புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
29 Posts - 3%
prajai
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தனிக்குடித்தனம்! Poll_c10தனிக்குடித்தனம்! Poll_m10தனிக்குடித்தனம்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிக்குடித்தனம்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 6:26 pm

புது மனைவி சுஜியை பைக்கில் ஏற்றிக் கொண்டு மகன் வேலைக்குக் கிளம்ப, ஹாலில் கணவன் அருகில் உட்கார்ந்திருந்த மைதிலி, ''எனக்கு அப்பவே தெரியும், இது சரி வராதுன்னு! கல்யாணம் முடிஞ்சதும், தனிக்குடித்தனம் வச்சுடலாம்ன்னு சொன்னேன்.

உங்க மகன் கேட்டானா... 'கடைசி வரை உங்களோடு தான் இருப்பேன்; ஒரே ஊர்ல தனித்தனி வீடு தேவையில்ல; எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்'ன்னு சொன்னான். வரப் போறவ எப்படியோ... தேவையில்லாத பிரச்னைக வரும். இங்க பக்கத்திலேயே வீடு பாப்போம்; வரப், போக இருங்க. எல்லாரும் நிம்மதியா இருக்கலாம்ன்னு சொல்லியும் கேட்கல. இப்ப நடக்கிற விஷயங்களப் பாத்தீங்களா...''என்றாள்.

அவளே பேசட்டும் என, பதில் சொல்லாமல் இருந்தார் மைதிலியின் கணவர்.
''காலையில, 8:00 மணிக்கு எழுந்து வர்றா; வயசானவ தனியா சமையல் கட்டுல அல்லாடுறாளேன்னு கூடமாட உதவக் கூடாதா... நான், அவ கையில கொண்டு வந்து காபி தரணும். இதெல்லாம் நல்லாவா இருக்கு,''என்றாள் பொருமலுடன்!

''இப்ப அதனால என்ன மைதிலி... இத்தன நாளும் எங்க எல்லாருக்கும் நீ தானே காபி தர்றே... அவளுக்கும் கொடுத்துட்டுப் போயேன்...''

''ரொம்ப நல்லாயிருக்கு நீங்க பேசுறது. அவ, என்னை கொஞ்சம் கூட மதிக்கலன்னு சொல்றேன் அதை புரிஞ்சுக்காம எனக்கு தான்,'அட்வைஸ்' செய்றீங்க... உள்ளூரில அம்மா வீடு இருக்குன்னு, வாரத்தில நாலு நாள் ஆபீஸ் விட்டதும், இரண்டு பேரும் அங்கே போயிடறாங்க. ராத்திரி, 10:00 மணிக்கு வந்துட்டு, அங்கேயே சாப்பிட்டோம்ன்னு சொல்றாங்க. நான் ஒருத்தி இவங்களுக்காக காத்திருக்கணும். இந்த மகேஷும் இது எதையும் கண்டுக்கிறதில்ல. நேத்து, கடைக்குப் போயி நாலு புடவ வாங்கிட்டு வந்திருக்கா; நான் ஏதாவது சொல்வேன்னு, எனக்கு ஒரு புடவ வேறு. எல்லாம் சம்பாதிக்கிற திமிரு, ஆணவம். இப்படி செலவு செய்தா குடும்பம் உருப்படுமா?''

''இப்ப நீ என்ன தான் சொல்ல வர்ற?''
''இது சரி வராது; உங்க மகன்கிட்டே சொல்லி, அவன் பொண்டாட்டிய அழைச்சிக்கிட்டு தனிக்குடித்தனம் போகச் சொல்லுங்க,'' என்றாள்.

''அது தான் உன் முடிவுன்னா மகேஷ்கிட்ட பேசு. பெண்கள் ஒத்துப் போனா தான், குடும்பம் நிம்மதியா இருக்கும். இல்லாட்டி, பிரச்னை தான். எப்ப, உன்னால உன் மருமகள சகிச்சுக்க முடியலையோ, நல்ல விதமா பிரியறது தான் நல்லது.''

ஞாயிற்றுக் கிழமை -
காலையில் இருவருமே,
8:00 மணிக்கு மேல் தான் எழுந்து வந்தனர்.

''அம்மா... ப்ளீஸ் எங்களுக்கு காபி தாயேன்,'' மகேஷ் சொல்ல, அவனருகில் உட்கார்ந்து செய்தித்தாள் படிக்கும் சுஜியை, எரிச்சலுடன் பார்த்தவள், காபியுடன் வந்தாள்.
தான் ஒன்றை எடுத்துக் கொண்டு, சுஜிக்கு ஒன்றைத் தந்தவன், ''இன்னைக்கு, என்ன சமையல்ம்மா?''என்று கேட்டான்.
''நீயே சொல்லு?''

''அத்தை... சிக்கன் பிரியாணி, குருமா, ஓ.கே.வா?'' சுஜி சொல்ல, ''சரிம்மா... அதையே செய்துடு; நான் போய் சிக்கன் வாங்கிட்டு வரவா இல்ல அப்பாவை அனுப்பறியா?''என்று கேட்டான் மகேஷ்.
''உங்கப்பாவே போவாரு,'' என்று எரிச்சலை அடக்கியபடி சொல்லி விட்டு, சமையல் அறைக்குள் சென்றாள் மைதிலி.

அப்போது, சுஜியின் செல்போன் சிணுங்கியது. எடுத்துப் பேசியவள், ''அப்படியா... இதோ புறப்பட்டு வரேன். ஒண்ணும் பயப்படாதே... அப்பாவ ஹாஸ்பிடல் அழைச்சுட்டுப் போய், எல்லா டெஸ்ட்டும் செய்திடலாம்,'' என்றாள்.''என்ன சுஜி... உங்க அப்பாவுக்கு என்னாச்சு?''என்று கேட்டான் மகேஷ்.

''லேசா நெஞ்சு வலிக்குதாம். பிரஷர், சுகர், 'செக்-அப்' செஞ்சு நாளாச்சு; அதான் டாக்டர்கிட்ட போவோம்ன்னு சொன்னேன். சரிங்க... நான் குளிச்சிட்டு கிளம்புறேன்; அப்பாவ ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்,''என்றாள்.
''நானும் வரட்டுமா?''

''வேண்டாங்க... ஹாஸ்பிடல்ல காத்துக் கிடக்கணும்; நீங்க வீட்டில ஓய்வு எடுங்க,''என்று கூறியவள், அடுத்த, 10 நிமிடத்தில் கிளம்பிப் போனதும், இதுதான் மகேஷிடம் மனம் விட்டுப் பேசுவதற்கு ஏற்ற நேரம் என நினைத்த மைதிலி, ''மகேஷ்... இங்கே வா,'' என்றாள்.

அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்தவன், ''என்னம்மா விஷயம்... ஏன் முகத்த சீரியஸா வச்சுருக்றே,'' என்றான்.

''எதுவுமே தெரியாத மாதிரி பேசாத... கல்யாணத்துக்கு முன்னால என்ன சொன்னேன்... தனிக்குடித்தனம் வைக்கிறேன்னு சொன்னேனே கேட்டியா... இப்ப பாரு, சுஜி இங்கே யாரையும் மதிக்கிறதில்ல. என்னை, சமையல்காரி மாதிரி நினைச்சுட்டிருக்கா... கொஞ்சம் கூட அனுசரணை கிடையாது.

சம்பாதிக்கிற திமிரு அவள் உடம்பு பூரா இருக்கு. நாலு புடவை எடுத்துட்டு வந்திருக்கா... என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லல; நீயும் அவளை ஒண்ணும் கேட்கறதில்ல. பரவாயில்ல, அவ உன் பெண்டாட்டி. உன்னால ஒத்துப் போக முடியும். எனக்கு ஒவ்வொரு நாளும் டென்ஷனா இருக்கு; நீ, தனிக்குடித்தனம் போறது தான் எல்லாருக்கும் நல்லது,'' என்றாள் மூச்சுவாங்க!

''பேசி முடிச்சுட்டியா... சுஜி மேலே ரிப்போர்ட் அவ்வளவு தானா?''
''என்ன விளையாடுறியா... நான் சீரியஸா சொல்றேன்.''
''சரிம்மா; உன் விருப்பம் அதுன்னா நான் சுஜியோடு கிளம்பறேன். அதுக்கு முன்னால சில வார்த்தைக சொல்ல விரும்பறேன்.

''சுஜி நம்ப வீட்டுக்கு வந்து, மூணு மாசம் தான் ஆகுது. அவளுக்குன்னு சில குணங்கள், விருப்பங்கள் இருக்கலாம்; நான் தாலி கட்டினதால, அவ மாறணும்ன்னு நினைக்க முடியாது.

''முதல்ல நாங்க ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கணும். இவர், என் கணவர்; எனக்கு சொந்தமானவர்ங்கிற எண்ணம், அவ மனசை நிறைக்கணும். அப்ப தான் நான் சொல்றத ஏத்துக்குற பக்குவம், அவளுக்கு வரும்.
''நானும், அவளக் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன். சமையல்ல உனக்கு கொஞ்சம் உதவலாம்; உன்கிட்டே மனசு விட்டுப் பேசலாம். புடவ வாங்கப் போறேன்னு, உன்கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். ஆனா, அதுக்கு முன், அவ மனசில இது நம்ப குடும்பங்கிற எண்ணத்த நாம் தான் வரவழைக்கணும். அதுக்கு நாம கொஞ்ச நாள் காத்திருக்கத்தான் வேணும்.

''அவ மனசில, உன்னைப் பத்தின நல்ல அபிப்பிராயம் வந்ததாலே தான், அத்தைக்கும் ஒண்ணு எடுப்போம்ன்னு உனக்கு ஒரு புடவை வாங்கியிருக்கா. இதையெல்லாம் நீ புரிஞ்சுக்கணும். அவ அம்மாவும், நீயும் ஒண்ணு தான்னு அவ நினைக்கிற நாள் நிச்சயம் வரும். அப்ப, நீ சொல்லாமலேயே, உனக்கு எல்லா விதத்திலும் உதவியா, அனுசரணையா இருப்பா. உனக்கு அந்த பொறுமை இல்லன்னா, என்னால எதுவும் செய்ய முடியாது. இதுக்கு மேலயும் உனக்கு, எங்களை வச்சுக்க பிரியமில்லன்னா, நாங்க தனியே போக தயார்,'' என்றான்.

அவனுக்கு பதில் சொல்லாமல் கணவரிடமிருந்து செல்போனை வாங்கிய மைதிலி, ''ஹலோ சுஜியா... அப்பாவ டாக்டர் கிட்டே காண்பிச்சாச்சா...'' என்று கேட்டாள்.

''இல்ல அத்தை... எல்லா டெஸ்ட்டும் செய்துருக்கு; இனிமே தான் டாக்டரை பாக்கணும்.''
''ஒண்ணும் கவலைப்படாதே... எல்லாம் நார்மலாக தான் இருக்கும்; அம்மாவுக்கு தைரியம் சொல்லு.''
''சரி அத்தை... அப்புறம் துவைக்க துணிமணிகள் எடுத்துப் போடாம வந்துட்டேன்; என் ரூமில் இருக்கு. எடுத்து அஞ்சலையிடம் துவைக்கக் கொடுக்கிறீங்களா...''

''சரி நான் கொடுத்துடுறேன். நீ டாக்டரை பாத்துட்டு, அப்பாவுக்கு என்ன சொன்னாங்கன்னு சொல்லு.''
''சரி அத்தை... அப்புறம் நான் சாப்பிட வரமாட்டேன்னு சிக்கன் பிரியாணி செய்யாம இருந்துடாதீங்க. ராத்திரி வந்து நான் ஒரு வெட்டு வெட்டறேன். உங்க கைப்பக்குவம் தனி ருசி,''என்றாள்.

'சிறு குழந்தை போல விகல்பமில்லாமல் பேசும் இவளையா இவ்வளவு நாள் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தேன். இவளும் எனக்கு மகள் தான்...' என நினைத்து, போனை வைத்தாள்.

''என்னங்க... போய் சிக்கன் வாங்கிட்டு வாங்க; பிரியாணி செய்யணும். என் மருமகள் ராத்திரி வந்து சாப்பிடறேன்னு சொல்லியிருக்கா,''என்றாள்.

மைதிலியின் குரலில் இருந்த தெளிவும், மகிழ்ச்சியும் இனி தனிக்குடித்தனம் என்ற பேச்சுக்கே இந்த வீட்டில் இடமில்லை என்பதைப் புரிய வைக்க, தகப்பனும், மகனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகை செய்தனர்.

பரிமளா ராஜேந்திரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Mar 01, 2015 7:08 pm

நல்லாத்தான் இருக்கு நடிப்புகள் பிழைக்க தெரிந்தவர்கள் இக்காலத்தவர்கள்............

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 01, 2015 8:24 pm

விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை...
-
நல்ல கதை.... தனிக்குடித்தனம்! 3838410834
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 9:01 pm

P.S.T.Rajan wrote:நல்லாத்தான்  இருக்கு   நடிப்புகள் பிழைக்க தெரிந்தவர்கள் இக்காலத்தவர்கள்............

நீங்கள் சொல்வது புரியவில்லை ராஜன் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 01, 2015 9:01 pm

ayyasamy ram wrote:விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை...
-
நல்ல கதை.... தனிக்குடித்தனம்! 3838410834
-
மேற்கோள் செய்த பதிவு: 1123610

உண்மை ராம் அண்ணா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக