புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_m10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10 
48 Posts - 51%
heezulia
கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_m10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_m10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_m10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_m10கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 11:58 pm

கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! R2LYW6ETr2exF17Xwd5g+maths_2358894g

எந்தக் கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் படித்திராத பழந்தமிழர்கள் கற்பனை திறனிலும், கவிநயத்திலும், கணிதத்திறனிலும் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்துள்ளனர். அத்தகைய திறன்பெற்றவர்களில் ஒருவர் காரிநாயனார்.

இவர் பாண்டிய நாட்டில் உள்ள கொறுக்கையூரில் பிறந்தவர். இவரின் கணிதத் திறனைக் கண்டு வியந்த மன்னர் புராரி நாயனாரின் வேண்டுகோளின்படி காரிநாயனார் இயற்றிய நூலே கணக்கதிகாரம்.

இந்த நூல் காரிநாயனாரின் கற்பனைத்திறனையும், கவிதை நயத்தையும், கணிதத்தில் இவர் பெற்றுள்ள புலமையைக் காட்டுகிறது.

தமிழ் எண் உருவங்கள்

இந்த நூல் முழுவதும் பக்க எண்கள் உட்பட அனைத்துக் கணிதப் புதிர்களும், கணிதச் சூத்திரங்களும் தமிழ் எண் உருவங்களைப் பயன்படுத்தியே எழுதப்பட்டுள்ளது.

உள்ளடக்கம்

இந்த நூலில் மொத்தம் 64 வெண்பாக்களும், 46 புதிர் கணக்குகளும் உள்ளன. வெண்பாக்கள் மூலமாகப் பண்டைய கால நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகள், உலோகக் கலவை முறைகள், பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றின் தொலைவு, சமுத்திரங்களின் அளவுகள், நாழிகை விவரங்கள், விவசாயம், அறுவடை, கூலி வழங்கும் முறை, வயல்வெளிகளை அளக்கும் முறை, வட்டத்தின் சுற்றளவு, பரப்பளவு காணும் முறை, மிக நுண்ணிய அளவீடுகள் முதல் மிகப்பெரிய அளவீடுகள் வரையிலும் கணக்கிடும் முறைகள் பற்றி தெளிவாக விளக்கவுரையுடன் விவரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக;

அணு எட்டு கொண்டது- கதிரெழுதுகள்

கதிரெழுதுகள் எட்டு கொண்டது- பஞ்சிற்றுகள்

பஞ்சிற்றுகள் எட்டு கொண்டது - மயிர்முனை

மயிர்முனை எட்டு கொண்டது நுண்மணல்

நுண்மணல் எட்டு கொண்டது சிறுகடுகு

சிறுகடுகு எட்டு கொண்டது- எள்ளு

எள்ளு எட்டு கொண்டது நெல்

நெல் எட்டு கொண்டது விரல்

விரல் பன்னிரெண்டு கொண்டது சாண்

சாண் இரண்டு கொண்டது முழம்

என நட்சத்திர மண்டலம் வரை தூரத்தை அளவிடக்கூடிய முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

வட்டத்தின் பரப்பளவு

வட்டத்தின் பரப்பளவைக் காண காரிநாயனார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“விட்டத்தரை கொண்டு வட்டத்தரை தாக்கச்

சட்டெனத் தோன்றும் குழி”

இதன் விவரம்;

விட்டத்தரை (விட்டத்தில் பாதி) = r

வட்டத்தரை (சுற்றளவில் பாதி) =2r/2= r

குழி (பரப்பளவு) = r X r = r2

இதுபோல பல அரிய விவரங்கள் இதில் காணப்படுகின்றன.

புதிர் கணக்குகள்

46 வகையான அன்றாட வாழ்க்கை கணக்குகளைப் புதிர்களாக வழங்கி அதற்கான தீர்வுகளையும் விவரித்துள்ளார் காரிநாயனார். பலாப் பழத்தை வெட்டாமல் அதிலுள்ள சுளைகளைக் கணக்கிடும் முறை, சர்க்கரைப் பூசணியை உடைக்காமல் அதிலுள்ள விதைகளைக் கணக்கிடும் முறை எனப் பல அற்புதமான கணக்குகள் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளன. உதாரணமாக, ஒரு புதிரைப் பார்க்கலாம்.

பலகாரம் தின்ற நாள் கணக்குப் புதிர்

பட்டிணத்தில் இருக்கும் செட்டியார் வீட்டுக்கு மருமகப்பிள்ளை வந்தார். அந்த மருமகப்பிள்ளைக்கு தினந்தோறும் பலகாரம் செய்ய சக்தி போதாமல் ஒரே நேரத்தில் முப்பது ஜாணிகளத்தில், முப்பது ஜாணுயரத்தில், முப்பது ஜாண்கலத்தில் ஒரு பலகாரஞ்செய்து அதனைத் தினம் ஜாணிகளம், ஜாணுயரம், ஜாணகலமறிந்து மருமகனுக்கு விருந்திட்டார்கள் எனில் அதை எத்தனை நாளைக்கு விருந்திட்டார்கள்?

புதிர்விளக்கம்

பலகாரத்தின் மொத்தக் கனஅளவு = 30 x 30 x 30 = 27000 கன அலகுகள்

தினம் விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 1 x 1 x 1 = 1 கன அலகு

ஒரு வருடத்துக்கு விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 360 x 1 = 360 கன அலகுகள் (காரிநாயனார் ஆண்டுக்கு 360 நாட்கள் எனக் கணக்கிட்டுள்ளார்)

அப்படியானால் மொத்தப் பலகாரத்தை விருந்திட்ட ஆண்டுகள் = 27000/360= 75 ஆண்டுகள்.

பழந்தமிழர்கள் அந்தக் காலத்திலேயே கணிதத்தில் புலமை பெற்று விளங்கினார்கள் என்பதற்குக் காரிநாயனார் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

கட்டுரையாளர், ஆசிரியர் பயிற்றுநர், வேலூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 01, 2015 6:13 am

மிகவும் ரசித்தேன் .
நுட்பமிகு தகவல் .
நன்றி , கிருஷ்ணம்மா !

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 01, 2015 6:16 am

புதிர் கணக்கு நன்று .
அந்த மாமனார் இப்போது இருந்தால் , 
அவருடைய பெண்ணை மணக்க ஒரே போட்டிதான்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 01, 2015 6:19 am

புதிர் கணக்குகள்

46 வகையான அன்றாட வாழ்க்கை கணக்குகளைப் புதிர்களாக வழங்கி அதற்கான தீர்வுகளையும் விவரித்துள்ளார் காரிநாயனார். பலாப் பழத்தை வெட்டாமல் அதிலுள்ள சுளைகளைக் கணக்கிடும் முறை, சர்க்கரைப் பூசணியை உடைக்காமல் அதிலுள்ள விதைகளைக் கணக்கிடும் முறை எனப் பல அற்புதமான கணக்குகள் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய வகையில் அமைந்துள்ளன

பலாபழமும் பூசணியும் சமீபத்தில் ஈகரையிலும் வந்ததே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 01, 2015 7:53 am

கணிதம் அறிவோம்: பலகாரம் தின்ற நாள் கணக்கு! 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 8:35 am

//பலகாரத்தின் மொத்தக் கனஅளவு = 30 x 30 x 30 = 27000 கன அலகுகள்

தினம் விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 1 x 1 x 1 = 1 கன அலகு

ஒரு வருடத்துக்கு விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 360 x 1 = 360 கன அலகுகள் (காரிநாயனார் ஆண்டுக்கு 360 நாட்கள் எனக் கணக்கிட்டுள்ளார்)

அப்படியானால் மொத்தப் பலகாரத்தை விருந்திட்ட ஆண்டுகள் = 27000/360= 75 ஆண்டுகள்.//

என்னை பொறுத்த வரை, காரிநாயனார் ஆண்டுக்கு 360 நாட்கள் என்று எடுத்துக்கொள்ள வில்லை, 360 பாகை என்பதால், ஒரு நாளைக்கு ஒரு பாகை ( டிகிரி) என்று எடுத்துக்கொண்டால் கணக்கிட சுலபமாக இருக்கும் என்றே 360 என்று கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. சந்திர மண்டலம் சூர்ய மண்டலம் வரை அளக்க தெரிந்த நம் முன்னோர்களுக்கு ஆண்டுக்கு 365 நாட்கள் என்று தெரியாதா என்ன?..............

எனவே, தினம் விருந்திட்ட பலகாரத்தின் கனஅளவு = 1 x 1 x 1 = 1 கன அலகு என்றால்,

மொத்தப் பலகாரத்தை விருந்திட்ட நாட்கள்  = 27000 என்று ஆகும். இப்போது அதை 365 ஆல் வகுத்தால் நமக்கு வருடங்கள் கிடைக்கும்.

27000/365 = 73.97 வருடங்கள்...............
.
.
ஐயா மற்றும் நண்பர்களே ! இது சரியா? ............இதற்கு உங்களின் பின்னுட்டம்? புன்னகை  ரிலாக்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 01, 2015 9:11 am

நம் வயது என்ன என்று கேட்டால் , நாம் என்ன கூறுவோம் .
x வருடம் என்போம் . அது உத்தேசமாக கூறப்படுகிற வயது .
நம் வயதே நமக்கு தெரியாதா என்ன ? இருந்தாலும் , ஒரு போதும் 
நாம் , நம் வயதை x வருடம்  y மாதம் z நாட்கள் என்று கூறுவதில்லை .
மக்கள் சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய விதமாக கூறினார் .
உட்கருத்தை புரிந்து கொண்டு , பெருமை படவேண்டும் .
அவர் கூறியது ஒரு உதாரணம்தான் .(##)
ஆழ்ந்து பார்த்து , அணு அணுவாக அலச ஆரம்பித்தால் ,
இன்று பண்ணிய பலகாரம் 75 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்குமா 
என்றெல்லாம் பிரச்சனை வரும் .

ரமணியன் 

(##) இப்போது ஒருவரும் மனதால் கணக்கு போடுவதில்லை . எல்லாவற்றிற்கும் 
கால்குலேட்டர் தேவை படுகிறது. 100 ரூபாய் கொடுத்து 93.50க்கு வாங்கிய பொருளுக்கு ,
 மீதி கேட்டால்  கால்குலேட்டேரில் தட்டி , 6.50 காசை தருகிறார்கள் .   
27000 வை 365 யால் எப்பிடி நீங்கள் வகுத்தீர்கள் ? ( ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்குதான் )
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 01, 2015 9:40 am

T.N.Balasubramanian wrote:நம் வயது என்ன என்று கேட்டால் , நாம் என்ன கூறுவோம் .
x வருடம் என்போம் . அது உத்தேசமாக கூறப்படுகிற வயது .
நம் வயதே நமக்கு தெரியாதா என்ன ? இருந்தாலும் , ஒரு போதும் 
நாம் , நம் வயதை x வருடம்  y மாதம் z நாட்கள் என்று கூறுவதில்லை .
மக்கள் சுலபமாக புரிந்து கொள்ளக் கூடிய விதமாக கூறினார் .
உட்கருத்தை புரிந்து கொண்டு , பெருமை படவேண்டும் .
அவர் கூறியது ஒரு உதாரணம்தான் .(##)
ஆழ்ந்து பார்த்து , அணு அணுவாக அலச ஆரம்பித்தால் ,
இன்று பண்ணிய பலகாரம் 75 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்குமா 
என்றெல்லாம் பிரச்சனை வரும் .

ரமணியன் 

(##) இப்போது ஒருவரும் மனதால் கணக்கு போடுவதில்லை . எல்லாவற்றிற்கும் 
கால்குலேட்டர் தேவை படுகிறது. 100 ரூபாய் கொடுத்து 93.50க்கு வாங்கிய பொருளுக்கு ,
 மீதி கேட்டால்  கால்குலேட்டேரில் தட்டி , 6.50 காசை தருகிறார்கள் .   
27000 வை 365 யால் எப்பிடி நீங்கள் வகுத்தீர்கள் ? ( ஒரு ஜெனரல் நாலேட்ஜுக்குதான் )
ரமணியன்

கண்டிப்பாக ஐயா, நான் காரிநாயனார் அவர்களை விமரிசிக்கவோ குறை கூறவோ இல்லை என்று என் பின்னுட்டத்திலிருந்து நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் புன்னகை..

.

.என்னுடைய கருத்து என்னவென்றால், ....கட்டுரை யாளர் சரியாக புரிந்து கொள்ளாமல் தன் விளக்கத்தை போட்டுவிட்டரோ என்று ஒரு ஆதங்கம் தான். நீங்கள் சொல்வது போல 'இன்று பண்ணிய பலகாரம் 75 ஆண்டுகள் வரை தாக்குப் பிடிக்குமா
என்றெல்லாம் பிரச்சனை வரும் .' தான்...
.
.
ஆனால் பூசணி இன் விதைகளையே துல்லியமாக சொன்ன காரிநாயனார், வருடத்துக்கு 5 நாட்களை விட்டு விடுவாரா?.......சொல்லுங்கோ புன்னகை
.
.
.
உங்கள் ஊகம் சரிதான், நான் அவற்றை calculater இல் தான் வகுத்தேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 01, 2015 10:11 am

க்ரிஷ்ணாம்மா wrote: ....கட்டுரை யாளர் சரியாக புரிந்து கொள்ளாமல் தன் விளக்கத்தை போட்டுவிட்டரோ என்று ஒரு ஆதங்கம் தான். 

அநியாயம்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக