புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
31 Posts - 58%
heezulia
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
14 Posts - 26%
Balaurushya
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
2 Posts - 4%
prajai
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
1 Post - 2%
Barushree
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
1 Post - 2%
nahoor
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
85 Posts - 74%
heezulia
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
14 Posts - 12%
mohamed nizamudeen
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
4 Posts - 3%
prajai
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
3 Posts - 3%

2 Posts - 2%
Barushree
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya
28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_m1028 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 11:51 pm

28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Modi%20standing(1)இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30 அளவில் இலங்கையை வந்தடைந்தார். மோடி சென்ற விசேஷ விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே வரவேற்றார். இந்தநிலையில் மோடி, பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார்.

கொழும்பில் இன்று அவர் முற்பகலில் அதிபர் செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து மாலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

அத்துடன் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இதனையடுத்து நாளை அவர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 1987 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வந்துள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 11:53 pm

தீவிரவாதத்தை முறியடித்துள்ளீர்கள்: இலங்கைக்கு மோடி நற்சான்று!

கொழும்பு: இலங்கை அரசு வெற்றிகரமாக தீவிரவாதத்தை முறியடித்துள்ளது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இலங்கை நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்துவது பெருமைக்குரியது என்றார்.

கலாச்சாரம், நட்புறவு மிக்க இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி என்று தெரிவித்த மோடி, தொழில் முனைவோரும், திறன்மிக்க மக்களும் மிகுந்த நாடு இலங்கை என்றும், இந்த பகுதியில் நாம் நம்மை எப்படி அடையாளப்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே வளர்ச்சி என்றும் கூறினார்.

சுதந்திரமான இறையாண்மை நாடுகளாக இந்தியா- இலங்கை சேர்ந்து நிற்கின்றன என்றும், எதிர்கால இந்தியாவுக்கான எனது கனவு அண்டை நாடுகளுக்குமானதுதான் என்றும் மோடி தெரிவித்தார்.

இராமாயண ரயில் அனைத்து மத புனித தலங்களையும் இணைக்கும் என்றும், இருநாடுகளுக்கிடையேயான போக்குவரத்தை மேம்படுத்தவும் திட்டம் என்றார்.

எதிர்கால பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியது இலங்கையின் கடமை என்று கூறிய மோடி, நல்ல நட்பு நாடாக இலங்கையை எப்போதும் ஆதரிப்போம் என்றும், இலங்கையின் ஒருமைப்பாடு இந்தியாவுக்கு மிகவும் முக்கியம் என்றும், இலங்கையில் இதுவே மாற்றத்திக்கான நேரம் என்றும் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் முன்னேறும் இந்தியாவுக்கு அண்டைநாடுகள் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட மோடி, இருநாடுகளை போக்குவரத்தின் மூலம் இணைப்பதனால் வளர்ச்சி காணலாம் என்றார்.

இந்தியாவின் வலுவான பொருளாதார நட்பு நாடாக இலங்கைக்கு தகுதியுள்ளது என்றும், இருதரப்பு உறவில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இருநாடுகளும் ஒன்றிலிருந்து ஒன்று தனித்து இருக்க முடியாது என்று கூறிய அவர், கடல்வழி பாதுகாப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்றும், இலங்கையை சேர்ந்தவர்களுக்கு வருகையின்போது விசா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் 4வது வெளிநாட்டு பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2015 11:54 pm

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்: இலங்கையில் மோடி உறுதி!

கொழும்பு: மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று இலங்கையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியா- இலங்கை இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. விசா நீடிப்பு, சுங்கத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வருகை தந்ததை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். 1987க்கு பிறகு இந்திய பிரதமர் இலங்கைக்கு வருகை தந்துள்ளது வரலாற்று பயணமாகும். இருநாட்டு உறவில் புதிய மைல்கல் எட்டப்படும். உறவை வலுப்படுத்த இருநாட்டு தலைவர்கள் அடிக்கடி சந்தித்து கொள்வது அவசியம்.

மீனவர் பிரச்னை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் இப்பிரச்னை, மீனவர்களின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது. எனவே, இப்பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வும் காணப்பட வேண்டும். இதற்கு இந்திய- இலங்கை மீனவ பிரதிநிதிகள் விரைவில் சந்தித்து, தீர்வை முன்வைக்க வேண்டும். இதன் அடிப்படையில் இருநாட்டு அரசுகளும் எதிர்காலத்தில் செயல்படும்.

இலங்கை பயணிகள் இந்தியா வந்ததும் விசா வழங்கும் முறை ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். டெல்லியில் இருந்து கொழும்புவிற்கு நேரடியாக விமான சேவை தொடங்கப்படும். இருநாடுகளுக்கு இடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன் உறவை பலப்படுத்தவும் முடியும்" என்றார்.

சிறிசேன

இந்திய பிரதமர் மோடி வருகையால் இலங்கை மக்கள் பெருமை அடைந்துள்ளனர் என்றும், யாழ்ப்பாணத்திற்கு இந்திய பிரதமர் செல்வது வரலாற்று சிறப்பு மிக்க பயணமாகும் என்றும், வரலாறு, மத ரீதியாக இந்தியா, இலங்கை நெருங்கிய தொடர்பு கொண்டது என்றும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 14, 2015 12:11 am

தமிழர்களுக்கு சம உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்: இலங்கை நாடாளுமன்றத்தில் மோடி உரை

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சம உரிமை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

செசல்ஸ், மொரீஷியஸ் நாடுகளில் சுற்றுப் பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். மாலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:

"சிங்கள தீவுனுக்கோர் பாலம் அமைப்போம் என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதை வரிகளில் நம்பிக்கை வைத்து கொழும்பு வந்துள்ளேன். மொழி, கலாச்சாரரீதியாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வரலாற்றுரீதியிலான உறவு உள்ளது.

இப்போது இலங்கையில் மாற்றத்துக்கான நேரம். இந்த சந்தர்ப்பத்தில் போரினால் ஏற்பட்ட காயங்களை ஆற்ற வேண்டும். தமிழர்களுக்கு சமஉரிமை கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியது நாட்டு மக்களின் கடமை. இலங்கையின் ஒருமைப்பாடு, அமைதி ஆகியவை இந்தியாவுக்கு மிகவும் முக்கியம்.

இரு நாடுகளின் பாதுகாப்பும் பிரிக்க முடியாதது. ஒன்றில் இருந்து ஒன்று தனித்து செயல்பட முடியாது. இந்தியா, இலங்கை இடையே கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். நட்பு நாடான இலங்கைக்கு எப்போதும் ஆதரவு அளிப்போம்.

இரு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இருநாட்டு உறவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.

இந்தியா, இலங்கை இடையேயான பொருளாதார உறவு மேலும் வலுவடைய வேண்டும். இந்தியா சார்பில் இலங்கைக்கு ரூ.9600 கோடி நிதியுதவி அளிக்கப்படும். இலங்கை ரயில்வே துறையில் ரூ.1908 கோடி முதலீடு செய்யப்படும்.

இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் நாம் நிர்ணயித்துள்ள இலக்கை விரைவாக எட்ட முடியும்" என்றார் மோடி.

4 ஒப்பந்தங்கள் கையெழுத்து

முன்னதாக, விமான நிலையத்தில் அவரை அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். பின்னர் அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிசேனாவும் மோடியும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்றார். இந்தப் பேச்சுவார்த்தையின் இறுதியில் இரு நாடுகளிடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதன்படி இருநாட்டு அதிகாரிகள் விசா இன்றி பயணம் செய்வது, சுங்க நடவடிக்கைகளில் பரஸ்பரம் உதவி, இலங்கை இளைஞர் மேம்பாட்டு திட்டம், ருகுணு பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூர் மன்றம் அமைப்பது ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

அப்போது நிருபர்களிடம் பிரதமர் மோடி கூறியது:

1987-க்கு பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வரும் இந்தியப் பிரதமர் என்ற பெருமை எனக்கு கிடைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் ராமாயணம் தொடர்பான இடங்களிலும் இந்தியாவில் புத்த மதம் தொடர்பான இடங்களிலும் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா வந்த பின்னர் விசா பெற்றுக் கொள்ளும் சலுகை இலங்கைக்கும் நீட்டிக்கப்படும். டெல்லி- கொழும்பு இடையே நேரடி விமான போக்குவரத்து தொடங்கப்படும்.

இலங்கையில் 13-வது சட்டத் திருத்தத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய, இலங்கை மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். இருநாட்டு மீனவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும். இப்போதைய நிலையில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சிறிது காலம் ஆகும்" என்றார் மோடி.

மோடியுடன் தமிழர் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் இந்திய அரசு நிதியுதவியுடன் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை அங்கு 27,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அப்பகுதிகளை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) நேரில் பார்வையிடுகிறார்.

28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 14, 2015 12:21 am

இந்தியா, இலங்கை இணைய வேண்டும்:பாரதியின் பாடலை பாடிய மோடி

கொழும்பு: 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இலங்கை பார்லி.,யில் பேசுகையில்; அனைத்து இந்தியர்களின் சார்பில் இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். கலாச்சாரம் , மொழியால் இந்தியா, இலங்கை தொடர்புடையது. இலங்கையில் அறிவார்ந்த மக்கள் உண்டு. இலங்கை பார்லி.,யில் பேசும் வாய்ப்பு எனக்கு பெருமை அளிக்கிறது. நம் இருநாடுகளும், சுதந்திர நாடுகளாக திகழ்கிறோம். இலங்கை ஆசியாவில் மிக முன்னேறும் நாடாக உள்ளது. நமது இரு நாடுகளின் தொடர்பு எல்லையில்லாதது. இந்தியாவின் வளர்ச்சியில் இலங்கைக்கு பங்கு உண்டு. இதுவே இலங்கையின் வெற்றிக்கு முக்கிய காரணியும் ஆகும். அண்டை நாடுகளை பலமடைய செய்வது எனது எதிர்கால கனவும் ஆகும். இரு நாடுகளும் தங்களின் வளத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சமீபத்திய தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கான நேரம் இது என்பதை உணர்த்தியுள்ளது. இலங்கையில் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் முக்கிய அம்சமாகும்.

வேற்றுமையில் ஒற்றுமை நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நாம் இருவரும் இணைந்து ஆசியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வோம். 380 மில்லியன் டாலர் இலங்கை ரயில் பயண திட்டத்திற்கு வழங்கியுள்ளோம். இருவரும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒன்றுபட்டுள்ளோம். பல ஆண்டு பயங்கரவாத்துடன் மோதி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை எங்களின் வலுவான நட்பு நாடு. இரு நாடுகளின் உறவில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா வரும் இலங்கைவாசிகளுக்கு விசா ஆன் அரைவல் வழங்கப்படும். இரு நாட்டு உறவு தொடர்ந்து பேணி காக்கப்படும்.

பாரதியின் பாடலை பாடிய மோடி; இலங்கை பார்லிமென்ட்டில் பேசிய பிரதமர் மோடி, 'தலைமன்னாரில் இருந்து நாளை ஒரு ரயிலை கொடி அசைத்து துவக்கி வைக்கிறேன். இதன் மூலம், இந்தியாவின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான சுப்ரமணிய பாரதி,' சிந்து நதியின் மிசை நிலவினிலே என்ற பாடலில், சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்' என்று பாடியது நினைவாகிறது,' என்றார்.

28 ஆண்டுகளுக்கு பின் இலங்கை சென்ற இந்திய பிரதமர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக