ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_m10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_m10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10 
heezulia
ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_m10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10 
i6appar
ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_m10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10 
Jenila
ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_m10ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம்

2 posters

Go down

ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Empty ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம்

Post by சிவா Mon Mar 02, 2015 4:00 pm



ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் ரூ. 1.20 லட்சம் கோடி செலவில் உருவாக உள்ளது. குண்டூர் மாவட்டம் தூளூரு பகுதியில் சர்வதேச தரத்தில் உருவாக உள்ள இந்த தலைநகரில், ஜப்பானைச் சேர்ந்த 250 நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் சுமார் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க உள்ளது.

சந்திரபாபு தீவிரம்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தனி தெலங்கானா மாநிலம் உருவான பின்னர், கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய இரு பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்கள் இணைந்து புதிய ஆந்திர மாநிலம் கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி உருவானது. தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகரமாக ஹைதராபாத் 10 ஆண்டுகள் வரை செயல்படும். எனினும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய தலைநகரை அமைக்கும் பணியில் தீவிரம் காட்டுவதால், வரும் ஏப்ரல் மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

நகரமாகும் கிராமங்கள்

மாநிலத்தின் மையப்பகுதியில் புதிய தலைநகர் அமைய வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டதால், கிருஷ்ணா நதிக்கரையின் இரு பகுதியிலும் அழகிய தலைநகரம் அமைய உள்ளது. இதற்காக குண்டூர் மாவட்டத்தில் உள்ள தூளூரு, மங்கலகிரி, தாடேபல்லி கூடம் ஆகிய 3 மண்டலங்களில் உள்ள 29 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தலைநகருக்காக இப்போது நிலங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 25 ஆயிரம் ஏக்கர் நிலம் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநில நகர வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா தெரிவித்துள்ளார். இன்றுடன் நிலம் சேகரிப்பு முடிவடைய உள்ளதால், நேற்று விவசாயிகள் தானாக முன்வந்து மேலும் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அரசுக்கு வழங்கினர். இவை தவிர அரசு நிலங்கள் 15 ஆயிரம் ஏக்கர் உள்ளது. இதன் காரணமாக முதற்கட்டமாக 50 ஆயிரம் ஏக்கரில் புதிய தலைநகரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வரும் ஏப்ரல் மாதம் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது.

விவசாயிகளுக்கு நஷ்டஈடு

தலைநகருக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு தனியாக நிலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டஈடு வழங்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது. இது தவிர மல்லி, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும் பூந்தோட்டம் அமைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க உள்ளது. மேலும் விவசாய வங்கி கடன் ரூ. 1.5 லட்சம் வரை தள்ளுபடி செய்யவும் அரசு உத்தரவாதம் வழங்கி உள்ளது.

மாநிலப் பிரிவினை சட்டத்தின்படி, தலைநகர் அமைக்க மத்திய அரசு நிதி உதவி வழங்க உள்ளது. சுமார் ரூ.3 லட்சம் கோடி வரை செலவாகும் சார்பில் மத்திய அரசுக்கு மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. பின்னர் இது ரூ. 1.2 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஒப்பந்தம்

மொத்தம் 1,010 ஏக்கர் பரப்பில் புதிய தலைநகரம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சிங்கப்பூரில் உள்ள 2 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தலைமைச் செயலகம், சட்டப் பேரவை,

ராஜ்பவன், முக்கிய அரசு கட்டிடங்கள், முதல்வரின் இல்லம், அரசு ஊழியர்களின் குடியிருப்புகள் அமைய உள்ளன. முதல்வரின் அலுவலகம் மட்டும் 14 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. ராஜ்பவன் 15 ஏக்கரிலும், தலைமைச் செயலகம், சட்டப்பேரவை மற்றும் எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளுக்கு 120 ஏக்கரும், உயர் நீதிமன்றத்துக்கு 60 ஏக்கரும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு துறை அலுவலக கட்டிடங்களும் நிறுவப்பட உள்ளன.

சிங்கப்பூர் நிறுவனங்கள் வரும் ஜூன் மாதத்தில் இதற்கான மாஸ்டர் பிளான் வழங்க உள்ளன.


ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம் Empty Re: ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம்

Post by யினியவன் Mon Mar 02, 2015 4:10 pm

நம்ம ஊரு கேடிகள் எத்தனை பேர் சுவிஸ் அக்கவுண்ட் ஆரம்பிக்க போறாங்களோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
» ரூ.77 கோடி செலவில் 464 புதிய பஸ்கள், 250 வழித்தடங்கள், ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
» ரூ.800 கோடி செலவில் தயாராகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் புதிய மாற்றம்
» திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு
» ரூ.968 கோடி செலவில் இந்தியா–வங்காளதேசம் இடையே புதிய அகல ரெயில்பாதை இருநாட்டு ரெயில்வே மந்திரிகளும் அடிக்கல் நாட்டினார்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum