ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர்

4 posters

Go down

 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் Empty இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர்

Post by சிவா Wed Mar 11, 2015 2:17 am

 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் Murudeshwarar_3

கோயில் தரிசனத்துக்காகச் செல்லும்பொழுது கோயிலும் இடமும் இயற்கை வளமும் நன்றாக அமைந்துவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

அதுவும் உலகளாவிய பெருமையும் அழகும் சேர்ந்திருப்பின் சொல்லவா வேண்டும்?

மங்களூர் தொடங்கி, சுப்பிரமணியா வரை கர்நாடகாவில் பல ஆன்மிகச் சுற்றுலா தலங்கள் உள்ளன.. இயற்கையை ரசித்தபடி ஆன்மிகச் சுற்றுலா என்றும் சொல்லலாம். இயற்கை வளம், மலை வலம் என எல்லா ஊர்களும் சிறப்பே.

ஆயினும் கோயிலுக்காக முருடேஸ்வராவையும் இயற்கை அழகுக்காக ஹோர நாட்டையும் கண்டு களிக்கலாம்.

மங்களூரில் இருந்து 160 கி.மீ. கோவா செல்லும் வழியில் அமைந்துள்ள ஊர் முருடேஸ்வரா. போகும் வழியை வர்ணிக்க சொற்களே இல்லை. மலைப்பாதை வழியெல்லாம் வழிந்தோடும் நீரோடைகள், ஆறுகள் ஒரு பக்கம். மலை மறுபக்கம். பள்ளத்தாக்கு சோலைகள், தென்னை, பாக்கு மரங்களின் கூட்டம். வளமுடைய பல்வேறு காட்டு மரங்கள். பசுமை! பசுமை! அடாத மழை பொழியும் அகும்பைக் காடு. கண்ணுக்குள் கவிதை பாடும் கானகக் கவின் காட்சிகள்.

அதோடு அரபிக் கடலின் அலை வந்து அழகுக்கு மெருகூட்டும் சாலை சற்றே மேடும் பள்ளமுமாக நம்மைத் துன்புறுத்தும். ஆயினும் அழகுக் காட்சி நம்மைப் பரவசப்படுத்தும்.

இதோ முருடேஸ்வரா… மூன்று பக்கமும் கடல். நடுவே தீபகற்பம்போல் முருடேஸ்வரா கோயில் அமைந்துள்ளது. கோயிலால் ஊருக்கும் அதே பெயர் போலும். சிறிய ஊர். பெரிய கோயில். மீன் பிடித்தலே முக்கியத் தொழில். மீனவர் குப்பம் சூழ்ந்து காணப்படுகிறது. இரண்டு பக்கமும் கடலலை நெருக்க, நடுவே அமைந்த சாலை வழியே உள்ளே செல்கிறோம். ஆ! ஆ! என்ன உயரம். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும். அப்படி ஒரு உயரம். மிக உயர்ந்த கோபுரம். 22 மாடங்கள், 249 அடி உயரம். 18 மாடங்கள் வரை செல்ல லிஃப்ட் வசதி உள்ள ஒரே கோபுரம். அழகிய வேலைப்பாடுகளுடன், ஏக வண்ணம். உலகிலேயே மிக உயரமானது என்று சொல்கிறார்கள்.

இவ்வாறு அதன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உள்ளே சென்று சுயம்பு மூர்த்தியான முருடேஸ்வரரைத் தரிசிக்கிறோம்.

கோயில் வரலாறு: ஒரு சமயம் இராவணன் இறைவனிடம் இருந்து ஆத்ம லிங்கத்தைப் பக்தியால் பெற்று இலங்கை கிளம்புகிறான். நடுநிசியில் இயற்கை உபாதை காரணமாக லிங்கத்தை யாரிடமாவது சற்றுநேரம் கொடுத்து வைக்க விரும்புகிறான். விநாயகர் பிரம்மச்சாரி உருவில் அங்கு வருகிறார். மகிழ்ந்த இராவணனும் அவரிடம் உதவி கேட்கிறான்.

“”மூன்று முறை கூப்பிடுவேன். வராவிட்டால் கீழே வைத்துவிடுவேன்” என்ற நிபந்தனையோடு வாங்கிக் கொள்கிறார்.
மிக விரைவாக மூன்று முறை கூப்பிட, இராவணனால் வர முடியவில்லை. ஆத்ம லிங்கத்தை, அவ்விடத்திலேயே வைத்து விடுகிறார். ஆத்ம லிங்கம் முருடேஸ்வரர் ஆகிறார்.

கோயிலைச் சுற்றி அழகிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் மனத்தைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. 123 அடி உயரமுள்ள சிவபெருமான் அழகாகத் தத்ரூபமாகப் படைக்கப்பட்டுள்ளார். சூலம், உடுக்கை, பாம்பு, கங்கணம், தலைமுடி இவை யாவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

இன்னும் இராவணன் ஆத்ம லிங்கத்தைக் கொடுப்பது, நந்தி, பாரதம் எழுதும் விநாயகர், கங்கா ஜடாதாரி, கீதோபதேசம், சூரியன் போன்ற சிற்பங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் சுவரினிலே கடலலைகள் மோதுகின்ற காட்சி எழுப்பும் ஒலி நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும். லிப்டில் 18வது மாடம் வரை சென்று, அங்கிருந்து கடலையும் கடல்சார் பகுதிகளையும் பார்ப்பது அச்சமும் ஆர்வமும் கலந்ததாக அமையும். அந்தப் பெரிய சிவன் சிலை மேலிருந்து பார்க்கத் தெளிவாகவும் அழகு மிளிர்ந்தும் காட்சி தரும்.

கோயிலை ஒட்டிக் கடற்கரையில் கடலுக்குள் கட்டப்பட்டுள்ள ஹோட்டல்,மூன்று மாடிக் கட்டடம் புதுமையும் அழகும் வாய்ந்து விளங்குகிறது. கடற்காற்று வீச அலை மோத கடலைப் பார்த்தபடி அங்கு உணவு உண்ணுதல் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.murudeshwarar_2

தெருவெல்லாம் மீன் காய வைத்துள்ளனர். ஊரெல்லாம் மீன் நறுமணம்தான். தங்கும் இட வசதி உள்ளது. அடுத்தது கொடைக்கானல், ஊட்டி போன்ற குளுமை நகர்களோடு போட்டி போடும் ஹோரநாடு. முருடேஸ்வராவில் இருந்து கொல்லூர், சிருங்கேரி சென்றுவிட்டு, நானும் எனது மனைவி பிரேமாவும் ஹோரநாடு போனோம். சுற்றிலும் மலைகள்.

நடுவே அன்னபூரணி கோயில் கொண்டுள்ள ஹோரநாடு. உள்ளே செல்ல ஒரே சாலை. மழைமேகச் சாரல், பனி மேகக் கூட்டம். பசுமை போர்த்திய மலைக் காடுகள். மரக்கூட்டம், மலர்க்கூட்டம். “சல சல’ என ஓடும் வாய்க்கால்கள். தோகை மயில்கள். வெம்மை தெரியாத குளிரவும் செய்யாத இளம்பனிச் சுகம். இப்படி வருணிக்கும் அளவு குளுமைச் சுரங்கம் ஹோரநாடு.

அன்னபூரணி அம்மனையும் தரிசிக்கலாம். அம்மன் அருளோடு இயற்கை அனுபவமும் பெறலாம். வாய்ப்புக் கிடைத்தால் தவறவிடாமல் ஒருமுறை போய்ப் பாருங்கள்.

- சுவாமி சுப்பிரமணியன்


 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் Empty Re: இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர்

Post by ராஜா Wed Mar 11, 2015 11:45 am

 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் 3838410834 தகவலுக்கு நன்றி தல ..
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் Empty Re: இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர்

Post by T.N.Balasubramanian Wed Mar 11, 2015 6:14 pm

இப்பவே போய் பார்க்கமாட்டோமா என்ற எண்ணம் தோன்றுகிறது .

தகவலுக்கு நன்றி 

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Mar 11, 2015 6:15 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words.)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் Empty Re: இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர்

Post by ayyasamy ram Wed Mar 11, 2015 8:43 pm

 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் 1571444738  இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் 1571444738
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84139
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர் Empty Re: இயற்கையின் அழகோடு முருடேஸ்வரர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum