ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by krishnaamma Sat Feb 28, 2015 11:55 am

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! OWsH1sIQRvGQNH7IFtV1+news0228feb_4fb

* அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

* சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.

* அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும்.

* இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.

* அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்குதம்.

* அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை



2022ல் அனைவருக்கும் வீடு

* சுதந்திர இந்தியாவின் 75 வது ஆண்டான 2022ம் ஆண்டிற்குள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி.

* 5 சதவிகிதத்திற்கு கீழ் சில்லரை விற்பனை பண வீக்கம் நீடிக்கும்.

* வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது.



6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்

* நடப்பு பற்றாக்குறை 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.

* மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயரும்.

* உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது.

* உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.

* இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்.

* இதுவரை 50 லட்சம் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

* இந்தியாவை தூய்மையாக தேசமாக மாற்ற தூய்மை இந்திய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.



நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு

* நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.

* நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்.

* பொருளாதார வளர்ச்சிக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



100 நாள் வேலை திட்டம் தொடரும்

* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும்.

* மத்திய அரசின் இலக்குக்கள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும்.

* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை

* வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன.



ஜன் தன் வங்கி கணக்கு சாதனை

* ஜன் தன் வங்கி கணக்கு, நிலக்கரி ஏலத்தில் வெளிப்படை தன்மை மற்றும் தூய்மை இந்தியா ஆகிய முக்கிய 3 திட்டங்களில் மத்திய அரசு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.

* வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளேன்.

* சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் முக்கிய குறிக்கோள்.

* அனைத்து கிராமங்களிலும் தொலைத் தொடர்பு வசதி செய்து தரப்படும்.

* பொருளாதார வளர்ச்சியை கணக்கிட புதிய நடைமுறை உருவாக்கப்படும்.

* உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 3.9 சதவிதத்துக்குள் நிதிப்பற்றாக்குறையை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயம்.

* நிதிப்பற்றாக்குறையைை 4.1 சதவீதமாக பராமரிக்க அரசு உறுதி.



அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதி


* அனைத்து கிராமங்களுக்கும் கல்வி மற்றும் மருத்துவ வசதிகளை கொண்டு செல்வது அவசியம்.

* வேளாண் வருமானத்தை பெருக்குவது சவாலாக உள்ளது.

* நாட்டின் வளர்ச்சி வட கிழக்கு மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

* பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

* மின்சாரம், தூய்மையான குடிநீருக்கு முக்கியத்தும்.



ரூ.12 பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீடு

* புதிய விபத்து காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.

* ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியத்தில் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

* ஏழ்மையில் உள்ள மூத்த குடிமக்களுக்கு உதவ சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும்.

* அடல் பென்ஷன் திட்டம் உருவாக்கப்படும்.

* 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு பலன் கிடைக்கும்.

* விவசாய விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்வதும் அவசியம்.

விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன்

* வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

* ஏல முறை நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டால் மாநிலங்களுக்கு பல லட்சம் கோடி வருவாய்.

* உலகிலேயே சிறப்பான பங்குச்சந்தையில் இந்தியாவுக்கு 2வது இடம்.

* சிறு விவசாயிகளுக்கு எளிதில் கடன் கிடைக்க நிதித்தொகுப்பு ஏற்படுத்தப்படும்.

* அனைத்து மக்களையும் முறையான நிதிசேவை நடைமுறைக்குள் கொண்டு வர திட்டம்.



மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு

* மத்திய அரசின் வரி வருவாயில் 62 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும்.

* மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

* கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

விகடன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by ayyasamy ram Sat Feb 28, 2015 12:13 pm

அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்
வருமான வரி விலக்கு சலுகை உயர்த்தப்பட்டுள்ளதா..?
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by krishnaamma Sat Feb 28, 2015 12:14 pm

இன்னும் பேப்பரில் போடலை ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by krishnaamma Sat Feb 28, 2015 12:17 pm

கூடங்குளம் 2வது அணுஉலையில் நடப்பாண்டில் மின்உற்பத்தி

* கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது அலகு அடுத்தாண்டு செயல்படுத்தப்படும்.

* கூடங்குளம் அணுமின் நிலைய 2வது உலையில் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி தொடங்கப்படும்.

* நிதி சேவைகள் தொடர்பான குறைகளை தீர்க்க நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

* தேசிய உள்கட்டமைப்பு நிதிக்கு வரும் நிதியாண்டில் 20 ஆயிரம் கோடி நிதி.

5 மிகப்பெரும் மின் திட்டங்கள்


* 5 மிகப்பெரும் மின் திட்டங்கள் தொடங்கப்படும்.

* நூறுநாள் வேலைவாப்பு திட்டத்திற்கு கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

* சிறுபான்மை பிரிவு இளைஞர் நலனுக்காக நயிமன்சில் என்ற புதிய திட்டம்.



வருங்கால வைப்பு நிதி திட்டம் விருப்ப திட்டமாக மாற்றப்படும்



* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிமுறைகள் மாற்ற அமைக்கப்படும்.

* கிரெடிட், டெபிட் கார்டுகள் பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படும்.

* அரசின் பொருள் கொள்முதலில் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும்.



எளிதான விசா நடைமுறை அறிமுகம்

* 150 நாடுகளுக்கு இந்தியா வந்தவுடன் விசா பெறும் சலுகை விரிவுப்படுத்தப்படும்.

* சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை.

* விசா நடைமுறைகள் எளிதானதால் சுற்றுலாத்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது.

* வருகையின்போது விசா வழங்கும் திட்டம் 150 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

* சுற்றுலாத் தலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளில் மேம்பாடு.



சூரிய ஒளி மின்சக்தி

* 20022க்குள் 1.75 லட்சம் மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்ய இலக்கு.

* மகளிர் பாதுகாப்புக்கான நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு.



கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை


* கருப்பு பணத்தை பதுக்குவதை தடுக்க நேரடி பண பரிமாற்ற முறை படிப்படியாக குறைக்கப்படும்.

* அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயத்தை அரசு வெளியிடும்.

* தங்க நாணய பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வங்கிகளில் தங்கத்தை டெபாசிட் செய்து நிதி திரட்டும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

* மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க ஊக்கம் அளிக்கப்படும்.

விகடன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by krishnaamma Sat Feb 28, 2015 12:20 pm

வருமான வரி ஏய்ப்புக்கு 7 ஆண்டுகள் சிறை

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலோ அல்லது வெளிநாட்டில் உள்ள சொத்துக்கள் விவரங்களை தெரிவிக்காவிட்டாலோ 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் 300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

பான்கார்டு கட்டாயம்


பான்கார்டு கட்டாயமாக்கப்படும்; பான்கார்டு கட்டாயம் தொடரும்

* ஒரு லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கும்போது பான்கார்டு கட்டாயமாக்கப்படும்

* வணிக நிறுவனங்களுக்கான வரி 25 சதவிகிதமாக குறைக்கப்படும்.

* அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு  கார்ப்பரேட் வரி 5 சதவீதமாக குறைக்க படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* 5 சதவிகித வரி குறைப்பு 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

* வணிக நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக 4 ஆண்டுகளில் குறைக்கப்படும்.

* கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நிலையான வரிக்கொள்கை.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை

* தமிழகம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வரப்படும்.

விகடன்


Last edited by krishnaamma on Sat Feb 28, 2015 12:29 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by krishnaamma Sat Feb 28, 2015 12:22 pm

2015- 2016 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் தாக்கல் செய்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட்டின் நிகழ்நேரப் பதிவு:

12.04 PM: வரி விபரம்:

வணிக வரிக்கான அடிப்படை வட்டி விகிதம் தற்போது 30% ஆக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும்.

11.55 AM: பட்ஜெட் மதிப்பீடு:

1.திட்டமிடப்படாத செலவினங்கள்- ரூ.13,12,200 கோடி

2.திட்டமிடப்பட்ட செலவினங்கள்- ரூ.4,65,277 கோடி

3.நடப்புப் பற்றாக்குறை- ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 3.9%

11. 49 AM: கல்வித் துறை: கர்நாடகாவில் ஐ.ஐ.டி. அமைக்கப்படும்.

11.48 AM: கல்வித் துறை: ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப்பிரதேசத்தில் ஐ.ஐ.எம். அமைக்கப்படும். அருணாச்சலப்பிரதேசத்தில் (Centre for Film Production and Animation ) திரைப்படத் தயாரிப்பு, அனிமேஷன் சார்ந்த கல்வி மையம் அமைக்கப்படும்.

வாசிக்க - நாடு முழுவதும் 80,000 உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த திட்டம்

11.45 AM: ராணுவத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி ஒதுக்கீடு.

11.43 AM: கல்வித் துறைக்கு ரூ.68,968 கோடி ஒதுக்கீடு.

11.40 AM: டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் கிராமங்களில் இணையதள வசதி செய்து தரப்படும்.

11.36 AM: தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும். பிஹாரில் எய்ம்ஸ்-க்கு நிகரான மையம் அமைக்கப்படும்.

11.35 AM: நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

11.34 AM: 'அடல் இன்னோவேஷன் மிஷன்'( Atal Innovation Mission) என்ற பெயரில் நாட்டில் பல்வேறு துறைகளிலும் புதுமையை புகுத்தும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு திட்டம் அமல் படுத்தப்படும்.

11.33 AM: மூத்த குடிமக்கள் நலனைப் பேண பி.எஃப் திட்டத்தில் உரிமை கோரப்படாமல் உள்ள ரூ.9000 கோடி நிதி பயன்படுத்தப்படும். 'மூத்த குடிமக்கள் சேமநல நிதி' என்ற பெயரில் இது நிர்வகிக்கப்படும்.

11.32 AM: கிராமப்புற உட்கட்டுமானத்தை மேம்படுத்தும் வகையில் 2015-16 நிதியாண்டுக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கப்படும்.

11.31 AM: வறுமைக் கோட்டுக் கீழ் இருக்கு முதியோர்கள் அடையாளம் காணப்பட்டு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

11.30 AM: பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.1 பிரிமீயம் தொகை செலுத்தி ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான காப்பீட்டை பெற முடியும்.

11.28 AM: ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் விபத்து காப்பீட்டுத் திட்டம் அறிமுகம். ஆண்டுக்கு ரூ.12 மட்டுமே பிரிமீயம்.

11.28 AM: நடப்பு கணக்கு பற்றாக்குறையை 3%-துக்கு கொண்டு வரும் இலக்கு இரண்டு ஆண்டுகளில் எட்டப்படும்.

11.27 AM: அரசு கொண்டுவரவுள்ள 2 சீர்திருத்தங்கள்:

1.ஏப்ரல் 1 2016 முதல் (ஜி.எஸ்.டி.) சரக்கு, சேவை வரி அமலுக்கு கொண்டு வரப்படும்.

2.நேரடி மானியத் திட்டத்தில் பயனாளர்கள் பலனடையும் வகையில் ஜன் தன் திட்டம், ஆதார் திட்டத்தை பயனாளர்கள் மொபைல் எண்ணுடன் ஒருங்கிணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

11.26 AM: தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தப்படும். (MNREGA) தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ரூ.34,699 கோடி ஒதுக்கப்படுகிறது. | வாசிக்க - 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.34,699 கோடி; சிறு தொழிலுக்கு முத்ரா வங்கிகள் அறிமுகம் |

11.25 AM: தொழில் முனைவோருக்கு சிறு, குறு அளவில் கடன் வழங்கும் வகையில் முத்ரா வங்கிகள் உருவாக்கப்படும். அதற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படும்.

11.24 AM: விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நபார்டு வங்கிக்கு ரூ.25,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

11.23 AM: ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by krishnaamma Sat Feb 28, 2015 12:22 pm

11.22 AM: அரசு எதிர் கொண்டுள்ள சவால்கள் | வாசிக்க - மத்திய அரசின் ஐம்பெரும் சவால்கள்: ஜேட்லி தகவல் |

1.விவசாயத் துறை வருமானத்தை பெருக்குவது மிகப் பெரிய சவாலாக உள்ளது

2.கட்டுமானத் துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும்

3.உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் இதை ஈடுகட்டவே வகுக்கப்பட்டுள்ளது.

4.நடப்பு கணக்கு பற்றாக்குறையை சீரமைக்க வேண்டும்.

5. அதிக அளவில் நிதி முதலீட்டை ஈர்க்க கூடுதலான கவனம் செலுத்தப்படும்.

11.12 AM: வசதி படைத்தவர்கள் சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும்.

11.11 AM: 2022-ல் அனைவருக்கும் வீடு திட்டம் இலக்கை எட்டும். கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளும், நகர்ப்புறங்களில் 5 கோடி வீடுகளும் அமைக்கப்படும்.

11.10 AM: 2015-16 நிதி ஆண்டுக்கான ஜிடிபி இலக்கு 8 முதல் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு இலக்க ஜிடிபி அடைய வேண்டும் என்பதே எதிர்காலத் திட்டம்.

11.08 AM: அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.

11.06 AM: அரசின் 3 சாதனைகள் | வாசிக்க -மோடி அரசின் 3 சாதனைகள்: பட்ஜெட்டில் ஜேட்லி பட்டியல் |

1. ஜன் தன் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. 12.5 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர்.

2. நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ள மாநிலங்கள் பயனடையும் வகையில் ஏல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

3. தூய்மை இந்தியா திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2014-15ல் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் நாடு முழுவதும் 6 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

11.05 AM: பொருளாதார வளர்ச்சியல் ஊக்குவிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும்.

11.04 AM: நடப்பு கணக்குப் பற்றாக்குறை 1% கீழ் குறையும்: ஜேட்லி நம்பிக்கை.

11.04 AM: மொத்த பண வீக்கம், நடப்பு கணக்குப் பற்றாக்குறை குறைந்துள்ளது.

11.03 AM: இந்தியப் பொருளாதாரம் மிகச் சிறப்பான பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

11.01 AM: இந்தியப் பொருளாதரத்தின் நம்பகத்தனமை உலக அரங்கில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

11.00 AM: மத்திய பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.

10.43 AM: வர்த்தக துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 262.33 புள்ளிகள் உயர்ந்து 29,482.45 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 74.65 புள்ளிகள் உயர்ந்து 8,919.25 புள்ளிகளாக இருந்தது. | பட்ஜெட் எதிர்பார்ப்பு: சென்செக்ஸ் 262 புள்ளிகள் அதிகரிப்பு |

10.42 AM: பட்ஜெட் எதிர்பார்ப்பு இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இன்று காலை பங்குச்சந்தையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது.

10.40 AM: வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா என்பது நடுத்தர வர்க்கத்தினரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by krishnaamma Sat Feb 28, 2015 12:25 pm

ayyasamy ram wrote:அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்
வருமான வரி விலக்கு சலுகை உயர்த்தப்பட்டுள்ளதா..?
-

//வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு தற்போதுள்ள ரூ. 2.5 லட்சமே தொடரும். அதில் மாற்றமில்லை

விகடன் //


இப்படி போட்டுவிட்டார்கள் ராம் அண்ணா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by ayyasamy ram Sat Feb 28, 2015 2:15 pm

வருமான வரி கட்டுபவர்களுக்கு 4.44 லட்சம் ரூபாய் வரிச்சலுகை கிடைக்கும்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by சிவா Sun Mar 01, 2015 12:42 am

பட்ஜெட் செய்திகளுக்கு நன்றி!


2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் ! Empty Re: 2015-16 பொது பட்ஜெட் தாக்கல்: சிறப்பம்சங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum