ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

5 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Mon Mar 02, 2015 12:36 am

பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு?

இது ‘H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு’க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புள்ளிவிவரங்கள் ஏமாற்றுகின்றனவா?

ஏழை மக்களின் மீது அலட்சிய மனோபாவம் கொண்ட அரசு மருத்துவ அமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். தினம் தினம் பன்றிக் காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உயர்ந்துகொண்டே போகிறது. “தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் ஆகியவற்றால் ஒருவர் இறந்தால், இறப்புக்குக் காரணமாக அதைக் குறிப்பிடக் கூடாது என்று உள்ளூர் நிர்வாகங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார் தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர். இப்படியான சூழலில் அரசு தரும் புள்ளிவிவரங்களை நம்புவது அபத்தமாகவே அமையும். ஆகவே, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 16,235 பேர்; இறந்தவர்கள் 926 பேர் என்று அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களை நாம் நம்பிவிட முடியாது. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.

கடும் தட்டுப்பாட்டில் தடுப்பூசிகள்!

இவ்வளவு ஆபத்தான நிலையிலும்கூட பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் பேரில், அந்த நாடு 2009, செப்டம்பர் மாதத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் இதற்கான தடுப்பூசிகளை நான்கு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டோர், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு விநியோகித்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளும் இதைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், 2009-ம் ஆண்டு முதலே இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டாலும், இன்றைய தேதியில் உடனடியாக உயிர் காக்க ஒரு தடுப்பூசியை வாங்கிவிட முடியாது என்பதே முகத்தில் அறையும் உண்மை.

இங்குள்ள சொற்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் மொத்த நோயாளிகளுக்கும் போதுமானதாக இல்லை. சொல்லப் போனால், தமிழகத்தில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் களுக்கே தடுப்பூசி கிடைப்பதில்லை என்கின்றன மருத்துவ வட்டாரங்கள். பணம் செலுத்தி முன்பதிவு செய்தால் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். புணேவைச் சேர்ந்த ஒரு தனியார் தடுப்பூசி நிறுவனம், இப்போதுதான் 65 ஆயிரம் ‘வீரியம் குறைக் கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் ரூ. 800 விலை கொண்ட இதுவும் மார்ச் மாதம் இறுதியில்தான் விற்பனைக்கு வரும். அதுவரை நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

ஏழைகளின் ‘ரத்தம் உறிஞ்சும்’ பரிசோதனை!

சில நாட்களுக்கு முன்பு வரை நாடு முழுவதும் தனியார் பரிசோதனைக் கூடங்கள், மேற்கண்ட நோய்களின் பரிசோதனைகளுக்கு ஏகபோகமாகக் கட்டணம் (ரூ.10 ஆயிரம் வரை) வசூலித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அரசு, டெல்லியில் ரூ. 4,500, தமிழகத்தில் ரூ. 3,750 என்று கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. சரி, தனியார் நிறுவனங்கள் எந்தக் காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்திருக்கின்றன? எங்கே செல்வார்கள் ஏழைகள்?

அரசு மையங்களில் ரத்தப் பரிசோதனை இலவசம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், எத்தனை அரசு மையங்கள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. 32 மாவட்டங்களும் 12 மாநகராட்சிகளும் கொண்ட தமிழகத்தில், ஆறு பரிசோதனை மையங்கள் மட்டுமே அரசு மையங்கள். மீதமுள்ள 13 தனியார் வசம். (பார்க்க: பெட்டிச் செய்தி). அவையும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கின்றன. எங்கோ ஒரு மூலையிலும் மலைக் கிராமங்களிலும் வசிப்போர் எங்கே செல்வது?

என்னதான் தீர்வு?

இதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் கூறும்போது, “எனக்குப் போட்டுக்கொள்ள தடுப்பூசிக்காகப் பதிவுசெய்து இரண்டு நாட்களாகிவிட்டன. எப்போது வரும் என்று தெரியவில்லை. மருத்துவரான எனக்கே இந்தக் கதி என்றால், பொதுமக்களின் கதி? அரசை நம்பிப் பலன் இல்லை. இதன் வீரியம் குறையும் வரை மக்கள் பயணங்களைத் தவிர்க்கலாம். அதிகமாகக் கூட்டம் கூடும் பொதுஇடங்களைத் தவிர்க்கலாம். விழாக்களைக் குறைத்துக்கொள்ளலாம். அப்படியே செல்வதாக இருந்தாலும் பிரத்தியேக முகமூடிகள் (சுமார் ரூ.50) அணிந்துகொண்டு செல்லுங்கள்.மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றால், ‘என் 95’ ரக முகமூடி (ரூ. 200 - 225) அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள் நுழையும் முன்பு கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.

சுவாசக் கருவிகள் பற்றாக்குறை- மருத்துவர் ரவீந்திரநாத்

பன்றிக் காய்ச்சலால் 2009-ம் ஆண்டு தொடங்கி, இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 600 பேர் வரை உயிரிழக்கிறார்கள். ஆனால், அரசு முடிந்த வரை உண்மையான புள்ளிவிவரங்களை மறைப்பதிலேயே முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு 2014-ம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ஓர் இறப்புகூட இல்லை என்ற தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இப்போதும் ‘9 பேர் மட்டுமே இறந்துள்ளனர்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’ என்றே அரசு கூறிவருகிறது. இங்கு அரசு மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் கூட பற்றாக்குறையாக உள்ளன.

எங்கெல்லாம் பரிசோதனை செய்யலாம்?

அரசு: கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி.

தனியார்: சென்னை - பாரத் பரிசோதனை மையம், ஹைடெக் டயக்னாஸ்டிக் மையம், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, லிஸ்டர் மெட்ரோபாலிக் லேப் அண்ட் ரிசர்ச் சென்டர், டயக்னாஸ்டிக் சர்வீசஸ், ஸ்டார் பயோடெக் சொலுஷன், பிரிமியர் ஹெல்த் சென்டர்.

கோவை - மைக்ரோ பயாலஜி லேப்.

நாகர்கோவில் - விவேக் லேப்.

வேலூர் - கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி.

திருச்சி - டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர்.

மறைக்க நினைக்கும் மத்திய அரசு- மருத்துவர் புகழேந்தி

பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் கிருமியின் டி.என்.ஏ-வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சரகம் அப்படி ஏற்படவில்லை என்கிறது. ஆனால், கிருமியின் வீரியம் கூடிவிட்டதை மட்டும் மத்திய அமைச்சரகம் ஏற்றுக்கொள்கிறது. டி.என்.ஏ-வில் மாற்றம் ஏற்படாமல் கிருமியின் வீரியம் அதிகரிக்காது என்பது அடிப்படை உண்மை. ஆனால், இதுதொடர்பாக இந்திய அரசு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. சென்னையில் மட்டுமே 18 இடங்களில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், அரசு 4 என்று மட்டுமே சொல்கிறது. சமூக அக்கறை கொண்ட தனியார் அமைப்புகளுடன் அரசு நிர்வாகம் இணைந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வு காண முடியும்.

தாமதமாகிவிட்டது!- மருத்துவர் கு.கணேசன்

நோயாளியின் மூக்கு, தொண்டையிலிருந்து சளியை எடுத்துச் செய்யப்படும் ‘ரியல் டைம் பி.சி.ஆர்.’ பரிசோதனையும் ‘வைரஸ் கல்ச்சர்’ பரிசோதனையும் பன்றிக் காய்ச்சலை உறுதிசெய்கின்றன. ஆனால், இவை நவீன மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். அதேபோல் டாமிஃபுளூ மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. தனியார் மருத்துவமனைகள் இவற்றை அரசு மருத்துவமனைகளிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனைகள் இதில் ரிஸ்க் எடுப்பதில்லை. நோயின் மூன்று நிலைகளில் முதல் நிலையில் மட்டுமே சித்தா, ஆயுர்வேதம் தீர்வளிக்கும். அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களுக்கு அலோபதி மட்டுமே தீர்வு. தடுப்பூசியைப் பொறுத்தவரை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே போட்டால்தான் பயன் தரும். பன்றிக் காய்ச்சல் பரவிய பிறகு போடுவது முழுமையான பலன் தராது. செலுத்தப்பட்ட மூன்று வாரங்கள் கழித்தே இதன் தடுப்பாற்றல் வெளிப்படும்.

- டி.எல். சஞ்சீவிகுமார்


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Mon Mar 02, 2015 12:37 am

பன்றிக் காய்ச்சலுக்கு 1075 பேர் பலி: 20 ஆயிரம் பேர் பாதிப்பு

பன்றிக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, நாட்டிலேயே மிக உயர்ந்த அளவில் குஜராத்தில் 275 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் 261 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 153 பேரும் பலியாகியுள்ளனர். மராட்டியத்தில் 143 பேரும், தெலுங்கானாவில் 57 பேரும், கர்நாடகாவில் 46 பேரும், பஞ்சாப்பில் 42 பேரும், அரியானாவில் 21 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும், டெல்லியில் 10 பேரும், தமிழகத்தில் 9 பேரும், இமாச்சல் பிரதேசத்தில் 8 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா, பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை. நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்துள்ளார்.


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Mon Mar 02, 2015 4:36 pm

பன்றிக்காய்ச்சல்: உ.பி.,யில் பரவுகிறது

லக்னோ: பன்றிக்காய்ச்சல் உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவி வருகிறது. அங்கும் இங்குமாக இருந்த பாதிப்பு தற்போது பல மாவட்டங்களுக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது. தலைநகர் லக்னோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்க 505 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாகவும் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.48 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்வதால், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Mon Mar 02, 2015 4:39 pm

கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி

கோவையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 38 வயது பெண் ஒருவர் பலியானார்.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக தொண்டையில் புண்ணும், காய்ச்சலும் ஏற்பட்டிருந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

காய்ச்சல் தொடர்ந்ததால் அவர் நேற்று காலை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார்.


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by ராஜா Mon Mar 02, 2015 4:44 pm

பயங்கரமா இருக்கு , இதுக்கு என்ன தான் தீர்வு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Mon Mar 02, 2015 4:50 pm

ராஜா wrote:பயங்கரமா இருக்கு , இதுக்கு என்ன தான் தீர்வு


தீர்வு கிடைக்காததால் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது!


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Tue Mar 03, 2015 12:49 am

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு கடந்த 1-ந் தேதி வரை 1,115 பேர் பலியாகி இருக்கிறார்கள். 20,795 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் இந்த நோயை பரப்பும் கிருமிகள் குறைந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 275 பேர் பலியாகி உள்ளன. ராஜஸ்தானில் 267 பேரும், மத்திய பிரதேசத்தில் 160, மகாராஷ்டிராவில் 152, தெங்லுங்கானாவில் 57, பஞ்சாபில் 44, கர்நாடகாவில் 46, டெல்லியில் 10, அரியானாவில் 22, ஆந்திராவில் 14, இமாச்சல பிரதேசத்தில் 8, ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளாவில் 7 பேர்களும் பலியாகி இருக்கிறார்கள். நோயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Tue Mar 03, 2015 2:01 am


பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை : பட்னவிஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பொது சுகாதாரத் துறைக்கு தான் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எந்த நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை மறுக்கக் கூடாது என்றும், அவர்களது முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் கூறினார்.


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Tue Mar 03, 2015 5:56 pm

சென்னையில் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்!

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 வட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 12 பேர் பலியாகி இருக்கும் நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பன்றிக்காய்ச்சல் நோயின் பாதிப்பு, அதிகமாகக் காணப்படுகிறது.

இதனால் எல்லையோர பகுதிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள பள்ளிகளில் காலை நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல் ஏற்பட்டாலே பள்ளிக்கு வரக்கூடாது என்றும், விடுமுறை எடுத்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

swine fluதேர்வு நடைபெறும் நேரங்களில் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் கட்டாயப்படுத்தி அவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் காய்ச்சலால் தேர்வு எழுத முடியாமல் போகும் மாணவர்களுக்கு வேறு நாளில் தனியாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த பள்ளிக்கு குறைவான மாணவர்களே வந்திருந்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும், அப்பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட பொது மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by சிவா Wed Mar 04, 2015 1:03 am

மங்களூருவில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

கர்நாடக மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு மாநிலத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது உடுப்பியை சேர்ந்த பெண் ஒருவரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ள சம்பவம் நடந்துள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா சிரூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். இவரது மனைவி பிக்பா அசினா (வயது 35). இவர் கடந்த மாதம் 27-ந்தேதி, கார்வார் மாவட்டம் குமடா பகுதிக்கு நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் பட்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அசினாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள், அவரை மங்களூரு வென்லாக் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர், மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றாலும் சிகிச்சை பலனின்றி அசினா இறந்தார். உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியான முதல் பெண் இவர் தான்.


பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Empty Re: பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum