Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கப்பூர் மீன் தலைக்கறி!
2 posters
Page 1 of 1
சிங்கப்பூர் மீன் தலைக்கறி!
'செஃப்’ தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிக்கள்!
ஓர் உண(ர்)வுப் பயணம்
ஓர் உண(ர்)வுப் பயணம்
ஒவ்வொரு முறையும் தான் மேற்கொண்ட பயணங்கள், அவற்றில் ஏற்பட்ட உணர்வுகள், கற்றுக்கொண்ட ரெசிப்பிக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் டாக்டர் செஃப் தாமு, இந்த முறை பகிர்ந்துகொண்டது சிங்கப்பூர் பயணம் பற்றி.
'இன்டர்நேஷனல் குக்கிங் காம்படீஷன் சிங்கப்பூர்ல மூணு மாசத்துக்கு முன்ன நடந்தது. இந்தியாவுல இருந்து ஒரே ஜட்ஜ்... நான் மட்டும்தான். சென்னையில இருந்து சிஙக்ப்பூருக்கு மிட் நைட்ல ஃப்ளைட். அரக்க பறக்க சாப்பிடாம கிளம்பி, ஏர்போர்ட் போய் பிரெட்பஜ்ஜி, காபி சாப்பிட்ட பிறகுதான் உயிர் வந்துச்சு.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல ஏறி உட்கார்ந்ததும் மட்டன் கிரேவி, ரைஸ், ஹாஃப் பரோட்டா கொடுத்தாங்க. வாவ்..! என் நினைவுல இருந்து இன்னமும் அந்த ருசி மறந்து போகல.
காலை 6.30 மணிக்கு சிங்கப்பூர்ல லேண்ட் ஆனேன். ரூம் போய் ரெடியாகி, என் ஃப்ரெண்டோட போனது பிரமாண்டமான ஒரு ஃபுட் கோர்ட்டுக்கு. அங்க உள்ள ஒரு ஸ்பெஷல் கடையில சிங்கப்பூர் கம் சைனீஸ் ஃபுட்ஸ் ப்ளஸ் சீ ஃபுட் கிடைக்கும்னு கூட்டிக்கிட்டுப் போய் உட்கார வெச்சார். என் ஃப்ரெண்ட் ஒவ்வொண்ணா ஆர்டர் பண்ண, எல்லாம் டேபிளுக்கு வர ஆரம்பிச்சது. எல்லா காய்கறிகளும் போட்டு ஒரு வெஜ் கிரேவி, ஸ்பைஸி சில்லி கிராப், சைனீஸ் பிரான் எல்லாம் செம்ம... செம்ம டேஸ்ட். அதுவும் தலை மற்றும் வாலோட குக் பண்ணியிருந்த அந்த பிரான் ஆசம்.
சிங்கப்பூர்ல பிரபலமான 'மீன் தலைக் கறி’ (Fish Headcurry) டேஸ்ட் பண்றீங்களா, ஏன்னா, உலகத்துல வேற எங்க தேடினாலும் இந்த டிஷ் கிடைக்காதுனு ஹைஃப் ஏத்திவிட்டார் ஃபிரெண்ட். எப்படி யெஸ் சொல்லாம இருக்க முடியும்? அங்க கிடைக்கிற மீனோட தலை ஒரு கிலோவுல ஆரம்பிச்சு இரண்டரை கிலோ வரைக்கும் இருக்குது. தாரளமா ஒரு தலையை மூணுல இருந்து நாலு பேர் சாப்பிடலாம்.
அட்டகாசமான டெக்கரேஷனோட அதை கொண்டு வந்து வெச்சு, ரைஸும் கொடுத்தாங்க. ஃபிஷ் தலைக்கறியில வெண்டைக்காய், கத்திரிக்காய் எல்லாம் போட்டு ஒரு கிரேவி மாதிரி இருந்துச்சு. அதை ரைஸோட சேர்த்து சாப்பிட்டப்ப, சொர்க்கத்துக்கே போன ஃபீல். இதெல்லாம் முடிச்சுட்டு நிமிர்ந்தா, ஐஸ் கச்சாங்னு ஒண்ணு கொடுத்தாங்க. ஐஸ்ஸை துருவி, கலர் தண்ணி போட்டு கொடுத்தாங்க. சிங்கப்பூர், மலேசியாவுல கிடைக்கிற இந்த ஐட்டம் செம்ம. இதுல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம், அவங்க உணவுகள்ல எதுலேயுமே அஜினமோட்டோ சேர்க்கல. அட நல்ல விஷயமா இருக்கேனு ஆச்சரியப்பட்டுப் போனேன்.
இந்த மீன் தலைக்கறி அந்த ஊர்ல எப்படி செய்றாங்க தெரியுமா? கிரேவி உள்ள பாத்திரத்தின் நாலா பக்கமும் இரும்புக் கம்பி கட்டி வெச்்சிருக்காங்க. இந்தக் கம்பிகள் சிலதுல குறுக்கா கயிறு கட்டி அதுல மஞ்சள்தூள், உப்பு கலந்த மீன் தலைய பாத்திரத்தில் இருக்கும் கிரேவியில் படுற மாதிரி தொங்க விடுறாங்க. அடுப்பு கீழ எரிஞ்சுக்கிட்டே இருக்க, யார் கேட்கிறாங்களோ அப்ப எல்லாம் கயிறுல உள்ள மீனை எடுத்து கிரேவியோட கொடுக்கிறாங்க. அவங்ககிட்ட நான் கேட்டு தெரிஞ்சுக்கிட்ட மீன் தலைக்கறி ரெசிப்பி உங்களுக்காக இதோ.
தேவையானவை:
மீன் தலை - 1 கிலோ (வஞ்சிரம், கொடுவா போன்றவகை மீன்களில் பெரிய மீன்களின் தலையாக வாங்க வேண்டும்)
வெண்டைக்காய் - கால் கிலோ (முழுதாக போடவும்)
கத்திரிக்காய் -கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)
நாட்டுத்தக்காளி் கால் கிலோ (இரண்டாக வெட்டவும்)
சின்னவெங்காயம் - கால் கிலோ (உரித்துக்கொள்ளவும்)
புளி - 200 கிராம் (கரைக்கவும்)
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
எண்ணெய்- 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - சிறிதளவு
தாளிக்க:
கடுகு- 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை- சிறிது
செய்முறை:
மீன் தலையைக் கழுவி உப்பு, மஞ்சள்தூள் தடவி ஊற விடவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். இதில் வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி, சின்னவெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் போட்டுக் கிளறவும். புளிக்கரைசல் இதில் ஊற்றி, கூடவே 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை திக்காக வரும்போது, அதில் மீனைப் போடவும். மூன்று நிமிடம் கழித்து வெல்லம் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். மீன் தலை 3 நிமிடம்தான் வேக வேண்டும். இட்லி, தோசை, சாதத்துக்கு அருமையான காம்பினேஷன் இந்தத் தலைக் கறி.
- கே.அபிநயா @ விகடன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சிங்கப்பூர் மீன் தலைக்கறி!
எனக்கு மிகவும் பிடிக்கும்... மீன் போட்டு செய்த குழம்பை விட தலை போட்டு செய்த மீன் குழம்பு சூப்பரா இருக்கும்.....
பகிர்வுக்கு நன்றி தம்பி
உணவுப் பயணம்னு போட்டுட்டு ஒரு ரெசிபி தான் இருக்கு
பகிர்வுக்கு நன்றி தம்பி
உணவுப் பயணம்னு போட்டுட்டு ஒரு ரெசிபி தான் இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Similar topics
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» சிங்கப்பூர் மைதானம்...
» சிங்கப்பூர் மகா மாரியம்மன்
» சிங்கப்பூர் – புன்னகை தோட்டம்
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» சிங்கப்பூர் மைதானம்...
» சிங்கப்பூர் மகா மாரியம்மன்
» சிங்கப்பூர் – புன்னகை தோட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum