காகப் பெருக ஆரம்பித்தது. அந்த உண்மையை ஷ்யாமகண்ட உபாத்யாயாவிடம், அவரது சீடர்கள் அரண்மனை வேலையாட்கள் மூலம் அறிந்து வந்து சொன்னார்கள். அந்தப் புலியை சாதாரண காலத்திலேயே சமாளிக்க பல ஆட்கள் தேவை என்றும், இப்போது அது கடும் பசியில் இருப்பதால் மிகமிக ஆபத்தானது என்றும் தெரிவித்த அவர்கள், அரசர் அப்படிப்பட்ட புலியை ஷ்யாமகண்ட உபாத்யாயா கண்டிப்பாக வெல்ல முடியாது என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிவித்தார்கள்.

அந்தச் செய்திகளால் ஷ்யாமகண்ட உபாத்யாயா மனம் மாறவில்லை. குறித்த நாள் அன்று ஷ்யாமகண்ட உபாத்யாயா நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்துக்குச் சென்றார். ஒரு பெரிய மைதானத்தின் மையத்தில் ஒரு பெரிய இரும்புக் கூண்டில் ராஜா பேகம் வைக்கப்பட்டிருந்தது. கூண்டுக்குள் புலி கடும் பசியோடு ஆக்ரோஷமாக உலாவிக் கொண்டிருந்தது.

ரத்தத்தை உறைய வைக்கும் சீற்றமான உறுமல்களை ராஜா பேகம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக் கணக்கில் மக்கள் பரபரப்புடன் கூடியிருந்தார்கள். அவரைப் பார்த்தவுடன் அவர்கள் கரகோஷம் வானைப் பிளந்தது.

அந்தக் கூண்டின் உள்ளே நுழைந்து ஷ்யாமகண்ட உபாத்யாயா கதவைச் சாத்தினார். வேகமாகத் தான் சாத்தி தாளிட்டார். ஆனால் அதற்குள் வெகுவேகமாய் அவர் மீது பாய்ந்த புலி அவரது வலது கையை ருசி பார்த்து விட்டது. சுதாரித்துக் கொண்ட ஷ்யாமகண்ட உபாத்யாயா தன் இடது கையாலேயே இடி போன்ற அடிகளை, அந்தப்புலி மீது செலுத்தி அடங்க வைத்தார். அதை ஒரு சங்கிலியால் கூண்டின் கம்பியில் கட்டி விட்டு வெளியேற முனைந்தார்.

அவர் திரும்பிய அந்த வேளையில் அந்த பசித்த புலி ஆக்ரோஷமாய் அந்தச் சங்கிலியை அறுத்துக் கொண்டு அவர் முதுகில் பாய்ந்து அவர் தோளைக் கவ்வியது. ஷ்யாமகண்ட உபாத்யாயா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.



வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 23, 2015 12:27 am


சங்கிலியையே அறுத்துக் கொண்டு பாயும் ஆவேசமும், வலிமையும் கொண்ட அந்த கொடும்புலி பாய்ந்து தோள் சதையையும் ருசி பார்த்ததில் ஷ்யாமகண்ட உபாத்யாயா ரத்த வெள்ளத்தில் அப்படியே கீழே சாய்ந்தாலும், உடனடியாக சுதாரித்துக் கொண்டார்.

ஆனால் மனித ரத்தத்தின் ருசி பார்த்து விட்ட அந்த பசித்த புலியை ஒரு கையால் மட்டும் சமாளிக்க வேண்டிய நிலையில் அவர் இருந்தார். இடது கையால் அவர் வேகமாக புலியைத் தாக்க, புலியும் அவரைக் கடுமையாகத் தாக்கியது. கூண்டுக்குள் ரத்த வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்தது.

கூடியிருந்த கூட்டத்தினர் அவர் உயிரை ராஜா பேகம் பறித்து விடும் என்று பயந்து போய் கத்தினார்கள். 'புலியைச் சுட்டுத் தள்ளுங்கள்.... புலியைச் சுட்டுத் தள்ளுங்கள்'.

ஆனால் காவலாளிக்கு புலியும், ஷ்யாமகண்ட உபாத்யாயாவும் வேகமாகப் புரண்டு இடம் மாறிக் கொண்டிருந்ததால் துப்பாக்கியைச் சரியாகக் குறிபார்க்கவும் முடியவில்லை.

கடைசியில் ஷ்யாமகண்ட உபாத்யாயா அந்தப் புலியைக் கீழே தள்ளி அதன் மீது விழுந்து தன் எடையைக் கூட்டி, அதை அசைய விடாமல் செய்து, சகல பலத்தையும் திரட்டி தன் இடது கையால் இடி போல சரமாரியாகப் புலியைத் தாக்க ராஜா பேகம் புலி சோர்ந்து போய் மயங்கி சாய்ந்தது.

பின்பு மிக ஜாக்கிரதையாக அந்தப் புலியை மறுபடியும் பலமாகக் கூண்டுக் கம்பியில் கட்டி விட்டு வெற்றியுடன் ஷ்யாமகண்ட உபாத்யாயா வெளியே வந்தார்.

இந்த முறை கூடி இருந்தவர்களின் கரகோஷம் இரண்டு மடங்காக இருந்தது. கூடி இருந்த அனைவரும் ஒருமனதாக அவரைப் பாராட்டினார்கள். ஆனால் எப்போதும் வெற்றி அடைந்த பின்பு அடையும் பெருமிதம், அவருக்கு அப்போது ஏனோ இருக்கவில்லை.

கட்ச் பீகார் அரசர் அவருடைய வெற்றியை ஒத்துக்கொண்டு, அவருக்கு ராஜா பேகம் புலியையும் பணத்தையும் பரிசளிக்க, ஷ்யாமகண்ட உபாத்யாயாவின் வெற்றி எல்லோராலும் பரிபூரணமாக அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால் அந்தப் புலியோடு சண்டையிட்ட போது ஏற்பட்ட காயங்களில் விஷக்கிருமிகள் தாக்கி, துறவி முன்பு எச்சரித்தது போல ஷ்யாமகண்ட உபாத்யாயா கடும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையானார்.

மரணத்தின் விளிம்புக்கே சென்று விட்ட அவருக்கு, மருத்துவம் மிகவும் தாமதமாகத் தான் பலனளிக்க ஆரம்பித்தது. அவர் குணமாக ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. அந்த ஆறு மாத காலம் அவருக்கு சுயபரிசோதனைக் காலமாக மாறியது. அவர் மனம் பழைய வாழ்க்கை முறையில் சலிப்பை உணர்ந்தது.

சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர், புதிய மனிதராய் மாறி இருந்தார். அவருடைய தந்தையிடம் முன்பு ஒரு துறவி எச்சரிக்கை விடுத்திருந்தது, எத்தனை சரியாகப் போயிற்று என்பதை அவர் அடிக்கடி எண்ணிப் பார்த்தார்.

'அந்தத் துறவி ஒரு மகானாக இருக்க வேண்டும்' என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. அந்த மகானை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்ற பேராவல் அவருக்குள் எழ ஆரம்பித்தது. அதைத் தன் தந்தையிடமும் தெரிவித்தார்.

அவர் விருப்பப்படியே திடீரென்று ஒரு நாள், அந்தத் துறவி அவரைச் சந்திக்க வந்தார். 'மனதில் இருக்கும் கொடிய விலங்குகளை வெல்லாமல், வனத்தில் இருக்கும் விலங்குகளை வெல்வதில் என்ன பலன்?' என்று கேட்டார்.

அந்தக் கேள்வியில் இருந்த உண்மை அவர் மனதில் தைத்தது.

அந்தத் துறவி மேலும் தொடர்ந்து சொன்னார். 'என்னுடன் வா. உன் மன விலங்குகளை அடக்கி, உன்னை நீ வெற்றி கொள்வது எப்படி என்று நான் கற்றுத் தருகிறேன். இத்தனை நாட்கள் சில நூறு மனிதர்கள் முன், உன் சாதனையைக் காட்டப் பழக்கப்பட்டிருக்கிறாய். பிரபஞ்சத்தின் தேவதைகள் முன், உன்னை நீ வென்று சாதனையைக் காட்ட இனி பழகிக்கொள்'.

தன் வாழ்வில் அந்தத் தருணத்திற்காகவே இதுவரை காத்திருந்ததாய் ஷ்யாமகண்ட உபாத்யாயா உணர்ந்தார். உடனடியாக அவர் அந்தத் துறவியை குருவாக ஏற்றுக் கொண்டு சன்னியாசியாக மாறினார். அந்தத் துறவி வேறு யாருமல்ல. திபெத்திய பாபா தான்.

திபெத்திய பாபா தன் முதல் தவத்தை, தான் மிகவும் நேசித்த ஆட்டை மனதில் நிறுத்திச் செய்தது நினைவிருக்கலாம். அப்படி ஆரம்பித்து அஷ்டமகா சித்திகளை அடைந்திருந்த அவருக்கு மற்ற மனிதர்களுடைய எண்ணங்கள் மட்டுமல்ல, விலங்கினங்களின் உணர்வுகளையும் படிக்க முடிந்திருந்தது.

அதனால் தான் அவர் புலி இனத்தின் உணர்வு களைப் படித்து, ஷ்யாமகண்ட உபாத்யாயாவுக்கு எச்சரிக்கை விடுக்க முடிந்தது. அஷ்ட மகாசித்திகளைப் பெற்றிருந்த அவருக்கு எதிர்காலத்தையும் அறிய முடிந்திருந்ததால் தான், ஆறு மாத காலம் நோய்வாய்ப்பட வேண்டி இருக்கும் என்பதையும் தெரிவித்திருந்தார்.

அப்படிப்பட்ட மகாசக்தி வாய்ந்த திபெத்திய பாபாவுடன் ஷ்யாமகண்ட உபாத்யாயா இமயமலைக்குப் பயணமானார். அவருடைய குருவான திபெத்திய பாபா, அவருக்கு வைத்த பெயர் 'சோஹம் சுவாமி'.

சோஹம் என்றால் சமஸ்கிருதத்தில் 'நானே அது' என்று பொருள். 'தன்னிடம் இருக்கும் இறைத்தன்மையை உணர்ந்த சுவாமி' என்ற பொருளில் அழைக்கப்பட்ட அவருடைய ஆன்மிகப் பயணம், 1899-ம் ஆண்டு ஆரம்பமாகியது.

புலிகளை அடக்குவதை முழுமையாக விட்டு விட்டு ஆன்மிக மார்க்கத்தில் அவர் பயணிக்க ஆரம்பித்தாலும், அவரை குரு வைத்த 'சோஹம் சுவாமி' என்ற பெயரில் அழைப்பதை விட அதிகமாய், 'புலி சுவாமி' என்ற பெயரிலேயே பலரும் அழைத்தார்கள்.

புலன்களை முழுமையாக வெல்வதற்கு புலிகளை வெல்வதை விட, கூடுதல் மகாசக்தி தேவை அல்லவா?

புலி சுவாமியிடம் இயல்பாகவே அமைந்திருந்த மன உறுதி, துறவறத்திலும் முழுமையான புலனடக்கத்துடன் இருந்து மன விலங்குகளை அடக்கி சாதனை புரிய வைத்தது. அது வரை அவர் ஓய்ந்து விடவில்லை.

ஆன்மிக ஞானத்திலும் முத்திரை பதித்த புலி சுவாமி, தான் பெற்ற ஞானத்தை பிற்கால மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் நைனிடாலிலும், ஹரித்வாரிலும் ஆசிரமங்கள் அமைத்தார்.

சோஹம் கீதா, சோஹம் சம்ஹிதா, பொது அறிவு, உண்மை, முதலான நூல்களையும் எழுதி அறிவுபூர்வமான ஆன்மிகத்தைப் பரப்பினார். பொது அறிவு என்ற நூலில் ஆன்மிகம் என்ற பெயரில் பின்பற்றப்படும் மூட பழக்க வழக்கங்களை அவர் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

அவருடைய உபதேசங்களில் மிக முக்கியமான கருத்து மனிதன் தன்னை உடல்ரீதியாக அடையாளம் கண்டு உடலே தான் என்று இருத்தல் ஆகாது என்பதே. உடலே தான் என்று எண்ணுகையில் கர்வமும், அச்சமும் மனிதனுக்கு வரலாம். ஆனால் அழிவற்ற ஆத்மாவாகவே தன்னை அறியும் போது மட்டுமே அவன் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டவனாகிறான் என்கிறார் புலி சுவாமி.

உடலே தான் என்று வாழ்ந்து, உடல் ரீதியாக நாடு போற்றும் பலத்தையும் பெற்று, பின் தெளிவு பெற்ற அவருடைய உபதேசத்தின் உண்மைக்கு அவருடைய வாழ்க்கை வரலாறே சான்று அல்லவா?

தினத்தந்தி



வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 23, 2015 11:48 am

வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி 3838410834 அருமையான் பதிவு தல

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 23, 2015 12:00 pm

வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி 103459460

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Mar 23, 2015 12:11 pm

அருமை அருமை..............

நல்ல பதிவு.......



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வெறும் கைகளால் புலிகளை அடக்கியவர்! - சோஹம் சுவாமி W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக