ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்பி பரபரக்கும் புது கலாசாரம்

Go down

 செல்பி பரபரக்கும் புது கலாசாரம் Empty செல்பி பரபரக்கும் புது கலாசாரம்

Post by சிவா Mon Mar 16, 2015 5:44 pm


கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் 'செல்பி' (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் 'செல்பி' எடுக்கப்படுகிறது.

இன்றைக்கு 'செல்பி' ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு 'டிஜிடல் புற்று நோய்' போல விரைந்து பரவுகிறது.

ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும் தனது செல்பிகளுக்குக் கிடைக்கும் 'லைக்'குகளும், பார்வைகளும் இளசு களை செல்பி எனும் புதை குழிக்குள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கின்றன.

பொது இடங்களில், சுற்றுலாத்தலங்களில், நண்பர் சந்திப்புகளில் தொடங்கி இந்த செல்பி- ரகசியங்கள் பேணும் தனியறைகள் வரை நீள்கிறது.

போனைக் கையில் எடுத்து விதவிதமான முகபாவங்களுடன் தங்களைக் கிளிக்கிக் கொள்ளும் கலாசாரம் எல்லா இடங்களிலும் புற்றீசல் போலப் புறப்பட்டு விட்டது.

'கேமரால தன்னைத் தானே போட்டோ எடுக்கிறதுல என்ன பிரச்சினை' என்பது தான் பெரும்பாலானவர்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கும். ஆனால் அது அத்தனை எளிதில் கடந்து போகக் கூடிய விஷயம் அல்ல என்கிறார் உளவியலார் டேவிட் வேல்.

அதற்கு அவர் 'பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர்' (Body dysmorphic disorder) நோயை துணைக்கு அழைக்கிறார்.

பி.டி.டி என்பது 'தான் அழகாய் இல்லை, தனக்கு ஏதோ ஒரு குறை இருக்கிறது என ஒருவர் நம்புவது'.

தன்னுடைய முகம் சரியாக இல்லை, தலை முடி சரியாக இல்லை, மூக்கு கொஞ்சம் சப்பை, காது கொஞ்சம் பெரிசு என்றெல்லாம் தன்னைப் பற்றி தாழ்வாய்க் கருதிக் கொள்வது.

இந்த பாதிப்பு செல்போனின் செல்பி எடுத்துக் குவிப்பவர்களிடம் தான் அதிகமாய் இருக்கிறது என்கிறார் அவர்.

இந்த மனநிலை இருப்பவர்கள் தொடர்ந்து தங்களை செல்பி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்புறம் அதை போட்டோ எடிட்டரில் போட்டு சரி செய்து பார்ப்பார்கள், மீண்டும் எடுப்பார்கள், மீண்டும் டச் அப் செய்வார்கள். இப்படியே அவர் களுடைய வாழ்க்கை ஓடும்.

இது நாளன்றுக்கு நான்கைந்து போட்டோ எடுப்பவர்கள் எனும் நிலையிலிருந்து, இடை விடாமல் மணிக்கணக்காய் போட்டோ எடுத்துக் கொண்டே இருப்பவர்கள் எனும் நிலை வரைக்கும் நீள்கிறது.

'டானி பௌமேன்' எனும் வயது மாணவர் இந்த பாதிப்பின் உச்சத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். தினமும் பத்து மணி நேரம் செல்பி எடுக்கவே செலவழிப்பாராம்.

ஒரு பக்கா போட்டோ எடுத்தே தீருவேன் என தொடர்ந்து படம் பிடித்துப் பிடித்து பள்ளிக்கூடத்துக்குப் போவதையே நிறுத்தி விட்டார். ஒரு நாள் இருநாள் அல்ல, ஆறு மாத காலங்கள் இப்படியே போயிருக்கிறது. இதனால் 12 கிலோ எடையும் குறைந்திருக்கிறது. ஆனாலும் அவருக்கு 'கச்சிதமான செல்பி' சிக்கவில்லை!

கடைசியில் ஒருநாள் 'ஒரு மிகச் சரியான செல்பி கிடைக்கவே கிடைக்காது' எனும் முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த முடிவு அவரை தற்கொலை முயற்சிக்கு இட்டுச் செல்ல, பதறிப்போன பெற்றோர் அவரை உளவியலார் டேவிட் வேலிடம் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் 'பி.டி.டி' நோயாளிகளில், 66 சதவீதம் பேர் செல்பி பாதிப்புடன் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.

செல்பி எடுக்க வேண்டும் என உள்ளுக்குள் பரபரவென மனம் அடித்துக் கொள்வது உளவியல் பாதிப்பு என அடித்துச் சொல்கிறார் அவர்.

செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வருபவர் களிடம் உறவுச் சிக்கல்களும் எழுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன.

'டேகர்ஸ் டிலைட்' எனும் இங்கிலாந்து ஆய்வு ஒன்று இதை நிரூபித்திருக்கிறது.

அதிகமாய் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவோர்கள் சக மனித உறவுகளில் பலவீனமாய் இருப்பார்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.

அதிகமாக செல்பி எடுக்கும் மனநிலை உளவியல் பாதிப்பு என உறுதிப்படுத்துகிறது அமெரிக்க உளவியல் அமைப்பான ஏ.பி.ஏ. (APA).

இதை அவர்கள் 'செல்பிட்டீஸ்' என பெயரிட்டு அழைக்கின்றனர்.

இந்த செல்பிட்டீஸ்களில் மூன்று வகைகள் உண்டு.

சிலர் நாளன்றுக்கு குறைந்த பட்சம் மூன்று செல்பிக்களை எடுப்பார்கள். ஆனால் அதையெல்லாம் சமூக வலைத்தளங்களில் போடுவதில்லை, தாங்களாக பார்த்து ரசிப்பதோடு சரி. இவர்களுடைய பெயர் 'பார்டர்லைன் செல்பிட்டீஸ்'.!

சிலர் குறைந்த பட்சம் மூன்று செல்பிக்களை எடுத்து, மூன்றையுமே சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து எத்தனை 'லைக்' வருகிறது, யார் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு 'அக்யூட் செல்பிட்டீஸ்' என பெயர்.

சீரியஸ் வகை செபிட்டிஸ் 'க்ரோனிக் செல்பிட்டீஸ்'!

இவர்கள் எப்போதும் செல்பி எடுத்து அதை அப்படியே சமூக வலைத்தளங்கள், குழுக்களில் பதிவு செய்து கொண்டே இருப்பார்கள்.

இதையெல்லாம் படித்து விட்டு செல்பி எடுப்பதே நோய் என்று பதற்றப்படத் தேவையில்லை.

'அளவுக்கு மிஞ்சினால் செல்பியும் நஞ்சு' என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த செல்பி பழக்கம் ஏதோ கடந்த சில ஆண்டுகளில் தோன்றியது என்று தான் பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் இந்த செல்பி ஆரம்பித்து 175 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தான் வியப்பூட்டும் விஷயம்.

ஆச்சரியமாக இருக்கிறதா!!

அது தான் உண்மை.

முதன் முதலாக செல்பி எடுக்கப்பட்ட ஆண்டு 1839. எடுத்தவர் பெயர் ராபர்ட் கர்னேலியஸ்.


தினத்தந்தி


 செல்பி பரபரக்கும் புது கலாசாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum