ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:02

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 8:53

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:03

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:34

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 20:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:36

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 19:04

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 19:01

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:35

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 11:11

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:04

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:23

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:19

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:16

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed 6 Nov 2024 - 12:54

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed 6 Nov 2024 - 6:54

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed 6 Nov 2024 - 1:09

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed 6 Nov 2024 - 0:56

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed 6 Nov 2024 - 0:43

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 5 Nov 2024 - 23:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 5 Nov 2024 - 22:45

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue 5 Nov 2024 - 22:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 5 Nov 2024 - 21:30

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 21:24

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 21:21

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 21:20

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 21:19

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 21:19

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 21:18

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 21:16

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 5 Nov 2024 - 20:33

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 5 Nov 2024 - 18:08

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 13:02

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue 5 Nov 2024 - 11:16

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேட்டி!

2 posters

Go down

பேட்டி! Empty பேட்டி!

Post by krishnaamma Mon 16 Mar 2015 - 19:53

''எடுத்தவுடனே நான் வெற்றிய தொட்டுடல,'' என்று கணீர் குரலில் சொல்லி, புன்னகையுடன் நாற்காலியை முன் நகர்த்திப் போட்டு கொண்டார் ரவிபிரகாஷ்.

பிரபல கட்டுமான நிறுவனத்தின், எம்.டி., அவரது பிரத்யேக அறையில் பேட்டி கொடுக்க ஆரம்பித்தார். முன்னதாக, அவரை டிஜிட்டல் கேமராவில் படம் எடுத்து முடித்திருந்தேன். அவர் பேட்டியை பதிவு செய்ய, ரெக்கார்டரை அவர் முன் வைத்தேன்.

''நான், பொதுவா தனி பேட்டிகளை விரும்பறதில்ல; அந்த நேரத்துல நிர்வாக வேலைய கவனிக்கலாமேன்னு நினைக்கிறவன். ஆனா, நீங்க நல்லா பேசி கவுத்துட்டிங்க,'' என்று சிரித்தார்.
நானும் பதிலுக்கு புன்னகைத்தபடி அருகில் அமர்ந்திருந்த நண்பன் ரவியை பார்த்தேன்.
தொழிலதிபரை பேட்டி எடுக்க, 'மேன்ஷன்' அறையிலிருந்து கிளம்பி, பாதி தொலைவு வந்து கொண்டிருந்தபோது தான் ரவி எதிர்பட்டான். என்னைப் பார்க்க ஊரிலிருந்து வந்திருந்தான்.

அவனை என் அறைக்கு அழைத்துப் போகலாம் என்றால், தொழிலதிபர் எனக்கு கொடுத்த நேரம் தவறிப் போகும் என்பதால், அவனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். பயணக் களைப்போ, வேறு எதுவோ அவன் முகம் வாட்டத்துடன் இருந்தது என்றாலும், சூழ்நிலையை புரிந்து, தொழிலதிபரின் நகைச்சுவைக்கு, தானும் புன்னகைத்து வைத்தான்.

''நான்... தொழில் துறைக்கு வர நினைச்சதே இல்ல தெரியுமா...'' என்றவர், ''அப்பா விவசாயி; எனக்கும், அதில தான் நாட்டம் இருந்துச்சு. சின்ன வயசுலருந்தே, அப்பாவோட சேர்ந்து வயலுக்கு போனதால, விதைப்பு, நடவு, களையெடுப்பு, அறுவடைன்னு எல்லாம் மனசுல ஊறிப் போச்சு. அதனால, விவசாயியா இருக்கிறதுல சந்தோஷமும், பெருமையுமா இருந்துச்சு. வளர வளர விவசாயத்தின், இன்னொரு பக்கம் தெரிய ஆரம்பிச்சது.

''என்ன தான் பாடுபட்டு உழைச்சாலும், அறுவடைக்கு பின், கடன் தான் மிச்சமாச்சு. இதை எப்படி சரிபடுத்தி லாபகரமாக்கறதுன்னு யோசிச்சேன். நெல்லை அப்படியே வியாபாரிக்கு தாரை வார்த்து, அவன் கொடுக்கும் சொற்ப தொகைய வாங்கிக்கறதால தான் இந்த நிலைன்னு தோணினதும், ஏன் வியாபாரிக்கு விற்கணும்... நாமளே நேரடியா அரிசியாக்கி, சந்தைக்கு கொண்டு போகலாமேன்னு முடிவு செஞ்சு, என், 22 வயசுல, தொழிலில்ல இறங்கினேன்.

''சென்னையில இருக்கிற அரிசி மண்டிக்காரர் ஒருவருடன் ஒப்பந்தம் போட்டு, அந்த ஆண்டு விளைச்சலை அரிசியாக்கி அனுப்பி வச்சேன். 'அரிசி தரமா இருக்கு... மார்க்கெட்டுல நல்லா மூவாவுது. அடுத்த அறுவடைக்காக காத்திராம, அக்கம் பக்கம் நெல் வாங்கி, அரிசியாக்கி சிப்பம் போட்டு அனுப்புங்க'ன்னு சொன்னார். நானும் உற்சாகமா கைப்பணம், கடன் வாங்குனதுன்னு போட்டு, தொடர்ந்து அவருக்கு சப்ளை செய்துகிட்டிருந்தேன்.

''சரி இதுவரை சப்ளை செய்ததற்கான மொத்தப் பணத்தயும் வாங்கிட்டு வரலாம்ன்னு, அவரை தேடிப் போன போது தான் தெரிஞ்சது... அவர் என்னைப் போல பல பேருக்கு, 'அல்வா' கொடுத்து, மண்டியை மூடிட்டு ஓடிப் போனது. ஊரில் தலை காட்ட முடியல; முதல் முயற்சியே காலை வாரி கடன்ல தள்ளிடுச்சேன்னு நொந்து போயிட்டேன்.

''கொஞ்ச நாள் கழிச்சு, செங்கல் தயாரிக்கலாம்ன்னு, செம்மண் நிலத்தை குத்தகைக்கு பிடிச்சு, தொழில் ஆரம்பிச்சேன். நல்லா சூடு பிடிச்சது; ஆனா, 'சடசட'ன்னு போட்டிக்கு ஆள் வந்து சுத்தி, என்னை ஒரே அமுக்கா அமுக்கிட்டாங்க; சமாளிக்க முடியாம அந்தத் தொழிலையே விட்டுட்டேன். அப்பறம், டவுன்ல சீட்டு கம்பெனி துவங்கி அதிலும் நஷ்டம்...'' என்று, இடைவிடாமல் சொன்னார்.
என்னைப் போலவே ரவியும், அவர் பேச்சை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். தொடர்ந்தார் ரவிபிரகாஷ்...

''அடுத்தடுத்த தோல்வி கொடுத்த நெருக்கடியில மன உளைச்சலும், சொந்தக்காரங்க மத்தியில ஏற்பட்ட அவமானம் என எல்லாம் சேர்த்து என்னை சென்னைக்கு விரட்டிடுச்சு. நாலு நாள் பராபரியா சுத்துனேன். ஏதாவது, வழி கிடைக்குதான்னு பாப்போம்; ஒண்ணும் சரிப்பட்டு வரலன்னா இருக்கவே இருக்கு கடல், அதுல விழுந்துடலாம்ன்னு நினைச்சேன்...'' என்று அவர் சொன்னதும் இருவருமே திடுக்கிட்டோம்.

அவர் புன்னகையுடன், ''அப்பதான், ஒரு நூல் கிடைச்சது; ஸ்க்ரீன் பிரின்டிங் கத்துக்க வாய்ப்பு கிடைச்சு, சொந்தமா யூனிட் போட்டு தொழில் ஆரம்பிச்சேன். புதுப்புது டிசைனில் விசிட்டிங் கார்டு, கிரீட்டிங் கார்டு கம்பெனி பிரவுச்சர்கள்ன்னு செய்தேன். என் வேலை பிடிச்சுப் போய், வெளிநாட்டு ஆர்டர்கள் எல்லாம் வந்துச்சு.

அதனால, பெரிசா செலவு செஞ்சு வேலையை முடிச்சு, வெளிநாடு அனுப்ப வேண்டிய நாளுக்கு முத நாள், யூனிட்ல தீப்பிடிச்சு எல்லாம் சாம்பலாயிடுச்சு; பிளாட்பாரத்துக்கு வந்துட்டேன். அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கர்சிப் வித்தேன்; பத்து கர்சிப் வித்தால், ஒரு ரூபா கிடைக்கும்.''
''நிறைய, ஏற்ற இறக்கங்களை சந்திருச்சிருக்கீங்க போலிருக்கே...'' என்றேன்.

''ம்... அந்த நேரத்துல எங்க அப்பா, என்னை தேடிக்கண்டுபிடிச்சு, 'பொழச்சது போதும்; ஊருக்கு வந்து சேரு. செத்தா கொள்ளிப் போட, நீ பக்கத்தில இருந்தா போதும்'ன்னு கூப்பிட்டார். அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பிட்டு, தீவிரமா கர்சிப் விற்க ஆரம்பிச்சேன். அப்படியே வேட்டி, லுங்கி, பெட்ஷிட்டுன்னு வித்து, ஒரு தொகை சேர்த்து, கடை எடுக்கவிருந்த சமயம், அந்த பணம், 20 ஆயிரமும் திருட்டு போச்சு; எவனோ பிளேடு போட்டுட்டான்.''

''அந்த நேரத்தில உங்க மன நிலை எப்படி இருந்துச்சு சார்,'' என்றேன் நான்.
''நீங்களே யோசிச்சு பாருங்க... அரிசி வியாபாரம் அம்போ; செங்கல் வியாபாரம் போச்சு; ஸ்கிரீன் பிரின்டிங் எரிஞ்சு போச்சு; துணி வித்து சேர்த்து வச்ச காசு திருட்டு போச்சு... ஒரு மனுஷன் எத்தனை சோதனையத் தான் தாண்டி வருவான்... தோக்கறதுக்குன்னே பிறந்தவன் போலன்னு நினைச்சு, எனக்கு ரொம்ப விரக்தியாயிருச்சு.

''ஆனாலும் மனசுக்குள்ள மெல்லிசா ஒரு இழை மாதிரி, ஒரு நம்பிக்கை ஓடிக்கிட்டிருந்தது. இதிலெல்லாம் ஜெயிக்க முடியலன்னா, நாம ஜெயிக்க வேண்டிய துறை வேறு ஏதோ இருக்குன்னு மட்டும் நினைச்சுக்குவேன். அதே நினைப்போட பிளாட்பாரத்துல உட்கார்ந்து, அது எதுன்னு யோசிச்சு மண்டையை உருட்டிகிட்டு இருந்தேன்.''

''அப்ப தான் ரியல் எஸ்டேட் பிசினஸ் ஐடியா வந்ததா?''
...............................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேட்டி! Empty Re: பேட்டி!

Post by krishnaamma Mon 16 Mar 2015 - 19:54

'அதுக்கு முன்ன சின்ன சின்னதா சில முயற்சிக செஞ்சுக்கிட்டு தான் இருந்தேன். அதுகளும் முட்டுச்சந்தில் முடிய, ஊர் திரும்பறதுன்னு நினைச்சப்பதான், தெரிஞ்ச ஒருத்தர், 'தாம்பரம் வரை வர முடியுமா... வீட்டு மனை ஒண்ணு வாங்கணும்'ன்னார்.

''ஊருக்கு போறதுக்கு முன், இந்த உதவியை செய்துட்டு போகலாமேன்னு போனேன். தொடர்ந்து, நாலைஞ்சு முறை போனதில விற்கிறது, வாங்குறது, 'புரோக்கரேஜ் கன்ஸ்ட்ரக் ஷன் லோன்'ன்னு சுவாரஸ்யமா ஏதோ தட்டுப்பட, தொடர்ந்து கவனத்தை செலுத்தினேன். ஆஹா... ஆஹான்னு தொழில் பிடிபட்டது.

''புரோக்கர்களோடு சேர்ந்து எல்லாம் கத்துக்கிட்டு நிதானமாகவும், உறுதியாகவும் செயல்பட்டேன். அது வரை கண்ணாமூச்சி காட்டிகிட்டிருந்த அதிர்ஷ்டமும், ஒரு வழியா கை கொடுக்க... இந்த 10வது ஆண்டில உங்க முன், நான் ஒரு தொழிலதிபர்,'' என்று முடித்தார்.
''புதுசா தொழில் துவங்கறவங்களுக்கு, உங்க அட்வைஸ் என்ன சார்...''

''என் வாழ்க்கை தான், என் மெசேஜ்; துணிஞ்சு செய்! ஜெயிச்சா நல்லது; ஜெயிக்கலன்னா இன்னும் நல்லது. நம்பிக்கை, முயற்சி ரெண்டையும் விடாம அடுத்த தொழிலை முயற்சித்துப் பாரு. ஒரு நாள் இல்லைன்னா, ஒரு நாள் வெற்றி, நம்ம கதவை தட்டும் அல்லது காலிங் பெல் அடிக்கும்,'' என்று கூறி, 'பளிச்'சென்று சிரித்தார்.
விடை பெற்று, ரவியுடன் வெளியில் வந்தேன்.

''அடுத்து என்ன செய்யப் போறே... வேறெங்கும் போகணுமா?'' என்று கேட்டான் ரவி.
''ஏற்கனவே, பயணக் களைப்போடு, பசியோடு இருப்பே... உன்னை இப்போ கூட ரூமுக்கு அழைச்சிட்டு போக முடியாது.

ஏன்னா பேட்டியை எழுதி, போட்டோவோட பத்திரிகை ஆபீசுக்கு ஓடி, எடிட்டர்கிட்ட சேக்கணும். பசிக்கு ஏதும் பழமோ, ஜூசோ சாப்பிடுறியா?'' என்றேன்.
''ஒண்ணும் பிரச்னை இல்ல; இப்போ சந்திச்ச தொழிலதிபரோட பேச்சும், அங்கே கொடுத்த காபியுமே, எனக்கு பரம திருப்தியை கொடுத்திருக்கு. நீ, உன் வேலைய கவனி,'' என்றான்.
அவனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டே பத்திரிகை அலுவலகத்துக்கு பறந்தேன்.

நண்பன் வந்திருப்பதை சொல்லி, வேலை முடிஞ்சதும் பர்மிஷன் வாங்கி, வெளியில் வந்து, ஒரு, 'ரெஸ்டாரண்டு'க்கு அவனை அழைத்து போய், டிபன் ஆர்டர் செய்தேன். வாஷ்பேசினில் கை கழுவ போகும்போது, மொபைலில் அழைப்பு.
''சுந்தர்... நான் ரவி அப்பா பேசறேன்...''

''சொல்லுங்க மாமா.''
''ரவி அங்கே வந்திருக்கானாப்பா,'' என்று கேட்டவரின் குரலில் பதற்றம் இருந்தது. திரும்பிப் பார்க்க, ரவி நாற்காலியில்
அமர்ந்து சர்வரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

''ஆமாம் மாமா... கொஞ்சம் முன்னாடி தான் வந்தான்; அவன்கிட்ட ஏதும் பேசணுமா...''
''நான் பேச முடியாதுப்பா; நீ தான் பேசணும். அவன் மனச மாத்தி, நல்லபடியா ஊருக்கு திருப்பி அனுப்பி வை. அவன் எழுதி வச்சுட்டு போன கடிதத்தை, இப்பதான் பாத்து, துடிச்சு போய்ட்டோம். பணம் போயிட்டு போவுது; உயிர் போனா வருமா...''என்றார்.

''என்ன நடந்தது மாமா...'' என்று கேட்டேன். அவர் சொல்ல சொல்ல, எனக்கு வேர்த்தது.
''ஆமாம், அப்பா சொன்னது நிஜம் தான்,'' என்றான் ரவி.

''அப்பா சொல்லக் கேட்காம, சினிமா தியேட்டர லீசுக்கு எடுத்து நடத்தி லாசாயிருச்சு, நிறைய கடன். எல்லாரும் கரிச்சு கொட்டினாங்க, தாங்கல, அதான் என்னை தேடாதீங்கன்னு, எழுதி வச்சுட்டு ரயிலேறிட்டேன். உங்கூட ரெண்டு நாள் இருந்துட்டு, ரயில்லயோ, பஸ்சிலோ தலையை கொடுத்துறதுன்னு முடிவு செஞ்சுருந்தேன்,''என்றான்.
''அடப்பாவி!''

''ஆனா, இப்ப அந்த எண்ணம் ஓடியே போச்சு. ஆமாம், சுந்தர் நம்பு... ஒரு தோல்வியில துவண்டு போயிருந்தவனுக்கு, பல தோல்விக்கு பின், ஜெயித்தவரை பாத்ததும், மனசுல ஒரு நம்பிக்கை வந்துருச்சுடா; அந்த தொழிலதிபரை பாக்க என்னையும் அழைச்சுட்டுப் போனதற்கு ரொம்ப நன்றி,'' என்றவனின் வார்த்தையில், நம்பிக்கை மிளிர்வதை உணர்ந்தேன்.

மீண்டும் அவன் அப்பா மொபைலில் வர, அவனிடம் கொடுத்து, ''நீயே பேசு,'' என்றேன். அவன் மொபைலை வாங்கி, ''அப்பா... அந்த லெட்டரை கிழிச்சுப் போட்டு, கண்ணை துடைச்சுக்கங்க; ரெண்டொரு நாள்ல வந்திடறேன்,'' என்றான்.

பொதுவாக, நான் எடுக்கும் பேட்டிகள், எழுதும் கட்டுரைகள், பத்திரிகையில் வெளியான பின் தான், அதன் விளைவுகள் தெரியும். வாழ்நாளிலேயே முதன் முறையாக, ஒரு பேட்டி வெளியாகும் முன்பே, நல்ல விளைவை ஏற்படுத்தியதைக் கண்டு, பத்திரிகையாளன் என்ற முறையில், எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. டிபனோடு, இனிப்பும் ஆர்டர் செய்தேன்.

படுதலம் சுகுமாரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேட்டி! Empty Re: பேட்டி!

Post by ஜாஹீதாபானு Mon 16 Mar 2015 - 19:58

ஹா ஹா ரியலேஸ்டேட் பிசினஸ் நல்லா கை குடுக்குதா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேட்டி! Empty Re: பேட்டி!

Post by ஜாஹீதாபானு Mon 16 Mar 2015 - 19:59

அச்சச்சோ பெரிய கதையா நாளைக்கு வந்த படிக்கிறேன்மா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேட்டி! Empty Re: பேட்டி!

Post by krishnaamma Mon 16 Mar 2015 - 22:14

நோ ப்ரோப்ளேம் பானு....மெல்ல படியுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பேட்டி! Empty Re: பேட்டி!

Post by ஜாஹீதாபானு Tue 17 Mar 2015 - 16:33

கதை அருமை

ஒரு பேட்டி ஒரு உயிரை காப்பாத்தி இருக்கு பகிர்வுக்கு நன்றிமா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேட்டி! Empty Re: பேட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum