ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருகாத வெண்ணெயும் ஓரடையும்...

4 posters

Go down

உருகாத  வெண்ணெயும் ஓரடையும்... Empty உருகாத வெண்ணெயும் ஓரடையும்...

Post by ayyasamy ram Sun Mar 15, 2015 3:00 pm

உருகாத  வெண்ணெயும் ஓரடையும்... KcGCXvoLSQe0tivczkjS+karadayan-noimbu

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது
காரடையான் நோன்பு.

மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல்
நாள் காலையில் முடிப்பர்.

இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கௌரி விரதம்,
சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள்.

சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது
இந்த நாளில்தான். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில்
மங்கல நாண் நிலைக்கவும்; தங்களது கணவன் நீண்ட
ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி
அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பார்கள்.

விரத பூஜையில் காமாட்சி அம்மனையும், கலசத்தையும்
(கலச பூஜை) வழி படுவார்கள்.

அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த
அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள்.
நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து
கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.

"மாசிக்கயிறு பாசி படியும்' என்று, பங்குனி முதல் நாளில்
புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாகக்
கருதப்படுகிறது.
-
சாவித்திரி விரதத்தின் சிறப்பை புராணம் விளக்குகிறது.
நெடுநாட்கள் பிள்ளைப் பேறு இல்லாமலிருந்த அசுபதி
மன்னன், மகப்பேறு வேண்டி தான- தர்மங்கள் செய்து
வந்தான்.

அதன் பயனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. சாமுத்திரிகா
லட்சணங்கள் அனைத்தும் கொண்டிருந்த அக்குழந்தைக்கு
சாவித்திரி என்று பெயரிட்டனர்.

அவளுக்கு எட்டு வயதாகும்போது அங்கு வந்த நாரதர்,
அவளது எதிர்காலத்தைப் பற்றி கூறிச் சென்றார்.
தாய்- தந்தையரை தெய்வமாக மதிக்கும் சத்யவான்
என்பவனை அவள் மணந்து கொள்வாள் என்றும்;
சத்யவான் 21 ஆண்டுகள் வரைதான் வாழ்வான் என்றும்
கூறியிருந்தார்.

சாவித்திரி சத்யவானையே மணந்து, அவனது வாழ்நாள்
அதிகரிக்க பல விரதங்களையும் நோன்புகளையும்
அனுஷ்டித்தாள்.

சத்யவானும் சாவித்திரியும் வேற்று நாட்டு அரசனால்
நாடு கடத்தப்பட்டு ஒரு கானகத்தில் வசித்து வந்தனர்.
நாரதர் கூறியிருந்தபடி சத்யவானின் இறுதிநாள் வந்தது.
அன்று சாவித்திரி தடுத்தும் கேளாமல் அவன் விறகு
சேகரிக்க காட்டுக்குப் புறப்பட்டான்.

சாவித்திரியும் உடன் சென்றாள். நண்பகல் வேளையில்
சத்யவான் சாவித்திரியின் மடியில் தலைவைத்து
படுத்திருந்தபோது, எமதர்ம ராஜன் அவன் உயிரைப் பறித்துச்
சென்றான்.

சாவித்திரியின் கற்புத் திறத்தால் எமதர்மனின் உருவம்
அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவள் தன் கணவனின்
உடலைக் கீழே கிடத்தி விட்டு, எமனைப் பின்பற்றிச்
சென்றாள்.

அவளது காலடி ஓசை கேட்டுத் திரும்பிய எமனின்
பாதங்களில் விழுந்து சாவித்திரி வணங்கினாள். அவளை
"தீர்க்க சுமங்கலி பவ' என்று எமன் வாழ்த்தினான்.

சாவித்திரி எமனை வேண்டி பல வரங்களைப்
அதில் வம்சவிருத்தி அருளும்படி வேண்டிய வரம் எமனைத்
திகைக்க வைத்தது. சாதுர்யமாக தன் கணவனின் உயிரை
அவள் மீட்டதை அறிந்தான் எமன்.

சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், ""இதுவரை
என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால்
நீ வெற்றி பெற்று விட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற
வரங்கள் அனைத்தும் நிறைவேறும். உலகம் உள்ளளவும்,
உன்னை நினைத்து மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில்
விரதமிருப்பவர்களுக்கு உன் ஆசி
அவர்கள் மனமொத்த தம்பதிகளாக வாழ்வார்கள்'' என ஆசி
கூறி அனுப்பினான்.
-
-சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத்
திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள்.
சிறிது நேரத்தில் தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல் சத்யவான்
விழித்தெழுந்து, ""உன்னைப் போன்ற பெண் ஒருத்தி என்னை
மீட்டு வந்ததாகக் கனவு கண்டேன்'' என்று கூறினான்.
அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும்; எமனுடன்
போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும்
பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள்.
-
சாவித்திரியும் சத்யவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி
வந்தனர். சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்யவான்
மீண்டும் தன் நாட்டைப் பெற்றான். அவனது பெற்றோர்கள்
கண்பார்வை பெற்றனர்.

சாவித்திரி அனுஷ்டித்து வந்த நோன்பு அவளது காலம்
வரை கௌரி நோன்பு எனக் கூறப்பட்டது. அதன்பின்னர்
சாவித்திரி நோன்பு என்ற பெயர் பெற்றது.

சாவித்திரி காட்டில் இருந்து இந்த நோன்பை மேற்கொண்ட
போது அங்கு அவளுக்குக் கிடைத்த காராமணி, கார் அரிசி
ஆகியவற்றைக் கொண்டு காரடை செய்து நிவேதனம்
செய்தாள்.

அதனால் இந்த நோன்பு நோற்கும் பெண்கள் நிவேதனத்தில்
காரடை வைத்து,"உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான்
தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க
வேண்டும்' என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்வார்கள்.

திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க,
கணவரை நோய் நொடி யின்றி காக்க இந்த நோன்பு கவசமாக
இருக்கிறது.

இந்த நோன்பை நோற்பதன் பலனாக சாவித்திரி நூறு
பிள்ளைகளுடன் சௌபாக்கிய வதியாய் பல்லாண்டு காலம்
வாழ்ந்தாள் என்பது புராணம்.

அவளது சரித்திரத்தை நோன்பு தினத்தில் படிப்பதால் சகல
சௌபாக்கியங்களும் பெறலாம்.
-
----------------------------------------------
நன்றி --நக்கீரன்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உருகாத  வெண்ணெயும் ஓரடையும்... Empty Re: உருகாத வெண்ணெயும் ஓரடையும்...

Post by T.N.Balasubramanian Sun Mar 15, 2015 5:02 pm

நல்ல தகவல் பகிர்வு 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உருகாத  வெண்ணெயும் ஓரடையும்... Empty Re: உருகாத வெண்ணெயும் ஓரடையும்...

Post by Dr.S.Soundarapandian Sun Mar 15, 2015 6:55 pm

கே. சுவர்ணா , அய்யாசாமி ராம் ஆகியோர்க்கு நன்றி !

காரை நிற்ய்த்த இடமில்லாமல் தெருவில் விட்டுக்கொண்டு
டையான் டாக்கான் என்று போகும் இவ்வாழ்க்கையில்
காரடையான் ! - இதனை நெஞ்சில் அடைப்போம் !


Last edited by Dr.S.Soundarapandian on Sun Mar 15, 2015 6:55 pm; edited 1 time in total (Reason for editing : letter correction)


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உருகாத  வெண்ணெயும் ஓரடையும்... Empty Re: உருகாத வெண்ணெயும் ஓரடையும்...

Post by krishnaamma Mon Mar 16, 2015 9:24 am

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம்: (15ம் தேதி ) அதிகாலை 4.00 - 4.15 மணி

பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

நேற்றே போட எடுத்து வைத்திருந்தேன்................புன்னகை .கொஞ்சம் வேலை அதிகம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உருகாத  வெண்ணெயும் ஓரடையும்... Empty Re: உருகாத வெண்ணெயும் ஓரடையும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum