ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

2 posters

Go down

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Empty சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Sat Feb 28, 2015 12:31 pm

இனிய நண்பர்களுக்கு,

நான் எழுதி சங்கர் பதிப்பத்தில் விரைவில் வெளிவர உள்ள தேவாரத் தலங்கள் நூலினை தினம் ஒரு சிவத்தலம் என்ற வகையில் ஈகரையில் பதிவிட எண்ணியுள்ளேன். அனைவரும் தவறாமல் படித்து சிவனருள் பெற்று மகிழுங்கள். நன்றி. தலத்திற்கு நேரில் சென்று தரிசிக்க விரும்புபவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடை திறப்பு போன்ற விபரங்களைக் கேட்டபின்னர் செல்லவும். கூடுமானவரையில் தகவல்கள் அனைத்தும் பல புத்தகங்களில் படித்துப் பார்த்தும், சில தலங்களுக்கு நேரில் சென்றும் கொடுக்கப்பட்டுள்ளன. எனினும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செல்லுதல் நலம்.

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 1 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

சோழநாட்டுத் திருத்தலங்கள் - காவிரிக்கு வடகரையில் உள்ளவை 1/ 63

1. சிதம்பரம்

கோவிலின் பெயர்

நடராஜர் திருக்கோவில், சிதம்பரம், கடலூர் மாவட்டம் - 608 001.

தொடர்பு எண்

94439 86996

மூலவர்

திருமூலநாதர்  (கனகசபையில் சபாநாயகர், அம்பலவாணர், கூத்தபிரான், கனகசபாபதி,  அம்பலக்கூத்தர், நடராஜர்)

அம்பாள்

உமையம்மை (கனகசபையில் சிவகாமி, சிவகாமசுந்தரி)

உற்சவர்

மூலவரே இங்கு உற்சவராகவும் உள்ளார்

தலவிருட்சம்

தில்லை மரம், ஆலமரம்

தீர்த்தம்

சிவகங்கை, ஆனந்த தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வியாக்கிரபாத தீர்த்தம் ,(திருப்புலீச்சுரம்), பரமானந்த கூபம்

காட்சி கண்டவர்கள்

புலிக்கால் முனிவர் (வியாக்ரபாத முனிவர்), மூவர், மாணிக்கவாசகர், பதஞ்சலி முனிவர், வியாசர், சுகர், திருநீலகண்டர், கூற்றுவ நாயனார், திருநாளைப்போவார், புல்ல நாயனார், சந்தனாச்சாரியார்கள், சேந்தனார்

சிறப்புக்கள்

காவிரி வடகரைத் தலங்களைத் தரிசிக்க இத்தலம் நுழைவுவாயிலாக உள்ளது.

பஞ்சபூதத் தலங்களில் இது ஆகாயத்தலம். தரிசித்தால் முக்தி தரும் தலம். பஞ்ச சபைகளில்  பொற்சபையாக விளங்கும் தலம். ஆதாரத் தலங்களில் இருதயத் தலம்.

சிதம்பர ரகசியம் என்பது இந்தத் தலத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்க வில்வ இலை இங்கு உள்ளது. இறைவன் ஆகாய ரூபமாக இருக்கிறான் என்பதே சிதம்பர  ரகசியமாக விளங்குகிறது.

சைவர்களால் கோவில் என்று போற்றப்படும் தலம் இதுதான்.

பெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத்தொண்டர் புராணம் அரங்கேற்றப்பட்ட தலம். திருமுறைப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட தலம். உமாபதி சிவம் கொடிக்கவி பாடிய தலம். சேந்தனார் பாடிய தலம்.

அனைத்துத் தலங்களிலும் உள்ள  சிவகலைகள் நள்ளிரவில் இந்தத் தலத்தில் கூடுவதாக ஐதீகம். சைவர்கள் திருப்பதிகங்களை ஓதுவதற்கு முன்பும் ஓதி முடித்த பின்பும் சிற்றம்பலம் என்று சொல்வார்கள், அந்த அம்பலம் இதுதான்.

நடராஜர் இத்தலத்தில் திருநடனம்  புரிகின்றார். கிழக்கு மற்றும் மேற்கு கோபுரங்களில் 108 நடன வகைகளை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

அப்பர் மேற்கு வாயில் வழியாகவும், திருஞானசம்பந்தர் தெற்கு வாயில் வழியாகவும், சுந்தரர் வடக்கு வாயில் வழியாகவும், மாணிக்கவாசகர்  கிழக்கு வாயில் வழியாகவும் உள்ளே சென்று இறைவனை தரிசித்த பெருமையுடைய தலம்.

அம்பாள் மூன்றுவிதமாக இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று காட்சி தருகிறாள்.

முருகப் பெருமான் ஒரே கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான ஒன்றாகும்.

நடராஜப் பெருமானுக்கு தலத்திற்கு உள்ளேயே சிற்றம்பலம், கனக சபை, இராஜ சபை, தேவ சபை, நிருத்த சபை என்று ஐந்து சபைகள் இருப்பதும் சிறப்பு.

திருச்சிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர், புலீச்சுரம், தில்லைவனம், ஞானாகாசம், பூலோக கைலாயம், புண்டரீகபுரம், சிதாகாசத்தலம் என்ற பெயர்களாலும்   அழைக்கப்படும் தலம்.

தில்லைவாழ் அந்தணர்கள் சிவகணங்களாக இருந்து சிவபெருமானை பூஜித்துக் காக்கும் தலமாகக் கருதப்படுகிறது.

108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான திருசித்ரகூடம் கோவிந்தராஜப் பெருமாள் இத்தலத்திற்குள்ளேயே இருப்பது சைவ - வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

பதிகங்கள் 11

(அப்பர் 8,  சம்பந்தர் 2,  சுந்தரர் 1)

செல்லும் வழி

சென்னை - திருச்சி ரயில்வே தடத்தில் உள்ள ரயில் நிலையம், தமிழகத்தின் பல  ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகளும் உள்ளன. சென்னையிலிருந்து 240 கி.மீ. தொலைவில் உள்ளது.

நடைதிறப்பு

காலை 6 - 12 மாலை 4.45 - 10.30  ஆறு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இரவு 10 - 10.30. இரவு 10.30 மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜை மிகச் சிறப்பான ஒன்று.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Empty Re: சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Sun Mar 01, 2015 7:48 am

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

சோழநாட்டுத் திருத்தலங்கள் - காவிரிக்கு வடகரையில் உள்ளவை 2/ 63

2. திருவேட்களம்

கோவிலின் பெயர்

பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம், அண்ணாமலை நகர், சிதம்பரம், கடலூர் மாவட்டம் - 608 002.

தொடர்பு எண்

98420 08291, 98433 88552, 04144 238274

மூலவர்

பாசுபதேஸ்வரர் (பாசுபதநாதர்)

அம்பாள்

நல்லநாயகி (சற்குணாம்பாள்)

தலவிருட்சம்

மூங்கில்

தீர்த்தம்

கிருபா தீர்த்தம் (கிருபா கடாட்சம் என்றும் வழங்கப்படும்)

காட்சி கண்டவர்கள்

அர்ஜுனன், அப்பர், சம்பந்தர்

சிறப்புக்கள்

அர்ஜுனன் வேடனாக வந்த சிவபெருமானுடன் விற்போர் புரிந்த இடம். அர்ஜுனன் வில்லால் தாக்கிய தழும்பை இன்றும் சிவலிங்கத்தின்மேல் காணலாம்.

சிவபெருமானை வழிபட்டு அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்ற தலம். அதனால் இன்றும் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் உற்சவம் நடக்கிறது.

திருஞானசம்பந்தர் இந்தத் தலத்தில் தங்கியிருந்துதான் சிதம்பரம் நடராஜரை தரிசித்தார். இத்தலத்து இறைவனைத் தொழுதால் வல்வினைகள் அனைத்தும் நீங்குமென்று அப்பர் தன் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சூரியனும் சந்திரனும் அருகருகே உள்ளார்கள். கிரகணத்தின்போது இவர்களை தரிசித்தால் அனைத்துவிதமான நன்மைகளும் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

திருப்புகழ் பாடல்பெற்ற முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் பன்னிரு கரங்களுடன் ஒரே கல்லினால் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளார்.

மகாயுத்தகளம், மூங்கில்வனம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

முன்மண்டபத்தில் அம்பிகையின் சந்நிதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் சிலைகள் பல்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன.

பதிகங்கள் 2

(அப்பர் 1,  சம்பந்தர் 1)

செல்லும் வழி

சிதம்பரம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பின்புறம் சங்கீதக் கல்லூரியைக் கடந்து சென்றால் இந்தத் தலத்தை அடையலாம். சிதம்பரம் நகரிலிருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நடைதிறப்பு

காலை 6.45 - 11.30 மாலை 5.30 - 8.30  ஐந்து கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Empty Re: சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by ayyasamy ram Sun Mar 01, 2015 8:41 am

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 103459460
-
சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் FXaIfNnwQMCh557jYBiv+images1
-
சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Te5bg7lrSwejJ0wcp5o7+chitambaram
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Empty Re: சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Mon Mar 02, 2015 8:30 am

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 3 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

சோழநாட்டுத் திருத்தலங்கள் - காவிரிக்கு வடகரையில் உள்ளவை 3/ 63

3. திருநெல்வாயில்

கோவிலின் பெயர்

உச்சிநாதேஸ்வரர் திருக்கோவில், சிவபுரி அஞ்சல், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் - 608 002.

தொடர்பு எண்

98426 24580

மூலவர்

உச்சிநாதேஸ்வரர்  (உச்சிநாதர்)

அம்பாள்

கனகாம்பிகை

தலவிருட்சம்

நெல்லி

தீர்த்தம்

கிருபா சமுத்திரத் தீர்த்தம்

காட்சி கண்டவர்கள்

சம்பந்தர், கன்வ மகரிஷி

சிறப்புக்கள்

முருகப் பெருமான் தனது இரண்டு மனைவியர்களுடன், ஒரு திருமுகம் மற்றும் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார்.

இத்தலத்து முருகப்பெருமான் மீது  அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் உள்ளது.

சிவபுரி, நெல்வாயில் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

வைகாசி விசாகத்தன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது.

பதிகங்கள் 1

சம்பந்தர்

செல்லும் வழி

சிதம்பரம் நகரிலிருந்து பல்கலைக்கழக நுழைவுவாயிலிருந்து சிவபுரி செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது.  

நடைதிறப்பு

காலை 6.30 - மாலை 4.30  ஜந்து கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Empty Re: சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by ayyasamy ram Mon Mar 02, 2015 12:49 pm

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 103459460
-
இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால்
இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில்
எனவும் வழங்குகின்றனர்.
-
சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் ZElxePoGSKyTWmTD4fcI+T_500_846
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Empty Re: சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by subramaniansivam Mon Mar 02, 2015 2:08 pm

ayyasamy ram wrote:சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் 103459460
-
இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால்
இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில்
எனவும் வழங்குகின்றனர்.
-
சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் ZElxePoGSKyTWmTD4fcI+T_500_846
மேற்கோள் செய்த பதிவு: 1123709

எனக்குத் தெரியாத தகவல் தெரிவித்ததற்கு மிக்க நன்றி நண்பரே.
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம் Empty Re: சிவனருள் பெற்றுத் தரும் தேவாரத் தலங்கள் 2 - மேலூர் இரா.சுப்ரமணியசிவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum