புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் Poll_c10தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் Poll_m10தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் Poll_c10 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் Poll_c10தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் Poll_m10தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Thu Feb 26, 2015 8:43 pm

''காலங்கள் மாறும்... காட்சிகள் மாறும் என்பது இயற்கையின் நியதி; வரலாற்று விதி. அதுதான் இதுவரை நடந்துகொண்டிருக்கிறது; இனியும் நடக்கும். ஆனால், எது மாறினாலும் என்னைப் பற்றி கட்டமைக்கப்பட்ட தவறான சில அபிப்ராயங்கள் மட்டும் மாறவில்லை. அதை மாறவிடாமல் தடுப்பது சில ஊடகங்கள்தான். அவை என்னைப் பற்றி தவறான பிரசாரங்களைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கின்றன. சரி... பேட்டி எனக் கேட்கிறீர்கள். என் விளக்கத்தைச் சொல்ல இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்'' - கொஞ்சம் கோபம், நிறைய ஆதங்கத்துடன் தைலாபுரம் தோட்டத்தில் தயாராகிறார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்.

''உங்களுக்கு எதிராக ஊடகங்கள் வைக்கும் தவறான அபிப்ராயங்கள் என எதைச் சொல்கிறீர்கள்?''

''வன்னியர்கள் இடஒதுக்கீடு கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் விழுந்த மரங்களை நான் வெட்டியதாக இன்னும் சொல்கிறார்கள். ஆனால், அப்போது அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களைப் பற்றி இவர்கள் எதுவும் பேசுவது இல்லை. 'நான் மரம் நட்டால், வெட்டியதற்குப் பிராயச்சித்தமாக நடுகிறீர்களா?’ என்கிறார்கள். ஜாதி, தேர்தல் கூட்டணி, வாரிசு அரசியல் என எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு ஒரு பார்வையையும்... எங்களுக்கு என ஒரு பார்வையையும் இந்த ஊடகங்கள் முன்வைக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மரக்காணத்தில் ஒரு கலவரம் நடைபெற்றது. அதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அதற்குக் காரணம் நான்தான் என்று அவர்கள் இன்னமும் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கின்றனர். தலித் மக்களுக்கு நாங்கள் எதிரானவர்கள்போல தொடர்ந்து சித்திரிக்கிறார்கள்.''

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் S1Yit2G0T6asSteMlEJL+p86a

''ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், 'இனிமேல் திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை. தேசியக் கட்சிகளோடு கூட்டணி இல்லை’ எனச் சொல்கிறீர்கள். ஆனால், தேர்தல் சமயத்தில் அந்த நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொள்கிறீர்களே... ஏன்?''

''தேர்தல் சமயத்தில் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளோடு கூட்டணி வைத்ததற்காக, நான் தமிழ்நாட்டு மக்களிடம் பல முறை மன்னிப்புக் கேட்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இப்படி ஒரு கேள்வி எழக் கூடாது, இதுபோன்ற விமர்சனம் வரக் கூடாது என்பதற்காகத்தான், எங்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை இப்போதே அறிவித்துவிட்டோம். நாங்கள் மாறி மாறி கூட்டணி வைப்பவர்கள் என்ற வாதத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கத்தான் இந்த முடிவு.''

'' 'கூட்டணியில் இருக்கும்போதே அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது கூட்டணி தர்மத்தை மீறிய செயல்’ என்கிறதே பா.ஜ.க?''

''அரசியலில், கூட்டணி தர்மம் என்ற ஒன்று இல்லவே இல்லை. எங்களுடைய அனுபவத்தில் இதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாங்கள் தேர்தலைச் சந்தித்தபோதெல்லாம், நாங்கள் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் எதிர் அணி கட்சிக்கு வாக்களித்தார்கள். அதற்குக் காரணம், எங்கள் வளர்ச்சி அவர்களுக்கு உறுத்தலாக இருந்தது. குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் வெற்றிபெற்றுவிட்டால், மீண்டும் அதே தொகுதியைக் கேட்போம் என்பதற்காக, இப்படி உள்ளடி வேலைகளைச் செய்தார்கள். அதனால்தான் கூட்டணி தர்மம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனக்கு எரிச்சல் வரும். குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் கட்சிகள் எல்லாம் சேர்ந்து கூட்டணி அமைக்கும்போதுதான், கூட்டணி தர்மம் என்ற ஒன்று நிலைநிறுத்தப்படும். அதற்காக உருவாக்கப்பட்ட அறிக்கையில் ஒவ்வொரு கட்சியும் கையெழுத்துப்போட வேண்டும். வட இந்தியாவில் அந்த நடைமுறை உள்ளது. தமிழ்நாட்டில் அதுபோன்ற நிலை இதுவரை இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதும் அப்படி ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாகவில்லை. 'நீ ஒரு தொகுதியில் நிற்கிறாய்... அங்கு நான் உன்னை ஆதரிக்கிறேன். நான் ஒரு தொகுதியில் நிற்கிறேன். அங்கு நீ என்னை ஆதரி’ என்ற அடிப்படையிலான தொகுதி உடன்பாடு அது. தேர்தலுக்குப் பின் நீ யாரோ... நான் யாரோதான்.''

''அப்படியானால் பா.ஜ.க., பா.ம.க-வுக்கு உள்ள கூட்டணி முறிந்துவிட்டதா?''

''மத்தியில் உள்ள பாரதிய ஜனதாவோடு எங்கள் கூட்டணி தொடர்கிறது. ஏனென்றால், வரும் ஐந்து வருடங்களுக்கு மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கிறோம் எனச் சொல்லி, நாங்கள் குடியரசுத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அதனால், நாங்கள் தொடர்கிறோம். மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதாவோடு கூட்டணி இல்லை என நாங்கள் இதுவரை சொல்லவில்லை. ஆனால், மாநிலத்தில் எங்களுடைய தலைமையை ஏற்றுக்கொண்டு பாரதிய ஜனதா வந்தால், கூட்டணி தொடரலாம்!''

''ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில் 'இடைத்தேர்தல் அவசியமற்றது’ என்ற ஒரு கருத்தை முன்வைத்துள்ளீர்களே?''

''பெண்ணாகரம் இடைத்தேர்தலில் இருந்து இதை நான் வலியுறுத்திவருகிறேன். இடைத்தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டால், அங்கு ஏற்கெனவே வெற்றிபெற்ற கட்சிக்கே, அந்தத் தொகுதியைக் கொடுத்துவிடலாம். ஏனென்றால், இடைத்தேர்தலின்போது அந்தத் தொகுதியில் போட்டியிடும் ஆளும் கட்சி விதிமுறை மீறல்களில் ஈடுபடுகிறது. ஒரு ஓட்டுக்கு கொடுக்கப்படும் தொகை ஒவ்வொரு இடைத்தேர்தலுக்கும் அதிகரித்துக்கொண்டே போகிறது. திருமங்கலத்தில் 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டது. இப்போது திருவரங்கத்தில் அது 5,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. வீட்டுக்கு வீடு பணம் கொடுத்து ஓட்டு வாங்கியிருக்கிறார்கள். இதற்குப் பெயர் தேர்தலா? டெல்லியிலும்தான் தேர்தல் நடைபெற்றது. யாராவது ஒரு பைசா கொடுத்தார்களா? இல்லையே!''

''முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தை எப்படிப் பார்க்கீறீர்கள்?''

''தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது செய்த ஊழலுக்கு ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார். அவர் தவறு செய்தபோதும் முதலமைச்சராக இருந்தார்; தண்டிக்கப்பட்டபோதும் முதலமைச்சராக இருந்தார். இது இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தலைக்குனிவு. 1991-1996-ல் செய்தது ஊழல். 2001-2006 காலகட்டத்தில் செய்தது ஊழலோ ஊழல். அதன் பிறகு, 2011 முதல் தற்போதைய அ.தி.மு.க அரசில் நடப்பது இமாலய ஊழல். அ.தி.மு.க-காரன்தான் தங்கள் கட்சித் தலைவியை மீட்டுக் கொண்டுவர மண்சோறு சாப்பிடுகிறான்; பால் அபிஷேகம் பண்ணுகிறான்; நெய் ஊற்றுகிறான்; இந்த அபத்தங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டிய சில ஊடகங்களும் மௌனமாக இருப்பது வேதனை. நாட்டில் ஊழல்... சிறைக்குப்போன முதலமைச்சர்... வளர்ச்சி இல்லாத மாநிலம்... இதுதான் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறன். இதுதான் அவரது சாதனை.''

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம் IQI4jgQBRfic4NW8omGS+p86b

''கவர்னரிடம் கொடுத்த புகாரில் முக்கியமான ஊழல்களாக நீங்கள் எதைப் பட்டியலிட்டுள்ளீர்கள்?''

''தமிழகத்தில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக கவர்னரிடம் மொத்தம் 209 பக்க ஆதாரங்களைக் கொடுத்துள்ளோம். விசாரணை என வரும்போது, அதை நாங்கள் விசாரணை அமைப்பிடம் தாக்கல் செய்வோம். தாதுமணல் கொள்ளையில் நடந்த ஊழல், கிரானைட் கொள்ளையில் நடைபெற்றுள்ள ஊழல், ஆற்று மணல் அள்ளுவதில் நடைபெற்றுள்ள ஊழல்... என வரிசையாகச் சொல்லலாம். நிலக்கரி ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட மிகப் பெரிய ஊழல் தமிழகத்தில் நடந்திருக்கிறது. இந்தத் தொகை சரியாக தமிழகத்தின் அரசு கஜானாவுக்கு வந்திருந்தால், பட்டிதொட்டியெங்கும் இன்பம் கொட்டிக்கிடந்திருக்கும்!''

''தமிழகத்தில் தற்போது நடக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுப்பீர்கள்?''

''விவசாயத் துறையில் தமிழகம் அடைந்துள்ள வளர்ச்சிதான், தமிழக அரசுக்கு நான் கொடுக்கும் மதிப்பெண்கள். அந்தவகையில், விவசாயத் துறையின் வளர்ச்சி மைனஸ் 12. அதையே தமிழக அரசுக்கும் நான் கொடுக்கிறேன்.''

''முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு எப்படி?''

''பன்னீர்செல்வம் எங்கு செயல்படுகிறார்? 'தமிழகத்தை நான் ஆட்சி செய்யவில்லை. அம்மாதான் ஆட்சி செய்கிறார்’ என அவரே சொல்கிறார். தஞ்சாவூர் பொம்மைகூட அந்தப் பக்கம் இந்தப் பக்கம் ஆடும். ஆனால், இந்தப் பொம்மை அதைக்கூட செய்ய மாட்டேன் என்கிறது!''

'' 'திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது’ எனச் சொல்லும், நீங்கள் தேசியக் கட்சிகளுடன் கூட்டணியில் தொடர்கிறீர்கள்... அவற்றைவிட திராவிடக் கட்சிகள் ஆபத்தா?''

''தேசியக் கட்சிகளைவிட தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நிச்சயம் ஆபத்தான கட்சிகள்தான். இந்த இரண்டு கட்சிகளும் 48 ஆண்டுகாலமாக மாறி மாறி ஆண்டு, தமிழ்நாட்டைச் சீரழித்துவிட்டன. இந்த இரண்டு கட்சிகளும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும். வேரோடும் வேரடி மண்ணோடும் இந்தக் கட்சிகளை வீழ்த்த வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும், நாட்டிலேயே இனி இருக்கக் கூடாது.''

''கூட்டணி இருந்தாலும் இல்லையென்றாலும் மற்ற கட்சித் தலைவர்களுடன் இணக்கமான ஒரு போக்கு உங்களுக்கு இருக்கிறது. குறிப்பாக, அரசியல் முரண்பாடுகளைத் தாண்டியும் கருணாநிதியுடன் நல்ல உறவைப் பேணுகிறீர்கள்? ஆனால், விஜயகாந்த் விவகாரத்தில் அப்படி நீங்கள் இல்லையே?''

''என்னைப் பொறுத்தவரையில் நான் எல்லாத் தலைவர்களையும் மதிக்கிறேன். கலைஞர் ஒரு மூத்த தலைவர். எந்தப் பிரச்னை என்றாலும், என்னால் அவரோடு உடனே பேச முடியும். அதனால்தான் அரசியல் முரண்பாடுகளைத் தாண்டியும் என் பேரன் பேத்தி திருமணத்துக்கு நான் அழைத்தேன். அவரும் வந்திருந்து வாழ்த்தினார். ஆனால், விஜயகாந்தைப் பொறுத்தவரை இதுவரை நான் அவரைச் சந்தித்ததும் இல்லை; பழகியதும் இல்லை. அவ்வளவுதான். அதனால் நீங்கள் சொல்வதுபோல் அவருடன் எந்த வெறுப்பும் இல்லை. விஜயகாந்துடன் மட்டும் அல்ல... வேறு எந்தக் கட்சித் தலைவருடனும் எனக்கு வெறுப்பு இல்லை... விருப்பு உண்டு!''

நன்றி-ஆனந்த விகடன்

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 27, 2015 7:16 pm

234 இடங்களும் இவரே தனியாக நின்று வென்று விடுவார் போலிருக்குதே !

2016 முதல் ஒளி மயமான தமிழகம்தான் . .இவருடைய பவர் யாருக்குமே தெரியமாட்டேன் என்கிறதே .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84721
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 27, 2015 7:55 pm

அன்புமணி ராமதாசின் கனவுகளை தகர்த்து விடுவார்
போலிருக்கே...!
-
சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக