ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்!

Go down

தெருவெல்லாம் தமிழ் முழக்கம்! Empty தெருவெல்லாம் தமிழ் முழக்கம்!

Post by சாமி Fri Feb 27, 2015 6:20 pm

கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.

மன்னர்கள், புலவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு காலக்கட்டங்களில், பல்வேறு தரப்பினரும் தமிழ் மொழியைக் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

தற்போதும் கூட தமிழ் மொழி மீது தாக்குதல் நடைபெற்றால் அரசியல் கட்சியினரும், தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழுந்து போராடுகின்றனர்.

ஆனால், எந்தத் தரப்பினரும் தமிழ் மொழியை அதற்கே உரிய சீரோடும், சிறப்புகளோடும் கலப்படமின்றி தூய்மையாய் வாழவைக்க முயற்சிகளை எடுக்கவில்லை.

ஏராளமான ஆங்கிலச் சொற்கள் கலப்படமாகி தமிழ் சொற்களைப் போலவே மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. மற்றொருபுறம் மீண்டும் ஹிந்தித் திணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இம்மண்ணில் வாழும் தமிழர்களில் பலருக்கும் தமிழ் உணர்வு இல்லை. தமிழ் உணர்வு கொண்டவர்களும்கூட அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் உள்ளனர்.

ஆங்கில மொழிவழிக் கல்விதான் அறிவை வளர்க்கும் என்ற தவறான கண்ணோட்டம் அனைவரது மனதிலும் நிறைந்துவிட்டது.

வீடுகளில், பள்ளிகளில், பணிபுரியும் இடங்களில், அரசு அலுவலகங்களில், பொது இடங்களில்கூட ஆங்கிலம் பேச துடிப்பவர்கள்தாம் இங்கு அதிகம்.

எல்லாவற்றுக்கும் காரணம் என்ன? ஆங்கில மொழியில் பேசுபவனே நாகரிகம் தெரிந்தவன், அறிவுடையவன் என்ற சிந்தனை பரவியிருப்பதே காரணம்.

தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களில்கூட ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே வேலை அல்லது முன்னுரிமை கிடைக்கும் என்ற எதார்த்த உண்மை தமிழர்களை

தங்கிலீஷ்காரர்களாக மாற்றியுள்ளது.

பொருளாதாரம், வேலை இதற்காகத்தான் ஆங்கிலம் தேவை என்பதைத் தாண்டி, எவருக்கும் ஆங்கில மொழி மீது பெரும் பற்று கிடையாது.

தமிழ் பயிற்று மொழியாகவும், ஆங்கிலம் தொடர்பு மொழியாகவும் இருந்தால் போதுமானது என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.

மழலையர் வகுப்பு தொடங்கி கல்லூரிப் படிப்பு வரை ஆங்கில வழியில் கல்வி பயின்ற பலர் சிறந்த தமிழ் பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக இந்த மண்ணில் தடம் பதித்துள்ளனர்.

தமிழைச் சார்ந்து இயங்குகிற ஊடகங்களில் ஆங்கில வழியில் பயின்றவர்கள் பலர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்து, உணவளிப்பது தமிழ்மொழிதான். எனவே, கற்றல் மொழியின் அடிப்படையில்தான் வேலை கிடைக்கும் என்ற கண்ணோட்டம் தவறு.

அதேபோல, தமிழ் இனத்துக்கு பெருமை சேர்த்த அறிஞர்கள், அறிவியலாளர்கள், அரசியல் தலைவர்களில் பலர் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்றும், அவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் அல்லது பிற மொழிகளில் பேசி தமது அறிவை பிறருக்கு கற்பித்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை.

ஆக, அறிவை தம் தாய்மொழியில் வளர்த்தாலும், தொடர்பு மொழியைப் பயன்படுத்தி உலகுக்கே கற்பிக்க முடியும் என்பதுதான் உண்மை.

தமிழிலே கல்வி கற்கும் அதே வேளையில், ஆங்கிலம் மட்டுமல்ல ஹிந்தி, பிரெஞ்சு, சீனம் உள்ளிட்ட எந்த மொழியையும் தொடர்பு மொழியாக கற்றுக் கொள்வதற்கு இங்கு தடையற்ற நிலை உருவாக வேண்டும்.

அந்த நிலையை எட்டிவிட்டால், தமிழ்நாட்டிலே எந்த மொழியை யார் திணிக்க முயற்சித்தாலும் தமிழனுக்குக் கவலை தேவையில்லை.

பிறமொழிக் கலப்படம் இல்லாத தூய தமிழை நான் பேசுவேன் என்று ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர்ந்து சொல்வதே தமிழுக்குப் பெருமை.

இந்த இலக்கை எட்டுவதற்கு, வீதிகள்தோறும் மதுக்கடைகள் என்ற நிலை மாறி, வீதிகள்தோறும் தமிழ்ச் சங்கங்கள் என்ற நிலை வர வேண்டும்.

முதல்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று என்ற அளவில் தமிழ்ச் சங்கங்களை அரசு சார்பில் நிறுவி, அங்கு தமிழறிஞர்களைப் பணியமர்த்துவன் மூலம் தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட முடியும்.

பொதுமக்கள் அனைவரும் தமிழ்ச் சங்கங்களில் உறுப்பினராகி, தமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் சென்று தூய தமிழை கற்கும் நிலை வர வேண்டும்.

வார விடுமுறை நாள்களில் தமிழ்ச் சங்கங்களில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடி தூய தமிழ்ப் பேசி பழகினாலே போதும், அதே பழக்கம் அவர்கள் வாழ்க்கையிலும் வந்துவிடும்.

கடைகளில், நிறுவனங்களில் தமிழிலே பெயர்ப்பலகை, விலைப் பட்டியல் வைத்தால் வரிவிலக்கு என்று அறிவிக்காமல், அவ்வாறு வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியிருப்பவர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு முறையை கட்டாயம் அமலாக்க வேண்டும்.

பொதுமக்களுக்குப் புரியாது என்ற காரணத்தைச் சொல்லி, ஆங்கில சொற்களைக் கலந்து செய்தி வெளியிடாமல் தூய தமிழில் செய்தி வெளியிடவேண்டியது ஊடகங்களின் கடமை.

வாக்குகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு மதத்திற்கும், தனித்தனிச் சாதிக்கும் சிறப்பு இடஒதுக்கீடு கொடுத்ததைப் போல, தமிழ் மொழித் தேர்வை தனியாக நடத்தி அதில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால் தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இழிநிலை மாறிவிடும்.

தமிழ் படித்தால், தமிழ் வழியில் படித்தால் வேலை கிடைக்காது என்ற நிலை போய் தமிழ் படித்தால் மட்டுமே முன்னுரிமை என்று வந்துவிட்டால், மக்களின் எண்ண ஓட்டங்கள் தமிழை நோக்கி திரும்பாதா?

வெறுமனே தமிழுக்காகக் குரல் விடுப்பதோடு நின்று விடாமல், இதுபோன்ற நல்ல தீர்மானங்களை செயல்படுத்துமாறு அரசியல் கட்சிகளும், தமிழ் உணர்வாளர்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதைச் செய்ய அரசால் முடியாதா? அப்படிச் செய்ய அரசு முன்வரவில்லை என்றால், தமிழர்கள் ஒன்றுபட்டு வென்று காட்ட முடியாதா?கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி.

இதைச் செய்ய அரசால் முடியாதா? அப்படிச் செய்ய அரசு முன்வரவில்லை என்றால், தமிழர்கள் ஒன்றுபட்டு வென்று காட்ட முடியாதா?    ( - இராம.பாரதி / நன்றி: தினமணி நாளிதழ்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» தெருவெல்லாம் தமிழ் முழக்கம்
» சீனாவில் தமிழ் முழக்கம்!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !

» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum