ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா

+7
Dr.S.Soundarapandian
ராஜா
யினியவன்
ayyasamy ram
சிவா
விமந்தனி
Aathira
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா

Post by Aathira Sat Mar 07, 2015 10:58 pm

First topic message reminder :

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 XfBad0VvSOSsCcAwZXvQ+ALJ_3241(1)
[img]https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-

[img]https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10930124_872135902828612_6784567739548620886_n.jpg?

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 1546280_872135779495291_1839059579936697234_n
oh=12b38400ef2b9028ffc93d6a76521e49&oe=55714827&__gda__=1434758477_ca66c065630ec90ef7f74111da1ad790[/img]
9/11034179_870425096333026_3515519045302774961_n.jpg?
மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 10373708_872135766161959_2347873433498487896_n

oh=7fa27c4776637061af5efa567ee3b7e1&oe=55766B54&__gda__=1434708030_76723ed9d694ad9e6b4821fba1149d0a[/img]

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 10957539_870425229666346_6574534299497182464_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 11025793_870427586332777_5474336910337572831_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 11038880_870427909666078_7080954106703028726_n

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 18103_870440996331436_7029734561947710898_n
மும்பையில் ஞாயிறு இலக்கிய அமைப்பு நடத்திய மகளிர்தினக் கவியரங்கில் தலைமை வகித்த போது நான் பாடிய தலைமைக் கவிதை.


தமிழ்வாழ்த்து

எல்லையை இழந்தாய் வாழ்ந்த
இருப்பிடம் நீ தொலைத்தாய் – இன்று
முல்லையும் இழந்தாய் எங்கள்
முத்தமிழ்த் தாயே என்றும்
தொல்லையில் கிடந்தும் வீரத்
தோள்தனைத் தூக்கி நின்றாய்
இல்லையே சங்க காலம்
ஏங்கினேன் தமிழே வணக்கம்.

அவை வணக்கம்
கொங்கன் கடற்கரையின் செல்வமிகு நங்கை
பாற்கடலில் கால்பிடிக்கும் இலக்குமியின் தங்கை
பாலிவுட்டின் படச்சுருளில் பளபளக்கும் அம்பை
இந்திய நகரங்களில் இவள் பூலோக ரம்பை
தமிழை வளர்ப்பதில் இவள் இன்னொரு கங்கை

பொன்னகராம் புதுநகராம்
வருவாய் எல்லாம் குவிக்கின்ற வளநகராம்
மின்னரகராம் தொழில்கள் கலைகள்
எல்லாம் வளர்கின்ற இந்நகரை
எந்நகரம்? என்போர்க்கு
என் நகரம் என் நகரம்
என முழக்கி இருமாப்பு கொள வைக்கும்
நன்னகராம் மும்பை முதுநகரில்
பெண் பெயரில் கவியரங்கம்


549 கவிஞர்கள் கவிதை பாடினர் (தென்மதுரை)
அது முதலாம் தமிழ்ச்சங்கம்
59 புலவர்கள் கவிதை பாடினர் (கபாடபுரம்)
அது இரண்டாம் தமிழ்ச்சங்கம்
49 புலவர்கள் கவிதை பாடினர் (மதுரை)
அது மூன்றாம் தமிழ்ச்சங்கம்
இப்போது 18 புலவர்கள் பாடுகின்றனர்
இது நான்காம் தமிழ்ச்சங்கம்
ஞாயிறு தமிழ்ச்சங்கம்

ஞாயிறு
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றும்
தண்டமிழ் வளர்க்கும் ஞாயிறு போற்றுதும் - ஞாயிறு
இது அவைக்கு ஒளியேற்றும் மெழுகு வர்த்தி அல்ல
அரங்கத்திற்கு ஒளியேற்றும் மின் விளக்கும் அல்ல
அகிலத்திற்கே ஒளியேற்றும் வெஞ்ஞாயிறு அல்ல
அண்டத்திற்கே அறிவுச்சுடர் ஏற்றுகின்ற செஞ்ஞாயிறு
ஞாயிறு தமிழ்ச்சங்க அவைக்கு வணக்கம்

நாளுக்கு முகவரிதான் விடியல்
நாட்டுக்கு முகவரிதான் ஆளும் மன்னன்
வேலுக்கு முகவரிதான் வேலன் (முருகன்)
வெற்றிக்கு முக்வரிதான் சூடும் வாகை
தாளுக்கு முகவரிதான் தடவும் எழுத்து
தமிழுக்கு முகவரிதான் கவிதை
கோளுக்கு முகவரிதான் ஞாயிறு - மும்பைக்
கோட்டத்திற்கு முகவரிதான் ஞாயிறு இராமசாமி

யோசித்துப் புகழ் பெற்றான் சிந்தனைச் சிற்பி சாக்ரடீசு
வாசித்துப் புகழ் பெற்றான் குறுமுணி அகத்தியன்
பூசித்துப் புகழ் பெற்றான் சோழன் கோச்செங்கண்ணான்
யாசித்துப் புகழ் பெற்றான் மாபாரதக் கண்ணன்
நேசித்தே புகழ்பெற்றார் ஞாயிறு இராமசாமி
(தமிழையும் தமிழர்களையும்)

சபரிக்கும் திருப்பதிக்கும் பறக்கின்ற ஆன்மிகப் புயல்
இது கரையைக் கடக்கும்போதெல்லாம் தமிழகத்துக்கு
அடர்த்தியான பெயல்
அதனால்தான் தழைக்கின்றது எம் போன்ற கவிஞர்களின் வயல்
ஆகையினால் கவிஞர்கள் எல்லோருக்கும் இவர்மீது அளவில்லாத மயல்

இசைத்தமிழை வளர்ப்பதில் இன்னொரு முத்துத்தாண்டவர்
இலக்கியத்தை வளர்ப்பதில் இன்னொரு கம்பன்
இவர், மின்னலை வானில் ஏற்றுவார்
வேர்களை மண்ணில் இறக்குவார்
மரங்களைப் பேச வைப்பார்
மயில்களை நடனமாட வைப்பார்
மொத்தத்தில்
இயற்கைக்குச் சிறகேற்றும் இன்னொரு புரட்சிக் கவிஞர்
தலைவர் ஞாயிறு இராமசாமிக்கு அவர்களுக்கு இன்னொரு ஞாயிற்றின் குளிர் வணக்கம்

தேவர் அசுரர் போர் 18 ஆண்டுகள்
இராமாயணப் போர் 18 மாதங்கள்
மகாபாரதப் போர் 18 நாட்கள்
சேரன் செங்குட்டுவன் போர் 18 நாளிகை
புராணம் 18
உப புரானம் 18
மேல்கணக்கு 18 கீழ்க்கணக்கு 18
ஐயப்பன் கோவில் படிகள் 18
அஷ்டபதி 18
கணங்கள் 18
ஆடிப்பெருக்கு 18
சொல்லிக்கொண்டே போகலாம்…
ஆனால் காலம் தடுப்பதால் முடிக்கிறேன் பட்டியலை
இங்கு கவிதை பாடும் கவிஞர்களும் 18
பேரளவில் இல்லை என்றாலும் பெயரளவில்
குவிந்திருக்கும்
மும்பைக் கவிதைகளுக்கு இந்தக் கவியின்
கனிந்த வணக்கம்


இனி கவிஞர்களின் கவிச்சுரங்கம் திறக்கட்டும்
உற்சாகச் சிறகடிக்கும் ஒய்யார வார்த்தைகளால்
கவிமகளின் ஊர்வலம் நடக்கட்டும்
இச்சங்கத்தமிழ் கேட்டு ஈடிலா இன்பத்தில்
இதயங்கள் இனிப்பாகட்டும்
பொன்னுரைத்த கவி உரைக்கக் கவிஞர்களை
கவிமுற்றத்திற்கு அழைக்கின்றேன்

இது தலைமைக் கவிதை
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா


இட்டலிக்கு
ஊற வைத்த அரிசியை
உப்பரிகையில்
உலர வைத்த துணிமணியை
கோபத்தில்
காய வைத்த கணவரை
குழந்தைகளின் கத்தலை
மாமியாரின் குத்தலை
பேச மறந்த அம்பலை (வம்பினை)
பூசமறந்த அரிதாரத்தை
தொலைக்காட்சித் தொடரினை
சற்றுநேரம் அப்புறப் படுத்துங்கள்
உங்கள் நினைவுகளிலிருந்து

செவிகளையும் சிந்தையையும்
கொடுங்கள் என் கவிதைக்கு

உற்பத்தி உலகே நீ
ஆண் பூசைக்கே ஊதுவத்தியாய் மணந்து
சாம்பல் ஆனாய்

உலகின் ஆதிமூலமே நீ
தொட்டில் பணி ஒன்றே சுகமென்று
கட்டிலில் முடங்கிப் போனாய்

படைப்பு கணிதத்தில்
வர்க்கமூலம் நீ
அடைப்புக் குறிக்குள் ஆச்சரியக்
குறியாய் அடங்கிப் போனாய்

கர்ப்பத்தில் நிர்மூலம் ஆகாமல் தப்பித்த
ரசமூலம் நீ
(பாதரசம்) நீ
சொர்ப்பத்தில் மதிமயங்கி மண்ணோடு
மண்ணாகி மட்கிப் போனாயே

படுத்தபடி உனைக் கிடத்தி நதி என்பார்
பர்த்தாவின் தாகம் தீர்ப்பதே உன் விதி என்பார்
ஆண் மோகக் குளியலுக்கு அடர்மழையா நீ?
கொதி கொதித்தெழு கொப்பளி

புலிப்பல் தாலி என்றார்
ஐம்படைத் தாலி என்றார்
ஆளுமையில் உயர்ந்த உன்னை அடிமையாக்கி
அந்த வேலிக்குள் சிறை பிடிப்பார்
குதி, வேலி தாண்டு, குதித்தோடு
ஆளுமைத் திறன் உனக்குள் அதிகம் எனக் காட்டு

சங்கமத்தில் சரிபாதி நீ
உனை அகத்துறையில் மூழ்கடித்து
குங்குமத்தில் அடைத்து விட்டார்
முடி.. மோகக்கதையை முடி!
நீ முடிப்பதற்கு வேறு இருக்கிறது படி!

மூடிக்கிடக்கும்
முதுமக்கள் தாழியிலிருந்து
வெளியில் வா
அந்த முதுமை கள் தாழியிலிருந்து
முண்டியடித்து வெளியில் வா
காத்துக்கிடக்கிறது படைப்புலகம் உனக்காக

உன் நெற்றித் திலகத்தை வினாக்குறியாக்கு
கேள்வி கேள்
சாதனையின் திறவுகோள் எது என்று

வெற்றிப் புள்ளியைத் தொடும் சூத்திரத்தை
உன் வட்டப் பொட்டிடம் கேட்டுப் பார்

கங்குலை உடை
தூள் தூளாக்கு
உனை இருளில் தள்ளிய
காலத்தின் முகத்தில்
கரியைப் பூசு

வீரம் கொள்
மீசையில்லையே என்று வருந்தாதே
புருவங்களை முறுக்கு

விழி.. விழிதிற
கணன்று எரியும் உள்ளத்தை வெளித்தர
தொலைதுரக் கனவு காண்
உன் கனவுகளைக் கலைப்போரை
கணலாட்டு விழிச் சுடராலே

இனியும் இருட்டுத் தெருவில்
இருந்து உலவாதே
வெளிச்ச பவனி வா
பவனி முடியும் நாளில்
பெண்ணுக்கே கொடையாக்கு
அந்த வீர விழிகளை

33  33 என்று
விழுக்காடு கேட்டு புலம்பாதே
குறை வேக்காடா நீ
எடுத்துக் கொள் 100 விழுக்காடு
எதிர்ப்பவர்களை விழுக்காட்டு
எரியும் தணலில்

சேலைக்கடையில்
நிறங்களுக்காக நெடுந்தவம் செய்யாதே
நிறுவுவதற்காக கடுந்தவம் செய்
எங்கெங்கும் உன்சக்தியை நிறுவ
கடுந்தவம் செய்
பெண் சக்தியை நிறுவுவதற்காகக் கடுந்தவம் செய்

பாலியல் கல்வியைக் கண்மூடி எதிர்க்காதே
பச்சைக் குழந்தைகளின் பரிதாபம் உணர்

உழவைக் கொடுக்காத ஊதியக் கல்வியால்
உருப்படுமா இந்தியத் தேசம்
சிந்தித்தாயா? செயல் என்ன செய்தாய்

ஈழக் கனவை எப்படி முடிப்பது
ஏதாவது செய் உன்னாலும் முடியும்
பாலுக்கழுகும் பருவமா உன்னது
பால்மணம் மாறா மழலைகள்
மடிந்தை மறக்க முடிந்ததா
மங்கையே உன்னால்

காவிரி ஓடம் தமிழ்க்கரையேற
ஒரு துடுப்பேனும் நீ போட்டாயா?
ஆடிப்பெருக்கில் தீபம் ஏற்றினால்
அதுபோதுமென்று இருந்துவிட்டாயே

விலை ஏற்றமில்லாத எரிவாயுக்காக
எப்போதாவது போராடினாயா
எப்படிக் கிடைக்கும் ஏற்றம் உனக்கு?

போதையில் இளைஞர் களிக்கின்றார்களே
வேதனை கொள்வது மட்டுமா தீர்வு?
வீதியில் இறங்கிப் போராட வேண்டாமா?

அடுத்த தலைமுறை அணுஉலைக் கசிவிலா
அநியாயமில்லை? ஆராய்ந்தாயா?
எரியில் மூழ்கிய இருநாடு பற்றி
ஏட்டில் படித்தது நினைவில் இல்லையா

ஒத்தி வைப்பில்லாப் பாராளுமன்றம்
ஓர்நாள் நடந்ததாய்ச் சரித்திரம் இல்லை
ஒதுங்கிப் போவதற்கா ஓட்டுப் போட்டாய்

தீட்டுப் பற்றி பேசுகின்றாயே
தீண்டாமைத் தீயில் கருகிய முகங்கள்
எத்தனை எத்தனை கணக்கெடுத்தாயா?

அடுப்பை மாற்றுவது
நாள் கோள் பார்த்து உடுப்பை மாற்றுவது
அதிஷ்டக் கல் மாட்டுவது (கணையாழியில்)
வாஸ்து பார்த்து பல்வரிசை மாற்றுவது
எல்லாவற்றையும் மாற்றிவிடு

தொப்புள் கொடியை தேசியக் கொடியாக்கு
திருப்பூர் குமரர்களைத் தேகத்தில் தேக்கு

உழைப்பைச் சாவியாய் இடுப்பில் மாட்டு
கருப்பைச் சுமையென்றால் கழற்றி விடு
உறுப்புதானே

பிறப்பில் வேறுபாடு இல்லை.. வெற்றி பெறு!


Last edited by Aathira on Tue Mar 10, 2015 10:27 pm; edited 12 times in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty Re: மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா

Post by Aathira Mon Mar 09, 2015 10:30 pm

P.S.T.Rajan wrote:கவியரங்ஙை அதிரவைக்கும் ஆதிராவுக்கு வாழ்த்துகள்.............வளர்க புலமை......நன்று.......
மேற்கோள் செய்த பதிவு: 1124726
அன்பாக வாழ்த்தும் திரு ராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Tமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Hமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Iமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Rமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty Re: மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா

Post by M.Saranya Tue Mar 10, 2015 2:42 pm

அற்புதமான கவிதை குவியல் தோழி...என்னை மறந்து நான் கவிதையில் ஒன்றிவிட்டேன்.....
என்ன ஒரு சிந்தனை தங்களுக்கு!!!!!!!!!!
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் தோழி.தரணியெங்கும் தமிழ் பாடி தமிழுக்கு பெருமை தந்து கொண்டிருக்கும் தங்கள் சேவை மகத்தானது...
பெண்மையை பற்றி எவ்வளவு நுணுக்கமாய் கூறியுள்ளீர்கள்...வாழ்க!!!!!!!! வளர்க!!! உங்கள் தமிழ் தொண்டு!!!!!



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty Re: மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா

Post by Aathira Tue Mar 10, 2015 8:53 pm

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Yh97yycdT5OsvczCg09x+ALJ_3225

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 XfBad0VvSOSsCcAwZXvQ+ALJ_3241(1)

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Co9rPbfSbmlxkHldTKoE+ALJ_3296(1)



மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Tமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Hமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Iமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Rமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Aமும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா - Page 3 Empty Re: மும்பையில் மகளிர் தினக் கவியரங்கில் அதிரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum