புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
100 Posts - 48%
heezulia
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
7 Posts - 3%
prajai
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
227 Posts - 52%
heezulia
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
27 Posts - 6%
T.N.Balasubramanian
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
18 Posts - 4%
prajai
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
2 Posts - 0%
Barushree
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சரோஜா! Poll_c10சரோஜா! Poll_m10சரோஜா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரோஜா!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:54 pm

ஊரை நெருங்கிக் கொண்டிருந்தது பஸ். 10 ஆண்டுகள் கழித்து இப்போது தான் தன்னுடைய சொந்த ஊருக்கு செல்கிறாள் கமலா. அவள் மனதிற்குள் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஊற்றெடுக்க, 'தாயின் வாசத்தை போல் பிறந்த மண்ணுக்கும் ஒரு வாசம் இருக்கத்தான் செய்கிறது...' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

பஸ்சிலிருந்து இறங்கியவுடன் தெரிந்த முகம் ஏதாவது தென்படுகிறதா என்று சுற்று முற்றும் பார்த்தாள். ம்கூம்... எல்லாமே அன்னிய முகங்களாக இருந்தன. '10 ஆண்டுகள் என்பது அத்தனை பெரிய இடைவெளியா... இப்படி ஊரே மாறிப்போய் விட்டதே...' என, வியப்புடன் பார்வையை நாலாபுறமும் சுற்ற விட்டாள்.

'ஆட்டோ வேணுமாம்மா...' ஆட்டோக்காரர்களின் குரலுக்கு, சிறு தலையசைப்பில் மறுத்து, பெட்டியை கைகளில் தூக்கியபடி நடந்தாள் கமலா. சிறிது தூரம் தான் நடந்திருப்பாள். திடீரென தோளின் மீது ஒரு கை விழுந்ததில், திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், புன்னகையுடன், ''தாயி... நீங்க அன்னம்மாக்கா மக கமலாதானே?'' என்று கேட்டாள்.
''ஆமாம்... நீங்க...''
''என்னத் தெரியலையா தாயி... நான் தான் சரோஜா; உங்க வீட்டுக்கு நாலு வீடு தள்ளித் தானே நம்ம வீடு இருக்கு. என் மக கூட உங்க கூடத்தானே படிச்சது... பேரு மதுமிதா. உங்கள சின்னப் பிள்ளையில பார்த்தது... அம்மா நல்லாயிருக்காங்களா?'' என்று கேட்டபடி கமலாவின் கையை அன்புடன் பற்றினாள்.

''ஓ...நீங்களா...'' என்ற கமலாவின் குரலில் சுருதி குறைந்து, அந்த, 'ஓ'வில் அழுத்தமும், அலட்சியமும் வெளிப்பட்டது. அந்த பெண்மணியின் பிடியிலிருந்து தன் கையை மெல்ல உருவி,''ம்... நல்லாருக்காங்க,'' என்றபடி, இரண்டு எட்டு பின்னால் நகர்ந்து, அனிச்சை செயலாக அவள் கைபட்ட இடத்தை சேலைத் தலைப்பால் துடைத்தாள்.அவளின் செய்கைகளை அந்த சரோஜா கண்டு கொண்டதாக தெரியவில்லை.

''சின்னப் பிள்ளையில பாத்தது; அப்ப நல்லா குண்டு பூசணிக்காய் மாதிரி இருப்பீங்க. இப்ப நல்லா இளைச்சு போயிட்டீங்களா... அதான் அடையாளமே தெரியல. உத்துப் பாத்ததுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது... அடடா... இது நம்ம அன்னம்மாக்கா பொண்ணாச்சேன்னு...''என்று, நீட்டி முழக்கிக் கொண்டிருந்தாள்.

அவளுடன் பேச்சை வளர்க்க விரும்பாத கமலா, ''அப்ப சரிங்க... நான் வர்றேன்,'' என்றபடி, அவளை விட்டு விலகி, வேகமாக நடந்தவள், சிறிது தூரம் நடந்த பின், மெல்ல திரும்பிப் பார்த்தாள். அந்த சரோஜா யாரோ ஒரு நபரிடம் சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டிருந்தாள்.

சரோஜா பெற்றோருக்கு ஒரே பெண்; விவசாய குடும்பமாக இருந்தாலும், பெரிய காரை வீடு, காடு, தோட்டம், வயல்ன்னு நல்ல வசதி. சரோஜா நல்ல அழகி; அரேபிய குதிரை போல் வாளிப்பான தேகம்; தங்கத்தை உருக்கி எடுத்தது போன்ற நிறம். 16 வயதிலேயே பாங்க் கேஷியருக்கு ஊரே வியக்கும்படி சீர் வரிசை செய்து திருமணம் செய்து வைத்தனர் அவளுடைய பெற்றோர்.

ஒரு ஆண்டு தான், புருஷனின் அடி தாங்க முடியாமல், வீட்டில் எடுபிடி வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரனுடன் ஓடி விட்டாள். இந்த அவமானம் தாங்க முடியாத அவளின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். சரோஜா எங்கிருக்கிறாள் என்பது தெரியாமல் போனதால், தகப்பனின் மரணத்தை கூட அவளுக்கு தெரிவிக்க முடியவில்லை.

அவளை அழைத்துச் சென்றவன், ஆந்திராவில் ஏதோ ஒரு மலைக் கிராமத்தில் சில மாதங்கள் குடித்தனம் நடத்தினான்; ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் அவள் நகைகளை திருடிக் கொண்டு ஓடி விட்டான். அதன்பின், உள்ளூர் மைனர் ஒருவனின் அடைக்கலத்தில் வாழ்ந்து வந்தவளை, ஒருநாள், ஊர்க்காரர் ஒருவர் பார்த்து, வீட்டிற்கு அழைத்து வந்தார். உடல் மெலிந்து, நிறம் மங்கி, நிறைமாத கர்ப்பிணியாக வந்தளைப் பார்த்து, துடித்துப் போன அவளின் அம்மா, அந்தக் கவலையிலேயே போய் சேர்ந்தாள் என்று, சரோஜாவைப் பற்றி கமலாவிற்கு, பாட்டி சொல்லியிருந்தாள்.

எந்த ஊரில் கவுரவமாக, அழகோவியமாக வாழ்ந்து வந்தாளோ, அதே ஊரில், பெண் குழந்தையுடன் நிராதரவாக நின்றாள் சரோஜா. கெட்டழிந்து வந்தவள் என்பதால், எந்த உறவும் அவளை கிட்டச் சேர்க்கவில்லை. ஏன்... அவளை உறவென்று காட்டிக் கொள்வதைக் கூட இழிவாக கருதினர். ஊருக்குள் அவள் இருந்தாலும், மறைமுகமாக ஒதுக்கி வைக்கப்பட்டவளாகவே இருந்தாள்.

ஒருமுறை சரோஜா வீட்டில் சாப்பிட்டதற்காக அடிவாங்கிய சம்பவம், கமலாவிற்கு நினைவிற்கு வந்தது.
அது ஓர் அரையாண்டு விடுமுறை நாள். அப்பா அலுவலகத்திற்கும், அம்மாவும், பாட்டியும் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால், பக்கத்து ஊரில், கேதத்திற்கு சென்றிருந்தனர்.

மதிய வேளையில், சரோஜாவின் வீட்டருகே இருந்த வேப்பமரத்தடியில் சரோஜாவின் மகள் மதுமிதாவும், கமலா மற்றும் அவள் தங்கையும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தொடரும்................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:55 pm

அப்போது, மதுமிதாவை சாப்பிட அழைத்தாள் சரோஜா. 'சாப்பிட்டு வர்றேன்; அப்புறம் விளையாடலாம்...' என்று கூறி, வீட்டிற்கு ஓடிய மதுமிதா, போன வேகத்தில் சாப்பாட்டு தட்டைத் தூக்கிக் கொண்டு வாசல் திண்ணைக்கு வந்தாள். கறிக் குழம்பு வாசம் மூக்கைத் துளைத்தது. மதுமிதா சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த கமலாவிற்கு நாவில் நீர் சுரக்க, விளையாட்டை விட்டு விட்டு, அவள் தட்டையே பார்த்தாள். சாப்பிடும் மதுமிதாவிற்கு தண்ணீர் கொண்டு வந்த சரோஜா, மதுமிதா சாப்பிடுவதை பார்த்துக் கொண்டிருந்த கமலாவை பார்த்து,'சாப்பிடுறாயா...' எனக் கேட்டாள்.
மனதில் ஆசையிருந்தாலும், அம்மாவுக்கு தெரிந்தால் அடி விழுகுமே என்ற பயத்தில்,'வேண்டாம்' என்பது போல் தலையை அசைத்தாள் கமலா.

'உங்க அம்மா அடிப்பாங்கன்னு பயப்படுறியா... அதெல்லலாம் அடிக்க மாட்டாங்க வா...' என்று, கமலாவையும், அவள் தங்கையையும் அழைத்துச் சென்ற சரோஜா, இரு தட்டுகளில் சோற்றைப் போட்டு, குழம்பு ஊற்றி, கமலாவிடம் ஒன்றும், அவள் தங்கையிடம் ஒன்றும் கொடுத்தாள்.

ஆசை ஒரு புறம், பயம் ஒரு புறமாக தயக்கத்துடன் தட்டை வாங்கிக் கொண்டாள் கமலா. ஆனால், அவள் தங்கையோ, 'ம்கூம்... வேண்டாம்; அடுத்த வீட்டுல சாப்பிட்டா எங்க அம்மா அடிப்பாங்க...' என்று மறுத்ததுடன், 'அக்கா... சாப்பிடாத; அம்மா வாயில அடிக்கும்... என்னை விடுங்க; நான் வீட்டுக்கு போகணும்...' என்று சரோஜாவின் பிடியிலிருந்து விடுபட்டு, வெளியே ஓடிவிட்டாள்.

மாலை வீடு திரும்பிய அம்மாவிடம், 'அம்மா... நீங்க யாரு என்ன கொடுத்தாலும் வாங்கக் கூடாது; அடுத்த வீட்டுல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லியிருக்கீங்க தானே... மதுக்கா வீட்டுல அக்கா, கறிச் சோறு சாப்பிட்டுச்சும்மா...' என்று சொல்லி விட்டாள் கமலாவின் தங்கை.

இதைக் கேட்டதுதான் தாமதம், அம்மா பத்ரகாளியாகி விட்டாள். கமலாவின் தலை முடியை கொத்தாக இழுத்துப் பிடித்து, சுவரில் சாய்த்து வைத்து, 'இந்த வாயி தானே அடுத்த வீட்டுச் சாப்பாட்டுக்கு ஆசைப்பட்ட வாயி... இனி இந்த வாயி யாரு என்ன கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடுமா... சாப்பிடுமா...' என, வாயிலேயே நாலு போடு போட்டதில், உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது.

அலுவலகம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த அப்பா, மகள் அழுத கண்ணும், வீங்கிய உதடுமாய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும் துடித்து விட்டார்.

'ஏய்...அன்னம்மா... பொம்பளயா நீ... என்ன செஞ்சுச்சுன்னு புள்ளய போட்டு இப்படி அடிச்சுருக்க...' என்று கேட்டு, மனைவியை அடிக்க கை ஓங்கினார்.

'இப்ப என்னத்துக்கு என்ன அடிக்க துடிக்கிறீங்க... அவ என்ன காரியம் செய்திருக்கா தெரியுமா... அந்த சரோஜா வீட்டுல போயி சாப்பிட்டுருக்கா...' என்றாள் அம்மா.

'அதுக்காக இப்படியா அடிக்கிறது... இவங்க நல்லவங்க, கெட்டவங்கன்னு... அதுக்கென்ன தெரியும்... சரி அப்படியே சாப்பிட்டாதான் என்ன செத்தா போயிருவாங்க... கன்னத்துல பட்ட அடி, கண்ணுல பட்டிருந்தா என்னாகிறது... இனிமேலு, புள்ளய அடிக்கிற வேலை வச்சுக்கிட்டு திரிஞ்சே... அப்புறம் நீ உங்கப்பன் வீட்டுக்குத் தான் போவ...' என்றார் கோபம் தணியாமல்.

'அவளக் கெடுக்குறதே நீங்க தான்... இப்படி செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்துத்தான் அவ கெட்டு குட்டிச் சுவராகிட்டு வர்றா... ரெண்டு வாரத்துக்கு முந்தி, தெரு பக்கிக கூடச் சேர்ந்து மொட்டக் கரட்டுக்கு விளையாடப் போயிருக்கா... போன வாரம் என்னான்னா... காளியம்மன் கோவில் பூசாரியம்மா வீடு தேடி வந்து, 'அன்னம்மா, உன் மக மூத்தவள கொஞ்சம் கண்டிச்சு வை. அந்த சரோஜா மக, உன் மகள காவலுக்கு நிற்க வச்சுட்டு உண்டியல்ல காசு திருடிக்கிட்டு இருக்கா...'என்னடி இங்க நிக்கறே'ன்னு இவளக் கேட்குறேன்... 'பாட்டி... உள்ள மது அக்கா சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்கு; நீங்க பார்த்தா திட்டுவீங்கன்னு என்னை காவலுக்கு நிப்பாட்டியிருக்கு; மது அக்காவ திட்டாதீங்க பாட்டி'ன்னு சொல்றா... உள்ள அந்த திருட்டுக் கழுத உண்டியலுக்குள்ள விளக்குமாத்து குச்சிய விட்டு காசத் திருடிக்கிட்டு இருக்கா... உன் மகள அவ கூட சேரவிடாத'ன்னு சொல்லிட்டுப் போகுது.

'இப்ப என்னடான்னா... அவ வீட்டுல சாப்பிட்டு இருக்கா...அவ வீட்டு படிய மிதிக்குறதே பாவம்; இதுல, இவ, அவ கையால சாப்பிட்டு வேற வந்திருக்கா. இவள விட மூணு வயசு சின்னவளுக்கு இருக்குற அறிவு, இந்த எட்டு வயசு எருமைக்கு இருக்குதா...' என்று புலம்பித் தீர்த்தாள் அம்மா.
அதன்பின், 'மது அம்மா கெட்டவள்; அதனால், மதுவிடம் சேரக் கூடாது...' என, அம்மா, பாட்டி, அத்தை என அனைவரும் கமலாவை மிரட்டி வைத்தனர்.

தொடரும்......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 8:57 pm

அதன்பின், மது, கமலாவுடன் விளையாட வந்தால், 'உன் கூட சேர்ந்து விளையாடினா எங்கம்மா அடிப்பாங்க; என் கூட சேராத...' என்பாள் கமலா. அவள் மட்டுமல்ல, மற்றவர்களும் அவளை விளையாட்டில் அவ்வப்போது ஒதுக்குவர். மது ஏக்கமாய் இவர்களைப் பார்த்து, தனக்குத்தானே பேசிக் கொண்டு தனியாக விளையாடுவாள். மதுவிற்கு சிறுவயதில் திருட்டுப் பழக்கம் இருந்தாலும், வளர்ந்த பின், மிகவும் அமைதியான, நல்ல பெண்ணாகவே இருந்தாள்.

ஆனாலும், அவள் சரோஜாவின் மகளாகவே பார்க்கப்பட்டதால், அவளுடன் தங்கள் வயதுப் பிள்ளைகள் சேர்வதை, அம்மாக்கள் விரும்பவில்லை.

அப்போது, ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் கமலா. ஒரு நாள், கமலா அவள் தோழியுடன் பள்ளிக் கூடம் செல்கையில், வழியில், மதுவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். மூவரும் அந்த வயதிற்கே உரிய கேலியும், கிண்டலும், சிரிப்புமாய் பேசிக் கொண்டு சென்றனர்.

இதை கமலாவின் உறவுப் பெண் பார்த்து, நடு ரோடு என்று கூட பாராமல், 'ஏய்... கமலா என்னடி இது! இவ கூட சேர்ந்து பள்ளிக் கூடம் போற... உங்க அம்மா கிட்ட சொல்லவா...' என்று மிரட்டியதுடன், வீட்டிலும் சொல்லி விட்டாள்.

அன்றும் கமலாவிற்கு, அடி கிடைத்தது. அத்துடன், 'இங்க பாரு கமலா... நாம எல்லாம் மான, ரோஷத்துக்காக வாழ்றவங்க; ஒரு பழிச் சொல்லு வந்துச்சுன்னா, அப்பறம் நானோ, உங்கப்பாவோ உயிருடன் இருக்க மாட்டோம். அந்த சரோஜா, 16 வயசுலயே கெட்டு சீரழிஞ்சு வந்தவ; அந்த மதுவுக்கு அப்பன் யாருன்னே தெரியாது. அப்படியாப்பட்டவ கூட உனக்கென்ன சாவகாசம்... அவளா பேச வந்தாக் கூட இனிமே நீ பேசக் கூடாது...' என்று பலவாறு சென்டிமென்டாக அறிவுரை கூற, அதன் பின், மது வலிய பேசினாலும், பேச மாட்டாள் கமலா.

சிறிது நாட்களிலேயே கமலாவின் அப்பாவிற்கு டிரான்ஸ்பர்ஆகி மதுரைக்கு சென்று விட்டனர். அதன் பின், அவ்வப்போது பாட்டியை பார்க்க அப்பாவும், மகன், மருமகள், பேத்திகளைப் பார்க்க பாட்டியும் மதுரை வந்து போவர். ஆண்டிற்கு ஒருமுறை சித்திரை திருவிழாவை ஒட்டி நடைபெறும் வீரபாண்டி திருவிழாவிற்கு குடும்பத்துடன் வந்து போவர். அப்படி இரண்டாவது முறையாக, ஊருக்கு வந்திருந்த போதுதான், அந்த துர்சம்பவம் நடந்தது.

தவணை முறையில் பொருட்களை விற்பனை செய்பவன், தவணைப் பணத்தை வாங்க சரோஜாவின் வீட்டிற்கு வந்தவன், வீட்டில் தனியாக இருந்த மதுவிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றுள்ளான். மது தடுத்த போது, அவள் பிறப்பு குறித்து ஏளனம் செய்து வம்பு செய்ய, அதற்குள் சரோஜா வந்து, அவனை விரட்டி அடித்தாள். இந்நிகழ்ச்சிக்கு பின், இரண்டு நாள் எதையோ பறிகொடுத்தது போல் இருந்த மது, மூன்றாம் நாள், உடம்பில் நெருப்பு வைத்து தற்கொலை செய்து கொண்டள்.

'இப்படியாப்பட்ட பொம்பளைக்கு, இவ்வளவு ரோஷக்காரி பொண்ணா பிறந்திருந்திருக்காளே... நாம தான் அவள புரிஞ்சுக்காம போயிட்டோம்...' என்று, ஊரே, 'உச்' கொட்டியது.

அதன் பின், கமலா படிப்பு, வேலை என, இதோ 10 ஆண்டுகளாக ஊர் பக்கமே எட்டிப் பார்க்க முடியவில்லை. இப்போது, கமலாவிற்கு கல்யாணம் நிச்சயமாகும் சூழ்நிலையில், பாட்டிக்கு உடம்புக்கு முடியவில்லை என்றதும், ஊரையும், பாட்டியையும் ஒரு சேர பார்த்த மாதிரி இருக்கட்டும், கல்யாணம் முடித்து சென்றுவிட்டால் வர முடியாது என, அடம் பிடித்து ஊருக்கு வந்திருந்தாள்.

தொடரும்......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 9:00 pm

அந்திச் சூரியன் தன் பொன்னொளியை வானில் சிந்தவிட, பூமி, மஞ்சள் பூசிய பெண்ணாய் அந்த மாலை வேளையில் ஜொலித்துக் கொண்டிருந்து. வாசலை பெருக்கி, கோலம் இடுவதற்காக, ஒரு கையில் விளக்கமாறும், மறுகையில், தண்ணீர் வாளியையும் தூக்கி கொண்டு வெளியே வந்தாள் கமலா. சரோஜாவின் கனத்த குரல் தெரு முழுவதும் எதிரொலித்தது.

''அய்யோ... யாரு பெத்த புள்ளயோ... தாகம் பொறுக்க முடியாம சாக்கடத் தண்ணிய அள்ளிக் குடிக்கிறானே... சுய புத்தியிருந்தா இப்படிச் செய்வானா... எய்யா ராஜா... அது சாக்கடைத் தண்ணி சாமி; அதக் குடிக்கக் கூடாது...'' என்றவள், வீட்டிற்குள் சென்று செம்பில் எடுத்து வந்த தண்ணீரை கொடுத்தாள்.

குளித்து பல ஆண்டுகள் ஆனது போன்ற அழுக்கேறிய தோற்றம், கிழிந்த ஆடையுடன், மனநிலை பிறழ்ந்த அந்த, 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், சரோஜா கொடுத்த தண்ணீரை ஆவலுடன் வாங்கிக் குடித்தான். அவன் குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த சரோஜா, ''அய்யோ பாவம்... எத்தனை தாகமோ... எப்பா... சாப்பிடுறீயா...'' என்றாள்.

அவன், 'சரி' என்பது போல் தலையாட்டவும், திண்ணையில் அமர வைத்து, ஒரு எவர்சில்வர் தட்டில் சோறும், குழம்பும், தண்ணீரும் எடுத்து வைத்தவள், அவன் ஆவலுடன் சாப்பிடுவதை, கண்கள் கசிய பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் சாப்பிடுவதை, ஒரு கூட்டம் வேடிக்கை பார்த்து, 'உச்' கொட்டியது.
அவர்களைப் பார்த்து, ''ஏய் போங்கத்தா... ஒரு மனுசன் சாப்பிடுறத பாக்குறதுல அப்படி என்ன வேடிக்கை வேண்டிக் கெடக்கு, போவீங்களா...'' என, அலுத்துக் கொண்டாள் சரோஜா.

மறுநாள் —

சிறிது விசாலமாக இருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து, ராகுல் சாங்கிருதய்யன் எழுதிய, 'வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள் கமலா. அவளின் நீண்ட கூந்தல் காற்றில் பறந்து அவ்வப்போது முகத்தில் மோதி, கிச்சுகிச்சு மூட்டிக் கொண்டிருந்தது. புத்தகத்தில் மூழ்கியிருந்த கமலா, கீழே தெருவில் சத்தம் கேட்டு, தன் பார்வையை திருப்பினாள்.

அங்கே முதல் நாள் பார்த்த அதே மனநிலை பாதித்தவன். அவனை வாசலில் முக்காலி பலகையில் அமர வைத்து, கத்திரிக் கோலால் அவன் தலை முடியை வெட்டிக் கொண்டிருந்தாள் சரோஜா. அவளின் செய்கை கமலாவிற்கு ஆச்சரியத்தையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தியதால், புத்தகத்தை மூடி விட்டு, கவனிக்கத் தொடங்கினாள்.

தலைமுடியை வெட்டி விட்டவள், ஒரு பானையில் தண்ணீரை எடுத்து வந்து, அவன் முதுகில் சோப்பு போட்டு, தேங்காய் நாரை வைத்து தேய்த்து குளிக்க வைத்தாள். அவள் குளிக்க வைப்பதை அக்கம், பக்கம் வசிப்போர், தெருவாசிகள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.

ஒரு வழியாக அவனை குளிக்க வைத்தவள், திண்ணையில் அவனுக்கு அணிவிப்பதற்காக வாங்கி வைத்திருந்த புத்தம் புது வேட்டியை அணிவித்து, சட்டையை மாட்டி விட்டாள். இப்போது, அந்த மனநலம் பாதித்த சிறுவனைப் பார்த்தால், யாரும் பைத்தியக்காரன் என்று சொல்ல மாட்டார்கள். அவனின் நிலை கொள்ளாத கண்கள் மட்டுமே, மனநலம் பாதித்தவன் என்பதை அடையாளம் காட்டியது. ''ம்...இப்ப எப்படி இருக்கே...'' திருப்திகரமாக தலையை ஆட்டிக் கொண்டாள் சரோஜா.

''அப்புறம் என்ன சரோஜா... அப்படியே, 'செட் அப்' செய்துக்க... பைத்தியக்காரன்னு நினைக்காதே... குளிச்சதும் ஆளு எப்படி,'ஜம்'முன்னு இருக்கான். டேய் லூசு... உனக்கு அடிச்சதுடா லக்கி பிரைசு,'' கூட்டத்தில் ஒரு வக்கிர குரல், தன் மன விகாரத்தை கொட்டி பல் இளித்தது.

உடனே சரோஜா, ''ஆமா... வச்சுகிறத்தான்... நான் தான் புள்ள குட்டி இல்லாத அனாதை சிறுக்கியாச்சே... நாளைக்கு நான் செத்துப் போயிட்டேன்னா, எனக்கு கொள்ளி போட புள்ள வேணுமுல்ல... அதனால இவன இன்னயிலிருந்து நானே தத்து எடுத்து வளக்கப் போறேன்,'' என்றாள்.

''ஏண்டி சரோஜா...பைத்தியக்காரன தத்து எடுத்து என்னடி செய்யப் போற...'' என்றாள் கூட்டத்தில் ஒரு மூதாட்டி. அதைக் கேட்டதும், நீண்ட பெருமூச்சு விட்ட சரோஜா, ''உங்கள மாதிரி புத்தி தெளிவானங்க மத்தியில, இவன மாதிரி பைத்தியக்காரன் தானே எனக்கு மகனா இருக்க முடியும்... 16 வயசுல கல்யாணமாகிப் போன ஒரு சின்னச் சிறுக்கி, புருஷன் கொடுமப்படுத்துறான்னு, திருமணமான, 10 மாசத்துக்குள்ள, 20 தடவ அழுதுட்டு வந்துட்டாளே... அவ என்ன கஷ்டத்துல இருக்கா, அவளுக்கு அந்த வீட்டுல என்ன கொடும நடக்குதுன்னு கொஞ்சம் கூட யோசிச்சு பாக்காம, 'புருஷன்னா அப்படித்தான் இருப்பான்; பொம்பள நீதான் பொறுத்துப் போகணும்'ன்னு என்ன, ஏதுன்னு கூட கேட்காம, என்ன அந்த நரகத்துல தள்ளின என்னைப் பெத்தவங்களும், உறவுக்காரங்களும் புத்தி தெளிவானவங்க தானே...

''வீட்ல எடுபிடி வேல செஞ்ச ஒரு களவாணிப் பய, 'தங்கச்சி... உன்ன என் கூடப் பிறந்த பொறப்பா நினைக்கிறேன்...உன் நகைகள எடுத்துக்கிட்டு, எங்கூட எங்க வீட்டுக்கு வந்திரு... அங்க, அம்மா, அக்கா, என் பொண்டாட்டி எல்லாம் இருக்கிறாங்க, உன்ன நல்லா பாத்துக்குவாங்க'ன்னு சொன்னத நம்பி, இந்த கொடுமையிலிருந்து தப்பிச்சா போதும்ன்னு அந்த படுபாவி பின்னால போக, அவன் எங்கேயோ ஒரு மலைக்காட்டுக்கு கூட்டிப் போயி, என் நகையெல்லாம் பிடுங்கிட்டு, என்கிட்ட தவறா நடந்துக்க பாத்தானே... அவன் புத்தி தெளிவானவந்தானே...'' என்ற போது, கூட்டத்தில் ஒருத்தி, ''அப்ப நீ அவன் கூட ஓடிப் போகலயா...அப்பறம் என்ன நடந்துச்சு,'' என்றாள் கதை கேட்கும் ஆர்வத்துடன்!
கூடியிருந்த கூட்டம், அவள் வாயையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

''நான் கிடைக்க மாட்டேன்னு தெரிஞ்சதும் நகை, பணத்த எடுத்துட்டு ஓடிப் போயிட்டான். அக்கம், பக்கம் இருந்தவங்க கொஞ்ச நாள் ஆதரிச்சாங்க; பாதுகாப்பாவும் இருந்தாங்க. ஆனா, களவாணிப் பயலுக எல்லா இடத்துலயும் தானே இருக்கானுங்க. புருஷன விட்டு இன்னொருத்தன் கூட வந்தவ தானேன்னு அந்த ஊரு காலிப் பயலுகளுக்கு எளக்காரமா போயிருச்சு. ராத்திரி ஆனா, கண்ட நாய்க எல்லாம் கதவ தட்டி தொந்தரவு செய்தானுங்க.

''உயிர் மேல ஆசை கொண்ட இந்த கோழச் சிறுக்கி, அத்தன நாய்க கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக, ஒத்த நாயிக்கு இரையாப் போயிட்டேன். என் விதிய நொந்துக்கிட்டு அவன் கூட வாழ்ந்துக்கிட்டு இருக்கயில தான் நம்ம ஊர்க்காரர் பார்த்து கூப்பிட்டு வந்தாரு...

''வயித்துல புள்ளயோட கண்ணீரோட வந்தவளுக்கு, நான் பிறந்து வளர்ந்த இந்த ஊரும், என் உறவும் என்ன நடந்துச்சுன்னு கூட கேட்காம, என்ன கெட்டுப் போனவன்னு சொல்லிச் சொல்லியே, ஒவ்வொரு நாளும் சாகடிச்சது பத்தாதுன்னு, நான் பெத்த புள்ளயையும் காவு வாங்கிட்டீங்களே... நீங்க எல்லாம் புத்தி தெளிவானவங்க தானே...'' என்று சொன்னவள், துக்கம் தாங்காமல் வாய்விட்டு அழுதாள்.
அவளின் ஒவ்வொரு சொல்லும் கூடியிருந்தோரை மட்டுமல்ல, கமலாவையும் கன்னத்தில் அறைவது போல் இருந்தது.

சரோஜா அழுவதைப் பார்த்த, அந்த மனநிலை பாதித்த சிறுவன், அவள் அருகில் சென்று, ''அம்மா... அழுகாத,'' என்று கண்ணீரைத் துடைத்தான்.

ப.அங்கயற்கண்ணி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 9:32 pm

யதார்த்தமான கதை... சரோஜா! 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 2:07 am

ayyasamy ram wrote:யதார்த்தமான கதை... சரோஜா! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1123605

ஆமாம் ..............இருந்தாலும் பாவம் இத்தனை வருடம் மனதில் வைத்திருந்திருக்கிறாள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக