ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம்

3 posters

Go down

 ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம் Empty ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம்

Post by சிவா Thu Mar 05, 2015 6:54 pm


ஷீரடியில் ஒருநாள் கூட்டத்தோடு நின்றிருந்த கோயில் பூஜாரிமேல் அருளாவேசம் வந்தது. மக்கள் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டே பூஜாரியைப் பார்த்தார்கள். பூஜாரி முழங்கினார். இந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள, இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பாருங்கள்! இதைக் கேட்ட இளைஞன் கலகலவென்று நகைத்தான். அப்படியே ஆகட்டும். தோண்டுங்கள்! என்றவாறே வேப்பமரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சிலர் ஓடோடிப்போய் கடப்பாரையை எடுத்துவந்து வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்ட எத்தனித்தார்கள். அப்போது யாரோ பெருமூச்சோடும் கோபத்தோடும் சீறும் ஒலி கேட்டது. கடப்பாரையைத் தூக்கியவர்கள் திகைத்துப் பின்வாங்கினார்கள்....!

வேப்பமரத்தின் அருகாக இருந்த பாம்புப் புற்றிலிருந்து ஒரு ராஜநாகம் பெருமூச்சோடு உர்ரென்று தலையைத் தூக்கிச் சீறியது. அத்தனை பெரிய நாகப்பாம்பை யாரும் அதுவரை பார்த்ததில்லை. அதன் குடைபோல் விரிந்தபடத்தையும் பளபளவென மின்னும் வழவழப்பான வசீகரத் தோற்றத்தையும் வியந்து பார்த்த மக்கள், நாகராஜா! எங்களைக் காப்பாற்று! என்று முணுமுணுத்தவாறே கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். வேப்ப மரத்தடியிலிருந்து இப்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இளைஞன், நாகராஜாவைக் கனிவோடு பார்த்தான். சரி.. சரி... நான் சொல்லித்தான் இவர்கள் தோண்டுகிறார்கள்.

நீ கோபம் கொள்ள வேண்டாம்! அமைதியாக இரு! என்று நாகப்பாம்பிடம் சொன்னான்! பாம்போடு பேச முடியுமா? அவன் பேசினானே! அந்தப் பாம்பும் அவன் பேச்சைப் புரிந்துகொண்டதே! புற்றைவிட்டு மெல்ல ஊர்ந்து வெளிப்பட்ட ராஜநாகம், இளைஞன் அமர்ந்திருந்த இடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வலம் வந்தது. பின் அவன் பாதங்களில் தலைவைத்து நமஸ்கரித்தது. பிறகு மறுபடி அதே புற்றுக்குள் போய் மறைந்துவிட்டது! இந்த விந்தையான காட்சியைப் பார்த்த பெண்மணிகள் கன்னத்தில் கைவைத்து, என்னடியம்மா இது! அதிசயமாக இருக்கிறது! என்று வியப்பில் ஆழ்ந்தார்கள். இளைஞன் கலகலவெனச் சிரித்துக் கொண்டே நடக்கட்டும்!

வேப்ப மரத்தின் வேரை வெட்டிவிடாதீர்கள். அது இந்த ஊரின் காவல் மரம்! என்று எச்சரித்து, தோண்டுகிறவர்களுக்கு உத்தரவு கொடுத்தான். மணிநாதம் போன்ற இளைஞனின் சிரிப்பில் மயங்கிய அவர்கள், பின் சுதாரித்துக் கொண்டு மறுபடி தோண்டத் தொடங்கினார்கள். மண்ணுக்குள்ளே அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மண்ணை மெல்ல மெல்லத் தள்ளிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே தென்பட்டது ஒரு குகை. அந்த அழகிய குகையில் நான்கு மாடங்கள் இருந்தன. நான்கு மாடங்களிலும் நான்கு தனித்தனி அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.

அதை விட ஆச்சரியம்! அந்த விளக்குகள் ஒவ்வொன்றும் அப்போதுதான் ஏற்றி வைக்கப்பட்டதுபோல் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தன. மூடிய குகைக்குள் விளக்கை ஏற்றிவைத்தது யார்? மண்மூடிய குகைக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது எப்படி? குகை நடுவே ஒரு மரப் பலகை வைக்கப் பட்டிருந்தது. மிகச் சில கணங்கள் முன்னால் வரை, யாரோ ஒரு ரிஷி அதில் அமர்ந்து தவம் செய்திருக்க வேண்டும். அந்த ரிஷி யார்? இப்போது அவர் எங்கே போனார்? அன்றலர்ந்த மலர்களால் அந்தப் பலகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலகையின் மேலே ஒரு ஜபமாலை. அந்த ரிஷி பயன்படுத்திய ஜபமாலையாக இருக்கலாம்.

குகை முழுவதும் கமகமவென ஒரு மனோகரமான நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மண்ணால் மூடியிருந்த குகை இப்போது திறக்கப்பட்டதால் அந்த மணம் வெளியேயும் பரவி, கிராமம் முழுவதையும் வாசனை நிறைந்ததாக மாற்றியது. மண்ணைத் தோண்டி குகையைக் கண்டு பிடித்தவர்கள் மேலே ஏறி வெளியே வந்து தாங்கள் கண்ட அதிசயக் காட்சியை இளைஞனிடமும் மக்களிடமும் சொன்னார்கள். ஏற்கனவே தெரிந்த விஷயத்தைக் கேட்பதுமாதிரி, அவர்கள் சொன்னவற்றைச் சிரித்துக் கொண்டே கேட்டான் இளைஞன். சரி.... பூஜாரி சொன்னபடி மண்ணைத் தோண்டிப் பார்த்தாயிற்று அல்லவா?

இனி அந்த இடத்தை முன்போல் மண்போட்டு மூடிவிடுங்கள்! இனி எக்காரணம் கொண்டும் இந்த இடத்தைத் திறக்காதீர்கள்! ஒரே ஒருமுறை திறந்து பார்க்க மட்டும்தான் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது! அவன் எச்சரிப்பதுபோல் கூறினான். குகை மிகுந்த கவனத்தோடு மறுபடி மண்போட்டு மூடப்பட்டது. மக்களின் முகங்களில் தென்பட்ட கேள்விக்குறியைப் பார்த்து, இளைஞன் விளக்கம் தருவதுபோல் பேசலானான்: உள்ளே இருக்கும் குகை, குருநாதர் தவம் செய்யும் குகை. உலக ஷேமத்திற்காக அவர் எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார். அடிக்கடி மண்ணைத் திறந்து குருநாதர் தவத்தைக் கலைக்கலாகாது.

இந்த வேப்ப மரத்தின் வெளியில் நாள்தோறும் விளக்கேற்றி வையுங்கள். வியாழக்கிழமை மறக்காமல் ஊதுபத்தி ஏற்றி வழிபடுங்கள். இச் செயல்கள் காரணமாக கிராமத்திற்கு மங்கலங்கள் பெருகும். அனைவரும் சுபிட்சமாக வாழ்வீர்கள். சரி... நீங்கள் எல்லோரும் இப்போது வீட்டுக்குச் செல்லலாம். நாளை அதிகாலை வரை யாரும் மறுபடி இங்கு வரவேண்டாம்! இளைஞனின் கண்டிப்பான குரலைக் கேட்டும், அந்தக் குகை பற்றிய வியப்பில் தோய்ந்தும் மக்கள் மெல்ல மெல்லக் கலைந்தார்கள். இளைஞன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து நிர்ச்சலனமான தியானத்தில் ஆழ்ந்தான்.

மக்கள் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்கள். குகையில் குருநாதர் தவம் செய்வதாய்ச் சொன்னானே? யார் அந்த குருநாதர்? இவனே தானா? நினைத்தாலே சாந்தி தரும் அவன் திருமுகத்தை மனத்தில் தேக்கியவர்களாய் அனைவரும் மனமில்லாமல் தங்கள் இல்லம் நோக்கி நடந்தார்கள். அந்த இளைஞனுக்குச் சாப்பிடச் சப்பாத்தி கொடுத்த பாய்ஜா மாயி, இரவில் தன்னந்தனியே இவன் இங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கப் போகிறான் போலிருக்கிறதே? பாம்புப் புற்று வேறு அருகில் இருக்கிறதே! இறைவா! எந்த ஆபத்தும் வராமல் இவனைக் காப்பாற்று! என்று உளமார வேண்டிக்கொண்டாள்.

இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடமே வேண்டிக் கொள்ளும் அவளின் வெகுளித்தனத்தை என்னென்பது! மறுநாள் அதிகாலை எழுந்தவுடன், இளைஞனை மீண்டும் தரிசிக்கும் ஆவலில் ஓடோடி வந்தாள் பாய்ஜாமாயி. ஊர்மக்கள் அனைவரும் அவளைத் தொடர்ந்து வந்து அதே வேப்பமரத்தடியில் மறுபடி கூடினார்கள். ஆனால், அந்த இளைஞன் அங்கே இல்லை. அதுமட்டுமல்ல, அவன் நேற்று அங்கே இருந்ததற்கான சுவடு கூட இல்லை. ஏன்... நேற்று வேப்ப மரத்தடியில் தோண்டிப் பார்த்து பின் புதுமண்ணைப் போட்டு மூடினார்களே? வேப்ப மரத்தடி பழையபடி தான் இருந்ததே தவிர, தோண்டிப் பார்த்து மறுபடி மூடியதற்கான அறிகுறி எதுவுமே அங்கு தென்படவில்லை!

அப்படியானால் நேற்று நடந்ததுதான் என்ன? அது உண்மையா... இல்லை.. மாயத் தோற்றமா? ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்து பார்த்தது மாயத் தோற்றமாக இருக்குமா? ஆனால், இப்போது நினைத்துப் பார்த்தால், இந்த உலகமே மாயத் தோற்றம் என்றும், அந்த இளைஞன் ஒருவன் மட்டும் தான் உண்மை என்றும் அல்லவா தோன்றுகிறது? இந்த வேப்பமரத்தடியை மீண்டும் தோண்டிப் பார்த்தால் என்ன? அந்த இளைஞன் மரத்தடியை மறுபடி தோண்டக் கூடாது என்றல்லவா உத்தரவு போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்? ஷிர்டி மக்கள் அனைவரும் அவன் மறுபடி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யலானார்கள். நாள்தோறும் அவன் சொன்னபடி அந்த வேப்பமரத்தடியில் அவனது தரிசனத்திற்காக விளக்கேற்றி காத்திருந்தார்கள்.

தினகரன்


 ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம் Empty Re: ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம்

Post by விமந்தனி Thu Mar 05, 2015 10:29 pm

ஓம் சாயி நமோ நமஹ;
ஸ்ரீ சாயி நமோ நமஹ;
ஜெய, ஜெய சாயி நமோ நமஹ;
சத்குரு சாயி நமோ நமஹ;



 ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம் Empty Re: ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம்

Post by சிவனாசான் Fri Mar 06, 2015 6:19 am

நல்ல கலியுக சேதி அன்பரே.........நம்பினோர்கு நடராஜர்................
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

 ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம் Empty Re: ஷீரடியில் வேப்பமரத்தின் குகையில் இருந்த அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமைச்சர் கருணாவுக்கு அணியப்பட இருந்த மாலை மாயமாக மறைந்து போன அதிசயம்!
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» ஷீரடியில் ஆள் கடத்தல்? ஓராண்டில் 88 பேர் மாயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum